மனிதன் தனது சிற்றின்பத்திற்கு காட்டும் அதே ஆர்வம் தான் ஆன்ம இன்பம் பெறுவதற்கு செய்யும் முயற்சியில் காட்டுவதில்லை! உண்மையில் ஆன்ம முன்னேற்றத்திற்கும், பௌதீக முன்னேற்றத்திற்கும் மனம் ஒரேமாதிரித்தான் இயங்குகிறது; ஆனால் நோக்கம் வெவ்வேறானவை. இந்தப்பாடலின் அழகிய நீல நிறமான மீங்களைப் போன்ற பெண்களை நேசம் வைத்து அடையவேண்டி மனம் தவிப்பதற்கு தவித்து ஆலையில் இட்ட கரும்பு சக்கியாகிப் போவதுபோல் மனம் காமத்தில் சிக்கி வீணாகிவிடாமல் பூரண சந்திர கலையுடைய வடுக மூர்த்தியைத் தியானிக்க வழி கூறுகிறார்.
நீலக் கயல்விழி மானார் கலவியில் நேசம் வைத்தே
ஆலைக் கரும்பது போல விடாதுன்னருள் புரிவாய்
வாலைக் கலைமதி வேணியனே வடுகா அடியார்
சாலத் தொழும் ஐயனே காழி யாபதுத் தாரணனே
எப்படி நீல நிறமான மீங்களைப் போன்ற பெண்களை நேசம் வைத்து அடையவேண்டி மனம் தவித்து ஆலையில் சிக்கிய கரும்பு சக்கையாவது போல் ஆகிவிடாமல் இருக்க,
ஆசைப்படுவோமோ அதுபோல் உன்னருளைப் பெற நீயே அருள் புரிய வேண்டும்! பூரண சந்திரகலை தலையின் அணிந்த வடுகனே, அடியார்கள் சாலத்தொழும் ஐயனே
சீர்காழிப்பதியில் உறையும் ஆபத்துத் தாரணனே
உம்மை நான் தியானிக்கிறேன்! என்னை ஆபத்தில் காத்தருளும்!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 10}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.