குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 29, 2018

ஸ்ரீ அரவிந்தர் கூறும் யோகத்தின் இலக்கு

இன்று யோக செய்கிறோம் என்பது உடற்பயிற்சி ஆகிவிட்ட நிலையில்,
தெய்வ வழிபாடு உபாசனை என்பது தமது வீட்டுப்பிரச்சனை, கடன் தொல்லை, வாழ்க்கைப்பிரச்சனையை தீர்க்க செய்கிறோம் என்ற நிலையில் ஸ்ரீ அரவிந்தர் கூறும் யோகம் என்பது மிகக்கடினமானதுதான்.
நாம் பயிற்சிக்கும் யோகமானது எமக்கு மட்டுமானதல்ல, இறை சக்தியிற்கும் உரியது; இதன் இலக்கு இறையின் இச்சாசக்தியை உலகில் செயற்படுத்துவது, ஆன்மீக உருமாற்றத்தை உருவாக்குவதும், தெய்வீக வாழ்க்கையை மானச, பிராண, ஸ்தூல தளங்களில் உருவாக்கி தெய்வீக மானிட சமூகத்தை உருவாக்குவதற்காகவும் ஆகும்.

இதன் இலக்கு தனிப்பட்ட முக்தி அல்லது ஆன்ம விடுதலை அல்ல, முக்தி என்பது யோகத்தின் அத்தியாவசிய அடைவாக இருப்பினும், மனித சமுதாயத்தின் விடுதலையும் தெய்வ உருமாற்றமும் அதைவிட அவசியமானது. இது தனிப்பட்ட ஆனந்தம் அல்ல, ஆனால் கிருஸ்து கூறிய பரலோக இராச்சியத்தை - தெய்வீக ஆனந்தத்தை, எமது சத்திய யுகத்தை புவியிற்கு கொண்டு வருவது. மோக்ஷத்தை தனிப்பட பெறுவது என்பது தேவையற்றது; ஏனெனில் ஆன்மா நித்யமுக்தன், (அதைப்பீடித்திருக்கும்) எல்லாவித தளைகளும் மாயை.

Image may contain: Anbu Arasan

Sunday, November 11, 2018

ஸோமானந்தனின் ஸ்ரீ புர விஜயம் - 02 : அகஸ்திய மண்டலம்

Related image


அன்று அலுவலகத்தில் அதிக வேலைப்பளு, வீடுவந்து சேர ஏழுமணியாகிவிட்டது.  வந்தவுடன் மனைவி போட்டுத்தந்த சூடாக ஒரு தேனீர் அருந்திவிட்டு, அடுத்த நாள் அலுவலகத்திற்கு தேவையான வேலைகளைச் ஒழுங்கு படுத்திவிட்டு, மலை நாட்டு குளிர் நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு சாதனையறையில் அமர்ந்தான். தனது இரவு சாதனையை முடித்துக்கொண்டு நித்திரைக்கு சென்றுவிட்டான். 

சரியாக வைகறை நேரம், குருநாதர் தட்டிவிட்டார். எழுந்திரு சாதனைக்கு என்று கூற, விரைவாக எழுந்து குருபாதுகையை தியானித்து ராஸ்மி மாலா தியானத்தை படுக்கையில் இருந்த வண்ணம் முடித்துக்கொண்டு எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து விட்டு சரியாக 0430 இற்கு தனது சாதனைக்கு அமர்ந்தான். குருமந்திரம், காயத்ரி ஜெபம் முடித்து தனக்கு உபதேசமான மந்திரங்களை செய்யவேண்டிய ஆவர்த்திகள் முடித்துக்கொண்டு கடைசியாக தியானத்தில் அமர்ந்தான். 

சுவாசம் ஏற்கனவே ஆழமாகி மெதுவாகியிருந்தது. கவனத்தை புருவமத்தியில் வைக்க சில வினாடிகளில் ஒளி ஒரு புள்ளியாக தோன்ற ஆரம்பித்தது. ஏற்கனவே குருநாதர் உபதேசித்தபடி அந்த ஒளியை கவனமாக கவனிக்கத்தொடங்கினான். அப்படி அவதானித்துக்கொண்டிருக்க நேற்றைய தினம் ஸ்ரீ புரத்திற்கு சென்று தேவியுடன்  உரையாடிய அனுபவத்தால் ஏற்பட்ட மனக்களிப்பால் இன்றும் இந்த ஒளியைப் பின் தொடர்ந்து தேவியைய் தரிசிக்கலாம் என்ற மன உந்தல் எற்பட ஆரம்பித்தது. இந்த எண்ணம் ஏற்பட ஆழமாக ஒளியை கவனிக்கலானான்.  நேற்று ஏற்பட்ட அதே அனுபவம், ஸ்தூல உடலை விட்டு இப்போது பறந்து கொண்டிருந்தான். கருமேகங்களைத்தாண்டி வான வில் நிற மேகங்களைதாண்டியவுடன் நேற்று சென்ற பொன்னிறம் இல்லாமல் மெல்லிய நீல நிறம் உள்ள இடத்திற்குள் தான் வந்திருப்பதை உணர்ந்த வண்ணம் இருக்க, அந்த இடத்திற்குள் அந்த நீல நிற ஒளி ஒரு துவாரத்திலிருந்து கதிர்ப்பாக பெருகி வெள்ளம் போல் வந்திருப்பதை அவதானித்துக் கொண்டு இருக்கும் போது அந்த ஒளி பெருகத்தொடங்கியது. 

பெருகிய ஒளி ஜடை தாடியுடன் முனிவர் தோற்றம் பெற அருகில் இடது பாகத்தில் நேற்று ஸ்ரீ புரத்தில் தரிசித்த தேவியின் அழகுக்கு ஈடான அழகுடன் முனிவருக்கு அருகில், இருவரது உருவமும் முழுமை பெற்றவுட ஸோமானந்தன் தனக்கு இப்போது உருவம் கிடைப்பதை உணர்ந்தான். நேற்று பொன்னிறமாக இருந்த உடல் இன்று கிருஷ்ணனின் நிறத்தைப்போன்று நீல நிறமாகி இருந்தது. 

இருவரையும் பார்த்த மாத்திரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து " ஓம் ஸ்ரீ லோபாமுத்திராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷி குரு பாதுகாம் சமர்ப்பயாமி நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்துகொண்டு வணங்கினான். 

இருவரும் ஒருமித்த குரலில் 'எழுந்திரு மகனே" என்று கூற ஸோமானந்தன் மகிழ்ச்சிப்பெருக்குடன் எழுந்தான். மனதிற்குள் "தேவியைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்க, ஏன் குருவையும் குரு அம்மாவையும் பார்க்க வேண்டி வந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்க, குரு நாதர் "என்ன ஏமாற்றமாகி விட்டதா ஸோமா?" என்று கேட்க ஸோமானந்தன் சுதாரித்து "அடடே சர்வ வல்லமை உள்ள குருவிற்கு முன்னார் உள்மனம், வெளிமனம் என்று எதுவுமில்லை, அவர் எல்லாமறிந்தவரல்லாவா" என்று சமாளித்துக்கொண்டு நேற்று தேவி கூறிய உபதேசத்தை உடனடியாக மனதிற்குள் கொண்டு வந்தான். 

"இல்லை குருநாதா, நேற்றே தேவி கூறிவிட்டாள், நான் அகஸ்தியமயி என்று, கட்கமாலா ஸ்தோத்திரத்தில் தேவி லோபாமுத்ரமயி என்பதையும் அறிந்து கொண்டேன், எனக்கு நீங்கள் இருவரும் தரிசனம் தந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்றான். 

குருநாதர் சிரித்துக்கொண்டே "கெட்டிக்காரன், அதனால்தான் உன்னை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அது சரி நீ தேவியை பார்க்க ஸ்ரீ புரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே தியானத்தில் அமர்ந்தாய், ஆனால் கடைசியில் எம்மிடமல்லவா வந்திருக்கிறாய்" என்று புன்சிரிப்புடன் ஸோமனைப் பார்த்து கேட்டார். 

ஸோமனது கற்பூர புத்திக்கு  குருநாதர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்து விட்டது.  ஏற்கனவே சாதனை செய்யும் போது எமது மன இச்சைகளால் எந்த உயர்ந்த நிலையை அடைவதற்கும் உந்தக்கூடாது, எமது பண்புகள், எண்ணங்கள், உடல் என்பவற்றை புடம் போட்டு தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு மாற்றுவது மட்டும்தான் எமது வேலை, மற்றவை குருவும் தேவியினதும் இச்சை எமது தகுதி, சரணாகதிக்கு தக்கவாறு நடக்கும் என்று பலதடவை பூலோக குருகுல வாசத்தில் குரு நாதர் கூறியிருந்தார். இதற்கான காரணத்தையும் தெளிவாக கூறியிருந்தார். இப்படியான இச்சைகள் இருக்கும்போது மனம் போலிக்கற்பனைக் காட்சிகளை படைத்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏமாற்றும் என்பதையும் தெளிவாக அறிந்திருந்தான். 

உடனடியாக ஸோமன் " ஆம், குரு நாதா தற்போது உணர்ந்து கொண்டேன், எனது இச்சையை விட தேவியும் குருவினதும் ஆணை என்ன என்பதை புரிவதே தேவையானது, அந்த ஆணைப்படியே இங்கு வரவழைக்கப்பட்டுள்ளேன்" என்றான். 

நல்லது, தேவியின ஆணை இருந்தால் மட்டுமே நீ அங்கு செல்ல முடியும், வீணாக மன உந்தலால் ஸ்ரீ புரத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆவல் கொள்ளாதே என்றார் குருநாதர். 

சரி குருதேவா என்று பணிவான குரலில் பதில் சொல்ல, 

இந்த இடத்தை சற்று சுற்றிப் பார் என குருவின் ஆணை வந்தது.  சுற்றிலும் பார்க்க தான் ஆகாய வெளியில் நட்சத்திரங்களுக்குள் இருப்பதும், தன்னைச் சுற்றியும் கரு நீல ஆகாயம் விரந்து கிடப்பதையும் உணர்ந்தான். இப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க, குருதேவர்,

ஸோமா நீ வந்திருப்பது அகஸ்திய மண்டலம் எனும் பகுதிக்குள், தேவியின் ஆணைப்படி,  பூவுலகில் நல்ல ஆன்ம வித்துக்களை உருவாக்கும் பணி எமக்கு தேவியால் வழங்கப்பட்டிருக்கிறது.  எம்முடன் தொடர்பு கொள்ள இச்சையுள்ள ஆன்மாக்களில், பக்குவம் பெற்றவர்களுடனும், தம்மை மனப்பண்புகளில் தெய்வ குணமுள்ளவர்களாக உயர்த்திக்கொள்ளக்கூடியவர்களையும் நாம் தொடர்பு கொள்கிறோம்.  உன்னை தேர்ந்தெடுத்ததும் உனது நீண்டகால காயத்ரி சாதனையால் உன்னை நீ உயர்த்திக்கொண்டது, பல பிறப்புகளில் நீ தொடர்ச்சியாக செய்து வந்த சாதனையினாலுமே! 

தன்னை தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டதும் ஸோமன் பூரித்துப்போய் விட்டான், மனதிற்குள் பட்டாம்பூச்சி பயக்க கற்பனையில் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றிக்கொண்டு இருக்கும்போதே குருநாதரின் குரல் "ஸோமா, அகத்தியர் யோக ஞானத்திறவுகோலின் முதல் பாடலில் ஆறாவது வரியைக் கூறப்பா" என்றார். 

இதைக்கேட்டதுமே ஸோமனுக்கு சட்டென்று தலையில் குட்டு விழுந்தது போலாகிவிட்டது. 

மெய்ஞ் ஞான குருபரனைப் பூசை பண்ணு
வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லும
காரணமாங் குருபதத்தை கருதிப் பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே

என்று பாடலை ஒப்புவித்து, "மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே" ஐயனே என்றான். 

"நல்லது பாடல் எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது, ஆனால் நடைமுறையில் வரவில்லையே" என்றார் தனது மந்திரப்புன்னகையுடன். 

 குருநாதர் சொல்லுவதெல்லாம்  அவனது மனதைப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தது. ஸோமனுக்கு குருநாதர் சுட்டிக்காட்டும் எதுவும் தன்னை குற்றம் குறை கண்டுபிடிப்பதாக தெரியவில்லை. அவன் அந்த நிலையைத் தாண்டி குருவிடம் சரணாகதி இயல்பாகவே கொண்டிருந்தான்.

ஸோமா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றவுடன் அதிக பூரிப்புடன் நீ மட்டும் என்று எண்ணி இறுமாறக்கூடாது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இனங்களைச் சார்ந்த தகுந்த தெய்வப்பண்புகளை வளர்த்த மனித வித்துக்கள் எமது ஈர்ப்பிற்குள் வருகிறார்கள், ஆகவே அகத்தியனின் அருளாற்றல் நீ புராணங்களிலும், மனிதர்கள் எழுதிய கதைகளில் படிப்பது போல், எமது அருளாற்றல் பூவுலகில் ஒரு குறித்த இனத்திற்கோ, இடத்திற்கோ சொந்தமானதல்ல, எவருடைய அகம் ஈசனை வரவேற்க பக்குவமாக இருக்கிறதோ அங்கு அகத்தீசன் அருள் நிறையும்! இங்கு அகம் என்பது உடலும் மனமும், வீடும் என மூன்று பொருளையும் குறிக்கும் " என்றார். 

ஸோமனும் மெதுவாக ஆமோதித்துக்கொண்டு இருக்க, அவனது நினைவில் ஒரு கேள்வி வந்தது, தமிழ் இலக்கியங்கள் பல பாடல்கள் பல்வேறு காலப்பகுதிகளில் அகத்தியர் என்ற பெயரில் எழுதப்பட்டது, பல்வேறு அகத்தியர்கள் பூவுலகில் வாழ்ந்தார்களா என்று எண்ணிக்கொண்டு இருக்க அதற்கு பதில் அடுத்து குரு நாதரின் வார்த்தைகளில் வந்தது, 

ஸோமா, இன்று பூவுலகில் சூக்ஷ்மத்தன்மையை அறியும் ஆற்றல் அருகிவிட்டது. ஸ்தூலத்தை வெளிப்படையாக அறிவதை மாத்திரமே அறிவு என்று எண்ணிக்கொண்டு தாம் முன்னேறி விட்டதாக கருதிக்கொள்ளும் மானிடர்கள் நீ எண்ணுவதைப்போல் பல்வேறு அகத்தியர்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வு படுத்திச் சொல்கிறார்கள். இது சரியானது, அதேவேளை பிழையானதும் கூட என்றார். 

இதைக்கேட்டவுடன் ஸோமன் சற்றுக்குழம்பிப் போய்விட்டான். அது எப்படி சரியாக இருக்கும் அதே வேளை பிழையானதாகவும் இருக்க முடியும், குரு நாதர் முன்னிலையில் எதையும் கேட்க வேண்டிய தேவை இருப்பதில்லையே, பதில் அடுத்து வந்தது, 

இதைப்புரிந்து கொள்ள உதாரணம் கூறுகிறேன் கேள், பூவுலகில் நீ படித்து பெற்ற பட்டம் என்ன? என்றார், அதற்கு ஸோமன் நான் மருத்துவம் படித்து பட்டம் பெற்றுள்ளேன் என்றான். 

சரி, உன்னை மக்கள் எப்படி அழைப்பார்கள்?

மருத்துவர் ஸோமன் என்று,

நல்லது, உன்னைப்போல் பட்டம் பெற்ற மற்றவர்களை எப்படி அழைப்பார்கள்?

மருத்துவர் என்ற அடைமொழியுடன் அவர்கள் பெயரில்!

அது தற்காலத்து வழக்கு, இன்று மருத்துவர்கள் கூடிவிட்ட நிலையில் அப்படி அழைக்கிறார்கள், ஆனால் முற்காலத்தில் ஊரிற்கு ஒரு மருத்துவர், அவரை மருத்துவர் என்று மட்டுமே அழைப்பார்கள், அவர் பரம்பரையில் எல்லோரும் மருத்துவராக இருப்பார்கள், எல்லோரையும் மருத்துவர் என மக்கள் அழைப்பார்கள். 

சரி பெயரிற்கும், மருத்துவர் என்ற அடைமொழிக்கும் என்ன வித்தியாசம் என்றார் குரு நாதர். 

மருத்துவர் என்பது ஒருவர் தனது அறிவையும், நோய் தீர்க்கும் திறனையும் தன்னில் வளர்த்துக்கொண்டு தகுதி பெற்றதால் வந்த பெயர், எமது பெயர் எமக்கு பெற்றோர் இட்ட பெயர் என்றான் ஸோமன். 

நல்லது, பார்த்தாயா, மருத்துவம் சார்ந்த நுண்ணறிவு சூக்ஷ்மமானது, பரம்பரை பரம்பரையா கடத்தப்படுவதால் அந்த அறிவு கடத்தப்படும் அனைவரும் மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அனைவரும் மருத்துவர்களே, இதைப்போல் அகத்தியர் என்பது அகத்தில் ஈசனை கண்டு பேரொளி பெரு நிலை அடைவதற்குரிய அறிவின் குறியீடு, ஒவ்வொரு காலப்பகுதியிலும் தகுதியுள்ள மனித ஆன்மாக்கள் எமது ஈர்ப்பைப் பெற்று அந்த அறிவை பூலோகத்தில் காலத்திற்கு தகுந்த மாதிரி விதைக்கின்றன. அந்த அறிவு எங்கிருந்து அகத்தில் தோற்றம் பெறுகிறதோ அந்த இடத்திற்கே நீ இன்று வந்துள்ளாய், இங்கு உன்னைச் சுற்றி காணும் ஒளி நட்சத்திரங்கள் யாவும் அகத்தியர் நிலை அடைந்தவையே! 

ஆக சூக்ஷ்மத்தில் ஒன்றாய் அந்த அறிவு இருக்க, வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிப்படுவதால் வெளிப்படும் நபர்கள் வேறாக இருக்கிறார்கள், ஆனால் எல்லோரும் அந்த மூலத்தை அடையும் வழியை ஆராயாமல் ஸ்தூலத்தில் வேற்றுமை கண்டு பிடிக்கிறார்கள் என்றார் குரு நாதர்!

சரி, ஸோமா நீண்ட நேரம் இங்கு இருக்க உனது ஸ்துல உடல் இந்த ஆற்றலை தாங்காது, இன்று கூறியவற்றை உடலிற்கு திரும்பியவுடன் ஞாபக வருபவற்றை எழுதி வை!

பூவுலகில் அகஸ்திய உணர்வினை ஈர்க்க உனக்கு தேவியின் ஆணைப்படி எமது குரு மந்திரம் தருகிறோம், இதை நீ முதலில் ஒரு மண்டலம் பயிற்சிக்க வேண்டும். அதன் பின்னர் யார் உன்னிடம் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் சொல்லிக்கொடு! இதற்கு உனக்கு தகுதி உண்டா என்பது பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை, நீ சொல்லித்தரும் அனைவருக்குமான வழிகாட்டலை நாம் ஏற்றுக்கொள்வோம்!

இந்த மந்திரம் குருமந்திரம், குருமண்டல நாமாவளிக்கு பிறகும், காயத்ரி ஜெபத்திற்கு முன்னரும் ஜெபித்து வரவேண்டும், இதிலுள்ள பீஜாட்சரங்கள் ஒருவனது பரிணாமத்தை துரிதப்படுத்தும், ஆன்ம வழியில் முன்னேற்றும்! என்று கூறியவாறு மந்திரத்தை கூறத்தொடங்கினார்.

ௐம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ;

இந்த குரு மந்திரத்தை எவர் ஒருவர் தினசரி ஜெபம் செய்து வருவதுடன் தனது பண்புகளை தெய்வ பண்புகளாக மாற்ற முயற்சிக்கிறாகளோ அவர்களுக்கு மிக சூக்ஷ்மமாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் உதவி செய்வேன், சென்று வா மகனே என்று குரு நாதரும் குரு அம்மையும் கைகளை உயர்த்தி ஆசி கூற மெதுவாக அவர்களது உடல் கரைந்து நீல நிற ஒளியாகத்தொடங்கியது. ஸோமனது உடலும் ஒளியாக கரையத் தொடங்கியது, தான் மீண்டும் வந்த முகில் கூட்டங்களினூடக பயணித்தவன் இறுதியாக தனது பூஜையறையில் தனது புருவ மத்தியில் கவனைத்துக்கொண்டிருப்பதைக் கண்டான். 

மெதுவாக கண்களைத்திறக்க ஏற்றிய விளக்கு எரிந்துகொண்டும், பொழுது புலர்ந்து விட்டதையும், குருவிகளது கீச்சிடும் ஒலியும் கேட்டுக்கொண்டு மெதுவாக பூஜையறையை விட்டு வந்தான். தேனீர் தயாராகியிருந்தது. 

தேனீரை அருந்திக்கொண்டு தனது அனுபவங்களை குறித்து வைக்க நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.  அவளது மகள் பாடசாலை செல்வதற்கு அப்பா இந்த புத்தகப் பையை அடுக்கித்தாருங்கள் என்று கேட்க அதைச் செய்து கொடுக்க எழும்பினான். 

அதை முடிக்க ஆபிஸிற்கு செல்ல நேரமாகி விட்டதை உணர்ந்து கொண்டு தயாரானான். 

ஸோமானந்தனின் ஸ்ரீ புர பயணம் தொடரும்....

Saturday, November 10, 2018

ஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 01

Image result for Lalitha devi

ஸோமானந்தன் அகத்தியர் மகரிஷியின் சீடர்களில் ஒருவன். தனது குருகுல வாசத்தை முடித்த பின்னர் குருநாதரால் அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியிடம் நேரடியாக யோக  உண்மைகளை கற்க அனுப்பி வைக்கப்பட்டான். 

அகத்திய மகரிஷி ஸ்ரீ லலிதையை சந்திக்கச்செல்லும் முறையை உபதேசித்தார். 

ஸோமா, நீ உனது மூச்சையும், உடலையும், மனத்தையும் இணைக்கு பயிற்சியில் நன்கு சித்தி பெற்றுள்ளாய், உனது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் சுத்தி செய்துள்ளாய், உனது மூச்சு நிலைப் பட்டு ஊர்த்துவமுகமா செல்ல ஆரம்பிப்பதால் இனி நீ அன்னையைச் சென்று அவளிடமே நேரில் கற்க ஆசிகள்! எப்படி செல்லவேண்டும் என்பதை கூறுகிறேன் கேள்!

உனது காயத்ரி சாதனையால் உனது உடல்,  மனம் போன்ற எல்லா அணுக்களிலும் புத்தியை தூண்டும் அந்தப்பேரொளி நிறையத்தொடங்கியுள்ளது, இந்த புத்தியை தூண்டும் பேரொளிதான் அன்னையை சென்றடையும் வழி! அந்த ஒளியை அகக்கண்களில் மிக ஊன்றி கவனித்து மனத்தை செலுத்து! இப்படி உணர்வு மனதிலிருந்து விடுபடும் போது அந்த ஒளியினூடாக அன்னையின் ஸ்ரீ நகரத்தை அடைவாய்! உடலுக்குள் அடங்கிய இந்த சிறிய மனதிலிருந்து பிரபஞ்ச பேருணர்வான ஆகாய மனம் அல்லது பிரபஞ்ச மனத்தினூடாக நீ இந்த அனுபவத்தை மீளப்பெறலாம். 

வீணாக உனது சித்த சலனத்தை அதிகரித்து கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணாக்காமல் உனக்குள் உள்ள அந்த அம்பிகையின் ஒளியை வைகறை நேரத்தில் கவனிக்கத்தொடங்கு என்று ஆணையிட்டு அகத்திய மகரிஷி மறைந்தார். 

ஸோமன் தனது சுவாசத்தை கவனித்துக்கொண்டு உணர்வை புருவ மத்தியில் ஒடுக்கி தன்னுள் தெரியும் ஸவிதாவின் பேரோளிய கவனிக்கத்தொடங்கினான். சற்று நேரத்தில் மழை இருட்டுப்போன்ற கருமேகங்கள் கவியத்தொடங்கியது.  அதன் பின்னர் ஸோமன் அதி மின்னல் வேகத்தில் மேகங்களை கிழித்துக்கொண்டு தான் செல்லுவதை உணர்ந்தான். தான் செல்லுகிறோம் என்பதை தவிர தான் என்று நினைத்த உடலைக்காணவில்லை! வேகம் அதிகரிக்க அதிகரிக்க கருமேகக்கூட்டம் சிதறியது. எவ்வளவு நேரம் சென்றோம் என்று தெரியாமல் வேகமாக பயணிக்க சிறிது நேரத்தில் கருமேகம் மறைந்து வெண்மேகம் தோன்ற ஆரம்பித்தது. இந்த வெண்மேகத்தை கடக்க வானவில்லின் நிறங்கள் தோன்ற ஆரம்பித்தது.  இதைக்கடக்க தங்க நிற ஒளி நிறைந்த பிரதேசத்திற்குள் புகுந்தான் ஸோமன். 

அங்கிருந்த ஒளி மெதுவாக ஒடுங்கி அழகிய பெண் ஒருத்தியாக மாறியது. அந்தப்பெண்ணின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இருக்க வில்லை.  அதுவரை தனது உடலை காணவோ உண்ரவோ முடியாத ஸோமன் இப்போது தனது உடலைக் காணத்தொடங்கினான். தனது வழமையான கருத்த சரீரம் இப்போது அந்தப்பெண்ணின் உடலைப் போன்று பொன்னிறமாக மாறியிருந்ததைக் கண்டான். 

அவளது ஆற்றலுக்கு முன்னர் இயல்பாகவே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் ஸோமன். 

வணங்கிக் கொண்டு இருக்கும் போதே இனிய குரலில் "ஏழுந்திரு ஸோமா" என்ற குரல் ஒலி அவனை சுதாரிக்கச் செய்தது. 

ஸோமா, உன் குருநாதர் அகத்தியர் உன்னை எமது ஆணைப்படி இங்கு அனுப்பி வைத்தார், என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ கேள் என்றாள், அந்தப்பெண். 

தேவி, கேட்பதற்கு என்றும் ஒன்றுமில்லை, நீங்கள் விரும்புவதை தாருங்கள் என்றான்! 

பூவுலகில் இருந்து உனது சாதனையின் பக்குவத்தினாலும், குருவின் ஆசியாலும் எனது இந்த ஸ்ரீ நகரத்திற்கு வந்திருக்கிறாய், இப்போதைக்கு ஒளிமயமாக தோன்றும் இந்த உலகத்தில் பலகோடி தெய்வ சக்திகள் மிக சூக்ஷ்மமாக வசிக்கின்றன. அவற்றை பார்த்து உணரும் பக்கும் படிப்படியாகப் பெறுவாய். அதுவரை என்னை இந்த ஒளி ரூபத்திலும் இந்த ரூபத்திலும் பார்த்துக்கொள்ளலாம், உனக்கு இந்த ரூபம் பிடிக்கவில்லை என்றால் சொல், உனக்கு விரும்பிய வடிவத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்!

தேவி இந்த அழகிய ரூபத்தைப் பார்க்க எவருக்கு பிடிக்காமலிருக்கும்! இப்போதைக்கு இந்த ரூபத்திலேயே உங்களை காணவிரும்புகிறேன் என்றான் ஸோமன். 

நல்லது, பூவுலகில் பலர் யோகம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் வெறுத்து, ஒதுக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னை விட்டு ஓடுவதால் தாங்கள் முக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடித்து கிடைத்த மானிட ஜென்மத்தை வீணாக்கிக் கொண்டுள்ளார்கள் என்றால் தேவி! 

அதற்கு ஸோமனும் ஆம் தேவி, பலர் காமத்திற்கு பயந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறார்கள், காமத்திற்கு காரணம் பெண் என்று நினைக்கிறார்கள், தமது ஆன்மீக முன்னேற்றம் தடைப்படும் என்று பயப்படுகிறார்கள் என்றான். 

அதற்கு தேவி தனது செக்க சிவந்த உதட்டிலிருந்து புன்னகையை உதிர்த்து விட்டு, 

ஸோமா, இப்படி முன்னொரு காலத்தில் சிவனாரும் யோகத்தில் அமர்ந்தார். என்னை விட்டு நீங்கி உக்கிர தபஸில் அமர்ந்தார், இதனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கம், பரிணாமம் தடைபடத்தொடங்கியது. இதை அறிந்த தேவர்கள் சிவனாரிடம் முறையிட்டு சிவனார் மனதில் இச்சையை உண்டாக்க காமனை அனுப்பினார்கள். காமனுக்கோ தனது அம்பிற்கு வசப்படாதவர்கள் எவருமில்லை என்ற ஆங்காரம். சிவனார் மேல் தனது அம்பை பாய்ச்ச, சிவனார் கோபம் கொண்டு பொசுக்க, காமனின் உடல் பொசுங்கியது. எனினும் காமனோ காதி வித்தையால் என்னை உபாசித்தவன். சிவனார் கோபத்தினால் தனது ஸ்தூல உடலை இழந்தானேவொழிய எனது ஆசியால் சூக்ஷ்ம காரண சரீரத்த்திற் புகுந்தான்.  அதுவரை காமனாக இருந்தவன் அனங்கன் ஆகினான். 

ஸோமா, அனங்கன் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா உனக்கு? என்றால் தனது இனிய குரலில், 

அதற்கு ஸோமன், ஆம் தேவி உடல் அற்றவன் என்று பொருள் என்றான். 

ஆம், ஸ்தூல உடல் இல்லாமல் மனத்தினூடாக மற்றவர்களை கலங்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றான், பலர் சிவனார் காமனை கோபத்தோடு எரித்து விட்டதாகத்தான் பூவுலகில் கதை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்தூலமாக காமத்தை செயற்படுத்திய காமன் சிவனரின் யோக அக்னியால் அனங்கனாக தெய்வ உருமாற்றம் பெற்றான் என்பதே உண்மை! 

இதைக்கேட்ட ஸோமன், தேவி, இந்த விளக்கம் புதுமையாக இருக்கிறதே என்று தனது ஆர்வத்தை வெளிப்படுத்த அதற்கு தேவி,

பொறு, இன்னும் இருக்கிறது, பூவுலகில் இந்த கதையை படித்திருப்பாய் அல்லவா? எரிந்த காமனின் சாம்பலுக்கு என்னவாயிற்று என்று உனக்கு தெரியுமா? என்றாள். 

ஆம் தேவி, பண்டாசூரனாக உருப்பெற்றது என்றான் ஸோமன். 

காமனின் சாம்பலில் இருந்து உருப்பெற்ற பண்டாசூரன் தாமஸ குணத்துடன் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான் என்று முடித்தாள் தேவி! 

ஸோமா, இந்தக் கதைகள் எல்லாம் எங்கு நடைபெற்றது என்று தெரியுமா உனக்கு என்றாள்! 

பூவுலகில் எங்காவது இருக்கலாம், பல கோயில்கள் சேத்திரங்களில் அந்த இடங்களில் நடைபெற்றதாக தல வரலாறுகள் கூறுகின்றன என்றான் ஸோமன். 

தேவி புன் சிரிப்புடன், அவற்றுள் சிலது உண்மை, சிலது உண்மைகளை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறியீட்டு விளக்கமாக கூறப்பட்டவை! 

ஸோமா, என்னை அறிவதற்கு மிகச்சிறந்த இடம் எது என்று உனது குருநாதர் உபதேசித்தார்? 

அதற்கு "எனது மனித உடல்" என்றான் ஸோமன். 

அப்படி இருக்கையில் எப்படி இந்தக்கதைகள் எல்லாம் எங்கோ நடந்ததாக கற்பனை செய்ய வேண்டும், உனக்குள் இந்தக் கதைகள் எங்கே நடக்கிறது என்று கண்டுபிடி என்றாள் அம்பிகை!

சரி தேவி, காமனை எரித்த கதையை மட்டும் விளக்கம் பெற விரும்புகிறேன் என்றான் ஸோமன்

அப்படியே ஆகட்டும் என்றாள் தேவி!

யோகத்தில் அமர்ந்து மனதை ஒடுக்க எனது மாயா சக்தியிலிருந்து மனம் விலக ஆரம்பிக்கிறது, மனதின் இயக்கத்திற்கு காரணமான சக்தியை வழங்குவதே மாயாசக்தி தான், பலர் மனதையும், மூச்சையும் ஒடுக்கி அடக்கும் போது தூய்மையற்ற அறிவால் மாயைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறியாமையில் கற்பித்து வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றார்கள். 

இதுதான் சிவனாருக்கும் முதலில் யோக நிஷ்டையில் அமரும் போது ஏற்பட்ட நிலை! இப்படி மாயையிலிருந்து ஒதுங்கியவுடன் மனச்சலனம் ஒடுங்குவதால் வரும் இன்பத்தில் மனம் பற்றுக்கோண்டு அதுதான் இறுதி இன்பம் என்று தான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து யோகத்தில் ஆழ்ந்து விட்டார். இப்படி ஆழ்ந்த சிவனாரை காமனும் தான் வழமையாக மனிதர்களை எப்படி ஸ்தூல அழகினை காட்டி மயங்கச் செய்வானோ அதுபோல் சிவனாரிற்கு காமத்தை ஏற்படுத்த முனைந்தான். ஆனால் யோகாக்னி கொண்ட சிவனாரினால் அவனது ஸ்தூலத்தன்மை மறைந்து அனங்கன் ஆகும் பெரும் பேறு பெற்றான். 

இப்படி யோகாக்னி கொண்டு ஸ்தூல காமனை அழிந்தாலும் அந்த ஸ்தூல காமனின் பஸ்பமக்கப்பட்ட தாமஸ குணம் பண்டாசுரனாக வெளிப்பட்டு துன்புறுத்தும். பூவுலகில் இன்றும் யோகம் செய்து பண்டாசுரனாகியவர்கள் பலர். அவர்கள் தமது யோக சக்தியால் ஸ்தூல காமனை அழித்து விட்டு பண்டாசூரனாகி விடுவார்கள். ஆற்றல் உள்ளவரகளாக இருப்பார்கள். ஆனால் என்னிடம் சரணாகதி இருக்காது. 

ஸ்தூல உடலை இழந்த காமன் என்னிடம் இருந்த சரணாகதியால் மகாகாரண சரீரம் பெற்று அனங்கன் ஆகினான். 

யோகம் செய்கிறோம் என்று மனதில் வெறுப்பு, பயம், சலிப்பு போன்ற குணங்களை வளர்த்தால் முதல் நிலையில் யோகானியால் அழிக்க அதிலிருந்து பண்டாசூரனே வெளிப்படுவான்! 

ஆனால் காமனைபோல் என்னிடம் சரணாகதி இருந்தால் அனங்கன் ஆகலாம். 

காமன் யோகத்தின் எதிரி இல்லையா தேவி! என்றான் ஸோமன்

அவள் தனது மந்தகாசப் புன்னகையுடன் "ஸோமா, எப்படி எதிரியாக முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டாள். 

யோகத்தில் முன்னேற விடாமல் காமத்தில் ஆழ்த்தும் காமன் யோகத்தின் எதிரிதானே என்றான் ஸோமன். 

அதற்கு தேவி 'இல்லை ஸோமா, காமன் உலகின் பரிணாமத்தை சரியாக நடத்துவதில் எனக்கு பெரும் துணை புரிகிறான், தாமஸ குணம் நிறைந்தவர்களே காமனை எதிரியாக எண்ணுகிறார்கள், இங்கு நீ புரிந்து கொள்ள வேண்டியது உனக்கு எதிரி வெளியே இருக்க முடியாது என்பதே, உனது மனம் தமோ, ரஜோ, சத்துவ நிலைகளுக்கு ஏற்ப தனது எதிரிகளை  முறையே தனக்கு வெளியே, உள்ளே, எங்கேயும் எதிரி அற்ற நிலையை காண்கிறது. 

ஆக காமன் அல்ல எதிரி, உனது மனது தாமஸமா, ராஜஸமா, சத்துவமா என்பதே எதிரி எங்குள்ளான் என்பதை தீர்மானிக்கிறது. 

அப்படியானால் காமத்தை வெல்லாமல் யோகத்தில் சித்தி பெறமுடியுமா என்றான் ஸோமன். 

இங்கு வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை! எனது மாய விளையாட்டுக்களை புரிந்தவன் மட்டும் அதைக்கடக்கிறான், எதிர்ப்பவனும் வெல்வதுமில்லை, பயந்தவனும் வெல்வதில்லை! எவன் புரிந்து சரணாகதியை அடைகிறானோ அவனே கடக்கிறான்! தெய்வ உருமாற்றம் பெறுகிறான்!  பலர் அற்ப மானுடன மனது கொண்டு மாயையை வெல்வதற்கு முயற்சிக்கிறாரகள், அற்ப சிற்றறிவு அதைப் புரிந்து கொள்ள முடியாது! புத்தியை தெளிவிக்க எனது ஸவிதாவின் ஒளியை உனது ஒவ்வொரு அணுவிலும் பரவவிட்டு உன்னை தெய்வ உருமாற்றம் செய்த பின்னரே உனக்கு இந்த உண்மைகள் எல்லாம் அனுபவமாக தெரியவரும். 

ஸோமா, நான் அகஸ்தியமயி! ஆகவே நான் வேறு உன்னை வழிகாட்டும் அகஸ்தியன் வேறல்ல! இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் நானே! இந்த உண்மையை வெகுவிரைவில் அனுபவமாக உணர்வாய்! 

இன்று இது போதும், உன்னை தேவையான நேரங்களில் நான் இந்த தங்கமயமான ஸ்ரீ புரத்திற்கு வரவழைப்பேன்! அதற்குரிய வழியை உனக்கு அகஸ்தியன் உரைத்திருக்கிறான்! நீ பூவுலகு திரும்பிய பின்னர் நான் உபதேசித்ததில் உலகத்தவர்களுக்கு தேவையானது மட்டும் உனது எழுத்தாற்றலில் வெளிவரும், மற்றவற்றை உனது சாதனைக்கு பயன்படுத்து! இப்போது நீ சென்று வரலாம்" என்றால் தேவி.

இப்படிக்கூறி முடிய அவளது பொன்னிற சரீரம் கரைந்து பொன்னிற ஒளிப்பிரவாகமாக ஸோமனும் தனது உடல் கரைவதை அவதானித்தான். தான் வந்த வேகத்தில் மீண்டும் வானவில் நிற மேகங்கள், வெண்மேகங்கள், கருமேகங்கள் கடந்து நொடிப்பொழுதில் தான் தன து உடலில் புருவ மத்தியில் கவனித்துக்கொண்டு இருப்பதை உணரத்தொடங்கினான். 

மெதுவாக கண்விழிக்க தான் மலைச்சாரலில் இருக்கும் தனது வீட்டு பூஜையறையில் தான் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றிய விளக்கும், சந்தன் ஊதுபத்தி வாசமும் கமழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். 

தனது சுவாசம் வருவது தெரியாதபடி அடங்கி மெதுவாக செல்வதையும், உடல் ஒருவித குளிர்ச்சியாகவும், மனம் பேரானந்தத்தில் திளைப்பதையும் உணர்ந்தான்.

மெதுவாக எழுந்து குருபாதுகையை வணங்கிக் கொண்டு பூஜை அறையை விட்டு வெளியே வர மனைவி தேனீர் தயாராகி விட்டது என்று கூறிக்கொண்டு தேனீர் கோப்பையை தர வாங்கி அருந்த தொடங்கினான். குளிந்த மலைக்காற்றிற்கு அந்த சூடான தேனீர் இதமாக இருந்தது. 

ஸ்ரீ புரத்திற்கு செல்ல அடுத்து எப்போது குருநாதரின், தேவியின் ஆணை வருமோ என்ற ஏக்கத்துடன் தனது தினசரி வேலையை கவனிக்கத் தொடங்கினான்!

ஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் தொடரும்............

Friday, November 09, 2018

அப்பா சொன்ன குட்டிக்கதை {பூனையும் வைத்தியமும்}


***********************************
ஓரு ஊரில் மிகவும் பிரபலமான மருத்துவர், அவரிடம் வருபவர்கள் எல்லோரும் குணம் பெற்று செல்வார்கள். சிறுகுழந்தைகளுக்கு நோய் ஏற்படமால் இருக்க அவரது கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ சேர்த்து அரைக்கும் முக்கூட்டு மாத்திரை வெகுபிரபலம். அந்த மாத்திரை அரைக்கும் போது வீடே கமகமக்கும். மாத்திரை அரைப்பதற்கு முன்னர் மருத்துவர் மகனை வீட்டுப்பூனை எங்கிருக்கிறது என்று தேடச்சொல்லுவார். மகன் தேடிக்கொண்டு வந்தவுடன் பூனையை வீட்டிற்கு வெளியே கட்டச்சொல்லிவிடுவார். இதன் பின்னர் மாத்திரை அரைக்கும் வேலை தொடங்கும். மாத்திரை அரைத்து முடியும் வரை பூனை கட்டப்பட்டிருக்கும். அரைத்து மருந்தை பக்குவப்படுத்திய பின்னர் மகனை அழைத்து பூனையை அவிழ்த்து விடச்சொன்னவுடன் பூனை அவிழ்த்து விடப்படும். வருடத்தில் இரு தடவை இந்த மாத்திரை அரைக்கும் படலம் நடைபெறும். இப்படியாக மகன் தந்தையிடம் மருந்து செய்முறைகளை கற்று வைத்தியனானான். காலங்கள் உருண்டன, வயதாகிய தந்தையும் இறந்து போனார், அவர் இறந்த அடுத்த மாதம் பூனையும் இறந்து போனது. சிறிது மாதத்தில் அரைத்து வைத்த முக்கூட்டு மாத்திரையும் தீர்ந்து போய்விட்டது.


மக்கள் முக்கூட்டு மாத்திரை கேட்டு வர மாத்திரை அரைக்க வேண்டும். மகனோ மக்களுக்கு கோரோசனை இருக்கிறது, குங்குமப்பூ இருக்கிறது, கஸ்தூரியும் இருக்கிறது, ஆனால் மாத்திரை அரைக்க பூனை இல்லாததால் மாத்திரை செய்ய முடியவில்லை என்று வந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டான்.
அவன் தனது குருவிடம்/தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட காலத்தில் பூனையை ஏன் கட்டச்சொல்லுகிறார் என்று ஒரு நாளும் தானாக சிந்தித்ததுமில்லை, தகப்பனிடம் கேட்டதுமில்லை.
மாத்திரையின் வாசனைக்கு பூனை மருந்தில் வாய் வைத்துவிடும் என்பதுதான் உண்மையான காரணம்.
இதுபோல் குருவிடம் இருப்பவர்கள் குரு எதற்காக இதை செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளாமல், கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் தமது முட்டாள்தனத்தால் மனம்போன போக்கில் ஏதாவது செய்து மாட்டிக்கொள்கிறார்கள்.

Wednesday, November 07, 2018

அரவிந்தரின் பூரண யோகம்

Image may contain: Anbu Arasan

பூரண யோகத்தின் முழுமை என்பது எப்போது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த இயல்பை உணர்ந்து தனது சுய யோகப் பாதையை வகுத்துக்கொண்டு, தன் இயல்பிற்கு ஏற்றவகையில் தனது யோகப்பாதையை உருவாக்கிக் கொண்டு, தெய்வ உருமாற்றம் செய்யும் படி தன்னை வளர்த்துக் கொண்டு தனது இயல்பை மேம்படுத்த வேண்டும். சுதந்திரமே இறுதி விதியும் இறுதியான முழு இன்பமும் ஆகும்.
The Synthesis of Yoga, 20:51
ஸ்ரீ அரவிந்தர் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான மனம், புத்தி, சித்த, அகங்கார என்ற அந்தக்கரணங்களும் உடலும் உடையவன் என்பதை உணர்ந்து, ஒருவன் தன்னுடைய முன்னேற்றத்திற்கு தன்னைத் தானே புரிந்து தெய்வ உருமாற்றத்திற்கு உந்த வேண்டும். இதில் ஒருவனுக்கு பூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறார். ஏனெனில் ஒருவன் தன்னை தெய்வ உருமாற்றம் செய்ய அவனுக்கே உரிய பிரத்தியேக முறையில் உழைக்க வேண்டி இருக்கிறது.
யோகத்தில் சித்தி பெறுவதில் ஒருவனுடைய உழைப்பு பூரண சுதந்திரமும், முழுமையும், தெய்வ உருமாற்றம் பெறுவதற்கான இலட்சியமும் இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஒருமுறை எமக்கும் செல்லத்துரை சாமிக்கும் நடைபெற்ற ஒரு உரையாலைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். செல்லத்துரை சாமி யோகர் சுவாமியின் முதன்மைச் சீடர். சிவதொண்டன் நிலையத்தின் பொறுப்பாக இருந்து 93 (சரியாக தெரியவில்லை) குரு சேவை செய்தவர். 2013ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் மாலை வேளையில் ஒருரிமணித்தியாலம் தினசரி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
யோகர் சுவாமி தனது சீடர்களுக்கு அவரவர் பக்குவத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு சாதனா மார்க்கத்தை உபதேசித்துள்ளார். அதில் செல்லத்துரை சாமிக்கு உபதேசித்தது குண்டலினி யோகம், ஆர்தர் ஆவலோனின் serpent power புத்தகத்தை வரிவரியாக மொழிபெயர்த்து தனது சாதனைக்கு உபயோகிக்கும் படி யோகர் சுவாமிகள் உபதேசித்திருந்தார். அதன் படி இவரும் தனது சாதனையை செய்து வந்த காலத்தில் ஒரு நாள் சுவாதிஷ்டானத்தில் பிரம்ம கிரந்தி பிளக்கும் போது செல்லத்துரை சுவாமிகளால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்பட்ட அவஸ்தையை தாங்க முடியவில்லை.
நேராக கொழும்புத்துறையில் யோகர் சுவாமி இருக்குமிடத்திற்கு ஓடி இருக்கிறார். சுவாமிக்கு முன்னால் உட்கார சுவாமி கோபமாக எழுந்து "உனக்கு ஒவ்வொரு கவளத்திற்கும் நெய் வார்க்கோணுமோ? என்று காலால் உதை விட்டு விரட்டியிருக்கிறார். உதை பட்ட வலியுடன் அதுவரை உடலிலிருந்த அவஸ்தை போக இவரும் யோகர் சாமி விரட்டி விட்ட பயத்தில் ஓடி வந்து விட்டார். அதன்பின்னர் தனது சாதனையை சொந்த முயற்சியில் குருவை தியானித்து சித்தி பெற்றதாக செல்லத்துரை சாமி கூறினார்.
இங்கு அரவிந்தரின் வாக்கினையும், யோகர் சுவாமி சொன்ன "உனக்கு ஒவ்வொரு கவளத்திற்கும் நெய் வார்க்கோணுமோ?" என்ற வார்த்தைகளும் ஒப்பிட்டுப்பார்க்க கூடியவை

Saturday, November 03, 2018

மஹாலஷ்மி தத்துவம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் - 05


Image result for Mahalakshmi Sadhana
ஆத்யந்த ரஹீதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி 
யோகஜ்ஞே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

ஆத்யந்த ரஹீதே தேவி: ஆதியும் அந்தமும் இல்லாத தேவி

ஒரு காரியம் நடைபெற அந்தக்காரியத்திற்கான காரணம் காரியத்திற்கு முன்னர் இருந்தாக வேண்டும். பிரபஞ்சம் எப்போதும் இயங்கு காரியப்பொருள். இந்தப்பிரபஞ்சத்தில் சகல சௌபாக்கியங்களையும் தரும் தேவியான மஹாலக்ஷ்மி அந்த சௌபாக்கியத்தை தருவதற்கு பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் அவள் இருந்திருக்க வேண்டும். 

இந்த பௌதீக பிரபஞ்சப் பொருட்கள், இன்பங்கள் எல்லாம் தோன்றி மறைந்து கொண்டிருப்பவை. இப்படி தோன்றி மறைவதையே அழிவு என்று சொல்கிறோம். இந்த அழிவு என்பது பௌதீகப் பொருட்களுக்கே பொருந்தும். எல்லாவற்றையும் தோன்றி மறையச் செய்யும் மூல சக்திக்கு ஆதியும் அந்தமும் இருக்க முடியாது. 

எல்லா சௌபாக்கியங்களையும் தரும் ஆதிசக்தியையே மகாலக்ஷ்மியாக நாம் வழிபடுகிறோம். ஆக சாதகன் தான் வழிபடும் மஹாலக்ஷ்மியை வெறும் பணத்தை செல்வத்தை தரும் ஒரு தேவதையாக அறியாமையாக கருதக்கூடாது. மஹாலக்ஷ்மி என்பது பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் ஆதி அந்தமில்லாத மூலசக்தியின் வடிவமே என்று உணர வேண்டும். 

ஆதி சக்தி – முதற் சக்தி 

மேலே ஆதியும் அந்தமும் இல்லாதவள் என்று பார்த்தோம். ஆதியும் அந்தமும் இல்லை என்றால் அனைத்தையும் தோற்றுவித்த காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா. அந்த மூலசக்தியின் வடிவே மஹாலக்ஷ்மி. ஆக ஒருவன் மஹாலக்ஷ்மியை உபாஸிப்பதனால் அந்த ஆதி சக்தியின் அருளைப்பெறலாம். 

மஹாலக்ஷ்மியும் ஆதிசக்தியும் வெவ்வேறான தெய்வ சக்திகள் அல்ல என்பதை உணர்வேண்டும். 

மஹேஸ்வரி – பெரிய ஐஸ்வர்யங்களின் தலைவி 

ஈஸ்வரி என்றால் ஐஸ்வர்யங்களின் தலைவி என்று பொருள். மஹேஸ்வரி என்றால் இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எல்லா ஐஸ்வர்யங்களிற்கும் தலைமை வகிப்பவள் என்று பொருள். மஹாலக்ஷ்மி உபாசனை பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஐஸ்வர்யங்களையும் அனுபவிப்பதற்கு தகுதியுள்ளவனாக்கும். 

யோகஞ்ஞே – யோக சாதனையில் வெளிப்படுபவள் 

இன்று பலரும் மஹாலக்ஷ்மியின் அருளைப்பெறுவதற்கு பல்வேறு பூஜைகளை சடங்குகள் செய்கிறார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி உண்மையில் யோக சாதனையின் பலனாகவே தன்னை வெளிப்படுத்துகிறாள். உண்மையில் யோக சாதனையினால் பெறும் முக்தி இன்பத்தினை தருபவளும் மகாலக்ஷ்மியே. 

ஒருவன் யோக சாதனையில் முன்னேற மஹாமாயையின் லக்ஷ்மி தத்துவம் மிக அவசியமான ஒன்று. ஏனெனில் யோக சாதனை என்பது மஹாமாயையை கடக்கும் முயற்சி. இந்த முயற்சியில் வெற்றிபெறவேண்டுமாயில் அந்த மாயையிற்கு யார் காரணமோ அவரின் அருள் இல்லாமல் எவரும் வெற்றி பெற முடியாது. பலரும் யோக சாதனை என்று தோடங்கி தம்மை வருத்தி, மஹாமாயை தம்மை துன்புறுத்துவதாக மனக்கலக்கம் அடைந்து தமது சாதனையினை ஒழுங்காக செய்ய முடியாதபடி மனக்கலக்கமும், ஏழ்மையும் வாட்ட விரக்தி அடைந்து விடுகிறார்கள். இப்படி மனதையும் உடலையும் வருத்தி தண்டித்து விட்டு மஹாமாயையின் விளையாட்டிலிருந்து ஏறி மேலே சென்று எவரும் முக்தி அடையமுடியாது. 

ஆகவே யோக சாதனையில் வெளிப்படும் மஹாலக்ஷ்மியின் அருளைப்பேற்றே ஒருவன் முக்தியினைப் பெற முடியும். 

யோகசம்பூதே – யோகத்தால் உண்டானவள் 

மஹாலக்ஷ்மித்துவம் ஒருவனில் எப்படி வெளிப்படும் என்பதை இந்த வரி குறிப்பிடுகிறது. மஹாலக்ஷ்மி என்பது இந்த உலகின் சம்பத்துகளுக்கு, ஐஸ்வரியங்களுக்கான ஓட்டுமொத்த மூல சக்தியின் இயக்கம். இந்த இயக்கத்தை வெளிப்படுத்த ஆழ்ந்த யோக சாதனை தேவைப்படுகிறது. சிவன், விஷ்ணூ, பிரம்மா முதலானவர்களும், தேவர்களும், அசுரர்களும் தமது யோக சாதனையால்தான் அவளின் ஆற்றலை தம்மில் வெளிப்படச் செய்கின்றனர். 



மஹாலக்ஷ்மியின் ஆற்றலை விழிப்பிக்க யோகசாதனை அவசியம் 


சாதகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை: 
  1. மஹாலக்ஷ்மி என்பது ஆதியும் அந்தமும் அற்ற மூலசக்தியின் சகல சௌபாக்கியங்களையும், ஐஸ்வர்யங்களையும் இன்பங்களையும் அருளும் செயல் சக்தி. 
  2. மஹாலக்ஷ்மியே மூலசக்தி, மகாலக்ஷ்மி மூலமும் ஆதிசக்தியின் பரிபூரண அருளைப்பெறலாம். அவளே சகல ஐஸ்வர்யங்களினதும் தலைவி 
  3. மஹாலக்ஷ்மி யோகசாதனையில் வெளிப்படுபவள், அவளின் அருளை பெற்றவார்களே யோகத்தில் பூரணத்துவம் பெறமுடியும். 
  4. மஹாலக்ஷ்மியின் அருளை யோகசாதனையால் ஒருவன் தன்னில் விழிப்பிக்க முடியும்.

பூவும் தேனும் தேனியும் - குருவும் ஞானமும் சீடனும்


Image may contain: text
பூக்கள் அழகானவை, நறுமணம் கமழும் வசீகரமானவை, காய்யாகி பின்னர் பழமாகி, வித்தாகி மரமாகக்கூடிய படைப்பாற்றல் பெற்றவை.

பூக்கள் தம் வாழ்க்கையினை முடிக்கும் முன்னர் தன்னிடம் உபரியாக இருக்கும் தேனை தேனிக்கு கொடுக்கும், தேனைப் பெறும் தேனியோ பூவிற்கு உபகாரமாக மகரந்தத்தை எடுத்துக் காவி பூத்த பூவின் மரத்தின் வித்தை உருவாக்க செயல் புரியும்.  

தேனி சுறுசுறுப்பானது, பொறுமையானது, பூவினை காயப்படுத்தாமல் தேனை எடுக்கும். சிறுகச் சிறுக பொறுமையாக தினம் தினமாக தேனைச் சேர்க்கும். எல்லாத்தேனியும் ஒற்றுமையாக தேன் கூட்டில் வாழ்ந்து தேனைச் சேர்க்கும். சேர்க்கும் தேனின் பெரும்பகுதி அவர்களுக்கு சொந்தமில்லாமல் மனிதனிற்கு பிரயோசனமாகும். இப்படி மனிதன் எடுத்துவிடுகிறான் என்று தேனி தேனை பூக்களில் இருந்து எடுக்காமலிருப்பதில்லை. புதிய தேன் கூட்டினை கட்டாமல் இருப்பதில்லை.

இந்த உறவுதான் குருவிற்கும் சீடனுக்கும் உள்ள உறவு. குரு வசீகரம்மிக்க, தெய்வ குணங்கள் என்ற நறுமணம் நிரம்பிய மிக்க பூவிற்கு உவமானம் கூறினால் அந்த குருவின் ஞானம் தேன்போன்றது. குருவிடமிருந்து ஞானத்தைப் பெறும் சீடன் தேனியைப்போன்ற பண்புடைவனாயிருந்தல் அவசியம். குருவை நச்சரிக்காமல், பூ எப்போது தேனை தருகிறதோ அப்போது காத்திருந்து, சோம்பலின்றி, உற்சாகமான உழைப்புடன் பெறவேண்டும். தேனி தனது உழைப்பிற்கு எப்படி சலிப்பதில்லையோ அப்படி சீடன் குருவிடமிருந்து ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.

பலர் தேனிகளாக இல்லாமல் மனிதனின் பேராசை குணத்துடன் குருவை அணுகுபவர்களாக இருந்தால் செயல் கெட்டுப்போய் விடும். மனிதர்கள் பூவை மரத்தில் அழகுபார்க்காமல் பறித்து தலையில் சூடிக்கொள்ளும் ஆசை உள்ளவர்கள். அவர்களுகு பூவிற்குள் இருக்கும் தேனோ, இன்னொரு மரத்தை உருவாக்கும் மகரந்தத்தைப் பற்றியோ கவலை இல்லை. பூவை பறித்து தமக்கு உரிமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்கள்.

இன்னும் சிலர் பூவின் அழகில் மயங்கி கவிதை பாடும் உள்ளம் உள்ளவர்களும் பூவிலிருக்கும் பயனைப்பெறுவதில்லை. இவர்களைப்போன்றவர் தமது குருவின் பெருமை பேசுகிறோம் என்று எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமனே புகழாரம் பாடிச் செல்பவர்கள்.
உண்மையான சீடன் பூவிற்கு தேனி போன்றவன்.

Friday, November 02, 2018

மஹாலக்ஷ்மி தத்துவம் - மஹாலக்ஷ்மி அஷ்டகம் - 04

Image result for Mahalakshmi Sadhana

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி 
மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

சித்தி புத்தி ப்ரதே தேவி: சித்திகளையும் நல்லறிவினையும் கொடுக்கும் தேவி 

மாகாலக்ஷ்மி எல்லா செல்வங்களுக்கும் அதிபதி என்பதால் எல்லாவித சித்திகளையும் அருளும் ஆற்றல் உள்ளவள். சித்திகள் என்றவுடன் பலரும் அபூர்வ ஆற்றல்களைப் பற்றி மனக்கோட்டைகளைக் கட்டுகிறார்கள். உண்மையில் சித்திகள் என்பவை முறையான, ஒழுக்கமான தொடச்சியான பயிற்சிகள் மூலம் உண்டாகும் பிரதிபலன்களே சித்திகள். சித்தி என்ற ஸமஸ்க்ருத சொல்லின் பொருள் முழுமை அடைதல், அல்லது தேர்ச்சி அடைதல் என்பதாகும். எடுக்கும் காரியத்தினை செம்மையாக செய்து தேர்ச்சி பெறுதலே சித்தி. 

சூக்ஷ்ம சக்திகளில் தமது சாதனையால் தேர்ச்சி பெற்றவர்களால் யோக நூற்களில் கூறப்படும் அணிமாதி சித்திகள் கிடைக்கப்பெறுகின்றன. 

இதைப்போல் தனது தொழிலை செம்மையாக செய்பவன் தனது தொழிலில் சித்தி பெறுகிறான். 

சம்பத்துகளை செல்வங்களை பெற விரும்புபவன், லக்ஷ்மித்துவத்தை பெற விரும்புவன் தான் அடைய விரும்பும் துறையில், தொழிலில் பயிற்சியில் நிபுணத்துவம் பெறவேண்டும். பலருக்கு அறிவு இருந்தாலும் அந்த அறிவை எப்படி செயற்படுத்தி சித்தி பெறுவது எனபது மகாலக்ஷ்மியின் அருளாலேயே சாத்தியமாகும். 

ஒரு துறையில் நிபுணத்துவம் பெற அதற்குரிய அறிவு இருக்க வேண்டும். இந்த அறிவு ஒருவனிடம் இருந்தாலே அவனால் குறித்த துறையில் நிபுணத்துவம் பெறமுடியும். மகாலக்ஷ்மி அந்த புத்தியும் அந்த புத்தியை பயன்படுத்தி சித்தி பெறும் வழியினையும் ஒருவனில் தோற்றுவிக்கும் தெய்வ சக்தி. 

மகாலக்ஷ்மியை உபாசிப்பவன் சித்தி என்ற நிபுணத்துவத்தையும் புத்தி என்ற அந்த நிபுணத்துவத்தை பெறும் அறிவினையும் ஒரு சேரப்பெறுவான். 

இதையே இந்த வரிகள் குறிப்பிடுகின்றது. 

புக்தி முக்திப் பிரதாயினி: போகத்தையும் மோக்ஷத்தையும் தருபவள் 

புக்தி என்றால் போக பாக்கியங்கள் என்று பொருள். இந்த உலக போகங்கள் அன்னையின் மஹா மாயையின் ஸ்தூல வெளிப்பாடுகள். ஆன்மாக்கள் இவற்றையே உண்மை இன்பம் எனக்கருதி இவற்றை பெறுவதையே வாழ்வின் அடிப்படை போராட்டமாக ஆக்கிக்கொண்டு தமது வாழ் நாளை இவற்றை அடைவதிலேயே செலவழிக்கின்றது. இந்த போகங்களை அனுபவிக்காமல் மனம் திருப்தியடைந்து வைராக்கியம் வெகு எளிதில் ஏற்படுவதில்லை. இப்படி போகத்தில் திருப்தியுறாத மனம் ஒரு நாளும் அதைவிட உயர்ந்த இறை இன்பத்தை நாடுவதில்லை. ஆகவே ஆன்மாக்கள் மஹாமாயையின் விளையாட்டில் வெற்றி பெற்று எல்லா போக பாக்கியங்களயும் அனுபவித்து திருப்தியுற்று இறையை அறியும் முக்திப்பாதையில் செலுத்து வல்லமை வாய்ந்தவள் மகாலஷ்மி. 

போகத்தில் திருப்தி உற்ற மனம் தன்னுள் இறையை அறியும் பரிணாமத்தில் முன்னேறி அடையும் நிலை முக்தி. ஆக மகாலக்ஷ்மி ஒரு ஆன்மா தனது கீழ்ப்பரிணாமத்திலிருந்து போகத்தை அனுபவித்து முக்தியை அடையும் வழியை காட்டும் தேவி என்பதையே இந்த வரி குறிப்பிடுகிறது. 

மந்திரமூர்த்தே சதா தேவி: மந்திர வடிவானவ தேவி 

மந்திர பூதே ஸதா தேவி என்பது பாடபேதம் – மந்திரத்வடிவாள் சுத்திப்பவள் என்று பொருள் 

பொதுவான ஸ்லோகத்தில் மந்திரமூர்த்தே சதா தேவி: மந்திர வடிவானவ தேவி என்றே காணப்படுகிறது. எனினும் எமது குரு நாதர் உபதேசித்த ஸ்லோகத்தில் மந்திர பூதே ஸதா தேவி என்பது பாடபேதம். குருவாக்கியப்பிரமாணப் பிரகாரம் மந்திர பூதே ஸதா தேவி என்பதன் பொருளை அறிந்தபின்னர் முழுமையான விளக்கத்திற்கு செல்வோம். 

மகாலக்ஷ்மி சங்கினை தரித்தவள் என்பதும், சங்கு நாதத்தின் குறியீட்டு வடிவம் என்பதையும் முன்னைய ஸ்லோகங்களில் அறிந்தோம். நாதம் லக்ஷ்மித்துவம் வெளிப்படும் அல்லது லக்ஷ்மித்துவத்தை விழிப்படையச் செய்யும் ஒரு வழி. இந்த நாதத்தை சாதகன் பயன்படுத்தும் வழியே மந்திர சாஸ்திரம். மந்திரம் என்பது குறித்த ஒலிகளுடைய அட்சரங்களை குறித்த சந்தத்தில் – ஒழுங்கில் அமைத்து அதை மனதில் திரும்ப திரும்ப இயக்கி பிரபஞ்ச மூல சக்தியை கவரும் ஒரு சூக்ஷ்ம சாதனை. இந்த மந்திர சாதனையால் மனம் சுத்தமடையும். குறிப்பாக மகாலக்ஷ்மியின் மந்திர சாதனை ஒருவனை தூய்மைப்படுத்தும் இதையே மந்திர பூதே ஸதா தேவி என்ற வரி குறிப்பிடுகிறது. 

ஒருவன் மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற லக்ஷ்மி மந்திர உபாசனை மிகச்சிறந்த வழி. 


இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை 

1. ஒருவனுக்கு மஹாலக்ஷ்மி சாதனை சித்தி என்ற நிபுணத்துவத்தையும் அதற்குரிய செயற்பாட்டு அறிவினையும் கொடுக்கும். 

2. மகாலக்ஷ்மி சாதனை செய்பவன் முதலில் மஹாமாயியின் விளையாட்டான போகங்களை அடைந்து கீழ் ஆன்ம பரிணாமத்திலிருந்து முக்தியாகிய மேல் ஆன்ம பரிணாமத்திற்கு தேவியின் அருளாள் செலுத்தப்படுவான். 

3. மஹாலக்ஷ்மி அருளைப்பெற, ஒருவனை சுத்தி செய்ய மஹாலஷ்மி மந்திர சாதனை மிக உகந்த வழி

Thursday, November 01, 2018

மஹாலஷ்மி தத்துவம்: மஹாலஷ்மி அஷ்டகம் - 03

Image result for Mahalakshmi Sadhana
சர்வஜ்ஞே சர்வவரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
சர்வஜ்ஞே : அனைத்தையும் அறிந்தவள் 
மஹாலக்ஷ்மியை அனைத்து செல்வத்தையும் கொடுப்பவள் என்றும் அனைத்து செல்வங்களுக்கு அதிபதி என்று சொல்கிறோம். இப்படி எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் எல்லா செல்வங்களையும் தர வேண்டும் என்றால் அவள் அந்த செல்வங்களைப்பற்றியும், அதன் பண்புகள் பற்றியும், தன்மை பற்றியும் முழுமையாக அறிந்தவளாக அல்லவா இருக்க வேண்டும். ஆகவே மகாலஷ்மியின் சர்வஜ்ஞே என்ற அமிசத்தை தியானிப்பதன் மூலம் ஒருவன் செல்வங்களை அடைவது என்ற வழிமுறைகளை தந்து மனதில் விழிப்படையச் செய்கிறான். மஹாலக்ஷ்மியை சர்வஜ்ஞேயாக தியானிப்பதால் அனைத்து செல்வங்களையும் அடையக்கூடிய அறிவினை, ஆற்றலை, நுட்பத்தினை, தெளிவினை சாதகன் பெறுகிறான், 


ஸர்வ வரதே : எல்லா வரங்களையும் கொடுப்பவள் 
ஒருவன் தன்னிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். பணம் மட்டும் உள்ளவன் பணத்தை மாத்திரமே கொடுக்க முடியும். கல்வியை தரமுடியாது. இதுபோல் ஒவ்வொன்றை பெறவும் ஒவ்வொரு தெய்வ சக்தியை நம்மில் ஈர்க்க வேண்டும். ஆனால் எல்லா வரங்களையும் கொடுக்கு வண்ணம் எல்ல செல்வங்களுக்கும் அதிபதியாக இருக்கும் மஹாலக்ஷ்மியால் இது முடியும். ஆக மகாலக்ஷ்மியை ஸர்வ வரதே என தியானிப்பவன் அனைத்து செல்வங்களையும் பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவான். இந்த வல்லமை உடைய தெய்வ சக்தியே மஹாலக்ஷ்மி! 



ஸர்வ துஷ்ட பயங்கரி: எல்லாத் தீமைகளையும் பயமுறுத்தி தண்டிப்பவள் 

தீமைகள் அண்டுபவன் லக்ஷ்மித்துவம் பெறமுடியாது. இதன் மறுதலையாக லக்ஷ்மித்துவம் பெற்றவனை தீமைகள் அண்ட முடியாது. லக்ஷ்மித்துவம் என்பது இன்பத்தினை பெறுவற்குரிய சரியான வழி. பலர் இன்பத்தினை அடைய லக்ஷ்மித்துவத்தினை பெறாமல் அசுரத்தனத்தின் மூலம் பெற முயல்கிறார்கள். இன்றைய நிலை அதுவே. இப்படி அசுரத்தனத்தின் மூலம் பெறப்படும் இன்பம் மூலம் ஒருவன் தனது பரிணாமத்தை முன்னேற்றி பரிபூரணம் பெறமுடியாது. இதனால் மீண்டும் மீண்டும் மாயையின் பிடியில் சிக்கி காலம் வீணாகி தீமைகளும் துன்பமும் இன்பமும் கலந்து ஆன்ம முன்னேற்றம் பெற முடியாமல் போய் விடும். 

இப்படி இல்லாம மகாலக்ஷ்மியின் அருளை தன்னில் விழிப்படையச் செய்து தீமைகள் அண்டாமல், இன்பமான வாழ்க்கை பெற்று அதன் திருப்தியால் ஆன்ம முன்னேற்றம் அடையும் வழியே மகாலக்ஷ்மியின் அருள் தருகிறது. இதனால் சாதகனுக்கு வரக்கூடிய எல்லா துஷ்டங்களும் விலகுகிறது. 

சர்வ துக்க ஹரே : எல்லா துக்கங்களையும் போக்குபவள் 

இன்பம் கிடைக்கவேண்டும் என்றால் துன்பம் போக்கப்பட வேண்டும் என்பதுதானே தர்க்க ரீதியாக சரியான விஷயம். எல்லா இன்பங்களும் மகாலக்ஷ்மியால் கிடைக்கும் என்றால் அவை கிடைப்பதற்கு எல்லா துன்பங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே சரியான ஒழுங்கு அல்லவா. 

ஆகவே மகாலஷ்மியை உபாசிப்பவனது எல்லா துக்கங்களும் போக்கபடும். 

இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை 

1. இந்த ஸ்லோகம் மகாலஷ்மியை உபாசிப்பவர்களுக்கு மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும் வழிகளை அவள் செயல்படும் தன்மைகளை கூறுகிறது. 

2. மஹாலக்ஷ்மியின் அருள் ஒருவனுக்கு செல்வத்தை சரியான வழியில் பெறுவதற்குரிய வழிகள் எல்லாவற்றையும் அறியத்தரும். 

3. ஒருவன் மஹாலக்ஷ்மியின் ஆற்றல் எல்லா வரங்களையும் தந்து எல்லா துன்பங்களையும் போக்க கூடியது. 

4. மகாலக்ஷ்மியை உபாசிக்கும் சாதகன் தனது துக்கங்கள் நீங்கி எல்லா ஸௌபாக்கியங்களும் பெறுவான்.

மஹாலக்ஷ்மி தத்துவம் - மஹாக்ஷ்மி அஷ்டகம் - 02

Image result for Mahalakshmi Sadhana

நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி 
சர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

நமஸ்தே என்பதன் பொருள் என்னவென்பதை முதல் ஸ்லோகத்தில் பார்த்தோம். லக்ஷ்மி உபாசனையில் துன்பம் விளைவிக்கும் போலி ஆங்காரங்களான எமது பற்றாக்குறைகளை எமது தன்மையாக நாமாக எண்ணாமல் இன்பமயமான லக்ஷ்மிதத்துவத்துவமே தன்னுடையதாக பாவிக்க வேண்டும். ஆகவே எனது போலி அடையாளங்களான ஆங்காரங்களைத்துறக்க நமஸ்தே என்ற வரி பாவிக்கப்படுகிறது. சாதகன் தான் இந்த துன்பமயமான போலி அடையாளங்கள் அல்ல என்பதை துறந்து லக்ஷ்மியை உபாசிக்க வேண்டும் என்பதை இந்த வரி குறிப்பிடுகிறது. 


கருடாரூடே – கருடன் மேல் ஏறி வருபவள் 

பொதுவாக வாகனம் எமக்கு இருக்கிறது என்றால் நாம் செல்லும் பாதை எது என்பதை அது கூறும். ஒருவரிடம் கார் இருந்தால் கட்டாயம் இந்தபாதையால்தான் செல்லுவார் என்பதை அனுமானிக்கலாம் அல்லவா. அதுபோலவே இந்த வரி லக்ஷ்மியின் வாகனத்தைக் கருடாரூடே என்று குறிப்பிடுகிறது. ஆக இதன் அர்த்தம் கருடன் மூலம் பயணிப்பவள் மஹாலக்ஷ்மி என்பது. 

எல்லா தெய்வ சக்திகளும் உடலுக்குள்ளேயே இருக்கிறது என்பதல்லவ சித்தர்களின் வாக்கு. ஆகவே கருடனும் உடலுக்குள்ளே இருக்க வேண்டுமல்லவா. உடலில் கருடன் இருக்கிறான். 

ஆம் உடலை இயக்கும் பிராணசக்திதான் கருடன். ஒருவனில் மகாலக்ஷ்மி தத்துவம் செயல்பட வேண்டுமானால் அவன் பிராண சக்தி நிறைந்தவனாக இருக்க வேண்டும். 

ஒருவன் தனது மூச்சினை ஒழுங்குபடுத்தி பிராணசக்தி நிறைந்தவனாக இருந்தால் அந்தப்பிராணன் மேல் ஏறி ஒருவனில் லக்ஷ்மித்துவத்தை செயற்படுத்துபவள். 

ஆக ஒருவன் தன்னில் லக்ஷ்மித்துவத்தை விழிப்படையச் செய்ய வேண்டின் அவன் பிராணசக்தி நிறைந்தவனாக இருக்க வேண்டும். இதற்காக அனாவசியமான கண்ட கண்ட பிராணாயாமங்களைச் செய்ய வேண்டியதில்லை. தீர்க்க சுவாசம் என்ற ஆழமாக மூச்சினை எடுத்து விட்டு பயிற்சி செய்ய ஒருவனில் பிராண வலிமை கூடும். பிராண வலிமை கூடினால் அவனில் லக்ஷ்மி தத்துவம் செயற்படும். 


கோலாஸுர பயங்கரி - கோலாசுரனுக்கு பயங்கரமானவள்

கோலாஸுரன் என்பவன் தேவர்களை தான் பெற்ற வலிமையால் துன்புறுத்த பைரவி வடிவில் சென்று அவனை அழித்தவள் மகாலக்ஷ்மி. 

முதல் வரியில் பிராணவலிமையால் லக்ஷ்மித்துவத்தை பெற முடியும் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் கோலாசுர பயங்கரி என்று கூறுவது மிகப்பொருத்தமான ஒழுங்கு. 

பொதுவாக ஒருவன் வலிமை பெற்றாலோ செல்வம் பெற்றாளோ அசுரத்தனம் வளர்ந்து விடுவதை இயல்பிலே காண்கிறோம். எவராவது தாம் வலிமை பெற்று விட்டால் அந்த வலிமையை எளியவர்களிடம் காட்டி துன்புறுத்துவது வழக்கம். இந்த நிலையையே புராணங்கள் அசுரன் என்று குறிப்பிடுகிறது. 

இப்படி பிராண வலிமையால் லக்ஷ்மித்துவம் பெற்று தேவர்களை துன்புறுத்திய அசுரன் தான் கோலசுரன். இப்படி அசுரத்தனம் இருந்தால் அந்த இடத்தை விட்டு லக்ஷ்மி விரைவில் அகன்று விடுவாள். இப்படி அகல முன்னர் சாதகனிற்கு புத்தி விழிப்படைய பயமுறுத்தி நல் வழிப்படுத்துவாள், இதையே கோலாசுர பயங்கரி என்ற சொற்களால் விழக்கப்பட்டிருக்கிறது. 

லக்ஷ்மித்துவம் பெற்றவர்கள் தம்மில் மற்றவர்களை துன்புறுத்தும் அசுரத்தனத்தை அறவே நீக்க வேண்டும். இப்படி நீக்கினால் அவர்களில் லக்ஷ்மித்துவம் நிலைத்திருக்கும். 

சர்வபாபஹரே – எல்லாப் பாவங்களையும் போக்குபவள் 

பாவம் என்பது தர்மத்தால் விலக்கப்பட்டது. தர்மம் என்பதன் பொருள் எது எம்மை நாம் இன்பமாக வாழுவதற்காக பிணைக்கிறதோ அந்த விதி தர்மம் எனப்படும். உதாரணமாக குடும்பத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் கணவன் மனைவியையும் மனைவியையும் மதிக்க வேண்டும் என்றால் இது குடும்பத்திற்குரிய தர்மம். 

ஒருவன் பாவம் எப்போது செய்வான், தனது இன்பங்கள் பூர்த்தியாகவில்லை என்றால் அந்த இன்பத்தை தேடி தர்மத்திற்கு மாறாக செய்ய முயலும்போது பாவம் செய்தவனாகிறான். 

ஆக பாவத்தின் அடிப்படை இன்பத்தை அடையவேண்டும் என்ற உந்தலில் தர்மம் தவறுவதில் ஆரம்பிக்கிறது. 

இப்படியான தர்மம் தவறும் இன்பம் அனுபவிக்கும் வேட்கையை தருவதும் அவளது மஹாமாயா சக்தியே! பொதுவாக இன்ப அனுபவிக்கும் விளையாட்டில் பலர் மூலசக்தியின் இன்ப வடிவான லக்ஷ்மிதத்துவத்தை பெருக்குவதை விட்டுவிட்டு மஹாமாயையின் விளையாட்டில் வீழ்ந்து விடுகின்றனர். உதாரணமாக பணம் ஒருவனுக்கு தேவையென்றால் அதை லக்ஷ்மிதத்துவத்தை தன்னில் விழிப்பித்து அடைகின்றான். பணம் கிடைத்த பின்னர் அவனிற்கு இருக்க கூடிய தேர்வுகள் இரண்டு, அந்தப்பணத்தைக் கொண்டு மனம் போன போக்கில் மஹாமாயையின் தோற்றங்களை இன்பம் எனக்கண்டு மயங்கி பணத்தை பெருக்க எந்த வழியையும் தேர்ந்தெடுக்கலாம் என்பது ஒன்று, 

இரண்டாவது பெற்ற பணத்தால் தனது கடமைகளை பூர்த்தி செய்து மனத்திருப்தியை அடைந்து தர்மத்தை தவறாமல் ஆன்மாவை அறிந்து தனது உண்மை ஸ்வரூபத்தை அறியும் ஞானம். 

முதலாவது பாதையில் செல்லும்போது ஒருவன் பாபங்களை சேர்த்துக்கொள்கிறான். இரண்டாவது பாதையினை தேர்வு செய்யும்போது ஒருவன் உண்மையான லக்ஷ்மித்துவத்தை அடைந்து பரிணாமத்தில் முன்னேறுகிறான். 

உண்மையில் அன்னை லக்ஷ்மித்துவத்தின் மூலம் ஒரு ஆன்மா பரிணாமத்தில் முன்னேறேவே விரும்பினாலும் ஆன்மா அறியாமையால் தன் முனைப்பால் செய்யும் பாவக்கூட்டங்களால் மஹாமாயா சக்தியிடம் சிக்கிக்கொள்கிறது. 

இப்படி சிக்கிக்கொண்ட ஆன்மா மீண்டு வர மஹா லக்ஷ்மியின் அருள் வேண்டும். ஆகவே மகாலக்ஷ்மியின் அருளுடன் ஒருவன் தனது பாவங்களை அழித்து பரிணாமத்தில் முன்னேற முடியும். லக்ஷ்மியின் அருள் பெற்ற ஒருவன் தான் பெறவேண்டிய இன்பங்களை எல்லாம் பெற்றுவிடுவதால் தர்மம் தவறாமல் இருக்கிறான். அதனால் அவன் பாவங்கள் செய்வதிலிருந்து இயல்பிலேயே தடுக்கப்படுகிறான். 

தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

இந்த வரிகளின் விளக்கம் முதல் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. 


இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை 

1. மஹாலக்ஷ்மி அருளைப்பெற விரும்புபவர்கள் முதலில் தாம் துன்பமயமானவரகள், பாவம் நிறைந்தவர்கள் என்ற போலி ஆங்காரங்களை தொலைத்து தாம் மகாலக்ஷ்மி அருளுக்கு பாத்திரமானவர்கள் என்பதை உணரவேண்டும். 

2. லக்ஷ்மியின் அருள் எப்படி செயற்படுகிறது என்றால் கருடன் எனும் பிராண சக்தி மூலம், ஆகவே ஒருவன் தன்னில் பிராணசக்தி நிறைந்தவனாக இருக்க கூடிய வழிகளை அறிய வேண்டும். 

3. இப்படி பிராணவலிமை பெற்று லக்ஷ்மியின் அருள் பெற்ற பின்னர் ஒருவன் தனது செல்வத்தால், வலிமையால் எளியவர்களை வருத்தக்கூடாது. அப்படி வருத்தினால் லக்ஷ்மித்துவம் அவனிடமிருந்து விலகிவிடும். அப்படி விலக முன்னர் கோலாசுரனை பயமுறுத்தியது போல் அவள் சாதகனை நல் வழிப்படுத்த பயமுறுத்துவாள். அதை உணர்ந்து சாதகன் தன்னை தர்மத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

4. லக்ஷ்மி சித்தி ஒருவனை பாபக்கூட்டங்களில் இருந்து விடுவிக்கும். 

மஹாலக்ஷ்மி தத்துவம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் 01


இது நாம் குருதேவரிடம் படித்த தேவேந்திரன் துதித்த மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்ற பாடத்தொகுப்பின் உரையைத்தழுவி எமது சாதனா அனுபவத்திற்கேற்ப இக்காலத்து நடையில் எழுதப்பட்டது. 
**********************************************************
Image result for Mahalakshmi Sadhana
சுலோகம் - 01
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மகாலக்ஷ்மி நமோஸ்துதே


மஹாமாயே: மாஹா மாயை வடிவினள் 

இன்பமயமான ஆன்மா தன்னுடைய சொந்தமான இன்ப சொரூபத்தை அடையவிடாமல் அறியாமையில் ஆழ்த்து சக்தியையே ரிஷிகள் மஹாமயா என்கிறார்கள். இந்த மஹாமாயவின் சக்தியால்தான் ஆன்மா உண்மை ஸ்வரூபத்தை அடைய முடியாமல் போக இன்பங்களில் ஆழ்ந்து அறியாமையால் துன்பமுறுகிறது. இந்த மஹமாயைதான் லக்ஷ்மி. ஒருவன் மாயையினை கடந்து தன்னை அறிய வேண்டும் என்றால் அந்த மாயையின் அருளைப் பெறவேண்டும். ஆகவே தன்னை, தனது ஆன்மாவின் உண்மையான இன்ப ஸ்வரூபத்தை அறிய லக்ஷ்மி தத்துவம் நன் கு புரியவேண்டும். மஹாமாயையான லக்ஷ்மியின் எல்லா ஆற்றல்களையும் புரிந்தவனாலேயே தன்னை அறிய வேண்டும். ஆன்மாவின் சொந்த இன்பதை மறைத்து பணம், சுகபோகம் போன்ற புறப்பொருட்களில் இன்பம் பயப்பதாக இந்த லக்ஷ்மி மாயை இயங்குவதால் மஹாமாயே என்று அழைக்கப்படுகிறாள் 

இந்த வரி சாதகனுக்கு கூறும் செய்தி, தன்னை அறிய முற்படுபவன் லக்ஷ்மி மயமான மஹாமாயையினை அறிய வேண்டும். அந்த தத்துவமே லக்ஷ்மி தத்துவம் என்று அறிய வேண்டும் 


ஸ்ரீ பீடே: ஸ்ரீ பீடத்திற்குரியவள் 

ஸ்ரீ என்பது எல்லா செல்வங்களினதும், இன்பங்களினதும் குறியீடு. லக்ஷ்மியின் இன்னொரு தத்துவம் ஸ்ரீ தத்துவம். பீடம் என்றால் இருக்குமிடம் என்று பொருள். ஸ்ரீ பீடம் என்றால் எல்லா இன்பங்களினதும், செல்வங்களினதும் இருப்பிடம் என்று பொருள். பிரபஞ்சம் தோற்றம் பெறும்போது உலகில் உள்ள் ஒவ்வொன்றும் எது தோற்றத்திற்கு மூலமாக இருந்ததோ அந்த மூலத்திலிருந்தே அனைத்தும் வந்திருக்க வேண்டும். அவற்றுள் எல்லா இன்பங்களுக்கும் செல்வத்திற்கும் மூலமாக இருக்கும் தெய்வ சக்தியே லக்ஷ்மி தத்துவமாகும். 


ஸுரபூஜிதே: தேவர்களால் துதிக்கப்படுபவர்கள் 

தேவர்கள் என்ப்படுபவர்கள் எப்போதும் இன்பத்தை அனுபவிக்க விரும்புபவர்கள். மனிதர்களை விட எப்போதும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்க விரும்பவர்கள். அத்தகைய நோக்கமுடையவர்கள் விரும்பி வணங்கும் தெய்வம் லக்ஷ்மி. ஏனென்றால் லக்ஷ்மி தத்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்தவர்கள் எப்போதும் இன்பத்தை அனுபவிக்கு தேவர்கள் போன்ற நிலை அடைவார்கள். மனிதர்கள் அற்பமான சொற்பகாலத்திற்கு இன்பத்தினை பெற ஏதேதோ காரியங்களை செய்யும் போது நிலையாக இன்பத்தை அடைய தேவர்கள் எப்போதும் லக்ஷ்மியை வழிபட்டுவருகிறார்கள். 



எவர் இன்பத்தை நிலையாக பெற விரும்புகிறார்களோ அவர்கள் லக்ஷ்மியை வழிபடவேண்டும். 

சங்க சக்ர கதா ஹஸ்தே: சங்கு சக்கரம் கதாயுதம் போன்றவற்றை கைகளில் கொண்டவள் 

கடவுளர்களின் ஆயுதங்கள் ஆழ்மனத்தினை செயற்படுத்தும் குறியீடுகள். சங்கு – நாதம் என்ற ஒத்திசைந்த ஒழுங்கான பிரபஞ்ச மூல அதிர்வினையும், சக்கரம் பிரபஞ்சத்தின் ஓயாத இயக்கத்தினையும், கதாயுதம் எந்த பிரச்சனைகளையும் வலிமையுடன் எதிர்த்து முன்னேறும் வீரத்தினையும் குறிக்கும். 



நாதம் உருவக ஒரு ஒழுங்கான சந்தத்தோடு இசைந்த இயக்கம் அவசியம். 

இந்த மூன்று குறியீடுகளும் லக்ஷ்மியை உபாசிக்கும் உபாசகன் தன்னில் லக்ஷ்மித்துவத்தை கொண்டிருக்க வேண்டிய பண்புகளை குறிக்கிறது. ஒருவன் லக்ஷ்மித்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்ய வேண்டுமாயின் சங்கின் நாதத்தை போன்ற ஒத்திசைந்த அதிர்வினை (harmony) தனது மனம், உடல், பண்புகளில் கொண்டிருத்தல் வேண்டும். இந்த அடிப்படிப் பண்புகள் ஒத்திசைந்தால் சக்கரம் இயங்குவது போன்ற வலிமையான இயக்கம் அவசியம், இப்படி சக்கரம் போன்ற இயங்கும் போது வரும் தடைகளை உடைத்து முன்னேறும் வலிமை கதாயுதத்தை போன்று இருக்க வேண்டும். 



ஒரு சாதகன் தன்னில் லக்ஷ்மித்துவம் பெறவேண்டும் என்றால் சங்கின் நாதத்தினைப்போன்ற ஒத்திசைவும், சக்கரம் போன்ற விடாத முயற்சியுடன் கூடிய இயக்கமும், எதிர்ப்பு துன்பங்களை உடைத்தெறியும் கதாயுதம் போன்ற வலிமையும் கொண்டிருக்க வேண்டும். 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

நமஹ என்ற சமஸ்க்ருத சொல்லின் பொருள் “நான் அல்ல” என்பதாகும். பொதுவாக மனம் தான் என்று என்று எண்ணி பலவிதமான மாயைகளிலேயே இன்பத்தை தேடி அலையும். ஒரு இறைவனின் நாமத்துடன் நமஹ; என்று சேர்த்துச் அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் சொல்லும்போது அதன் பொருள் இதுவரை நான் என்னை ஸ்ரீ ஸக்தி சுமனன் என்று எண்ணிக்கொண்டிருந்தே அது உண்மையில் “ நான் அல்ல” என்பதே பொருள். 



இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். எம்மைப் பார்த்து எவராவது நீர் யார் என்று கேட்டால் அதற்கு நாம் “ நான் ஒரு தொழிலதிபர், நான் ஒரு சூழலியலாளன், நான் ஒரு மருத்துவன்” என்று நாம் எண்ணி வைத்திருக்கும் போலி ஆங்காரத்தை குறிப்பிடுவோம். ஆனால் உண்மையில் எமது உபாசனையில் நாம் உபாசிக்கும் தெய்வத்தின் குணங்களே நாம். ஆகவே அஷ்டோத்திர நாமாவளியி நமஹ சேர்த்துக்கொள்ளும்போது எமது போலி ஆங்காரங்களை மறந்து நாம் உபாசிக்கும் தெய்வத்தின் குணங்களை எம்முடன் அடையாளப்படுத்திக்கொள்கிறோம். 



ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ என்றால் ஓம் என்பது மூல பரம்பொருளில் இருந்து வெளிப்பட்ட மகாலக்ஷ்மி தத்துவம் என்னில் விழிப்படைகிறது, நான் இதுவரை என்னைப்பற்றி கொண்டிருந்த போலி ஆங்காரம் அல்ல நான் ( நமஹ;) 



ஆக இந்த வரி என்னுடைய போலியான துன்பமயத்தை மறந்து நான் மகாலக்ஷ்மி தத்துவம் விழிப்படைந்தவன் என்பதை “மஹாலக்ஷ்மி நமோ” என்ற வரியும், ஸ்துதே என்பது வணங்குகிறேன் என்றும் பொருள் படும். 

சாதகன் லக்ஷ்மி தத்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்ய 

1. முதலில் உண்மையான இன்பத்தை ஆன்ம இன்பத்தை பெற லக்ஷியின் மாஹாமாயா ஸ்வரூபத்தை அறிந்து, அவளருளால் அதைக் கடக்க வேண்டும். 

2. அந்த இன்பகரமான லக்ஷ்மி தத்துவத்தின் மூலத்தை ஸ்ரீ பீடம் என்று குறிப்பிடப்படுகிறது. 

3. எப்போதும் மாறாத இன்பத்திற்காக தேவர்கள் ஸ்ரீ பீடத்தை துதிக்கிறார்கள் லக்ஷ்மித்துவம் விழிப்படையச் செய்ய ஒருவன் சங்கின் நாதத்தினைப்போன்ற ஒத்திசைவும், சக்கரம் போன்ற விடாத முயற்சியுடன் கூடிய இயக்கமும், எதிர்ப்பு துன்பங்களை உடைத்தெறியும் கதாயுதம் போன்ற வலிமையும் கொண்டிருக்க வேண்டும். 

4. தான் துன்பமயமானவன் என்ற போலி ஆங்காரத்தை துறந்து எப்போதும் இன்பமயமான லக்ஷ்மித்துவம் நிறைந்தவன் என்று பாவிக்க வேண்டும்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...