குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!

இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!

ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ

இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!

மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here

2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்

நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.

அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே

உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே

-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 17, 2023

செயலின் நோக்கம் - அறிவு - அன்பு

எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அந்தச் செயலால் நமக்கு கிடைக்கும் பலன் எது என்ற கேள்விக்கு தெளிவான பதிலும், அதாவது செயலின் நோக்கம் என்ன என்ற தெளிவும், அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகமும் motivation அவசியமாகிறது.

இவற்றை நாம் எல்லோரும் இரண்டுவிதமாக அணுகுகிறோம்;

இந்தச் செயலைச் செய்தால் எனக்கு இன்ன இலாபம் கிடைக்கும், சந்தோஷம் கிடைக்கும், பெருமை கிடைக்கும் என்ற போலியான மாயக் கற்பனைகள்! இவை ஏன் மாயக்கற்பனைகள் என்றால் ஒருக்காலும் இவையெல்லாம் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை!

ஆகவே ஒவ்வொரு முறை செயலைச் செய்த பிறகும் நமக்கு ஏமாற்றமே கிடைப்பதாக உணர ஆரம்பித்து செயல் புரியமுடியாமல் சோம்பலடைந்து, விரக்தி அடைந்து விடுகிறோம்.

இப்படியென்றால் செயலை விடாமல் செய்வதற்குரிய தன்மைதான் என்ன?

நாம் செயல் செய்யும் நோக்கம் அறிவைப் பெறுவதற்காக மாத்திரம் இருக்க வேண்டும் என்ற இலக்கு! எந்தச் செயலைச் செய்தாலும் அதனை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்ற அறிவை விருத்தி செய்யும் நோக்கம் மாத்திரமே இருக்க வேண்டும்! இப்படி அறிவை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு கர்மத்தினைச் செய்தால் அறிவு நுண்மையாக காரிய சித்தி ஏற்படும்.

நாம் காரியமாற்றுவதற்குரிய உத்வேகம் அன்பு நிமித்தமாக மாத்திரம் இருக்குமானால் எமக்கு மற்றவர்களின் எதிர்ச் செயல்கள் விரக்தி ஏற்படுத்தாது. நாம் காரியமாற்றும் போது மற்றவர்களுக்கு நாம் இதைச் செய்தால் எமக்கு இது கிடைக்கும் என்று சுய நல எண்ணங்களை வளர்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த மாதிரி அவர்கள் எமக்குத் திருப்பிச் செய்யவில்லை என்றவுடன் மனக்குழப்பம் அடைந்து விரக்தி அடைய ஆரம்பிக்கிறோம்.

நான் மற்றவர்களுக்கு எந்த உதவி செய்தாக இருந்தாலும் அதன் உத்வேகம் நிபந்தனையற்ற அன்பு மாத்திரமே என்ற வலுமான சிந்தனை எமக்குள் இருந்தால் நாம் எவராலும் விரக்தி அடைய மாட்டோம்!

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

என்றான் திருவள்ளுவர்; ஒரு செயலைச் செய்யும் போது அதன்மீதான ஆர்வம் அன்பாக மாத்திரமிருந்தால் அது நமக்கு நடாமலே நட்பு என்பதை உருவாக்கும்! ஒருவருக்கு உதவும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு மாத்திரமே கொண்டு நீங்கள் உதவினால் நீங்கள் வலிந்து கேட்காமலே நட்பு என்பது உருவாகிவிடும்!

நீங்கள் பெரிய அறச் செய்கைகளைச் செய்யலாம்; ஆனால் அதில் அன்பு என்ற உயிர் இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் செய்யும் அறச்செயல்கள் எதற்கும் தகுந்த பலன் கிடைக்காது!

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.

சிலர் வேலையில் கராராக செயலைச் சிறப்பாகச் செய்தாலும் அங்கு அன்பு இல்லாததால் அது தகுந்த பலனைக் கொண்டுவருவதில்லை!எது என்ற கேள்விக்கு தெளிவான பதிலும், அதாவது செயலின் நோக்கம் என்ன என்ற தெளிவும், அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகமும் motivation அவசியமாகிறது.

இவற்றை நாம் எல்லோரும் இரண்டுவிதமாக அணுகுகிறோம்;

இந்தச் செயலைச் செய்தால் எனக்கு இன்ன இலாபம் கிடைக்கும், சந்தோஷம் கிடைக்கும், பெருமை கிடைக்கும் என்ற போலியான மாயக் கற்பனைகள்! இவை ஏன் மாயக்கற்பனைகள் என்றால் ஒருக்காலும் இவையெல்லாம் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை!

ஆகவே ஒவ்வொரு முறை செயலைச் செய்த பிறகும் நமக்கு ஏமாற்றமே கிடைப்பதாக உணர ஆரம்பித்து செயல் புரியமுடியாமல் சோம்பலடைந்து, விரக்தி அடைந்து விடுகிறோம்.

இப்படியென்றால் செயலை விடாமல் செய்வதற்குரிய தன்மைதான் என்ன?

நாம் செயல் செய்யும் நோக்கம் அறிவைப் பெறுவதற்காக மாத்திரம் இருக்க வேண்டும் என்ற இலக்கு! எந்தச் செயலைச் செய்தாலும் அதனை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்ற அறிவை விருத்தி செய்யும் நோக்கம் மாத்திரமே இருக்க வேண்டும்! இப்படி அறிவை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு கர்மத்தினைச் செய்தால் அறிவு நுண்மையாக காரிய சித்தி ஏற்படும்.

நாம் காரியமாற்றுவதற்குரிய உத்வேகம் அன்பு நிமித்தமாக மாத்திரம் இருக்குமானால் எமக்கு மற்றவர்களின் எதிர்ச் செயல்கள் விரக்தி ஏற்படுத்தாது. நாம் காரியமாற்றும் போது மற்றவர்களுக்கு நாம் இதைச் செய்தால் எமக்கு இது கிடைக்கும் என்று சுய நல எண்ணங்களை வளர்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த மாதிரி அவர்கள் எமக்குத் திருப்பிச் செய்யவில்லை என்றவுடன் மனக்குழப்பம் அடைந்து விரக்தி அடைய ஆரம்பிக்கிறோம்.

நான் மற்றவர்களுக்கு எந்த உதவி செய்தாக இருந்தாலும் அதன் உத்வேகம் நிபந்தனையற்ற அன்பு மாத்திரமே என்ற வலுமான சிந்தனை எமக்குள் இருந்தால் நாம் எவராலும் விரக்தி அடைய மாட்டோம்!

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

என்றான் திருவள்ளுவர்; ஒரு செயலைச் செய்யும் போது அதன்மீதான ஆர்வம் அன்பாக மாத்திரமிருந்தால் அது நமக்கு நடாமலே நட்பு என்பதை உருவாக்கும்! ஒருவருக்கு உதவும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு மாத்திரமே கொண்டு நீங்கள் உதவினால் நீங்கள் வலிந்து கேட்காமலே நட்பு என்பது உருவாகிவிடும்!

நீங்கள் பெரிய அறச் செய்கைகளைச் செய்யலாம்; ஆனால் அதில் அன்பு என்ற உயிர் இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் செய்யும் அறச்செயல்கள் எதற்கும் தகுந்த பலன் கிடைக்காது!

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.

சிலர் வேலையில் கராராக செயலைச் சிறப்பாகச் செய்தாலும் அங்கு அன்பு இல்லாததால் அது தகுந்த பலனைக் கொண்டுவருவதில்லை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...