குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 31, 2021

தலைப்பு இல்லை

 

நாம் பூமியிற்கு வந்திருப்பதோ சிறு விஜயம், ஆகவே நேரத்தை விரயம் செய்யாமல் எம்மையும் எம்மைச் சூழ உள்ளவர்களையும், சூழலையும் இருப்பதை விட மேம்படுத்தப் பாடுபட்டுவிட்டு மீளச் செல்வோம்!

Let us strive to make this earth a better place by living in alignment with nature, improving us and empowering those who around us – We visited earth for short time, we'd be gone when the time is ripe so let's not squander even a single minute

தலைப்பு இல்லை

Whenever you have a chance, where ever possible to do your best then uplift, help others!

Finally we made it as a Team of Faculty of Applied Science, Vavuniya Campus, UoJ, Thank you very much to Dean, HoD physical science, all senior lecturers and STUDENTS, who made this event successful

Long term dream of Campus Interview for our final year IT students was initiated!

It was a great pleasure when we see the happiness and bright light, hope of future in the face of our younger Generation.

Based on interview session company commented majority of our students are having competitive in skills with other universities in Sri Lanka.

We talked how our students can contribute to the national economy by developing them as high skilled IT professional; in IT sector, technical skills and productivity we are far behind our neighbour countries. We are loosing many projects which is million dollar worth due to lack of high skilled IT work force. If we can develop such a skill and grab the business, then as a country we don't won't to take loans.

Hope these inspirations will make positive impact!

Just a begining!

Monday, March 29, 2021

தலைப்பு இல்லை

 

இன்றைய கட்டுரையில் ஸோஹம் சாதனை கைக்கொள்பவன் சிரத்தையையும், தெய்வ சக்தியைப் பெறும் ஏற்பு நிலையையும் தன்னில் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

Friday, March 26, 2021

தலைப்பு இல்லை

 

கிருபை எனும் வார்த்தைக்கு ஒரு விஷேட பொருள் உண்டு! எந்த எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்கள் மேல் கருணையுடன் இருத்தல்!

இன்று நாம் தனிமனித, சமூகப் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுகிறோம்! இவற்றில் எப்போதும் மற்றவரை ஒரு வட்டத்திற்குள் முத்திரை குத்தவே விரும்புகிறோம். முத்திரை குத்துதலும், தண்டனைக்கு உட்படுத்துதலும் ஒருவித மனவக்கிரத்தை தண்டனைக்குள்ளானவர் மேல் காட்டும் செய்கையாகத்தான் தற்போது நடைபெறுகிறது.

ஆனால் தண்டனையின் தத்துவம் ஆழமானது; கிருபை நிறைந்தது! ஒருவன் தான் என்ன செய்கிறேன், அதன் விளைவு என்ன என்று அறியாத அளவிற்கு அவனது மனதை, எண்ணத்தை உணர மறந்த மனிதன், விழிப்புணர்வு இல்லாமல் குற்றத்தை (சமூகம் வெறுக்கும், சட்ட ஒழுங்கு அனுமதிக்காத செயலைச்) செய்கிறான். அவன் அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால் அவனை நிறுத்தி, சீர்தூக்கி சிந்திக்க தனிமைப்படுத்தி, அவன் தனது சொந்த மனதின் இயல்பின்படி செயல்பட முடியாமல் குறித்த ஒழுங்கின்படி சிந்திக்க பயிற்றுவிக்கும் ஒரு களமாகவே தண்டனை பார்க்கப்பட வேண்டும். ஆகவே தண்டனை என்பது சத்தியத்தை நோக்கி ஒருவன் தனது விழிப்புணர்வினை செலுத்துவதற்கான வாய்ப்பாகவே கணிக்கப்படவேண்டும்.

இதுவே ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையில் நடைபெற்றது ரஜோ குணமிகுதியால் தீவிரவாதமும், போருமே விடுதலைக்குரிய கருவிகள் என்று எண்ணிச் செயல்பட்ட இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அத்திவார நாயகன் ஸ்ரீமான் அரவிந்த கோஸ் தனது அலிப்பூர் சிறைவாசத்தினால் அகமுகமாகி, யோகியாகி புதிய மனித குலத்திற்குரிய விதிகளை உலகிற்குத் தரும் பரம்பொருளின் பணியை ஏற்று புதுச்சேரி வந்து ஸ்ரீ அரவிந்தர் ஆகினார்!

வாழ்வு எம்மை எல்லைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் - பிரச்சனைகள், அடக்குமுறை, பாரபட்சம், அவமதிப்புகள் - இயற்கை எம்மை அகமுகமாக்கி தனது கிருபையை, ஆற்றலை, விதிகளை பயிற்றுவிக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் என்று கொள்ளப்படவேண்டும்.

இதற்கு மேல் தண்டனை பெறுபவன், அவமானப்படுபவனை முத்திரை குத்தும் முயற்சி மிகவும் ஞானமற்ற செயல்! சமூக முன்னேற்றம் வேண்டிச் செயற்படுபவர்கள் தவறு இழைப்பவர்களை அடையாளம் காட்டும்போது அவர்கள் அந்தத் தவறிலிருந்து மீண்டு புதுமனிதர்களாக, சமூகத்திற்கு பயனுடையவர்களாக, தமது பலவீனங்களை வெற்றி கொண்டவர்களாக வெளிவரும்படி தண்டனைகளும், நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.

தண்டனையின் நோக்கம் இன்னும் உன்னதமானவனாக்குதலாக இருக்க வேண்டும்!

இப்படி இல்லாமல் அவர்களின் ஆளுமைகளைச் சிதைப்பவர்களாக, அவமானப்படுத்துவதாக, அவனது அவமானம் கண்டு உள்ளூர இரசிப்பவர்களாக சமூகம் இருக்கக் கூடாது.

Thursday, March 25, 2021

தலைப்பு இல்லை

இன்று பங்குனி ஆயில்யம்!

யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளின் திருவடிக்கலப்பு நாள்!

சுவாமிகள் பெற்ற மகாவாக்கியங்களை அவரவர் உலகப்பிரச்சனைக்கு உகந்தபடி பேச்சுவழக்கில் பாவித்தாலும் அவை நான்கும் சிவயோகத்தின் உயர் அனுபவத்தின் சாரம்;

எப்பவோ முடிந்த காரியம்

நாம் அறியோம்

ஒரு பொல்லாப்பும் இல்லை

முழுதும் உண்மை

எந்த ஒரு காரியமும் ஸ்தூலத்திற்கு வருமுன்னர் அது சூக்ஷ்மத்தில் முடிவுற்று, சூஷ்மத்தில் தோற்றம் பெற முன்னர் காரணத்தில் முடிவுற்று விடும். சித்தர் தத்துவத்தில் நோய் தோற்றம் ஸ்தூலத்தில் தோன்றுவதற்கு பலமாதங்களுக்கு முன்னர் சூக்ஷ்ம உடலில் தோன்றி, சிலவருடங்களுக்கு முன்னர் காரணத்தில் தோன்றுகிறது என்பதும் அதை எப்படி அறிவது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காரணத்தில் முடிவுற்று, சூக்ஷ்மத்தில் எப்போதோ முடிந்த காரியம் சூக்ஷ்மத்தில் வந்து, பிறகு இருந்து அழுது, புலம்பி என்ன பயன்; நாம் காணும் அனைத்தும் எப்பவோ முடிந்த காரியம்!

நானும் இறைவனும் வேறல்ல என்ற சிவபோக நிலை அடைந்துவிட்டால் பிறகு நான் அறிகிறேன் என்ற நிலை இல்லை.

நாம் எமக்கு நடப்பதைக் கண்டு தீமை, துன்பம் ஆகிவிடும் என்று அஞ்சிப் புலம்புகிறோம்; ஆனால் நடப்பவை அனைத்தும் எமக்கு ஏதோ ஒருவழியில் ஞானத்தைப் புகட்டவே திருவருள் நடாத்துகிறது என்று அறிந்தவனுக்கு எதுவும் பொல்லாப்பு இல்லை!

அனைத்தும் அந்த சத்தியமயமான - (உண்மை) சிவத்தின் வெளிப்பாடு என்று அறிந்த பின்னர் உலகில் எதை நாம் பொய் என்று ஒதுக்க முடியும்! ஆகவே முழுவதும் உண்மை!

***********************************

யோகர் சுவாமிகளை செல்லப்பர் ஒவ்வொரு பங்குனித் திங்கள் அன்றும் நடையாக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலிற்கு அழைத்துச் சென்று இரவில் பொங்கலிட்டு படைத்துவிட்டு சாப்பிட உட்காரும்போது பொங்கல் பானையை உடைத்தெறிந்துவிட்டு போதும் செல்வோம் என்று அழைத்து வந்துவிடுவாராம்!

(செல்லத்துரை சாமியிடம் கேட்டது)

*************************************************

தலைப்பு இல்லை

Integrity and Sincerity of your thought is very important!

Sri Aurobindo

எமது எண்ணத்தில் நேர்மையும், தூய்மையும் அவசியமான ஒன்று!

எண்ணமே சொல் - வாக்காகிறது, பிறகு வாக்கு-சொல் செயலாகிறது, தொடர்ச்சியான செயல் பழக்கமாகிறது, பழக்கம், மாறமுடியாத ஒரு சிறையாகி எம்மைத் துன்புறுத்துகிறது.

அனேகரினது மனம் இப்படி நேர்கோட்டில் இயங்குவதில்லை! எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொண்டு, வார்த்தையில் சமாளித்துவிட்டால் சரி என்ற போக்கிலேயே நினைத்துக்கொள்கிறார்கள்.

எண்ணமே சொல்லாக வெளிப்படுகிறது; கபடம் நிறைந்த எண்ணமும் சொல்லும் வேறானது ஆகும் போது மனம் அதிக சிக்கல் தன்மையுடையதாக இருக்கிறது. இதனால் அவன் தனது உண்மையான எண்ணத்தை மறைக்க மேலதிக சக்தியை - பிராணனை செலவழித்து முகமூடி எண்ணத்தை உருவாக்குகிற வார்த்தைகளுக்கு கொண்டுவர வேண்டி இருக்கும். இந்த மேலதிக சக்தி பிராணன் - சக்தி உடலில் இருந்து உறிஞ்சப்படும்.

இதனால் அதிக பிராணன் உடலிலிருந்து உறிஞ்சப்படுவதால் உடல் நோய் வாய்ப்படத்தொடங்கும்.

ஆகவே ஆரோக்கியம் வேண்டுபவர்கள் எண்ணம், சொல், செயல் ஒரே நேர்கோட்டிலிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Wednesday, March 24, 2021

தலைப்பு இல்லை

 

நாடு சமநிலையற்ற போர்ச் சூழலில் வவுனியாவின் சூழலியல் பிரச்சனையில் நாம் அக்கறை கொண்டிருந்தோம்! எம்மிடமிருந்த தரம் குறைந்த கமெராவின் மூலமும், google earth மூலம் சூழலியல் ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனையை அறிவியலாக அணுக, ஆவணப்படுத்த முற்பட்டிருக்கிறோம்.

இந்த ஆவணப்படத்தில் வவுனியா நகரம் தனது நிலத்தடி நீரியலை பழைய நீர்த்தொடர்ச்சி (cascade system) அமைப்பின் மூலம் எப்படி சூழலியல் இயக்கத்தை நடாத்துகிறது என்பதை புரிய முற்பட்டிருக்கிறோம்.

அத்துடன் சூழலியல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டத்தையும் பதிவு செய்திருக்கிறோம்!

இந்த வகையில் வவுனியாவின் சூழலியல் வரலாற்று ஆவணமாகக் கொள்ளவும், அடுத்துவரும் இளையோரிற்கு செய்தி சொல்லவும் உபயோகப்பட்டிருக்கிறது.

Tuesday, March 23, 2021

மொழியின் சூக்ஷ்மத்தன்மை

 

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை; என்று வள்ளல் பெருமான் விளக்கம் கொடுக்கிறார்;

ஜட சித்கலை என்பது ஜடமாகிய உலகை மாத்திரம் உண்மை அறிவு என்று நம்பும் நிலை; புலன்களுக்குத் தெரியும் அனுபவம் மாத்திரமே உண்மை என்று நம்பும் உலகாயதத்தை, பொருள்முதன்மை வாதத்தை உதாரணமாகக் கொள்ளலாம்.

தமிழை சந்தம் அமைத்து ஓசை ஒலியை சரியாக்கி யாப்பில் பாடலாக்கினால் அது சித் கலை என்ற அறிவினை நோக்கிச் செலுத்தும்; இதை முருகப்பெருமான் இரகசியம் உபதேசிக்க, அகத்தியர் இலக்கணமாகச் சரிசெய்தார்; இப்படியே கம்பனும், வள்ளுவனும், தேவாரம் பாடிய நால்வரும், சித்தர்களும் பயன்படுத்தினார்கள்; இது செந்தமிழ் எனப்பட்டது;

அப்படியில்லாமல் விகாரப்படுத்தி ஜடசித் கலையாக பயன்படுத்தினால் மாயைக் கூட்டி மக்களை மயக்கி அறியாமையில் செலுத்தினால்; இதைக் கொடுந்தமிழ் என்பார்கள்; இன்றைய சினிமாப்பாடல்கள் கொடுந்தமிழ் வர்க்கத்தைச் சேர்ந்தவை!

ஆக தமிழால் உயிர் மேம்பட வேண்டுமானால் செந்தமிழால் ஆன திருக்குறள், தேவாரம், பன்னிருதிருமுறை படிக்க உயிர் சித் கலையில் பயணிக்கும்! இல்லாமல் விட இலக்கியங்கள் படிக்க உயிர் கொடுந்தமிழில் ஜட நிலை நோக்கிப் பயணிக்கும்!

தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் இரண்டும் கலந்துள்ளது; இதனால் தமிழில் அனைத்துவகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியும்! சக்தி அமைப்பில் மற்றெல்லா மொழிகளையும் விட ஆக்கிரோசமாக பயன்படுத்த முடியும்! முழுமையானது; மூலமானது; அதனால்தான் தமிழன் அடங்காத்தமிழனாக இருக்கிறான்!

தனியே உடலில் சக்திமையங்களை தூண்டி உயர் நிலைக்காக, அகவளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மொழி சமஸ்க்ருதம்; கிட்டத்தட்ட programming language evolution போன்ற ஒரு செயல்தான்! என்ன output வேண்டுமோ அதற்கேற்ற மொழி தேவை என்பது போல் பலன் வேண்டியவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்!

தமிழை செந்தமிழாக உயிரை மேம்படுத்த வேண்டும் என்றால் திருவருட்பா, திருப்புகழ், தேவாரம், திருக்குறள் என்று செந்தமிழாகப் படித்தால் உயிர் மேம்படும்! கொடுந்தமிழ் இலக்கியங்கள் (இவை எவை என்பதை உய்த்தறிக!) படித்தால் மாயையில் மூழ்கியும் இன்பம் பெறலாம்!

Monday, March 22, 2021

தலைப்பு இல்லை

 #யோகஇலக்கியம் #மொழிபெயர்ப்பு

ஸோஹம் சாதனையில் ஒரு முக்கிய அமிசம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது!

வாசியோகம், பிராணாயாமம் பயில்பவர்கள் கட்டாயம் படித்துப்பாருங்கள்!

Sunday, March 21, 2021

தலைப்பு இல்லை

 

மனித குலத்தின் பிரச்சனைகளை ஸ்தூலமாக பொருள் முதன்மை வாதத்துடன் ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் என்ற ஆய்வின் மூலம் சூழல்தொகுதியின் வளங்கள் உற்பத்தியாக்கப்பட்டு நுகர்வுப் பொருளாக்கப்படுகிறது; இந்த நுகர்வுப்பொருள்களை சந்தையாக்கி அந்தச் சந்தை மூலம் பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது; இந்த உற்பத்தியை களத்தில் செய்வது உழைக்கும் வர்க்கம் என்றும் இவற்றை பொருளாதாரம் ஆக்குவது ஆளும் வர்க்கம் என்றும் இவற்றிற்கிடையிலான வேறுபாட்டினால் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுகிறது; அதே உழைக்கும் வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால் ஒருகட்டத்தில் இந்த நுகர்வு பூர்த்தியாகி உபரி உருவாகி இறுதியில் இந்த முதலாளித்துவம் சிதைந்து பொதுவுடமை வரும் என்று மார்க்ஸ் கட்டியம் கூற அப்படி நடக்கவில்லை!

இது பலரும் பலவாறாக கூறினாலும் இதற்கான காரணம் என்னவென்பது பற்றி எனது கருத்து மார்க்ஸ் உலகை பொருள்முதன்மை வாதத்துடன் மாத்திரம் நிறுத்திக்கொண்டதுதான் என்று நினைக்கிறேன்.

புலன் தாண்டிய மனம் என்ற கருவியே நுகருகிறது; அதைக் கட்டுப்படுத்துவதால்தான் நுகர்வு தடைப்படும் என்ற உண்மையை ஆசிய மைய சிந்தனையை உள்வாங்காததால் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நான் மார்க்ஸியத்தை முழுமையாகப் படித்தவன் அல்ல; உலகப்பிரச்சனைகளுக்கு பொருள்முதன்மையைத் தாண்டிய சூக்ஷ்ம காரணியான மனம் என்ற ஒன்று இருக்கிறது; அதன் இயக்கம், இயற்கையான வழு என்பவை உலகை, மனிதனை அவனது இயக்கத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டின் ஆசான்களான அகத்தியர், பதஞ்சலி, புத்தர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியவர்களின் "மனமுதன்மைவாத" சிந்தனை மரபைச் சார்ந்தவன்! மனமுடையவன் மனிதன், who have a mind is called as man, எனினும் தனிமனிதனதும், சமூகத்தினதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்று ஆராயும் ஒரு அறிவு வேட்கை கொண்டவன் என்ற அடிப்படையில் இவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மார்க்ஸைப் பற்றிய ஒளி விவரணப்பட அறிமுகம்: https://www.youtube.com/watch?v=gYmsbsNCySM&t=46s

இந்த விவரணப்படத்தைப் பார்த்ததால் நேற்றைய புத்தக கொள்வனவில் வாங்கிக்கொண்ட புத்தகம் இது.

தலைப்பு இல்லை

 

பல ஆண்டுகளாக எமது குருநாதர் எமக்கு கூறிய அறிவுரைப்படி பலருக்கும் காயத்ரி சாதனை கற்பித்து வருகிறோம். பொதுவாக காயத்ரி சாதனை செய்யத்தொடங்கிய சிறிதுகாலத்திற்குள் எல்லோரும் உடல், மனதில் புதிய ஆற்றலைப் பெறுவதையும், ஆரோக்கியமடைவதையும் குறிப்பிடுவார்கள். இந்தக் கொரோனாக் காலத்தில் தொற்றடைந்த சாதகர்கள் சிலர் துரிதமாக மீண்டும் இருக்கிறார்கள்.

ஸ்ரீ காயத்ரி உபாசனை எமது சம்பிரதாயத்தில் பிராணசாதனையாக கொள்ளப்படுகிறது. குறித்தளவு காயத்ரி மந்திரத்தை நீண்ட காலம் பயிற்சி செய்த சாதகன் அதை மூச்சுடன் எப்படிக் கலப்பது என்பது காயத்ரி சாதனையின் ஒரு உயர் அமிசம்!

இது ஸ்ரீ காயத்ரி தந்திரத்தின் இறுதியில் விளங்கப்படுத்தப்படுகிறது.

காயத்ரி என்பது எட்டுச் சொற்கள், 24 எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தைக் குறிக்கும் சொல்; இதை காயத்ரி சந்தஸ் - சந்தம் என்று குறிப்பிடுவார்கள். கீதையில் கிருஷ்ணன் சந்தங்களில் நான் காயத்ரி என்று கூறுகிறார். இந்த காயத்ரி சந்தஸ் உடைய மந்திரங்களை உச்சரிக்கும் போது உயிர் சக்தியாகிய பிராணன் ரட்சிக்கப்படுகிறது. இந்த பிராணன் ரட்சிக்கப்படுவதற்கு மூச்சு ஒழுங்குபடுத்தப்படவேண்டும். இப்படி மூச்சை ஒழுங்குபடுத்தி பிராணனை ரட்சிப்பதால் இந்த மந்திரம் பிராணமாதா - பிராணனின் தாய் எனப்படுகிறது.

ஆகவே இந்த சாதனை என்பது மனம் - மூச்சு - உடல் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு பயிற்சியாக மாறுகிறது.

நேற்று அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் நடுத்தர பாதிப்புக் கொண்ட கொரோனா தொற்று நோயாளிகள் தமது நோயிலிருந்து எவ்வளவு துரிதமாக மீள்கிறார்கள் என்பதையும் C-reactive protein அளவு எப்படி இருக்கிறது என்பதையும் அறிய ஒரு postdoctoral researcher இனை நியமித்திருக்கிறது.

இந்த ஆய்வுகள் சம்பிரதாயத்தில், எமது முன்னோர்கள் கூறிய பலன்களுடன் எப்படி அறிவியல் ரீதியாக உடலில் செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நல்ல ஆய்வுகள்!

தமிழ் ஊடகங்கள் இவற்றை வழமையான பாணியில் "கொரோனாவைத் தீர்க்கும் காயத்ரி மந்திரம்" என்று sensation இனைக் கிளப்ப, நாத்திகர்கள் அதை கேலி செய்ய இதைப் பார்த்து மக்கள் குழம்ப கடைசியில் உண்மை எது என்று தெரியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும், அறிவியல் ஏற்கனவே இருந்த பழைய சம்பிரதாயத்தை தனது வழியில் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது என்பதை நாம் சமநிலையாகப் புரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று!

Sunday, March 14, 2021

தலைப்பு இல்லை

 

எமது பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞான இறுதியாண்டு பட்டதாரி ஆய்வு மாணவர்களுடன் அழிவடைந்த ஒரு சூழல் தொகுதியை எப்படி ஒப்புமை வனவியல் மூலம் மீள்கட்டமைப்பது என்ற அனுபவ களப்பயணத்தை இன்று மேற்கொண்டிருந்தோம்!


இது எமது பீடத்தின் தொழில் வழிகாட்டல் (career guidance) பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

உயிரியல் பல்வகைமையைப் பேணிக்கொண்டு எப்படி பொருளாதார நன்மைகளை (பலகை, பழங்கள், இலைகள்) பெறுவது என்பது இயலாது என்றே மனிதன் நினைக்கிறான்.

இதற்கான ஒரு பதில்: Analog forestry - ஒப்புமை வனவியல்

இந்த காடுவளர்ப்பு முறை மூன்று நோக்கங்களை கொண்டது;

1. Ecological succession : எந்தவொரு இயற்கைத் தொகுதியையும் அதன்போக்கில் விட்டால் அது படிப்படியாக தனது தாவர, விலங்கு வர்க்கங்களை உள்வாங்குவதற்குரிய சூழல் தொகுதியை உருவாக்கும்.

2. Mimicking natural forests : இயற்கை காட்டினை பிரதிபலிக்கும் சூழல்தொகுதியாக இருப்பது அதிக நன்மையினைத் தரும்.

3. Landscape ecology; உருவாக்கப்படும் சூழல் தொகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு உயிர்பல்வகைமையை, சூழலியல் தொழிற்பாட்டினை அதிகரிக்க வேண்டும்.

இந்த மூன்று பண்புகளையும் ஒரு ஒப்புமை வனம் கொண்டிருக்கும்.

தமது நான்கு வருட கல்வியில் தமக்குக் கிடைத்த மிகப்பெரிய அரிய கள அனுபவம் இது என அனைவரும் குறிப்பிட்டிருந்தமை ஒரு ஏற்பாட்டாளனாக, சூழலியலாளனாக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தி!

Friday, March 12, 2021

தலைப்பு இல்லை

 

தம்பி ஹரிசன் - Hari Arul சிவயோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி ஈழத்து நூல்களைப் பேசுவோம் தொடரில் பேசியுள்ளார்!

நன்றி ஹரிசன் Reshzan Thayaparan

தலைப்பு இல்லை

 

நண்பர் ஒருவர் அழைத்திருந்தார்; தான் "ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய" என்ற மந்திரத்தை தினசரி உச்சரிப்பதாகக் கூறியிருந்தார்! இது சரியா? பிழையா என்ற குழப்பம்!

அதற்கு நாம் கூறிய பதில்:

நமக்கு குருமுகமாக உபதேசிக்கப்பட்டால் தாராளமாக எந்த சந்தேகமும் இன்றி உச்சரிக்கலாம்! இல்லாமல் எங்காவது வலைத்தளத்தில் கூறப்பட்டதைக் கண்டு உச்சரிக்கத் தொடங்குவதாக இருந்தால் இப்படியான "தலைமாறல்" உள்ள மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்காமல் எளிமையான "ஓம் நமசிவய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்திலிருந்து தொடங்குவது நன்மை தரும்!

மந்திரங்கள் என்பது வெறும் சப்தமல்ல; அதற்குள் சைதன்யம் - பிராணன் உறைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை நாம் ஒரு சொல்லை உச்சரிக்கும் போதும் அது உடலில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. மந்திரங்கள் எமது ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களை தாக்கக் கூடியவை. ஆகவே அவற்றைப் பயிற்சிப்பதில் கவனம் தேவை.

சரியாக சாதனை செய்து சித்திபெற்ற குருவிடம் பெறுதலே சரியானது! அப்படி எவரும் கிடைக்காவிட்டால் அதிக சிக்கலான பீஜங்கள் அடங்கிய, தலைமாறிய - யநமசிவ – மசிவயந – வயநமசி போன்ற - மந்திரங்களை எடுத்து முயற்சிக்காமல் ஸ்துல பஞ்சாக்ஷரம் - ஓம் நமசிவய  எடுத்துக்கொண்டு ஒரு சிறு துண்டில் எழுதி சிவன் கோயில் மூலவரிடம் அர்ச்சித்து, நந்திதேவரிடம் மானசீகமாக அனுமதி வாங்கிக்கொண்டு தினசரி ஒரே அளவாக நிர்ணயித்துக்கொண்டு (108/1008) தினசரி ஒரே நேரத்தில் சிரத்தையாக ஜெபித்து வரவேண்டும். ஒரு இலட்சம் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முறையான குரு உபதேசம் கிட்டவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் ஜெபித்துவரவேண்டும். இப்படிச் செய்ய, இறைவன் எந்த வடிவிலாவது முறையான உபதேசத்தை ஏற்பாடு செய்வான்.

இப்படி ஒரு லக்ஷம் எண்ணிக்கை சிரத்தையாக பூர்த்தி செய்யக்கூடியவன் மாத்திரமே மந்திர சாதனைக்கு தகுதியானவன். அப்படியில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் இந்தப்பலன், அந்தப்பலன் என்ற செய்திகளைப் பார்த்துவிட்டு பௌதீக நன்மை கிடைக்கும், சித்திகள் கிடைக்கும், ஆற்றல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மந்திரம் என்று சாதனை செய்யப்போகவேண்டாம்!

மந்திர சாதனை குருமுக மார்க்கம்!

Thursday, March 11, 2021

தலைப்பு இல்லை

 ந - ம - சி - வ - ய என்பது ஸ்தூல பஞ்சாக்ஷரம்!

சித்தர்களது சைவமார்க்கம் சிவயோக மார்க்கம்! இதில் ஒவ்வொரு பயிற்சியும் அதற்குரிய நோக்கமும் விளக்கமும் உடையது!

ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது சிவத்தை அடைவதற்கு, சிவயோகம் சித்திப்பதற்கு ஒரு சாதகன் தனது ஸ்தூல உடலை தகுதியுடையதாக்கும் அதிர்வாகும்!

மந்திரங்கள் என்பது எமது உயிரைச் சூழ உள்ள கருவிகளான மனம் - உடல் ஆகியவற்றை சுத்தி செய்து சிவத்துவம் பெறவைக்கும் கருவிகளாகும்.

ஆகவே இன்றைய சிவராத்ரியில் நாம் அனைவரும் சிவமாகிய பரம்பொருளின் அருளைப் பெற இந்த ஸ்தூல பஞ்சாக்ஷரத்தை 108/1008 எண்ணிக்கையோ ஜெபிக்கலாம்!

புருவமத்தியில் உயிராக ஒளிரும் ஈசனை குருவாக எண்ணி உங்கள் பஞ்சாக்ஷர ஜெப சாதனையை இன்று தொடங்குங்கள்.

மொத்தம் ஒரு இலட்சம் வரும் வரை தினசரி சீராக எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஜெபித்து வாருங்கள்!

உங்கள் உடல் உயர்ந்த யோகசாதனைக்கு தகுதியாகி குருவாய்க்கப்பெறுவீர்கள்!

இதைக் காண்பவர்கள் அனைவரும் சிவபரம்பொருளின் அருள் பெற பிரார்த்தனைகள்!

தலைப்பு இல்லை

இந்திய - இலங்கையில் வசிப்பவர்கள் - இன்று சிவராத்ரியில் 1008 சிவபஞ்சாட்சர ஜெபம் செய்கிறோம் என்று சங்கல்பித்து முடிப்பவர்கள் இந்தப்படிவத்தை நிரப்புங்கள்; https://forms.gle/FyN3khzTPjxZgbbz8

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Tuesday, March 09, 2021

தலைப்பு இல்லை

எமது பிரயோக விஞ்ஞான பீடத்தின் சூழலியல் விஞ்ஞான பட்டதாரி மாணவர்கள் சூழலியல் கற்கை செய்தி மடலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளார்கள்!

Saturday, March 06, 2021

தலைப்பு இல்லை

 

இன்று எமது வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீட இறுதியாண்டு சூழலியல் விஞ்ஞான பட்டதாரி மாணவர்களுக்கு "Meet Your Mentor" என்ற வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம்.

இதில் செல்வி இலக்கியா சிதம்பரநாதன் அவர்களை வழிகாட்டியாக (mentor) அழைத்திருந்தோம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்த இலக்கியா உயர்தரத்தில் கணிதத்துறையில் கற்று எப்படி தனது கனவாகிய ஆய்வுத்துறையில் (Research) முன்னேறி உலகத்தரம் வாய்ந்த Wageningen University, Netherland இல் தனது Phd in Environmental technology இனைத் தொடர்ந்தார் என்ற உத்வேக கதை (motivational story) இன்று மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். Wageningen University உலகதரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பல்கலைக்கழகம்.

இது ஆய்வுத்துறையில் உயர்பட்டம் பெற நினைக்கும் மாணவர்கள் அனைவருக்குமான ஒரு உத்வேகக் கதை!

ஒரு பெண்ணாக குடும்பமும், உற்றமும் சுற்றமும் செலுத்தும் செல்வாக்கினை மீறி தான் நினைத்த அறிவியல்துறையில் எப்படி ஒரு விஞ்ஞானியாக பரிணமித்திருக்கிறார் என்பதும், இந்தியாவின் யமுனை நதி மாசு அகற்றும் சூழலியல் மீள்கட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வினை முன்னெடுத்திருக்கிறார் என்பதும் சிறப்புச் செய்திகள்!

தலைப்பு இல்லை

தம்பி Nirosh Shanthan புத்தகப்பிரியர்களுக்கு BukBuk.lk என ஒரு திட்டம் நடாத்திவருகிறார்!

எனக்கு அன்பளிப்பு என்று நான் கேட்ட ஒரு நூலை இன்று அனுப்பி வைத்திருந்தார்!

Deccan Airlines ஸ்தாபகர் கேப்டன் கோபிநாத்தினுடைய வாழ்க்கை வரலாறு! அப்துல் கலாம் பரிந்துரைத்த நூல்!

வாசிக்கத்தொடங்கினால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நூல்!

கேப்டன் கோபிநாத் தனது முகவுரையில் தன்னை சாதனையாளனாக எண்ணாமல் தான் எவ்வளவு பலவீனனாக, மோசமானவனாக, கோபக்காரனாக இருந்துகொண்டு சவால்களை எதிர்கொண்டு தனது இலட்சியத்தை சாதித்தேன் என்பதைக் கூறும் கதை!

ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் மிகப்பெறுமதி வாய்ந்த ஞானம்! எமது வாழ்கையின் இலட்சியத்தில் தேவையற்றதை ஒதுக்குவதற்குரிய கற்றுக்கொண்ட பாடங்கள்! அந்தவகையில் இந்த நூல் தொழில் முனையும் ஒவ்வொரு இளைஞனுக்குமுரிய நூல்!

எவராவது இந்த நூலைத்தான் தமிழ் படமாக வந்தது அந்தப்படத்தைப் பார்த்து விட்டோம் என்று நினைத்தாலும் கட்டாயம் இந்த நூலைப் படியுங்கள்! ஏனென்றால் படமாக எடுக்கும் போது நிறைய பொய்களைக் கலந்து கதையை சுவாரசியமாக்குகிறோம் என்று திசை திருப்பி விடுவார்கள்!

Thursday, March 04, 2021

தலைப்பு இல்லை

இன்றைய உரை கந்தகுரு கவசத்தின் முதல் 50 வரிகளுக்கான யோக ஞானவிளக்கம்

... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

மூஷிக வாகனனே மூலப் பொருளோனே

ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்

கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்

அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்

சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்

சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்

தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே

ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே

தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே

அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா

ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா

போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி

போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்

ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்

சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை

அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்

திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண

அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே

வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்

வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே

திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா

பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்

திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்

செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா

திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்

திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்

எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்

எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே

எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ

என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்

திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

தலைப்பு இல்லை

 நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கவும்: https://youtu.be/uDDZ_fWhXZk

Wednesday, March 03, 2021

தலைப்பு இல்லை

ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகளின் கந்தகுரு கவச வரிகள்

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு

சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு

சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு

அருள் ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு

அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்

ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து

நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து

பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்

அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ

சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள

சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்

சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே

சிவசத் குருநாதா சிவசத் குருநாதா

ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்

தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு

திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்

- சாந்தானந்தா சுவாமிகள் அருளிய ‘கந்த குரு கவசம்’

தாவோ தி ஜிங் சூத்திரம் - 02

அனைவரும் அழகினை அழகு என்று புரிந்துகொண்டால் அது விகாரப்பட்டுவிடும்!

அனைவருக்கும் நன்மை எதுவென்று புரிந்துவிட்டால் பிறகு அது நன்மையற்றதாகிவிடும்!

ஆகவே இருப்பு, இருப்பின்மை ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று உருவாக்குகிறது!

கடினமும் இலகுவும் ஒன்றை ஒன்று நிரப்புகிறது.

நீளமும் குட்டையும் ஒன்று இன்னொன்றுக்கு வடிவம் தருகிறது.

ஒலியும் எதிரொலியும் ஒன்று இன்னொன்றை உறுதிப்படுத்துகிறது.

முன்னதை பின்னது தொடர்கிறது.

ஆகவே ஞானிகள் இவற்றைப் புரிந்துகொண்டு

முயற்சியற்ற சேவையை

சொற்கள் அற்ற மௌன உபதேசத்தால் போதிக்கிறார்கள்!

இந்தச் சூத்திரத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு

************************************

இந்தச்சூத்திரம் மனித மனதின் இயக்கத்தினைப் பற்றியது! சபரிமலை புனிதமானது என்பதை உலகிற்கு அறிவித்துவிட்டதால் அந்தப்புனிதமான பூமியை அசுத்தப்படுத்த அருள் பெறப்போகிறேன் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பிவிடுவான்!

சதுரகிரியில் அபூர்வ மூலிகை இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துவிட்டால் அவற்றை வேட்டையாட பேராசை கொண்ட மனிதன் மலையேறத்தொடங்கிவிடுவான்!

திருவண்ணாமலையில் ஜோதி இருக்கிறது என்று சொன்னவுடன் ஒவ்வொரு பௌர்ணமியும் பிளாஸ்டிக்கினால் அசுத்தபடுத்தி விடுவான்!

கற்றாழைக்கு புற்று நோய் நீக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டால் சாமானியனுக்கு கற்றாழை கிடைக்காமல் செய்துவிடுவான்!

இப்படி மனிதன் தனது பேராசையும், அதியாசையும் கொண்ட குணத்தால் எல்லாவற்றையும் தனக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஊசலில் ஒரு எல்லைக்குச் செல்வதையே வெற்றி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் ஒரு அதி எல்லை இன்னொரு அதியெல்லையை உருவாக்குகிறது. மனிதப் பிணக்குகளில் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இப்படி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தினைப் புரிந்துகொண்ட ஞானிகள் உண்மையை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்வதில்லை!

சித்தர்களும் இதனால்தான் பரிபாஷை என்று உண்மையை உணர்ந்தவன் மாத்திரம் புரியக்கூடிய, உணரக்கூடிய மொழியில் கூறிவைத்தார்கள்! பேசாத மந்திரம், மௌன அனுபவம் என்று கூறிவைத்தார்கள்!

தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்


தாவோ - (சம நிலையான) பாதை
தி - அகவலிமை
நூல் - நூல்
அகவலிமையைப் பெறுவதற்கான பாதையைக் காட்டும் நூல் தாவோ தி ஜிங்
தாவோ தி ஜிங் என்ற நூல் லாவோட்ஸு வினால் எழுதப்பட்ட தாவோயிஸ நூலாகும். இதற்கு தமிழில் சி. மணி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எனினும் அது தாவோயிஸ அனுபவத்தைத் தருவதாக இல்லை!
நாம் முதலாவது பாடல் (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறோம். வார்த்தைகளின் அர்த்தத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் அந்தச் சூத்திரம் என்ன அர்த்தத்தை பரிமாற விரும்புகிறது என்று தியானித்து எழுதியுள்ளோம்!
உங்கள் கருத்தினைக் கூறுங்கள்
சூத்திரம் - 01: தாவோ ஒரு வழிகாட்டி
தாவோ என்பது ஒரு வழிகாட்டி நிரந்தரமான வரையறுத்த பாதையல்ல
பெயரிடலாம் ஆனால் முத்திரை குத்தக்கூடாது
இருப்பின்மையே ஆகாயத்தினதும்
பிருதிவியினதும் தோற்றுவாய்
இருப்பு அனைத்திற்கும் தாய்!
எப்போதும் விருப்பின்மையுடன் இரு!
இதனால் சூக்ஷ்மத்தைக் கவனிக்கும் ஆற்றல் பெறுவாய்!
எப்போதும் அறியும் நோக்கத்துடன் இரு
இதனால் தெளிவினைப் பெறுவாய்!
சூக்ஷ்மமும் தெளிவும் ஒரே மூலத்தின் இருவேறு நாமங்கள்!
இவை இரண்டும் இரகசியங்கள் எனப்படுகிறது!
இரகசியத்தின் இரகசியம்
இதையறிந்தால் அற்புதத்தின் பாதை திறக்கும் !
அகவலிமைக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பவன் இதுமட்டுதான் உண்மை என்ற இறுக்கமான மனதைக் கொண்டிருக்கக்கூடாது! எதையும் முத்திரைக் குத்தி நின்றுவிட்டால் அவனது விழிப்புணர்வு நின்றுவிடும்! புரிதல் எல்லைப்பட்டுவிடும்!
மனதில் விருப்பு - இச்சைப்பட்டுக்கொண்டிருப்பவன், விருப்பு வெறுப்பு இருப்பவன் தான் விரும்புபவற்றை மாத்திரம் பார்க்கும் படி தனது மனதைப் பழக்கிக்கொள்வான்! இப்படி இச்சையால் சிறைப்பிடிக்கப்பட்ட மனதிற்கு சூக்ஷ்ம பிரபஞ்ச இயக்கம் புரியாது. விருப்பின்மையே சூக்ஷ்மத்தைப் புரிந்துகொள்வதற்கான சாவி!
அகவலிமையைப் பெறும் பாதையைத் தேர்ந்தெடுத்தவன் எப்போதும் அறியவேண்டும் என்ற உத்வேகம் அகத்தில் இருக்க வேண்டும். இப்படிபட்டவனுக்குத் தான் தெளிவு கிடைக்கும்!
சூக்ஷ்ம அறிவு, தெளிவு என்ற இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்! ஒருவனிற்கு சூக்ஷ்ம புத்தி இருந்தால் அவன் வார்த்தைகளைத் தாண்டி மனதின் இயக்கத்தை அறிவான்! மேலே கொந்தளிக்கும் கடலின் அலைகளின் மூலம் ஆழத்தில் ஓடும் நீரோட்டம் என்பதை அறிவான்!
சூக்ஷ்ம அறிவு, தெளிந்த அறிவு இவையிரண்டுமே அற்புதங்களை அறிவதற்கான இரகசிய சாவிகள்!

தலைப்பு இல்லை

 

தாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்

தாவோ - (சம நிலையான) பாதை

தி - அகவலிமை

நூல் - நூல்

அகவலிமையைப் பெறுவதற்கான பாதையைக் காட்டும் நூல் தாவோ தி ஜிங்

தாவோ தி ஜிங் என்ற நூல் லாவோட்ஸு வினால் எழுதப்பட்ட தாவோயிஸ நூலாகும். இதற்கு தமிழில் சி. மணி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எனினும் அது தாவோயிஸ அனுபவத்தைத் தருவதாக இல்லை!

நாம் முதலாவது பாடல் (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறோம். வார்த்தைகளின் அர்த்தத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் அந்தச் சூத்திரம் என்ன அர்த்தத்தை பரிமாற விரும்புகிறது என்று தியானித்து எழுதியுள்ளோம்!

உங்கள் கருத்தினைக் கூறுங்கள்

சூத்திரம் - 01: தாவோ ஒரு வழிகாட்டி

தாவோ என்பது ஒரு வழிகாட்டி, நிரந்தரமான வரையறுத்த பாதையல்ல

பெயரிடலாம் ஆனால் முத்திரை குத்தக்கூடாது

இருப்பின்மையே ஆகாயத்தினதும் பிருதிவியினதும் தோற்றுவாய்

இருப்பு அனைத்திற்கும் தாய்!

எப்போதும் விருப்பின்மையுடன் இரு!

இதனால் சூக்ஷ்மத்தைக் கவனிக்கும் ஆற்றல் பெறுவாய்!

எப்போதும் அறியும் நோக்கத்துடன் இரு

இதனால் தெளிவினைப் பெறுவாய்!

சூக்ஷ்மமும் தெளிவும் ஒரே மூலத்தின் இருவேறு நாமங்கள்!

இவை இரண்டும் இரகசியங்கள் எனப்படுகிறது!

இரகசியத்தின் இரகசியம்

இதையறிந்தால் அற்புதத்தின் பாதை திறக்கும்!

இந்த சூத்திரத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு

***********************************************************

அகவலிமைக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பவன் இதுமட்டுதான் உண்மை என்ற இறுக்கமான மனதைக் கொண்டிருக்கக்கூடாது! எதையும் முத்திரைக் குத்தி நின்றுவிட்டால் அவனது விழிப்புணர்வு நின்றுவிடும்! புரிதல் எல்லைப்பட்டுவிடும்!

மனதில் விருப்பு - இச்சைப்பட்டுக்கொண்டிருப்பவன், விருப்பு வெறுப்பு இருப்பவன், தான் விரும்புபவற்றை மாத்திரம் பார்க்கும்படி தனது மனதைப் பழக்கிக்கொள்வான்! இப்படி இச்சையால் சிறைப்பிடிக்கப்பட்ட மனதிற்கு, சூக்ஷ்ம பிரபஞ்ச இயக்கம் புரியாது. விருப்பின்மையே சூக்ஷ்மத்தைப் புரிந்துகொள்வதற்கான சாவி!

அகவலிமையைப் பெறும் பாதையைத் தேர்ந்தெடுத்தவன் எப்போதும் அறியவேண்டும் என்ற உத்வேகம் அகத்தில் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவனுக்குத்தான் தெளிவு கிடைக்கும்!

சூக்ஷ்ம அறிவு, தெளிவு என்ற இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்! ஒருவனிற்கு சூக்ஷ்ம புத்தி இருந்தால் அவன் வார்த்தைகளைத் தாண்டி மனதின் இயக்கத்தை அறிவான்! மேலே கொந்தளிக்கும் கடலின் அலைகளின் மூலம் ஆழத்தில் ஓடும் நீரோட்டம் என்பதை அறிவான்!

சூக்ஷ்ம அறிவு, தெளிந்த அறிவு இவையிரண்டுமே அற்புதங்களை அறிவதற்கான இரகசிய சாவிகள்!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...