குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Wednesday, November 15, 2023

இந்து - பாரதீய கலாச்சாரத்தினை அறிவியல்

 


இந்து - பாரதீய கலாச்சாரத்தினை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும் என்று எவருக்காவது விருப்பம் இருந்தால் சும்மா குதர்க்கம் பேசுவதைப் பகுத்தறிவு என்று நினைக்காமல் சற்று சிரத்தையுடன் தாம் கேட்கும் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு உழைக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் உரைத்தொகுதியை வாங்கிக்கொள்ளுங்கள்; ஒவ்வொன்றாக படித்து முடியுங்கள்!

அண்மையில் நண்பர் ஒருவர் தீபாவளிக்கு நரகாசூரன் கதை இருக்கிறது; இராவணன் கதை இருக்கிறது இதில் எது உண்மை என்று வினாவியிருந்தார்; இந்தக் கேள்வி ஒரு அப்பாவித்தனமான கேள்வி; இதற்கு சுவாமி விவேகானந்தர் கர்மயோகத்தில் இப்படியொரு பதில் கொடுக்கிறார்;

ஒவ்வொரு மதத்திலும் தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களோ,வாழ்ந்த மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம். சடங்கு என்பது தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது. உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.

புராணங்கள் கதைகள் என்பன தத்துவத்தை மனதில் புகுத்துவதற்காக சேர்க்கப்பட்ட கதைகள்! அவை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகப்பட்ட மெருகேற்றப்பட்ட புனைவுகளைக் கொண்டும் இருக்கும். இந்தக் கதைகளை வைத்துக்கொண்டு உண்மையைத் தேடக்கூடாது.

கதைக்குப் பின்னால் இருக்கும் தத்துவமும், அந்த தத்துவத்தை வாழ்வியலாக்க பயன்படும் சடங்கும் மனிதர்களுக்கு முக்கியமானது!

தீபாவளியில் நரகாசூரன், இராவணன் கதை அல்ல முக்கியமானது! அதற்குப் பின்னால் இருக்கும் தத்துவக் குறியீடு! மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கம்! சமூகத்தை ஒன்றிணைந்து சந்தோஷிக்க வைக்கும் மன நிலை இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டியவை!

கதைகள் அவரவருக்கு தேவையான வகையில் புனைந்து இன்புற்றுக்கொள்ளலாம்! இப்படித்தான் மனிதன் தனக்குப் பிடித்தமான வகையில் கடவுளிற்கு பெயரிட்டுக்கொள்கிறான்; பிறகு முட்டாள்தனமாக எனது கடவுளும் அவனது கடவுளும் வேறு என்று சண்டைபிடிக்கத்தொடங்குகிறான்.

 

Friday, April 12, 2019

தலைப்பு இல்லை

இன்று பல தமிழ் இளைஞர்கள் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை இகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் முறையாக அணியிலக்கணம் கற்காதது தான் என்பதை நாம் அறிந்தோமா! 

அணி என்பது ஒரு விஷயத்தை, சொல்லை அழகுபடுத்த பயன்படுத்தும் சொற்றொடர்கள். 

தண்டியலங்காரம் 35 அணிகளைப் பற்றிக் கூறுகிறது. இந்த அணிகள் சேர்க்கப்படுவது மனதிற்கு இன்ப, ஹாஸ்ய உணர்ச்சிகளைக் கொடுப்பதற்காக. 

ஏனெனில் எமது முன்னோர்கள் அக அழகினையும் அக இன்பத்தினையுமே வாழ்வியலாக கொண்டிருந்தனர்! தற்போதைய மேற்கத்தேய வாழ்வியலான புறத்தில் இன்பம் தேடும் பாங்கு அவர்களுக்கு இருக்கவில்லை! 

திரிபுவனச் சக்கரவர்த்தி என்றால் மூன்று உலகத்திற்கும் அரசன், உண்மையில் மூன்று உலகத்திற்கும் அரசன் இல்லை என்றாலும் மன்னன் மனம் மகிழ, அதனால் தனக்கு நன்மை உண்டாக பாடப்பட்ட உயர்வு நவிற்சி அணி இது! 

இப்படி அணிகள் சேர்த்து கோர்க்கப்பட்டவை தான் எமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள், இதில் உண்மை எது, அழகுபடுத்த சேர்க்கப்பட்ட அலங்காரம் எது என்பதை அறியக்கூடிய பக்குவம் தற்காலத்தைய தமிழர்களுக்கு குறைந்து விட்டதால் இதை நிருபிக்க முடியுமா? இது சரியா என்ற ஒரு வித stereo type வாதங்களை முன்வைக்கிறார்கள். 

ஆகவே இலக்கியம், பண்பாடு பற்றிப்புரிதல் வேண்டுபவர்கள் எவராயினும் அணியிலக்கணம் பயிலல் அவசியம்!


ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...