இந்த தியானம் புக்தி, முக்தி என்ற இக பர இன்பங்களைத் தரவல்லது! உலகவாழ்க்கையை நிம்மதியாக வாழ புக்தி என்ற உலக இன்பங்களும், ஆன்ம வாழ்க்கையில் சித்தி பெற மோக்ஷ இன்பமும் தரக்கூடியது இந்த பைரவ ரூப தியானம்.
புக்தி முக்தி தாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்நிக்வணன் - மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
போகத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவரும்,
போற்றத்தக்கதான அழகான சரீரத்தை உடையவரும்,
பக்தர்கள் பால் அன்பு கொண்டவரும்,
என்றைக்கும் அழிவற்றவரும்,
எல்லா உலகத்தின் சரீரமாக விளங்குபவரும்,
மனதுக்கு ரம்யமாக சப்திக்கின்ற தங்கமயமான சலங்கை விளங்கும் இடுப்பை உடையவரும்,
காசித்தலத்தைக் காப்பவருமான
ஸ்ரீ கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.