குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 23, 2022

தலைப்பு இல்லை

 

எமது யோகமும் இயற்கையும் நூல் தமிழ்நாட்டின் இசைமேதைகளில் ஒருவரான நாட்டியாச்சார்யா ஸ்ரீ.எஸ்.பாலசந்த்ர ராஜு ஐயா அவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டு மனமுவந்த ஆசிகள் பெறப்பட்டது!

எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான தொலைக்காட்சி நாடகத் தொடரான ருத்ர வீணையின் ஆரம்பத்தில் வரும் வீணை இராகம், அதன் பயன் பற்றிய தகவல்கள் இவரது இராக ஆராய்ச்சியின் முடிவுகளாகும்.

அவர் 36 இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய ஆற்றல் உடையவரும் பரத நாட்டியத்தில் பாண்டித்தியம் பெற்ற குருவும் ஆவார். 90 இற்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நூற்களை எழுதிய அறிஞரும் கூட.

கர்னாடகம், ஹிந்துஸ்தானி, மேற்கத்தேயம் ஆகிய மூன்று இசைகளினதும் நுணுக்கங்கள் அறிந்தவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய தேவி உபாசகர்!

இதைச் சாத்தியமாக்கிய கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய நன்றிகள்!

தலைப்பு இல்லை

 

(The Philosophy of Money)  இந்தப்புத்தகம் நீண்டகாலமாக சரசவி புத்தகசாலை செல்லும்போது கண்களில் படும். புத்தகம் பெரிதாக இருக்கிறது; விலை பெரிதாக இருக்கும் என்ற எண்ணம், ஆனால் தலைப்போ, எனது வாசிப்பு பசிக்கு அருகில் இருக்கிறது என்ற அடிப்படையில் எடுத்து விலையைப் பார்க்காமல் சில பக்கங்கள் வாசித்துவிட்டு வந்துவிடுவது வழக்கம்! ஆர்வம் தாளாமல் இந்தமுறை விலையைப் பார்த்தால் வெறும் 1250/= தான். வாங்கியாயிற்று! தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்!

நூலாசிரியர் Simmel ஒரு 19ம் நூற்றாண்டு ஜேர்மானிய மெய்யியலாளர். சமூக இயக்கம் எப்படிப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ந்தவர்.

பணம் பற்றிய தனது ஆய்வினை தொகுத்த நூல். The Philosophy of Money.

Simmel இனது கோட்பாடுகளின் சுருக்கம் வருமாறு;

1) மனிதர்கள் இலக்கினை (objects) நிர்ணயித்து அதற்கு ஒரு பொருளாதார பெறுமானத்தை (value) உருவாக்குகிறார்கள்.

2) பிறகு அந்த இலக்கினை தமக்குத் தூரமாக்கிக்கொண்டு அந்த தூரத்தை குறைத்து இலக்கை அடைவதாக முயற்சியினை மேற்கொள்கிறார்கள்.

3) இலகுவாக அடையக்கூடிய இலக்குகளும், அடையமுடியாத தூரத்தில் இருக்கக்கூடிய இலக்குகளும் பெறுமதி அற்றதாகிறது.

4) ஒரு பொருளின் பெறுமதி (value) என்பதைத் தீர்மானிப்பது அது இலகுவில் அனைவருக்கும் கிட்டாத தன்மை, நேரம், அதை அடைவதற்கான தனிப்பட்ட தியாகம், அதை அடைவதற்கான கஷ்டங்கள் ஆகியவை.

Simmel தான் வாழ்ந்த காலத்தில் இருந்த அடிமை முறையை நீக்குவதற்கு பணத்தினுடைய மெய்யியல் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகக் கருதினார். பணம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கான அடிப்படை என்பதே இந்த நூலின் மூலக்கருத்து.

Simmel தனது காலத்து சமூகத்தில் அடிமைகள், peasant எனப்படும் சிறிதளவு நிலம் உடைய விவசாயிகளின் தனிமனித சுதந்திரத்தினைப் பற்றி உரையாடுகிறார். அடிமையை விட விவசாயி தான் விரும்பியதைச் செய்யும் பொருளாதாரச் சுதந்திரம் உடையவனாக இருக்கிறான்.

மேலும் பணம் என்பது ஒருவனிற்கு தான் சுதந்திரமானவன், தன்னிறைவு உடையவன் என்ற எண்ணத்தை உருவாக்கும் கருவியாகக் குறிப்பிடுகிறார்.

எண்ணத்தில், சிந்தனையில் மாற்றமே சமூக மாற்றம்

 

அண்மைக்காலமாக சமூக திட்டங்களை கவனித்ததில் அவை சரியான இலக்கினை அடைய முடியாமல் இருப்பதற்கு அதை வழி நடாத்தும் நபர்களின் மனநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஒரு சிலர் குழுவாக இணைந்தவுடன் அந்தக்குழுவைத் தவிர்ந்தவர்கள் அனைவரும் எதிரிகளாகவும், தமக்கு அன்னியமானவர்களாகவும் கருதத்தொடங்கும் மன நிலையை உருவாக்கியவுடன் மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும் ஆற்றலை இழந்து தனித்து விடுகிறார்கள்.

குழுவாக இணைவது தனி ஒரு மனிதன் எந்த ஒன்றையும் சாதிக்கும் வல்லமை உடையவன் அல்ல! ஆகவே கூட்டாகச் சேரும்போது ஒருவரின் பலவீனத்திற்கு இன்னொருவர் பலமாக அமையும் தன்மையை உருவாக்கி பலமுடையதாக்குகிறது.

ஒவ்வொரு குழுவும் மற்றைய குழுவுடன் ஒத்திசைந்து ஒன்றுக்கொன்று மிகை நிரப்பியாக செயற்படும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு கல்வித்திட்டத்தை சமூகத்திற்காக முன்னெடுக்கிறோம் என்றால் வியாபார சமூக குழு அதற்குரிய நிதியை ஒருங்கிணைப்பதில் உதவ வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கல்விச் சமூகத்திடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் பணம் கொடுக்கிறோம், நான் சொல்லும்படி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு வந்தால் செயல் கெட்டு குட்டிச் சுவராகி விடும்.

இதைப் போல் அரசியல்வாதி பாடசாலைகளுக்கு வளங்களைக் கொண்டுவருவதில் தனது வாக்கு வங்கியை பிரதானமாகக் கணக்கிட்டு யாரிற்கு வளங்கள் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தாலும் ஓரளவிற்கு மேல் கல்விச் சமூகத்தின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது.

அதிகாரமும், பணமும் அறிவையும், பண்பாட்டினை வளர்க்கும் சக்திகளாகச் செயற்படவேண்டும். இப்படி சிந்திக்கும் ஒரு சமூகமே உயர்வினைப் பெறும்.

இதற்கு எண்ணத்தில், மனதில் மாற்றம் முதலில் உருவாக வேண்டும்!

உரையாடுவோம்!

எண்ணத்தில், சிந்தனையில் மாற்றமே சமூக மாற்றம்

 

அண்மைக்காலமாக சமூக திட்டங்களை கவனித்ததில் அவை சரியான இலக்கினை அடைய முடியாமல் இருப்பதற்கு அதை வழி நடாத்தும் நபர்களின் மனநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

                ஒரு சிலர் குழுவாக இணைந்தவுடன் அந்தக்குழுவைத் தவிர்ந்தவர்கள் அனைவரும் எதிரிகளாகவும், தமக்கு அன்னியமானவர்களாகவும் கருதத்தொடங்கும் மன நிலையை உருவாக்கியவுடன் மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும் ஆற்றலை இழந்து தனித்து விடுகிறார்கள்.

                குழுவாக இணைவது தனி ஒரு மனிதன் எந்த ஒன்றையும் சாதிக்கும் வல்லமை உடையவன் அல்ல! ஆகவே கூட்டாகச் சேரும்போது ஒருவரின் பலவீனத்திற்கு இன்னொருவர் பலமாக அமையும் தன்மையை உருவாக்கி பலமுடையதாக்குகிறது.

                ஒவ்வொரு குழுவும் மற்றைய குழுவுடன் ஒத்திசைந்து ஒன்றுக்கொன்று மிகை நிரப்பியாக செயற்படும் வகையில் இருக்க வேண்டும்.

                ஒரு கல்வித்திட்டத்தை சமூகத்திற்காக முன்னெடுக்கிறோம் என்றால் வியாபார சமூக குழு அதற்குரிய நிதியை ஒருங்கிணைப்பதில் உதவ வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கல்விச் சமூகத்திடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் பணம் கொடுக்கிறோம், நான் சொல்லும்படி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு வந்தால் செயல் கெட்டு குட்டிச் சுவராகி விடும்.

                இதைப் போல் அரசியல்வாதி பாடசாலைகளுக்கு வளங்களைக் கொண்டுவருவதில் தனது வாக்கு வங்கியை பிரதானமாகக் கணக்கிட்டு யாரிற்கு வளங்கள் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தாலும் ஓரளவிற்கு மேல் கல்விச் சமூகத்தின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது.

                அதிகாரமும், பணமும் அறிவையும், பண்பாட்டினை வளர்க்கும் சக்திகளாகச் செயற்படவேண்டும். இப்படி சிந்திக்கும் ஒரு சமூகமே உயர்வினைப் பெறும்.

இதற்கு எண்ணத்தில், மனதில் மாற்றம் முதலில் உருவாக வேண்டும்!

உரையாடுவோம்!

Friday, February 18, 2022

தலைப்பு இல்லை

 

Work completed...

ஓம் யந்திர ராஜாய வித்மஹே

மகா யந்திராய தீமஹி

தன்னோ யந்திர ப்ரசோதயாத்!

ஓம் யந்திரங்களின் அரசனை (அரசனாகிய ஸ்ரீ யந்திரத்தை) புரிந்துகொண்டு,

அதனை புத்தியில் இருத்தி தியானிக்க

அந்த யந்திர சக்தி எம்மை சரியாக வழியில் செலுத்தட்டும்!

எனது குரு நாதர்

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி கூறுவார்;

                எமது பௌதீக உடல் ஒளியால் ஆக்கப்பட்டதல்ல, ஆனால் மானச உடல் ஒளியால் ஆக்கப்பட்டது. இதனால்தான் மனதில் உருவகித்து தாரணை செய்வதன் மூலம் மனதில் உருவகிப்பதை அடைய முடிகிறது. இந்த அடிப்படையில்தான் குறியீடுகளும், யந்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறது! இவை எமது மன உருவகத்திற்குரிய (visualizations) சாதனங்கள். இவற்றினூடாக பிரபஞ்ச சக்திகள் செயற்படுகின்றன. எல்லாவிதமான உருவங்களும் ஒருவகை யந்திரங்களே. இவை இடம், காலம் மற்றும் சடப்பொருள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் சாதனம்.

Thursday, February 17, 2022

தலைப்பு இல்லை

 

Sri Yantra is a geometrical representation of the Human body as well as the Universe. {அண்டத்தில் உள்ளது பிண்டத்திலுண்டு, பிண்டத்திலுள்ளது அண்டத்திலுண்டு; "Yatha pinde tatha brahmande, yatha brahmande tatha pinde"}

formation of these 43 triangles is happening by the intersection of circles. starting from a central point - BINDU - this central point expanding as a circle, then in the same measurement four circles creating further intersections. by repeating this process fractals are formed.

Fractals are infinitely complex patterns that are self-similar across different scales. They are created by repeating a simple process over and over in an ongoing feedback loop.

the central part of the Sri Yantra is 43 triangles out of circular fractals.

after the fractal formation connecting the appropriate intersections 43 triangles, Sri Yanta is formed.

this formation will tell the secret of how the human body evolved in Karana (Causal) Sookshma (Subtle) level with the flow of Prana.

My Guruji Sri Amritanandanatha Saraswati (Dr. Nishtala Prahalada Sastry) of Devipuram being a Nuclear Scientist - Professor in Quantum physics created a more simple linear way of constructing Sri Yantra, without entering into a chaotic state.

However, I am an enthusiastic Chaos theory lover who tried the complex version.

My hand-drawn intermediate Chaotic Precosmic level representation appears like below!

#sacredgeometry #srividya #sriyantra #fractal #fractalart #tantra #yantra

தலைப்பு இல்லை

 

My hand drawn Sri Yantra - work on progress…

சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சத்திநெறி

செறி கோணம் அத்தொடு ஒரு மருவுகோள்

நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு

நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்

இவரா நிரைத்த தளம் இரு நாலும் எட்டு இணையும்

எழியாய வட்ட மொடு சதுரமாய்

உவமானம் அற்ற தனி தனி மூவகைக் கணும்

என் உமைபாதம் உற்ற சிறு வரைகளே!

Friday, February 11, 2022

நாதப் பிரம்ம யோகம்

 

குருவருளால் தினகரன் சைவமஞ்சரியில் ஜனவரி முதல் வாரம் முதல் நாதப்பிரம்ம சாதனை என்ற தொடர் எழுத ஆரம்பித்து அதற்கு அடுத்து இராஜசியாமளை நவராத்திரியும் முடிய நேற்று இரவு இளையராஜா அவர்களின் பாடல்களை இராக ரீதியாகத் தொகுத்துத் தரமுடியுமா என்று பெரும் இசை இரசிகரான Krishna Kumar இற்கு செய்தி அனுப்பிவிட்டு காலையில் பாடல்களை எப்படித் தொகுப்பது என்று நீண்ட உரையாடலிற்கு பிறகு கிருஷ்ணா இப்படியொரு செய்தியை அனுப்பி வைத்தார்!

இளையராஜாவின் இசையால் ஒருவர் நோயிலிருந்து மீண்டார் என்று!

உடலை இயக்கும் உயிர் தத்துவத்தை பிராணன் என்று சித்தர்கள் கூறுவார்கள். இந்தப்பிராணன் நாதமும் ஒளியும் கலந்தது.

யோகத்தின் ஒருபகுதி நாத யோகம்; இதன் அடிப்படை ஓம் என்ற மூல நாதத்திலிருந்து, ஸப்த சுரங்கள் உதித்தது. இந்த ஸப்த சுரங்கள் மனிதனின் காரண சரீரத்தில் மூலாதாரம் தொடக்கம் பிரம்மரந்திரம் (தலை உச்சி) வரை சூக்ஷ்சுமமாக வியாபித்திருக்கிறது. இப்படி வியாபித்த ஸப்த சுர நாதங்களுக்குள் வாக்கு எனும் சொற்களையும், இசையையும் அடக்கினால் காரண சரீரத்தையும், அதில் ஓடும் பிராணனையும் நெறிப்படுத்த முடியும். இப்படிப் பிராணனை நெறிப்படுத்தினால் உடலில் நல்ல உணர்ச்சிகளை, ஆரோக்கியத்தைப் பெறமுடியும். இதன் மூலம் இறையுணர்வையும் பெறமுடியும் என்பது இதன் விளக்கம்!

இசையை பொழுதுபோக்கும் ஒன்றாக மாத்திரம் பார்க்காமல் அதன் ஆழமான பிராண தத்துவ ஞானத்தையும் அது எமது ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் நாம் அறிய வேண்டும்!

கிருஷ்ணாவிடம் இளையராஜா பாடல்களை இராக ரீதியாகத் தொகுத்து ஒவ்வொரு பாட்டும் மனதிற்கு, உணர்ச்சிக்கு என்ன மாற்றத்தைத் தருகிறது என்ற ஒரு தொகுப்பைச் செய்யவிருக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் உதவலாம்!

Wednesday, February 09, 2022

தலைப்பு இல்லை

இன்று காலை யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளில் திருவடி நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.

படத்திலுள்ள விறாந்தையில் யோகர் சுவாமிகளின் சீடரான செல்லத்துரை சுவாமிகள் நிலத்தில் மாலை நேரத்தில் வீராசனம் போட்டு அமர்ந்திருப்பார்.
நான்கு மாத காலம் மாலை வேளையில் சுவாமிகளுடன் இந்த இடத்திலிருந்து அமர்ந்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
செல்லத்துரை சுவாமிகள் குண்டலினி யோகம் பயிற்சித்த ஒரு யோகியாவார். யோகர் சுவாமிகள் ஒரு அறிஞர் கூட்டத்தைக் கொண்டு Serpent Power என்ற ஆர்தர் ஆவலோனின் நூலை மொழிபெயர்த்து பின்னர் சுவாமிகளை மெய்ப்பு பார்க்கச் சொல்லி சிவதொண்டனில் பதிப்பித்தார்!

Tuesday, February 08, 2022

தலைப்பு இல்லை

The Siddhâsana by Sri Shakthi Sumanan, 08-Feb-2022

Photo Credit (C) Amirthavarshini

Press firmly the heel of the left foot against the perineum, and the right heel above the male organ. With the chin pressing on the chest, one should sit calmly, having restrained the senses, and gaze steadily at the space between the eyebrows. This is called the Siddha Âsana, the opener of the door of salvation.

Just as sparing food is among Yamas, and Ahisâ among the Niyamas, so is Siddhâsana called by adepts the chief of all the âsanas.

There is no Âsana like the Siddhâsana and no Kumbhaka like the Kevala. There is no mudrâ like the Khechari and no laya like the Nâda (Anâhata Nâda.)

Out of the 84, Âsanas Siddhâsana should always be practiced, because it cleanses the impurities of 72,000 Nadis.

By contemplating on oneself, by eating sparingly(mitāhārī), and by practicing Siddhâsana for 12 years, the Yogî obtains success.

Other postures are of no use when success has been achieved in Siddhâsana, and Prâa Vâyû becomes calm and restrained by Kevala Kumbhaka.

Success in one Siddhâsana alone becoming firmly established, one gets Unmanî at once, and the three bonds (Bandhas) are accomplished of themselves.

There is no Âsana like the Siddhâsana and no Kumbhaka like the Kevala. There is no mudrâ like the Khechari and no laya like the Nâda (Anâhata Nâda.)

Hatha Yoga Pradipika, Translation by Pancham Sinh, [1914]

Thursday, February 03, 2022

தலைப்பு இல்லை

விஞ்ஞான பைரவ தந்திரம்

தேவரே,

உமது உண்மை என்ன?

அதிசயங்கள் நிறைந்த பிரபஞ்சம் என்றால் என்ன?

விதை என்றால் என்ன?

பிரபஞ்ச சக்கரத்தை மையப்படுத்துவது யார்?

வடிவங்கள் வியாபித்திருக்கும் வடிவங்களுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை என்ன?

இடம் மற்றும் நேரம், பெயர்கள் மற்றும் விளக்கங்களுக்கு மேல் அதை எப்படி முழுமையாக உள்ளிடலாம்?

என் சந்தேகங்கள் தீர அருள் புரிவீர்கள்.

மேற்குறித்த கேள்விகளிற்கு சொற்களால் பதிலில்லை தேவி!

கீழ்வரும் கருவிகள் மூலம் இந்த 112 தந்திரங்களில் உனக்கு உகந்த ஒன்றோ, இரண்டோ, பலதையோ அப்பியாசித்து அனுபவ ஞானத்தினால் பதில்களைப் பெறுவாய்!

மூச்சு: வசனங்கள் 24-27, 55, 64, 154

குண்டலினி : 28-31, 35

துவாதசாந்தா (புள்ளி 12 விரல் அகலங்கள்): 50-51, [55]

புலன்கள்: 32, 36, 67, 77?, 89, 117, 136

ஒலி மற்றும் மந்திரம்: 38-42, 90-91, 114

வெற்றிடம் (śūnya): 43-48, [49], 58-60, 120, 122

பிரபஞ்சம் (அல்லது அதன் இல்லாமை): 53, 56-57, 95

உடல் (அல்லது இல்லாதது): 46-48

(வெற்றிடத்துடன் ஒன்றுடன் ஒன்று), 52, 54, 63, 65, 93, 104, 107

இதயம்/மையம் (hdayam): 49, 61, 62

இன்பம்: 68-74, 96

ஒளி & இருள்: 37, 76, 87, 88

உறக்கமும் கனவும் : 55, 75, 86

உடலுடன் பயிற்சி: 66, 78-79, 81, 82, 83, 111

பார்வை: 80, 84, 85, 113, 119-120

சமநிலை: 100, 103, 123-4, 125-6, 129

அறிவு/நுண்ணறிவு: 97-99, 105, 106, 112, 127, 131

தீவிர உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள்: 101, 115, 118

மனம் எங்கு செல்கிறது: 33, 34, 92, 94, 108, 116, 128, [138]

மாயாஜாலம்: 102, 133-5, 137

பரசிவம்: 109-110, 121, 132

Tuesday, February 01, 2022

தலைப்பு இல்லை

சித்தியும், சித்தி தரும் தெய்வமுமாகத் திகழும்

பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்

முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த

புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...