தொல்காப்பியத்தின் முதல் அச்சுப்பதிப்பு
தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், சகலகலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரால் பரிசோதிக்கப்பட்டுக் கல்விக்கடல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, பிலவங்க – ஆவணி கி. பி 1847 ஆண்டு பதிப்பிக்கப்பட்டது!
இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால்
தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும் ஜமதக்னி முனிவரின் மகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமதக்னி முனிவருக்கு ஐந்து மகன்மார்; இதில் ஐந்தாவது மகனாகிய பரசுராமரே அனைவருக்கும் அறியப்பட்டவர். தொல்தமிழ் சேர தேசமாகிய கேரளத்தின் பல்வேறு மரபுகளின் தந்தையாக பரசுராமர் போற்றப்படுகிறார்.
தொல்காப்பியர் என்பது தொல்காப்பியம் இயற்றியதால் வந்த காரணப்பெயர்; அவரது இயற்பெயரை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் திரணதூமாக்கினி என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த விடயம் அகத்தியரின் மாணாக்கார் என்பது! தமிழ் சித்த மரப்பில் அகத்தியரின் பிரதான மாணாக்கராக பல மருத்துவ யோக நூல்களில் மாணவனை விளிக்க "புலத்தியனே" என்று விளிப்பதைக் காணலாம்.
அகத்தீ - திரண தூம அக்கினி - புல அகத் தீ என்ற இந்த மூன்று சொற்களும் ஒரு இடைத்தொடர்பு உடையவர்.
அகத்தியர் அகத்தில் தன் தவத்தால் அக்கினி வளர்த்ததால் அகத்தீசர் எனப்பட்டார்!
அந்த அகத்தில் உருவாகிய அறிவுக் கனல் அகத்தியரிலிருந்து வெளிப்பட அதை தனது புலன் களால் ஏற்று தன்னில் தீயை வளர்ந்த மாணவன் புலத்தீசன் எனவும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!
அகத்தில் அறிவும் ஆற்றலும் கனலாய், தீயாய நிறைந்தவர் அகத்தீசர், ஆசிரியர், குரு!
அதைப் புலன்களால் ஏற்று வளர்க்கும் நன் மாணாக்கன் புலத்தீசன்!
அகத்தீசர் குரு - புலத்தீசர் மாணவன்; இதே அர்த்தத்தில்தான் திரண தூமாக்கினியாரும் வருகிறார்.
திரண என்றால் அற்ப, தூம என்றால் புகை, அக்கினி என்றால் தீ! திரண தூம அக்கினி என்றால் அற்பமான புகையைக் கொண்ட அக்கினி என்று அர்த்தம்! யாகத்தில் புகை குறைந்து பிரகாசிக்கும் அக்கினியை நாம் திரண தூம அக்கினி என்று சொல்லலாம்! தனது மனக்குழப்பங்கள், சித்த விருத்திகளைக் குறைத்து ஆசிரியரிடமிருந்து அறிவுக்கனலைப் பெறத் தயாராக இருக்கும் மாணவனை நாம் திரண தூம அக்கினி என்று சொல்லலாம்! அகத்தியரிடம் அப்படிப்பட்ட சிறந்த ஒரு மாணவனாக இருந்ததால் அவருக்கு அப்படிப்பட்ட பெயர் வந்திருக்கலாம்! He is a bright - அக்னி - student of Agasthiya maharishi
அறிவை ஆற்றலை எம்மை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றும் அனைத்தையும் அக்கினியாக - தீயாக பாவிப்பதுவே எமது பழந்தமிழ் மெய்யியல் மரபு!
இந்த வகையில் அகத்தீசர் - புலத்தீசர் - திரண தூம அக்கினியார் இந்தப் பெயர்கள் மூன்றும் தமிழ் சித்த மெய்யியல் மரபின் மிக முக்கியமானவை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.