குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 08, 2014

குண்டலினி சக்தி 06: Serpent Power by Arthur Avalon

கீழ்வரும் பகுதி வாசகருக்கு அவரது கருத்தினை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
நான் மேற்கூறியவாறு மூலாதாரத்தில் உள்ள குண்டலினியினை தவிர்ந்து வேறுவகையில் விழிப்பித்தல் என்பது முடியாதாகாரியம். அப்படியான சந்தர்ப்பம் தற்செயலான விபத்துக்களாலோ, சில தேவையற்ற புள்ளிகளை தட்டுவதாலோ நடைபெறமுடியும். குண்டலினி விழிப்புற்ற மனிதனிற்கு உடல் சவம்போன்று குளிர்ந்தும் உச்சந்தலை உஷ்ணமாகவும் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. (இது குண்டலினி யோகத்தின் சமாதி எனும் ஒரு நிலை). அவன் தலையினை சிறிதளவு நெய் கொண்டு பிசைந்து அழுத்தி வர உஷ்ணம் படிப்படியாக குறையும், அந்த உஷ்ணம் கழுத்துப்பகுதிக்கு வந்து பின்னர் உடல் முழுவதையும் உஷ்ணப்படுத்தும். அதன் பின்னர் அந்த மனிதன் உணர்வினைப்பெற்று தனது அனுபவத்தினை கூறினான். அவன் சில புராத இடங்கள் ஊடாக சென்றதாகவும், யோக நிலையில் அமர்ந்திருந்தவர்களை கண்டதாகவும் திடீரன நித்திரை அவனை அணைத்துக்கொண்டதாகவும் கூறினான். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவனது சுவாசம் நின்று சரியான நிலையும் சூழலும் வாய்த்திருக்கும் பட்சத்தில் அவனை அறியாமலே குண்டலினி மேலெழுந்து மூளைப்பகுதியை அடைந்திருக்க வேண்டும். எப்படியாயினும் ஒரு யோகி அல்லாத அவரால் குண்டலினியை மீண்டும் கீழிறக்குவது என்பது இயலாத காரியம், இது நாடிகள் சுத்தமாக இருக்கும் பட்சத்திலேயே செய்யக்கூடிய ஒன்று. இந்த விடயத்தினை கூறிய பண்டிட்டிடம் (அவர் இந்த யோகத்தினை பயின்றவர், மற்றும் அவரது சகோதரர் இதனை பயிற்சிக்கிறார்) எனது ஐரோப்பிய நண்பரான மேற்கூறிய வகையில் யோக வழிமுறைகளில் பின்புல அறிவற்ற நண்பரின் விடயத்தினைப்பற்றி கூறினேன், அவர் எனக்கு எழுதும் போது குண்டலினி பற்றி சில சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பில் அறிந்து கொண்டதாகவும், அவர் தியானத்தின மூலம் மட்டும் குண்டலினியை விழிப்பித்துக்கொள்ளலாம் என்பதினை நம்பவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும் அவர் எழுதியதன் படி ஐரோப்பியரான அவருக்கு கீழைத்தேய யோகம் பற்றி நுண்ணிய விடயங்களை அறிந்து கொள்வதில் பயன் இல்லை எனக்குறிப்பிட்டிருந்தார். எப்படியாயினும் அவர் "இட" "பிங்கல" "மத்திய" நாடிகளை ரோஸ் நிறம் சார்ந்த நீல நிற கதிர்ப்பாக கண்டிருக்கிறார், அதனூடாக வெள்ளை நிற நெருப்பு பொறி கீழிருந்து எழுந்து மூளையினை அடைந்து வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நெருப்பு ஒவ்வொரு மையத்திலிருந்து மையத்திற்கு பாய்ந்ததை கண்டதாகவும், இதனை மற்றையவர்களது உடலிலும் கண்டிருக்கிறார். "இடா" நாடியினைச் சூழ உள்ள கதிர்ப்பு சந்திரனைப்போல் இருந்ததாகவும், பிங்கலை நாடியினை சூழ உள்ள கதிர்ப்பு சிவப்பு அல்லது ரோஸ் நிறத்தில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அவரது காட்சியில் குண்டலினி நெருப்பு தங்க அல்லது வெள்ளை நிற நெருப்பாக சுழன்று சுழன்று எழுந்ததாக குறிப்பிடுகிறார். சுஷும்னா, இடகலை, பிங்கலை ஆகியவற்றின் தோற்றத்தினை குறிக்க கடோசியஸ் மேர்குரி(37) குறியீட்டினை குறிப்பிடுகிறார். அதன் உச்சியில் காணப்படும் சிறிய பந்து போன்ற அமைப்பு சகஸ்ராரத்தினை அல்லது பீனியல் சுரப்பியினை குறிப்பதாகவும் சிறகுகள் அந்த இடத்தினை முதலாவதாக துளைக்கும் போது உருவாகும் கதிர்ப்பும் (ஆரா) ஆகும். ஒரு இரவு திடீரன வழமைக்கு மாறாக உடல் ஆசைகள் அற்று, குண்டலினி எழுவதை உணர்ந்தார், பின்னர் இறக்கைகள் போல் ஒளிக்கிரகணங்கள் தனது தலையில் இருந்து சென்றதாகவும் இசை நாதங்கள் கேட்டதாகவும், இந்தக்கதிர்ப்புகளில் சிலது தலைக்கு மேற்சென்று ஒன்றாகி இறக்கை வடிவம் பெற்றது, நான் ஒரு ஆடும் நிலையினை அடைந்தேன். உண்மையில் எனக்கு மிகவும் பயமாகவும், அந்த சக்தி என்னை அருந்துவதாயும் உணர்ந்தேன்" எனது நண்பர் எனக்கு எழுதியிருந்தார். இந்த அதிர்வில் தான் மனதினை அந்த பெரும் ஆற்றலில் நிலை நிறுத்த முடியாமல் போய்விட்டதாகவும் அந்த அரிய தெய்வீக நிலையினை தவறவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த உயர்ந்த சக்தியினை விழிப்படைய வைத்தது, அதனை ஒரு உயர்ந்த சக்தியாகவோ அல்லது உயர்ந்த உணர்வு நிலையினை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகவோ கருதி தான் விழிப்படைய வைக்க முனையவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்த அனுபவம் அவரை இந்திய தாந்திரீக நூற்களில் காணப்படும் அறிவியலையலையும் அற்புதத்தையும் அவருக்கு நிருபித்திருந்தது.

இந்த அனுபவத்தில் பண்டிட் இன் கருத்து வருமாறு; மூச்சினை நிறுத்தி மனதினை கீழ் நோக்கி செலுத்த உஷ்ணத்தினை அனுபவிக்கலாம். அது விதந்து உரைக்கப்பட்ட யோகத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாக கூடிய குண்டலினி விழிப்பை  மனக்கண்ணினால் பார்ப்பது சாத்தியமே, இந்த வகையில் இந்த அனுபவம் குண்டலினியினை உண்மையில் விழிப்படைய வைக்காமல் மேலே ஏற்றாமல் நடைபெறும் ஒன்றுகுண்டலினியை அடிப்பகுதியில் (மூலாதாரத்தில்) ஒளியாக காணலாம். இது புத்தியாகிய மனம் காண்பது, ஆனால் இந்த அனுபவஸ்தர் இந்த அனுபவம் பற்றிய் எதுவும் பயிற்சி அறிவு பெற்றிருக்கவில்லை, அதனால் குழப்பமடைந்திருக்கிறார். சக்தி உண்மையிலேயே விழிப்படைந்திருக்கிறதா என்பதற்கு ஒரு எளிய சோதனை உள்ளது. அவள் விழிப்படைந்த நிலையில் உள்ள போது அந்தப்புள்ளி மட்டும் அதீத உஷ்ணமாகவும், அந்த இடத்தில் இருந்து அந்த சக்தி சென்றவுடன் சவத்தினைபோன்று குளிர்ச்சி அடைந்தும் காணப்படும். மேல் நோக்கிய நகர்வினை புறத்தில் உள்ளவர்களால் கண்டறிய முடியும். சக்தி மூளை மையத்தினை (சகஸ்ராரம்) அடையும் போது தலை உச்சி தவிர்ந்த முழு உடலும் சவம் போன்ற குளிர்ந்த தன்மையினை பெறும். இந்த இடமே உணர்வு சக்தியின் நிலைப்பண்பு சக்தியும் இயக்க சக்தியும் ஒன்றாக இணையும் இடம்.

தற்போதைய இந்த நூலில் தரப்பட்ட விடயங்களின் நோக்கம் இந்த வகை யோகத்தின் தத்துவங்களது அல்லது பயிற்சிகளின் உண்மைகளை கூறுவதோ வெளிப்படுத்துவதோ அல்ல, ஆனால் ஆன்மீகத்திலும் மறையியலிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு முழுமையான, மிகவும் பொருந்தக்கூடிய, தர்கரீதியிலான தெளிவான விடயத்தினை தருவதே இதன் நோக்கம்.

இங்கு மொழிபெயர்க்கப்பட்ட விடயத்தினை விளங்கிக்கொள்ள முதலில் அதன் தத்துவார்த்தம், சமயம் பற்றிய சுருக்கமான அறிமுகப்படுதல் அவசியம். அத்தகைய அறிவு இதனை வாசிக்கும் வாசகருக்கு உண்டு என்பது ஆசிரியரின் அனுமானம்.
இந்த அறிமுகத்தின் கீழ்வரும் பகுதிகள் முதலில் உணர்வு(38) பற்றிய கருத்திக்களையும், மறையுணர்வு, மனம், பொருள் மற்றும் உயிர் போன்றவை ஜீவான்மாவுடன் தொடர்பு பட்டுள்ள விதம் பற்றியும், ஆன்மாவின் இயக்க சக்தி பற்றியும், புறப்பிரபஞ்ச்சத்தில் உள்ளவற்றின் ஒத்த அமைப்பே நுண்பிரபஞ்சமான (சூத்ர-ப்ரம்மாண்ட)(39) உடலில் அவை உருவாகும் விதமும் பற்றியும் கூறப்படும். விஸ்வஸார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளதன் படி "எங்கே உள்ளதெல்லம் இங்கேயே உள்ளது, இங்கே இல்லாதது எங்கேயும் இல்லாதது" (யத் இஹஸ்தி தத் அனியத்ரா யானேஹஸ்தி நா தத் கவசித்). வாக்கிற்கு மூலமான எழுத்துக்களையும் வார்த்தைகளையும் அறிந்தபின்னர் யோகத்தில் அது ஒடுங்கும் முறையுடன் முடிக்கின்றேன். இதனை முன்னர் கூறிய விடயங்களை தெளிவுற அறியாமல் விளங்கிக்கொள்ள முடியாது.

இந்த வேலைப்பாடுடன் குறியந்தது பயிற்சியுடன் தொடர்புடைய உலக பரிணாமம் பற்றிய கோட்பாடுகளை விபரித்தலும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். 39 ஆவது சுலோகத்தில் உரையாசிரியர்  "யோகத்தினை பயிற்சிப்பதற்கான விதி அது உருவானவற்றிலேயே கரைவதுதான்" என்று குறிப்பிடுகிறார்; இங்கு குறிப்பிடப்படும் யோகமானது இவ்வாறான ஒடுங்கலைத் (லயம்) தருவதே. இந்த ஒடுங்கும் செய்முறையினை (நிவ்ருத்தி) ஆக்கல் செய்முறையினை (பரவ்ருத்தி) விளங்கிகொள்ளாமல் புரிந்து கொள்ளமுடியாது. இத்தகைய இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கும் பொருந்தும்.

சாக்த தத்துவத்தின் சக்தி தத்துவத்தினைப்பற்றிய சுருக்கமான ஆய்வும ஒன்றும் இந்த இடத்தில் பெறுமதியான விடயமே.

சக்தியின் வெளிப்பாடுகள் அனைத்தும் மனமாக, உயிராக மற்றும் பொருளாக வெளிப்படுகிறது. சக்தியினை - ஆற்றலினை கொண்டிருப்பவன் சக்திமான் எனப்படுகிறான், சக்தி இல்லாது சக்திமான் இல்லை, அதுபோல் சக்திமான் இல்லாமல் சக்தியும் இல்லை. சக்தியினை கொண்டிருப்பவன் சிவா. அவனின் ஆற்றல் சக்தி, பிரபஞ்சத்தின் தாய், சக்தி இன்றி சிவனில்லை, சிவன் இன்றி சக்தி இல்லை. இரண்டாக உள்ள அவை ஒன்றே, அவை ஒவ்வொன்றும் இருப்பும், உணர்வும்ஆனந்தமுமாக இருக்கின்றன. இந்த மூன்று பதங்களும் எல்லையற்ற உண்மையினை விளங்கிக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றதுஏனெனில் இருத்தல் என்பது குறித்த ஒரு இருப்பில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. அது வேறு ஒரு வடிவில் இருக்க முடியாது என்பதனை உணர்த்துகிறது. உணர்வுடன் இருந்து பின்னர் முழுமையான உணர்வுடன் இருத்தல் நிலையினை அடையும் போது எல்லையற்ற அளவற்ற ஆனந்தமாக இருத்தல் நடைபெறுகிறது. இந்த மூன்று பதங்களும் எல்லையற்ற ஆக்க ஊண்மையினை அப்படியே குறிக்கின்றன. இந்த பதங்களின் பதத்தாலும் ரூபத்தாலும் அல்லது மனதும் பொருள் என்பவற்றால் இந்த பிரபஞ்சத்தில் எல்லைக்குட்பட்ட இருத்தல்- உணர்வு - ஆனந்தம் என்பவற்றை நாம் பெறுகிறோம்.

அப்படியாயின் இந்த பிரபஞ்சம் இல்லை என்றால் இந்த ஆற்றலிற்கு என்ன ஆகும்? தன்னை காத்துக்கொண்டு, மாற்றமில்லாமல் அதுவாக இருக்கும். பரிணாமத்தில் அது ஏதாவது ஒன்றாக ஆகும் அல்லது மாறும் அல்லது பௌதீக காரணிகளுக்கு மூலமாக, உலகின் மாற்றங்களாக ஆகிகொண்டிருக்கும். அதுவும் ஆகவில்லை என்றால் அது கடவுள், அந்த நிலையில் அது அதற்கு எல்லையுள்ளதாக இருந்தாலும் உண்மையில் உருவமற்ற எல்லையற்ற ஒன்று. ஆனால் இதன் சாராம்சமான ஆற்றல் எல்லையற்ற ஒன்று, அது எல்லையற்ற சக்தி கொண்டது. அதுவே இந்த பிரபஞ்சத்திற்குள் ஆற்றலைப் புகுத்தி படைக்கின்றது.

ஓய்வில் இயக்கம் உண்டு, இயக்கத்தில் ஓய்வு உண்டு. எல்லா இயக்கங்களின் பின்புலத்திலும் ஓர் ஓய்வு நிலை காணப்படும். சிவா என்பது ஓய்வு நிலைச்சக்தியினை குறிக்கிறது சக்தி என்பது இயக்கசக்தியினை குறிக்கிறது. இவை இருமையாக தெரிந்தாலும் ஒன்றே ஆகும் (40). எல்லாம் உண்மையானது, மாற்றமற்றது, மாறக்கூடியது. இதில் மாயை என்பது இல்லாத ஒன்றாக இல்லை. ஆனால் சாக்த சாதகரான கமலாகாந்தாவின் வார்த்தைகளில் குறிப்பிடுவதானால் "உருவமற்றதன் உருவம்" (சூன்யஸ்ய அகர இது மாயா). இந்த உலகம் என்பது அதன் ஒருவடிவம் அதனால் அத்தகைய வடிவங்கள் எல்லாம் உண்மையானது.

அதனால் மனிதனது சாராம்சம் நிலைசக்தியின் இருப்பிடம், அல்லது சிவா எனப்படும் உடல் மனதுடன் கூடிய தூய உணர்வின் இருப்பிடம்; அவன் சிவாவின் ஆற்றலை - சக்தியினை வெளிப்படுத்துபவன், அதனால் அவன் சிவ சக்தி வடிவினன். அதனால் அவன் ஆற்றலான சக்தியினை சொல்பவன். சாதனை அல்லது வழிபாடு அல்லது யோகத்தின் இலக்கு சக்தியினை சரியான வழிமுறையில் விழிப்பித்து எல்லையற்ற அனுபவத்தினை சரியான முறையில் உணர்வதே ஆகும். அதற்கான யோக வழிகளில் ஒன்று இங்கு விபரிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதன் தனது எல்லைப்படுத்தப்பட்ட உலக அனுபவத்தில் இருந்து மாறி எல்லையற்ற (பூர்ண) அல்லது உண்மையான ஆனந்ததினை அனுபவிப்பான்.


முதல் அத்தியாயம் முடிவுற்றது! 

அடிக்குறிப்புகள்

(35) இந்த நிலை நிச்சயமாக அது முன்னர் பூர்த்தியாகாத சாதனை மற்றும் பலனின் விளைவாகவும் நீண்ட சாதனை உழைப்பின் வரும் நிலை, இந்திய மரபுப்படி யோகத்தில் சித்தி என்பது பலபிறப்புகளில் செய்த சாதனையின் பலனாக வருவது. குண்டலினி சகஸ்ராரத்திற்கு செல்லும் முன்னர் ஒவ்வொரு மையத்திலிருந்து அடுத்த மையத்திற்கு படிப்படியாக செலுத்த வேண்டும், இந்தக்காலப்பகுதி நபர்களுக்கு ஏற்ப மாறுபடும், பொதுவாக வருடக்கணக்கில், சில அபூர்வ சம்பவங்களில் சில மாதங்களில்.
(36) சித்திகள் தேவியின் அருள், தேவி எல்லா சித்திகளையும் தருபவள் எனக்கூறப்படுகிறாள். அஷ்ட சித்திகளையும் தருபவள், திரிசதி 47 பார்க்க. ஐஸ்வர்ய.
(37) நடுவில் உள்ள கம்பு சுஷும்னா, அதன் அடியில் இருந்து உருவாகும் இரு பாம்புகளும் இட, பிங்கலா நாடிகள், மேலே சென்று விரியும் சிறகுகள் ஆக்ஞா சக்கரத்தின் இரு இதழ்கள்.
(38) இங்கு இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன் அர்த்தத்தினை "சக்தியும் சாக்தமும்" நூலில் காண்க.
(39) அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்ற சித்தர் வாக்கினை விளக்குகிறது (சுமனனுடைய குறிப்பு)
(40) காண்க சாந்தோக்கிய உப நிஷத்: 6-2-1:6-3-4;6-8-6:7-26-1;6-3-2, தைத்திரிய உப சுவேதா: 1-3; 6-8, ரிக்வேதம் 10-129-3, 10-129-5, தத்திரிய; 3-8, 17-3, யஜூர் வேத; 7-3-14-1, முண்டக உப; 1-9, கூர்ம புராணம்; 1-12-28

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...