மாத்தளை மூவினங்கள் - இருமொழிகள் பிரதானமாக கொண்ட மாவட்டம்! இதில் மலையகத் தமிழர்களின் கல்வி நிலையை மற்றைய இரு சமூகங்களுடன் ஒப்பிட்டு அவதானித்து நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது நாம் எங்கே செல்வதற்கு இலக்கு வைக்க வேண்டும் என்பதை அறியத்தரும்!
தரவுகளே பெரும் செல்வம் - Data is wealth
·
தகவல்கள் எமக்கு வழிகாட்டி
·
தகவலைத் தொகுத்த அறிவு எமக்கு பலம்!
·
இங்கே பெறப்பட்ட தகவலைத் தொகுத்ததில் பெறப்பட்ட தகவல்களும், அறிவும் கலந்துரையாடலுக்கு இங்கே பகிரப்படுகிறது.
·
சிங்கள மொழி மூல மாணவர்கள் மொத்த எண்ணிக்கை = 2737
·
தமிழ் மொழிமூல முஸ்லிம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை = 611
·
தமிழ் மொழிமூல மலையகத் தமிழ் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை = 544
· மொத்த சாதாரண தரம் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை =3209
இதை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் மாத்தளையில் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களில்
·
சிங்கள மொழி மாணவர்கள் - 70%
·
தமிழ் மொழி மூல முஸ்லீம் மாணவர்கள் - 16%
·
தமிழ் மொழி மூல மலையக தமிழ் மாணவர்கள் - 14%
·
இந்த சனத்தொகையில் இருந்து சித்தியடைந்து உயர்தரத்திற்கு செல்ல இருக்கும் மொத்தத மாணவர்கள் - அதாவது மாத்தளையில் இருக்கும் மூவின மக்களிலும் மொத்த குடித்தொகையில் இருந்து அடுத்த நிலை கல்வியறிவிற்கு தகுதிபெறுபவர்கள்
·
சிங்கள மொழி மாணவர்கள் - 54%
·
தமிழ் மொழி மூல முஸ்லீம் மாணவர்கள் - 10%
· தமிழ் மொழி மூல மலையக தமிழ் மாணவர்கள் - 08%
மூவின மக்களில் இந்த சனத்தொகையில் இருந்து சித்தியடையாத - அதாவது மாத்தளையில் இருக்கும் மூவின மக்களிலும் மொத்த குடித்தொகையில் இருந்து அடுத்த நிலை கல்வியறிவிற்கு தகுதிபெறாதவர்கள் எண்ணிக்கை
·
சிங்கள மொழி மாணவர்கள் - 16%
·
தமிழ் மொழி மூல முஸ்லீம் மாணவர்கள் - 06%
·
தமிழ் மொழி மூல மலையக தமிழ் மாணவர்கள் - 06%
ஒட்டுமொத்தமாக மாத்தளையில் இந்த வருடம் 72% குடித்தொகை உயர் கல்விக்குத் தகுதி பெறும் அதேவேளை 28% குடித்தொகை அடிப்படை கல்வித்தகுதியை இழந்து நிற்கிறது.
நகர்ப்புறப் பாடசாலைகள் பெரிய அளவில் பெறுபேறுகளைக் காட்டிக் குதித்தாலும் நாம் ஒட்டுமொத்த சமூகமாக பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இலங்கையராக நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டின் உயர்தொழிலுக்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமென்றால் 72% ஆக இருக்கும் அடிப்படைக் கல்வித் தகுதியின் சித்தி விகிதம் 90% மொத்தமாக வரவேண்டும்.
பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும், உரிமைகளிலும் விளிம்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டும் மலையக தமிழ் சமூகம் தமது சித்தியடைதல் விகிதத்தை 90% ஆக்க வேண்டும்.
மலைகத் தமிழ் சமூகத்தின் சாதாரணதர சித்தி விகிதத்தைக் கூட்ட திட்டங்கள் என்ன?
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale
Overseas Old Boys'
Association -OOBA
Disclaimer:
இங்கு பாவிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரவியல் எதேச்சேயாக வாட்ஸப் மூலம் பெறப்பட்ட தரவுகுகள்; உத்தியோக பூர்வ தரவு கிடைக்கவில்லை; கல்வித்திணைக்களம் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டலாம் திருத்தப்படும். இங்கு நோக்கம் இந்த ஆய்வு முறை மூலம் அடுத்த வருட பெறுபேறுகளை எப்படிக் கூட்டுவது என்பதற்கான base line analysis and
target fixing; தரவுகளில் ஓரிரு எண்ணிக்கை பிழைகள் இருந்தாலும் விகிதாசரத்தை மாற்றாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.