இன்று காலை காசிகாபுராதி நாத காலபைரவரின் அலங்காரம்!
இந்த ரூபம்
தாண்டவப்ரியம் - நடனக்கலை
சிறக்க, நடனம்
செய்பவர்கள் தமது
உடலில் பிராணன்
சீராக ஓடி
தமது உடலை
உறுதியுடன் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க கீழ்வருமாறு தியானிக்கலாம். அத்துடன்
அக்ஷரம் எனும்
எழுத்துக்களின் ஆதி
தேவ வடிவம்
என்பது மொழித்திறனுக்கு மூலமானவர் என்றும்
பொருள். ஆகவே
மொழியும், நடனமும்
சிறக்க விரும்புவர்கள் இந்த ரூபத்தை
தியானிக்கலாம்.
சூலடங்கபாசதண்டபாணி – மாதி: காரணம் ச்யாமகாயம் ஆதிதேவமக்ஷரம் நிராமயம்பீம விக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவ ப்ரியம் காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே
சூலம், கோடாரி,
பாசக்கயிறு, தண்டம்
இவைகளைக் கையில்
ஏந்தியவரும்
எல்லா உலகத்திற்கும் முதற் காரணமாக
உள்ளவரும், கருத்த
மேனியரும்,
முதற் கடவுளும்,
அக்ஷரரூபியும்,
பிணியற்றவரும்,
அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்டவரும்,
ப்ரபுவும்,
பலவித தாண்டவங்களில் பற்றுக் கொண்டவரும்,
காசீத் தலத்தைக்
காப்பவருமான
கால பைரவ
மூர்த்தியைப் போற்றுகிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.