குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 19, 2023

பழைய ஆவணத்தின் பின்னாலும் ஒரு அருமையான ஞாபகம்

 



வருட இறுதி அலுமாரி, மேசைகள், கோப்புகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும் போது கிடைக்கும் ஒவ்வொரு பழைய ஆவணத்தின் பின்னாலும் ஒரு அருமையான ஞாபகம்! அந்த வகையில் வவுனியா ஆங்கில கழகத்தில் நான் ஆற்றிய இந்த உரைக்குப் பின்னால் ஒரு சிறு கதை இருக்கிறது!

நான் வவுனியா நகரத்தை மையமாகக் கொண்டு சூழலியல் முகாமைத்துவ மூலோயாயம் எப்படி வகுக்க வேண்டும் என்று சொல்லி எனது இறுதியாண்டு ஆய்விற்காக தேர்ந்தெடுத்தேன்!

சேர்க்கப்பட்ட தகவல்கள் ஒரு இளமானிப் பட்ட ஆய்வுக்குத் தேவையானவற்றை விட அதிகமாக இருந்ததாலும், எனது தம்பி மதுரன் தமிழவேள் ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிக்கொண்டிருந்ததாலும் வவுனியா நகரம் சார்ந்த சூழலியல் கட்டுரைகளை வாரவாரம் பத்திரிகையில் environmental journalism ஆக எமது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பிரதான சூழலியல் பிரச்சனைகளின் மூலகாரணங்களை எழுதுவது என்று முடிவெடுத்தோம்!

எனது தம்பி Bharati Rajanayagam அண்ணாவின் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தார். பாரதி அண்ணா அப்போது தினக்குரல் ஞாயிறு பதிப்பின் பிரதம ஆசிரியர்! நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதினால் அதற்கு முழுப்பக்கம் தந்து பெரிய தலைப்புகளை இட்டு ஊக்கப்படுத்தினார்.

இப்படியெழுதிய கட்டுரை ஒன்று நகரசபைக்கு பெரும் அழுத்தங்களைக் கொடுத்தது. அப்போது நகர சபையில் அரசியல்வாதிகள் இருக்கவில்லை; முழுக்கட்டுப்பாடும் செயலாளருடையது. குறித்த கட்டுரையைப் படித்த செயலாளர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி " தம்பி, என்னை ஒருக்கால் வந்து சந்தியும்" என்றார்; நானோ மாணவன் இன்னும் கற்கையை முடிக்கவில்லை. எதற்காகக் கூப்பிடுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு எல்லாத் தரவுகளையும் எடுத்துக்கொண்டு சந்திக்கச் சென்றேன்!

சென்றவுடன் அரச அதிகாரிக்கேயுரிய தோரணையுடன் நீர் எழுதியதெல்லாம் சரியோ? என்றார். நான் ஆம் ஐயா என்று சேகரித்து வைத்திருந்த தகவல்களைக் காட்டினேன். முறைப்படி ஆதாரங்களும், தரவுகளுடனும் ஆய்வு செய்திருக்கிறோம் என்றேன்; நான் சரியாகத் தான் நடந்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டார்.

சரி, இப்படித் தலைப்பு போட்டு எமக்கு அழுத்தம் கொடுக்கலாமோ என்றார்!

ஐயா, நான் தலைப்பை இடவில்லை; கட்டுரையை மாத்திரம்தான் அனுப்பினேன் என்றேன்! புரிந்துகொண்டார்!

பிரச்சனைகளை எப்படி வாய்ப்பாக்குவது என்றே சிந்தித்துகொண்டிருக்கும் எனக்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வவுனியா நகரத்தின் மீதான எனது ஆய்வினைப் பற்றிச் சொல்லி இந்த வவுனியாக நகர சூழலியல் முகாமைத்துவ frame work இந்த நகரத்தின் பிரதான முகாமையாளரான நீங்கள் கட்டாயம் நீங்கள் ஒரு தடவை கேட்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன்!

மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டு தனது உத்தியோகத்தர்களையும் கலந்து கொள்ளச் செய்து இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்!

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடு அனேகமாக Dr. Jeyaseelan Gnanaseelan செய்து தந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

அந்தக்காலத்தில் சூழலியல் பிரச்சனைகள் சார்ந்து எழுதிய பத்திரிகைக் கட்டுரைகள் என்னிடமிருந்து தவறிவிட்டது!

ஒரு காலத்தில் நான் ஒரு


Environmental Journalist ஆகவும் இருந்திருக்கிறேன்!

#பழையஆவணங்கள்







No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...