புறவாழ்க்கையில் நாம் அடையும் அனைத்தும் நிரந்தரமற்றது, மாறிக்கொண்டிருப்பது, ஆனால் கட்டாயம் இந்தப் பூமியில் புறவாழ்க்கையினை நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனால் நாம் இந்தப் புறவாழ்க்கைக்குள் புக முன்னர் அந்த பொய்யாக மாறிக்கொண்டிருக்கும் நிலையால் குழம்பிவிடாமல் இருக்க எமது அகவாழ்க்கையில் செம்மையைத் தரக்கூடிய பைரவரை உபாசிக்கும் தன்மை பெறவேண்டும். இந்தப் புவி வாழ்க்கை காட்டில் வாழும் செம்மறியாடு (மையாடு) கண்ணி வைக்கும் வேடனை நம்பி அவன் பின்னால் சென்று இரையாவது போன்றது என்று சொல்கிறது இந்தப் பாடல்.
பொய்யாகிய புவிவாழ்க்கைக் கடலிற் புகுந்தமுந்தி
மெய்யமிது வென
நம்பிவிட்டேன்வினை யேனைக்கண்பார்
மையாடு கண்ணியர்
பின்செலத்தாரு வனத்திற்சென்ற
சைவாகமப்பொருளே காழி
யாபத்துத் தாரணனே
நிலையற்ற பொய்மை
நிறைந்த இந்த
புவி வாழ்கைக்
கடலிற்குப் புக
முன்னர் மெய்த்தன்மையைக் காட்டும் அந்தப்
பைரவப் பெருமானின் திருவடியை நம்பிவிட்டேன்!
எப்படிச் காட்டில்
வாழும் செம்மறியாடு கண்ணி வைக்கும்
வேடனிடம் சென்று
சிக்குவது போல்
வினைகளில் சிக்கிவிடாமல், தாருகாவனத்தில் சென்று
மத்தம் மத
யானையை உரித்து
ஆணவம் நீக்கி
சட்டையாக அணிந்த
சிவாகமத்தின் பொருளாக
விளங்கு சட்டை
நாதர் உறையும்
சீர்காழிப்பதியில் உறையும்
ஆபத்துத் தாரண
பைரவ மூர்த்தியினை தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 09}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.