சைவ
சித்தாந்தம்
ஒருவனின்
உள்
நோக்கிய
- சிவத்தை
நோக்கிய
பயணத்தை
பத்து
படிகளாகப்
பிரித்துள்ளது.
96
தத்துவங்களுடன்
பிணைக்கப்பட்டு
தெளிவற்று
இருக்கும்
ஆன்மா
இந்த
96 தத்துவங்களையும்
மூன்று
நிலைகளில்
சித்தி
- mastery செய்ய
வேண்டும்.
ஒவ்வொரு
தத்துவத்தினதும்
ரூபம்,
செயல்
அறியவேண்டும்.
பின்னர்
அந்த
தத்துவங்களை
அனுபவமாக
அறிந்து
தரிசிக்க
வேண்டும்.
பின்னர்
அந்த
தத்துவங்களை
தான்
யார்
என்பதை
அறிய
சுத்தி
செய்து
பளிங்கு
போல்
ஆக்க
வேண்டும்!
இப்படி
96 தத்துவங்கள்
சுத்தியானால்
பயணம்
இன்னும்
அகவயப்பட்டு
ஆத்மாவின்
ரூபம்
என்ன
என்ற
அறிவும்,
அதை
நேரடி
அனுபவமாக
அனுபவிக்கும்
தரிசனமும்
பெற்று
ஆன்மா
பற்றுக்கள்
நீங்கி
ஆன்ம
சுத்தி
நிலையை
சாதகன்
பெறுவான்.
இந்த
நிலை
பெற்ற
பிறகு
தான்
அவனுக்கு
சிவத்தைப்
பற்றிய
அறிவு
அகத்தில்
உதிக்க
ஆரம்பிக்கும்.
இந்த
அறிவு
முதலில்
சிவ
ரூபம்
எனும்
சிவத்தின்
இலட்சணங்கள்
என்ன
என்று
புரிந்து
சிவ
தரிசனம்
கிட்டும்!
பிறகு
சாதகன்
தனது
மனம்
என்ற
கருவியை
ஏகாக்ர
நிலைக்கு
பழக்கி
ஸமாதி
என்ற
நிலையை
எட்டும்
சிவயோக
சாதனை
புரிந்தால்
இறுதியில்
தானும்
சிவமும்
வேறல்ல
என்ற
இரண்டற
கலந்த
சிவபோக
நிலை
அனுபவமாக
வாய்க்கும்!
எவருக்காவது
இந்த
தத்துவ
விளக்கங்கள்,
தசகாரியங்களின்
ஒவ்வொரு
நிலையையும்
அனுபவ
விளக்கமாக
படிக்க
விருப்பமாக
இருந்தால்
கீழே
பதிவிடுங்கள்!
உரையாடல்
ஆரம்பமாகும்
போது
இணைத்துக்கொள்ளலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.