சிங்காரச் சென்னை
உலகின் மிகப்பெரிய அறிவாளிகளை உருவாக்கிய நகரம்! ஆனால்
அடிப்படையில் அரசியலால் நகர திட்டமிடலில் கோட்டை விட்ட
நகரம்!
பெய்யும் மழை
முதலில் மண்ணிற்குள் ஊடுவுருவி நிறையும்,
இப்படி மண்ணின்
துளைகளையெல்லாம் நிறைத்து
நிலத்தடி நீராக
மாறும்! கனதியான
மழையை உள்ளே
உறுஞ்சி நிலத்தில் பொசிய விடும்
வேலையை அங்கு
உள்ள காடு,
பயிர்கள் செய்யும்!
மண் தன்னை
நிரப்பியவுடன் வெள்ள
ஓட்டத்தை ஆரம்பிக்கும்! இப்படி ஓடும்
வெள்ளமெல்லாம் மேற்பரப்பில் மனிதன் உருவாக்கி வைத்த கழனி
- வயல், குளம்,
ஏரி இவற்றில்
நிறைந்து வெள்ளம்
வராமல் தடுக்கும்!
ஆக நகரமைப்பில் மழை வேகமாக
மண்ணைத் தாக்கி
வெள்ளம் வராமல்
இருக்க காடும்,
குளம், ஏரிகளும்
அவசியம்! இவை
இரண்டுமே flood buffer. இவை இரண்டும் தனது
கொள்ளளவினை அடைந்தவுடன் வடிகால் அமைப்பு
மிகுதி நீரை
கடலிற்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
நாம் எல்லாம்
முன்னேறிய ஜென்மங்கள், அதிகரித்த சனத்தொகைக்கு வீடு கட்டி
சம்பாதிக்க வேண்டும்
என்று பேராசைப்பட்டு நிலத்தைக் கொங்கிரீட் காடு ஆக்கும்
போது நிலத்தடி
நீரிற்கு செலுத்தக்கூடிய பொறியல் அமைப்பும், குளம் அற்றுப்
போவதால் வரப்போகும் வெள்ளத்தினை வெளியேற்றும் வடிகால் எல்லாம்
சிந்தித்து மீள்
கட்டமைக்க வேண்டும்.
கடலோடு சமவுயரத்தில் அல்லது சிறிய
சாய்வில் இருக்கும் நகரத்திற்கு பெருமழையில் வரும் வெள்ளத்தைக் கொண்டு செல்ல
நுண்மையான பொறியியல் உழைப்புத் தேவை!
சென்னைக்கு ஏன்
வெள்ளம் வந்தது
என்றால் மழை
அதிகமாகப் பெய்தது
என்பது சரியான
காரணம் அல்ல!
மழையை அதிகமாக்
பெய்யவோ, குறைவாகப் பெய்ய வைக்கவோ
மனிதனால் இன்னும்
முடியவில்லை! மனிதன்
தனது பகுத்தறிவினைப் பயன்படுத்தி அறிவியலைப் பயன்படுத்தி சரியாக
இயற்கையின் இயக்கவியலைப் புரிந்துகொண்டு திட்டமிட்டு தனது பிரச்சனைகளைக் குறைக்க வேண்டும்!
உண்மையான பகுத்தறிவு என்பது மற்றவர்
நம்பிக்கையைக் கேலி
செய்வதல்ல! ஒரு
பிரச்சனையின் காரணத்தை
பகுத்து ஆராய்ந்து தெளிவை அடைவது!
மேலே சொன்ன
உண்மையை வேளச்சேரி ஏரி எப்படிச்
சுருங்கியது என்பதை
படத்தைப் பார்த்து
அறிவதன் மூலமும்
அங்கு சென்று
வெள்ளத்தைக் குறைக்க
வேண்டிய நீரே
ஊரெல்லாம் திரிந்து
ஆடியது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்!
இப்படிப் பல
ஏரிகள், வயல்கள்
எல்லாம் கொங்கிரீட் காடாகியதை அறிந்தால் வெள்ளம் ஏன்
வந்தது? சென்னை
ஏன் மூழ்கியது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.