கீழ்வரும் தேவாரத்தை ஒருமுறை படித்துவிடுங்கள்; பின்னர் அதன்
கீழிருக்கும் பொருளை
மெதுவாக வாசித்து
கண்களை மூடி
உங்கள் மனக்கண்
திரையில் சிதாகாசத்தில் பாவனை செய்யுங்கள்!
தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே.
{ திரு ஞான
சம்பந்தர் அருளிச்
செய்த திருக்கடைக் காப்பு - 01; தலம்
: சீர்காழி - 01-பிரமபுரம் ; திருமுறை : முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}
கண்களை மூடி
புருவமத்தியில் இருத்தி
சிதாகாச வெளியில்
கீழ்வருமாறு பாவியுங்கள்!
நந்தியெம்பெருமானாகிய பெருத்த திமில் கொண்ட
காளையின் மேல்
அமர்ந்திருக்கும் பொன்னிற
ஒளி வீசும்
சிவபெருமானை நாம்
இந்த தேவ
ஆரத்தால் தியானிக்கப்போகிறோம்!
பொன்னிறத் தேகம்
மலங்கள் நீங்கிய
கண்ணிற்கே தெரியும்!
என்னுடைய மும்மலங்களையும் பொடியாக்கும் வல்லமை
சிவபெருமானுக்கே உள்ளதென்பதை நான் அவரது
சுடலைப் பொடி
பூசிய உடலைப்
பார்த்து உணர்கிறேன்! எனது மும்மலங்களும் அவரது அருட்கடாட்சத்தால் பொடிப்பொடியாகிறது!
என்னுடைய மலங்கள்
நீங்கிய ஆன்மா,
மனம் என்பவை
வெண்மதி போன்று
பிரகாசிக்கிறது! சிவபெருமானின் சடையில் இருக்கும் சந்திரகலை எனது
மனம், புத்தி
இவற்றைத் தூய்மையாக்கி என்னை செம்மையுற வைக்கிறது!
இப்படி என்னைப்
பற்றியிருந்த மலங்களை
நீக்கியதான் எனது
உள்ளம் முழுக்க
சிவபெருமான் மேல்
பற்றியதால் என்
உள்ளம் கவர்
கள்வனாகிய அந்தச்
சிவபெருமானை அழகிய
இதழ்களுடைய மலர்
மாலைகளை அணிந்த
அந்தப் பெருமானை
தினம் தினம்
பணிந்து என்னுள்
பணிவு என்ற
அகங்காரம், ஆணவம்
அற்ற நிலையை
ஏற்படுத்துகிறேன்!
ஏனென்றால் பெரும்
பேடு – அகங்காரம் முற்றிய
பிரம்மனின் ஐந்தாவது
தலையைக் கொய்து
ஆணவமல நீக்கிய,
பிரம்மனால் வணங்கப்பட்ட பெருமானே உம்மை
நான் தியானிக்கிறேன்!
இந்தத் தேவாரத்தைப் பாடும் போது
மனக்கண்ணில் இந்த
உருவகத்தை அனுபவித்து காட்சிப்படுத்தி படித்து
வாருங்கள்! மனதில்
சிவ இன்பம்
தோன்றும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.