நான் ஒரு ஆன்மீகர் என்றவுடன் பலரும் வாருங்கள் சித்தர்கள் இருக்கும் அந்த மலைக்குப் போவோம், இந்த மலைக்குப் போவோம், காட்டிற்குள் சென்று யாகம் செய்வோம் என்று அழைப்பினை ஏற்படுத்துவது உண்டு!
ஒரு
சூழலியலாளனாக
உண்மையான
ஆன்ம
முன்னேற்றத்தை
விரும்புவனாக
நான்
இவற்றை
ஆமோதிப்பதில்லை!
ஆன்மீகத்திற்கும்
மலைகள்,
காடுகளில்
சுற்றுவதற்கும்
எந்தத்
தொடர்பும்
இல்லை!
நீங்கள்
ஆன்மீகத்தில்
முன்னேற
வேண்டும் என்றால் ஒரு இடத்தில் இருந்து மனதை, புலன்களை அடக்கி சாதனை உங்கள் அகத்திற்குள்
செய்யப்பழக
வேண்டும்!
இது
மிகவும்
கஷ்டமானது!
மன
அழுத்தத்தை
ஏற்படுத்தும்!
இதைத்
தாண்டி
மனதை
வெல்வது
கடினமானது!
எமது
பாரம்பரியம்
ஆரண்யம்
என்ற
ஒரு
மரபைக்
கொண்டிருந்தது;
உப
நிஷதங்கள்
ஆரண்ய
மரபினை
அண்டியவை;
சித்தர்
மரபுகளும்
ஆரண்ய
மரபினைக்
கொண்டவை!
இதன்
உண்மை
அர்த்தம்
என்னவென்றால்
உலகச்
சுழலில்
உழலும்
மனம்
குருவிடம்
உபதேசம்
பெற்றுக்கொண்டு
மனதில்
பயம்
இன்றி
காட்டில்
தனியாகச்
சென்று
ஒரு
சில
காலம்
வாழ்ந்து
எல்லாப்பயங்களையும்
வென்று
மனவுறுதியுடன்
மீண்டு
வருவது!
இங்கு
நாம்
காட்டில்
சென்று
காட்டின்
தன்மையைக்
குழப்பாமல்
விலங்குகளுடன்
ஒத்திசைந்து,
இயற்கையை
எமது
இஷ்டப்படி
மாற்றாமல்
அதேவேளை
எமது
மனதினை
உறுதி
செய்யும்
சாதனையைச்
செய்ய
வேண்டும்!
ஆனால்
இன்று
சதுரகிரிபோகிறோம்,
சபரிமலை
போகிறோம்,
கதிர்காமம்
போகிறோம்
என்று
காட்டின்
இயற்கைத்
தன்மையை
மாற்றி
வன்புணர்வு
செய்கிறார்கள்.
காட்டிற்குள்
சென்றால்
நாம்
விடும்
ஒரு
சிறு
பாதச்
சுவடுகூட
இயற்கையின்
சம
நிலையைக்
குலைக்கும்.
பல
விலங்குகள்
தமது
வழமையான
பயணத்திசையை
மாற்றி
அவற்றின்
வாழ்வுச்
சம
நிலை
குலையும்!
காடு
தன்முனைப்பற்ற
ஆன்ம
முன்னேற்றம்
மாத்திரம்
விளையும்
சிந்தனை
உடைய
தனித்திருக்க
கூடிய
ஆன்ம
சாதகனுக்கு
மாத்திரம்
உடையது!
ஆன்மீக
பிக்னிக்
செல்பவர்களுக்குரியதல்ல!
காடும்
மனிதனும்
தாயும்
சேயும்
போல
எப்படி
தாய்
இரத்தைத்தைப்
பாலாக்கித்
தருகிறாளோ
அதுபோல்
காடுகள்
பொழியும்
மழையை
பஞ்சுபோல்
உறிஞ்சி
நதியாகிய
நாடிகளூடாக
எமக்குத்
தருகிறாள்!
அந்தக்
காடுகளை
ஆன்மீகம்,
வர்த்தகம்,
எமது
வாழ்க்கையின்
குறுகிய
நோக்கம்
என்று
சூறையாடுபவர்களுக்கு
இயற்கை
தன்
சம
நிலை
இயக்கத்தின்
விதி
என்ன
என்று
காலத்திற்கு
காலம்
பெருமழையை
ஏற்படுத்தி
புரியவைக்கும்.
தனியே
குளங்கள்
மாத்திரம்
வரும்
பெருமழையைத்
தேக்கி
வைக்க
முடியாது.
பெருமழையின்
வேகத்தைக்
குறைக்கும்
செயலை
பெரும்
விதானங்கள்
கொண்ட
பெரும்
காடுகளால்
தான்
சமாளிக்க
முடியும்!
இது
ஒரு
சிஸ்டம்!
பெருமழையின்
வேகத்தினை
முற்றாக
முடக்கி,
தன்னுள்
அடக்குவது
பெருங்காடு!
இப்படி
காட்டிற்குள்
அடங்கிய
நீரை
மெதுவாகப்
பொசிய
விடுவதையே
ஆறு
என்கிறோம்!
மலைகளில்
இருக்கும்
காடுகளை
மழைக்காடுகளாக
இயங்குவது
இப்படித்தான்!
கட்டிடம்
கட்ட
மலைக்காட்டை
அழித்து
ரோடு
போட்டால்
காடு
செய்யும்
இந்தத்
தொழில்
இல்லாமல்
போகும்!
பெரு
வெள்ளம்
அடித்துச்
செல்லும்!
காடு
- ஏரி
- குளம்
- ஆறு
இவை
எல்லாம்
இயற்கையின்
சம
நிலையில்
இருக்க
வேண்டிய
தன்மையில்
இருந்தால்தான்
மனிதனுக்கு
இயற்கை
நண்பன்!
அல்லது
யமன்!
இதையே
திருவள்ளுவர்
பாதுகாப்புடைய
நாடு
என்பது
மணிநீரும்
மண்ணும்
மலையும்
அணிநிழற்
காடும்
உடைய
தரண்.
என்ற
குறளால்
சொல்லி
வைத்தார்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.