முற்றல்
ஆமை
இள
நாகமோடு
என
முளைக்கொம்பு
அவை
பூண்டு
வற்றல்
ஓடு
கலனாப்பலி
தேர்ந்து
எனது
உள்ளங்கவர்
கள்வன்
கற்றல்
கேட்ட
உடையார்
பெரியார்கழல்
கையால்தொழு
தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர
மாபுரம்மேவிய
பெம்மானிவ
னன்றே.
{
திருஞானசம்பந்தர்
அருளிச்
செய்த
திருக்கடைக்
காப்பு
- 02; தலம்
: சீர்காழி
- 01-பிரமபுரம்
; திருமுறை
: முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}
மேலேயுள்ள
தேவாரத்தை
ஒருதடவை
மனமுருகிப்
படித்த
பின்னர்
கீழ்வரும்
விளக்கத்தைப்
படித்து
மனதில்
ஏற்றிய
பிறகு
தியானத்தினைச்
செய்யுங்கள்.
இந்த
தியானம்
சிவபெருமானிற்குள்
அடங்கியிருக்கும்
விஷ்ணுவின்
சக்தியை
விழிப்படையச்
செய்து,
ஆணவ
மலத்தை
நீக்கி
நன்மை
தரும்.
மகாவிஷ்ணு
அனைத்தையும்
நிலைத்து
நிற்கச்
செய்யும்
சக்தி!
அவற்றுள்
கூர்மம்
என்ற
ஆமை
அவதாரம்
பாற்கடலைக்
கடைந்து
அமிர்தம்
பெற
அச்சாணியாக
பயன்பட்டது!
சிவயோகத்தினை
உடலில்
சாதித்து
அம்ருதம்
பெற
கூர்ம
நாடியின்
விழிப்பு
அவசியம்!
இந்தக்
கூர்மம்
சிவபெருமானின்
மார்பில்
இருக்கிறது
என்
கிறார்
பெருமானார்!
அடுத்தது
இள
நாகம்
என்பது
எமக்குள்
உறையும்
பராசக்தி
குண்டலினியாக
இருக்கிறாள்.
கூர்மத்தின்
துணைகொண்டு
சிவயோகத்தால்
பாற்கடலைக்
கடைந்தால்
அங்கிருந்து
விஷத்தைக்
கக்கும்
பாம்பினை
தன்
கழுத்தில்
அணிந்து
யோகிகளைக்
காப்பாற்றும்
தன்மையையும்
தனது
அணிகலனாகக்
கொண்டிருந்தார்!
அடுத்தது
முளைகொம்பு
கொண்ட
மகாவிஷ்ணுவின்
வராக
அவதாரம்;
இது
யோகத்தில்
மேலெழுந்து
சஹஸ்ராரம்
செல்லாமல்
சித்தத்தில்
இருக்கும்
தீய
விருத்திகளைத்
மூலங்களைத்
தோண்டி
தோண்டி
எடுக்கும்
நிலை!
சித்தத்தில்
ஆழமாகப்
பதிந்த
வினைகளையும்
நீக்கும்
வராக
அவதாரத்தின்
ஆற்றலையும்
–
முளைகொம்பினையும்
தன்மார்பில்
சிவபெருமான்
அணிந்து
வைத்திருக்கிறார்.
வற்றல்
ஓடு
கலனாப்பலி
தேர்ந்து
என்பது
பிரம்மா
ஆணவத்தால்
பைரவரிடம்
தன்
தலையை
–
ஆணவ
மலத்தை
பைரவ
மூர்த்தமாகிய
பிக்ஷாடன
மூர்த்தியில்
கையில்
சமர்ப்பித்து
உயிர்பெறுகிறார்.
ஆகவே
இந்தப்
பாடல்
சிவபெருமானை
ஆமையோட்டினையும்,
இள
நாகத்தினையும்
ஆபரணமாகத்
தரித்து
கையில்
பிரம்ம
கபாலம்
ஏந்தியவராக
எமது
மனக்கண்ணில்
தியானிக்க
வேண்டும்.
தியானம்
இந்த
தேவாரத்தைப்
பாடிய
பின்னர்,
கண்களை
மூடி
உங்கள்
சிதாகாசத்தில்
ஆமையோட்டினையும்,
இள
நாகத்தினையும்
ஆபரணமாகத்
தரித்து
கையில்
பிரம்ம
கபாலம்
ஏந்தியவராக
தியானித்து
எம்மில்
ஆழமாகப்
பதிந்திருக்கும்
தீய
சம்ஸ்காரங்கள்,
வினைகளை
அவரின்
மார்பிலிருக்கும்
முளைக்கொம்பு
தோண்டி
நீக்குவதாகவும்,
நாம்
சிவயோகம்
செய்யும்
போது
வரும்
விஷங்களை
நீக்குவதாகவும்,
கையில்
கபாலத்தினைக்
கண்டு
எமது
ஆணவ
மலம்
நீங்குவதாகவும்
பாவிக்க
வேண்டும்.
இப்படி
கற்றவர்களும்,
உண்மையை
அறிந்த
பெரியவர்களும்
தொழுதேற்றும்
சிவபெருமானின்
திருவடிகளை
தியானிக்கவேண்டும்!
இடபவாகனத்தில்
எழுந்தருளும்
பிரம்மபுரத்தில்
உறையும்
பெருமானை
தியானிக்கிறேன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.