குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label சித்தயோகம். Show all posts
Showing posts with label சித்தயோகம். Show all posts

Friday, April 24, 2015

பஞ்ச கோசம் என்பது மனிதனில் உள்ள ஐந்து உடல்களா?

இன்று யோகம் கற்பிக்கும் பலரும் பஞ்ச கோசம் என்பது மனிதனை சுற்றி உள்ள நுண்மையான ஐந்து உடல்கள் என்றும் பலவாறு கூறி வருகிறார்கள். முதலில் கோசம் என்பதற்கு உடல் என்பது பொருள் இல்லை. 

இரண்டாவது கோசம் என்றால் உறை என்று பொருள் கூறிவருவது ஓரளவு சரியானது. ஆனால் அது யோகத்தில் ஏன் அவற்றை கோசம் என கூறுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. 

கோசம் என்றால் பொக்கிஷம் அல்லது புதையல் என்று பொருள். மனிதனில் இருக்கும் பிராண சக்தி புதைந்து கிடக்கும் இடம்தான் பஞ்ச கோசங்கள்.

மனிதனது தேவை போக மிகுதியாக உள்ள பிராணன் உடலில் சேர்ந்தால் அது அன்னமய கோசம் .

பிராணனில் சேர்ந்தால் பிராணமய கோசம்

புத்தியில் சேர்ந்தால் விஞ்ஞான மய கோசம்

மனதில் சேர்ந்தால் மனோமயகோசம்

ஆத்மாவில் சேர்ந்தால் ஆனந்தமய கோசம்

இது ஒருமனிதன் எவ்வளவு பிராணனை, எங்கு சேர்க்கிறான் என்பதை குறிக்கும் யோகமொழி.

இது சாதாரண மனிதனிற்கு இயற்கை நிர்ணயித்த வாறும், ஆன்ம மன பரிணாமங்களுக்கு ஏற்றவாறு அவனது கோச நிலை இருக்கும். அதனை யோக, தந்திர  சாதனைகள் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும். 

Friday, April 10, 2015

சித்த வித்யா என்றால் என்ன?

“சித்த வித்யா” என்றால் என்ன?  பொதுவாக சித்தம் என்பது ஆழ்மனம் என்று தற்கால விஞ்ஞானம் குறிப்பிடும் மனதின் பகுதியினை தெய்வ ஞானத்துடன் ஒடுக்கி பிரபஞ்ச ஞானத்தினை பெறும் முறையாகும். தாரணையால் எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ,தியான சாதனையினால் உணர்வை அறிய வேண்டிய பொருளுடன் ஒடுக்கும்போது உணர்வு அறியப்படும் பொருளாய் மாறி நிற்கும், பின்னர் அப்பொருள் பற்றிய அறிவு சித்தத்தில் பதியும். இதனை மேல்மனத்திற்கு கொண்டுவந்து மொழியில் விளங்கப்படுத்தினால் அந்த அறிவு சித்த வித்யா எனப்படும். இது குருமுகமாய் தியான சாதனையின் பலனாய் வரும் ஒரு சித்தியாகும். 

இதற்காகவேண்டியே அக்காலத்தில் மனதை சப்த ஒலிகளால் ஒழுங்குபடுத்தத் ஒலியமைப்பு கோர்வையாக இசைக்கும் வண்ணம் யாப்பு இலக்கணம் எனப்படும் பாடல் வரைமுறை அமைக்கப்பட்டது. இப்படி பாடலை பாராயணம் செய்யும்போது மனம் படிப்படியாக தாரணை நிலையினை அடையும். தாரணை நிலையடைந்த மனம் எதுவித முயற்சியும் இன்றி தியான நிலையினை அடையும். இந்த யோக இரகசியத்தின் அடிப்படையிலேயே சித்தர் பாடல்கள் பொருள் காணப்படவேண்டியவை. இந்த நிலையில் அறியப்படும் விளக்கம் அந்தப்பாடலை பாடிய ஆசிரியர் எந்த நிலையில் இருந்து பாடினாரோ அந்த நிலையில் விளங்கி கொள்ள முடியும். அல்லாமல் அகராதியின் துணையினை மட்டும் கொண்டு பொருள் காண முற்படும்போது மயக்கங்களையும், மறைப்புகளையும் வேண்டுமென்றே சித்தர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதேவேளை இந்த ஞானம் பாமரனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக எளிய பேச்சு மொழியில் பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ வித்தை, காயத்ரி சாதனை மூலம் சித்த வித்யா என்ற சித்தியினை அடையமுடியும். இதனையே லலிதா சகஸ்ரநாமம் ஸித்தேஸ்வரி ஸித்த வித்யா ஸித்த மாதா" என்று குறிப்பிடுகிறது.  இந்த ஆற்றலால் பல்வேறு நன்மைகளும் உண்டும் 

Thursday, April 09, 2015

சித்தர் தத்துவ விளக்க வரைபடம்


இன்று யோகம் செய்கிறோம், உபாசனை செய்கிறோம் என்பவர்கள் எல்லோரும் எதற்காக செய்கிறோம் என்று அறிகிலர்.  தமது சாதனையின் இலக்கு தாம் எங்கிருந்து வந்தோம், இந்த வாழ்க்கையின் மர்மம் என்ன, அண்டத்தின் மர்மம் என்ன? பிண்டத்தின் மர்மம் என்ன என்பதனை அறியவேண்டும், அண்டத்தினை  அறிவது ஒரு துகளான மனிதனால் தனது ஆயுட்காலத்தில் செய்யக்கூடிய ஒரு செயலன்று, அதனால் அண்டத்தின் பிரதிபிம்பமான பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தினை அறிந்து, எமது மூல சக்தியை உணர்ந்து தெய்வ நிலை பெறலாம் என்பதால் "அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போதே”


இப்படி அறிவதற்கு தான் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை தெரியவேண்டும். தமக்கு அடுத்த நிலையில் உள்ள தத்துவங்கள் புரியவேண்டும்.  பொதுவாக ஸ்ரீ வித்தையில் பூர்ண தீக்ஷை பெறும்போதும், காயத்ரி உபாசனை காயத்ரி சாதனையாகும் போதும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் அதிசூக்ஷ்ம/காரண பஞ்சாட்சார உபதேசம் பெறும்போதும்  இவை உபதேசிக்கப்படும். 

இங்கு அனைவரும் புரிந்து கொள்ளகூடியவாறு வரைபடமாக தந்துள்ளோம். இவற்றின் விபரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 06.00 - 07.15 கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரில் நடைபெறும் சித்தர் பாடல் வகுப்பில் உரையாடப்படும். 






Monday, August 01, 2011

சித்தயோகம் என்றால் என்ன?

இன்றையகாலத்தில் உண்மை ஆன்மீகம் என்பது அற்றுப் போய் மக்கள் பகுத்தறிவினை இழந்து சாமியார்களின் காலில் விழுந்து தன்னிலை இழந்து உண்மையான இறையின்பமும் பெறாமல், உலக வாழ்க்கையினையும் பெறாமல் வீணடித்து வருகின்றனர். இதற்குகாரணம் மனவலிமையும் இல்லாமல் தன்னை நம்பாமல் தன் வலிமையினை நம்பாமல் தனக்குள் இருக்கும் கடவுளை நம்பாமல், தனது அறிவினை நம்பாமல் வீணே இன்பமான வாழ்வை பெருந்துன்பமாக்கி வாழ்ந்து மடிகின்றான். மனிதன் எப்போது நடு நிலை வாழ்வு வாழ்ந்தானில்லை, ஒன்று கடவுள்தான் எல்லாமென்று தன் கடமையினை மறந்து. அறிவினை இழந்து பெருந்துன்பத்தில் வீழ்வான், அல்லது கடவுளில்லை என்று தீவிரமாக எதிர்ப்புணர்ச்சி ஏற்படுத்தி இகழ்வான். இந்த இரு நிலைகளிலும் இருந்து நடு நிலையின் வாழ்ந்தவர்கள், வாழும் நிலை உணர்த்தியவர்கள் சித்தர்கள், அவர்களது அனுபவம் சித்த யோகம் – சித்தத்தினை வசப்படுத்தி ஆனந்தத்தினை அடையும் வழி.

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...