உயிர் சிவத்தை நோக்கிச் செல்லும் சமயம் - Occasion
எமது
மெய்யியல்
வாழ்வை
அகம்,
புறம்
என்று
இரண்டாகப்
பிரிக்கிறது.
எல்லா
உயிர்களும்
ஒரு
மையத்திலிருந்து
புறப்பட்டு
சிக்கலடைந்த
ஒரு
தொகுதியாக
உருப்பெற்று
மையத்தை
மறந்து
தனது
செயலைச்
செய்துகொண்டிருக்கிறது
என்பதே
இந்த
மெய்யியலின்
அடிப்படை.
இந்த
மையத்தை
பரசிவம்
என்று
சொல்கிறோம்;
இந்த
பரசிவத்திலிருந்து
விரிந்துகொண்டும்
செல்லும்
அலையை
பராசக்தி
என்று
சொல்கிறோம்.
இப்படி
விரிந்துகொண்டு
சென்ற
மனித
உடலில்
இருக்கும்
உயிர்
96 தத்துவங்களால்
சூழப்பட்டு
பலவித
நிலைகளை
உருவாக்கி
மையத்திலிருந்து
விலகி
இருக்கிறது
என்பதே
எமது
ஞானிகள்
கண்ட
நிலை!
மையத்தை
விட்டு
விலகிச்
செல்லும்
ஆன்மாக்களுக்கு
பரசிவத்தின்
அறிவு
சக்தி
தீண்டும்
போது
மையத்தை
நோக்கிய
உணர்வு
வர
ஆரம்பிக்கும்.
இதை
தந்திர
ஆகம
சாத்திரங்கள்
சக்தி
நிபாதம்
என்று
சொல்லும்.
சக்தி
நன்கு
பதித்தல்
என்று
அர்த்தம்!
இந்தத்
தூண்டல்
குருவிடம்
இருந்து
பெறப்படும்
போது
தீக்ஷை
என்று
சொல்கிறோம்.
இப்படி
மையத்திலிருந்து
புறப்பட்ட
ஆன்மா
அது
மையத்திலிருந்து
விலகியிருக்கும்
நிலைக்குத்
தக்க
நான்கு
நிலைகளாக
இருக்க
முடியும்
என்று
சிவஞான
சித்தியார்
கூறுகிறது.
சமயம்
என்றால்
சந்தர்ப்பம்
என்றும்
அர்த்தமுண்டு!
ஆன்மா
குறித்த
நிலையில்
இருக்கும்
சந்தர்ப்பத்தை
சமயம்
என்று
சொல்லலாம்!
சிவ
ஞானம்
என்ற
மையத்தை
–
பரசிவத்தை
அடையும்
முன்னர்
ஆன்மா
நிற்கும்
நிலைகளை
பரபக்கம்
என்று
ஒவ்வொரு
நிலையும்
எப்படியானது
என்ற
விளக்கமே
சிவ
ஞான
சித்தியார்
பரபக்கம்!
சித்தாந்தம்
என்பது
மையத்தை
அடைந்த
நிலை
–
முடிந்த
முடிபு!
அதற்கு
முன்னைய
நிலைகள்
அகச்சமயம்,
அகப்புறச்
சமயம்,
புறச்சமயம்,
புறப்புறச்
சமயம்
என்று
ஆன்மா
பரசிவத்திலிருந்து
விலகி
நிற்கும்
நிலையும்,
மையத்தை
நோக்கிய
பயணத்தில்
உயிர்
மயங்கிவிடக்கூடிய
நிலையும்
தெளிவாக
விளக்கி
சிவ
ஞான
சித்தியார்
வரைபடமாக்கித்
தந்துள்ளது.
ஆகவே
எவரும்
தாம்
கடைப்பிடிக்கும்
மார்க்கம்
தாழ்ந்தது
என்ற
எண்ணம்
கொள்வதோ,
எவருக்கும்
அப்படி
எண்ணத்தை
உருவாக்குவதோ
கூடாது!
அதேவேளை
அகவிழிப்பு
–
சக்தி
நிபாதத்
தூண்டல்
ஏற்பட்டால்
தாம்
மயங்காமல்
மையத்தை
அடையவேண்டியது
எப்படி
என்ற
வழியும்
தெரிய
வேண்டும்.
இதனாலேயே
சிவ
ஞான
சித்தியார்
என்ற
நூல்
யாருக்குரியது
என்ற
10 வது
பாடலில்
கூறுகிறது.
இப்போது
சைவசித்தாந்தம்
சக்தி
நிபாதம்
பெற்று
அகவயமாக
சிவத்தை
அடைவதற்குரியதல்லாமல்
வெறுமனே
இலக்கியப்
புலவர்களால்
எடுத்தாளப்படுவதால்
இந்த
சமயம்
உயர்வு
அது
தாழ்வு
என்ற
வீண்
விவாதம்
உருவாகிறது!
சைவ
சித்தாந்தம்
சக்தி
நிபாதம்
பெற்று
சிவமாகிய
மையத்தை
நோக்கிச்
செல்லத்
தூண்டல்
பெற்று
முடிந்த
முடிபை
உணருவதற்கு
பயணத்தைத்
தொடங்கும்
உயிரிற்குரிய
அரிய
பாதை!
அந்த
விழிப்பு
இல்லாதவர்கள்
தாம்
இருக்கும்
நிலையினைச்
செம்மையாகப்
பின்பற்ற
படிப்படியாக
பரிணாமம்
உயரும்
என்பதை
அறிந்து
கொள்ள
வேண்டும்.
நாம்
மையத்தை
விட்டு
முழுமையாக
வெளியே
வந்து
சுற்றும்
நிலை
லோகாயதம்
என்றும்
மையத்தை
அடைந்து
விட்ட
நிலை
சித்தாந்தம்
என்றும்
அர்த்தம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.