காலபைரவர்
வழிபாட்டில்
உடுக்கை,
முரசு
பாவித்து
பெருத்த
ஒலி
எழுப்புவது
மரபு
காசியில்
நடு
நிசிப்
பூஜையில்
அடிக்கப்படும்
இரண்டு
உடுக்கைகளும்
அந்த
இடத்தில்
வேறெந்த
எண்ணமும்
இல்லாத
சூனிய
நிலையை
உருவாக்கும்
வல்லமையுடையது.
இந்தப்பாடல்
காலபைரவ
வழிபாட்டின்
சிறப்புத்
தன்மைகளைக்
கூறுகிறது.
காலபைரவரின்
பார்வை
காமனின்
வீரியத்தை
எரிக்கக்
கூடியது.
இந்தப்பாடல்
காம
தகனம்,
எவருக்கும்
அஞ்சாத
துணிவு,
பூத
பிசாசுகள்
போன்ற
சூக்ஷ்ம
சக்திகளால்
தாக்கப்படாத
நிலையை
ஒரு
பைரவ
உபாசகன்
பெறுவான்
என்று
சொல்லப்படுகிறது.
வெடிக்கும்
பரவை
முரசதிர்
காமனை
வீறழியப்
பொடிக்குங்கனல்
விழிப்
புண்ணியனே
புவியோர்கணேஞ்சள்
துடிக்கும்
பொல்லாத
பிசாசுகள்
தன்னைத்
துரத்திவெட்டி
அடிக்குந்
தண்டாயுதனே
காழி
யாபத்துத்
தாரணனே
வெடிக்கும்
கடலின்
ஓசை
போன்ற
முரசு
அதிர,
காமனின்
வீரியத்தை
அழித்து
காம
தகனம்
செய்யக்கூடிய
பார்வையை
உடைய
புண்ணியனே,
இந்தப்புவியில்
எவருக்கும்
அஞ்சாத
மனவலிமையைத்
தருபவரே!
மானிடருக்கு
துன்பம்
ஏற்படுத்தும்
துடிக்கின்ற
பிசாசுகளை
துரத்தி
வெட்டி
அடித்து
ஓட்டும்
சீர்காழிப்
பதியில்
உறையும்
ஆபத்து
தாரண
பைரவரே
உம்மை
நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ
சிவஞான
தேசிக
சுவாமிகள்
அருளிச்
செய்த
ஆபதுத்தாரண
மாலை
பாடல்
16}
இன்றைய
காசிகாபுராதி
நாத
காலபைரவரின்
மங்கள
அலங்காரம்
அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.