குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label கணபதி. Show all posts
Showing posts with label கணபதி. Show all posts

Friday, February 03, 2023

சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி

இன்று இனிதே சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியாகியது. 

இன்றைய கணபதி உபாசனையின் யோக விளக்கம் மூலாதாரத்து கணபதி என்று ஏன் அழைக்கப்படுகிறார் என்பது பற்றிப் பார்ப்போம். 

மகாகணபதியை ஔவைப் பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவிப்பவர் என்று கூறுகிறார். 

அதர்வரீஷ உப நிடதம் "த்வம்ʼ மூலாதா⁴ரஸ்தி²தோ(அ)ஸி நித்யம்" - நீர் மூலாதாரத்தில் எப்போதும் உறைந்திருப்பவர் என்று கூறுகிறது. 

மூலாதாரம் என்பது மனித வாழ்க்கைக்கும் ஆதாரமானது என்று பொருள். இதை யோக நூல்கள் குதத்திற்கும் குறிக்கும் இடையில் இருக்கும் இடமாக ஸ்தூல உடலில் குறிப்பிடப்பட்டாலும், மனதில் பஞ்ச கிலேசங்களாக வெளிப்ப்படும் நிலையே முக்கியமானது. 

மனித வாழ்வின் அடிப்படை ஐந்து வித உணர்ச்சிகளால் ஆளப்படுகிறது; 

அவித்தை என்ற அறியாமை

அஸ்மிதை என்ற அகங்காரம்

ராகம் என்ற உலகப் பொருட்கள் மேல் உள்ள பற்று

துவேஷம் என்ற வெறுப்பு

வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற மரணபயம்

இந்த ஐந்துமே ஒருவனின் வாழ்வை இயக்கும் மூலாதார சக்திகள். இந்தச் சக்திகள் ஒருவனிடத்தில் செயற்பட வாழ்கையே போராட்டமாக மாறிவிடுகிறது. இதை எப்படி மாற்றுவது?

இந்த மதம் பிடித்த தாழ் உணர்ச்சிகளையெல்லாம் தனது அங்குசம் கொண்டு அடக்கி வசப்படுத்தும் ஆற்றலைத் தருபவர் மகாகணபதி. இதனை ஔவைப் பாட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் என்று சொல்லுகிறார். 

கணபதியை மூலாதாரத்தில் ஸ்தாபித்து யோகம் புரிபவன் இந்தப் பஞ்ச கிலேசங்களையும் வென்று புலனடக்கமும், யோக சித்தியும் பெறுவான். புலன் களையும், அதனால் விளையும் பஞ்ச கிலேசங்களையும் வசப்படுத்தலே - மூலாதாரத்தை வசப்படுத்தல் - ஸர்வஜனம்மே வசமானாய என்ற கணபதி மந்திரத்தின் வாக்கியப் பொருள்.


Thursday, February 02, 2023

கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி

இன்றைய கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியானது! 

கணபதி உபாசனையின் தத்துவங்களை யோக விளக்கங்களாக ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுகச் சொல்வது இந்தப் பதிவுகளின் நோக்கம். 

மகாகணபதியினை பற்றி அதர்வ சீர்ஷ உப நிஷத் இப்படிக் கூறுகிறது; த்வம்ʼ சத்வாரி வாக்பதா³னி;

நீர் நான்கு வகை வாக்கினையும் அருள்பவர் என்று!

நான்கு வகை வாக்குகளும் எவை

வைகாரி - நாம் மொழியைப் பாவித்து உரையாடும் சப்தத்துடன் கூடிய பேச்சு. குரல்வளை உருவாக்கும் வாக்கு. செவியால் மற்றவர்கள் கேட்கும் வாக்கு

மத்திமை - இது மன உரையாடல்; எல்லோருக்கும் தமக்குள் சிந்தித்து உரையாடும் பழக்கம் இருக்கிறது. கணபதியை வணங்கி மூலாதார சித்தி பெறுவதால் ஒருவனால் மற்றவர் மனதிற்கு எண்ணத்தை வாயால் சொல்லாமல் எண்ணத்தால் கடத்தும் ஆற்றல் வாய்க்கும். சுருக்கமாகச் சொன்னால் டெலிபதி வாய்க்கும். 

பஸ்யந்தி - இந்த வாக்கு மனக்கண்ணில் காணும் ஆற்றல்; ரிஷிகள் இந்த ஆற்றல் மூலமே மந்திரங்களை திருஷ்டிக்கிறார்கள் - பார்க்கிறார்கள்; மனக்கண்களில் சூக்ஷ்ம தன்மைகளைக் காணும் ஆற்றல். 

சூக்ஷ்ம வாக்கு - சித்த விருத்திகள் அடங்கிய மௌனம்; இந்த அமைதியை அடைந்தால் மாத்திரமே இறை ஆற்றலை உணரமுடியும்.

மிக உயர்ந்த கணபதி உபாசகி யார் என்றால் ஔவைப் பாட்டி; 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்ற வரிகளில் வைகாரி, மத்திமை வாக்கினைப் பற்றியும், 

விநாயகர் அகவலில்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரமும் வெளிப்பட உரைத்து என்ற வரிகளால் பஸ்யந்தி வாக்கினையும், 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் என்ற வரிகளால் சூக்ஷ்ம வாக்குப் பற்றியும் கூறுகிறார். 

மகாகணபதி உபாசனை சதுர்வித வாக்குகளையும் எமக்குத் தரக்கூடிய பூர்ண சித்தி தரக்கூடிய உபாசனை.

யோக சித்திக்கு மூலம் மகாகணபதி உபாசனை


Wednesday, February 01, 2023

மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

இன்று மகாகணபதிக்கு சதுராவர்த்தி தர்ப்பணமும், நீலோற்பல, செவ்வரத்தைப் பூக்கள் அலங்காரமும்! 

அதர்வசீர்ஷம் தரும் கணபதியின் தியானம் வருமாறு:

யானை முகம்; ஒற்றைத் தந்தம் உடையது; நான்கு கரம், பின் கை பாசம், அங்குசம் கொண்டிருக்கிறது, மூன்றாவது கை உடைந்த ஒற்றைத்தந்தத்தைக் கொண்டிருக்கிறது. நான் காவது கை வரத கரமாக இருக்கிறது. கொடியில் மூஷிகம் இருக்கிறது. பெருத்த வயிறு; விசிறி போன்ற பெரிய காதுகள் - சூர்ப்ப கர்ணம். அழகிய சிவந்த உடல்; செவ்வாடை; செந்தூரம் பூசிய உடல்; செம்மலர்கள் சாத்தி வணங்கப்படுகிறார். கருணை ததும்பும் முகம். பிரபஞ்ச இயக்கத்தின் மூலாதார சக்தி. கண்களுக்குத் தெரியும் பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் பிரபஞ்சத்தைத் தாண்டிய காரணவடிவானவர். 

இப்படி தினசரி கணபதியைத் தியானிப்பவன் யோகிகளில் சிறந்த யோகியாக இருக்கிறான். 

காண்பவர்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சியும், சந்தோஷமும், எல்லா வளங்களும் உண்டாகட்டும்! 


Tuesday, January 31, 2023

கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

இன்றைய மகா கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியாகியது! ஒரு மாணவரும் தனது உபாசனை மூர்த்தத்துடன் பங்குபற்றியிருந்தார்! 

உபாசனை, பூஜைகள் சரியான அர்த்தத்துடன் புரிந்து செய்யும் போது மனதிற்கு இன்பத்தினையும், தூய்மையையும், ஆற்றலையும், சம நிலையையும் தரக்கூடியவை. 

மகாகணபதி உபாசனை ஸக்தியை அணுகுவதற்கு மூலம்!


Thursday, September 01, 2022

மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

கணபதியை (சதுராவர்த்தி) தர்ப்பணத்துடன் வணங்க  ஆரம்பிக்கிறோம். மகாகணபதி மூலாதாரச் சக்கரத்தில் உறைகிறார், அந்தச் சக்கரம் பயம் என்ற உணர்ச்சியால் முதன்மையாக ஆளப்படுகிறது. பயத்தினைக் கரைப்பதால் இன்பம் கிடைக்கிறது. (சதுராவர்த்தி) தர்ப்பணத்தின் மூலம் எமது பயங்கள், சந்தேகங்கள், பாதுகாப்பின்மைகள், பற்றாக்குறைகள் அகற்றப்பட்டு இன்பமயமான வாழ்க்கை கிடைக்கிறது. 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்


Wednesday, August 31, 2022

தலைப்பு இல்லை

இன்று விநாயகர் சதுர்த்தி.

எளிதாக deal போடக்கூடியவர் கணபதி! ஔவையார் இப்படிச் சொல்லுகிறார்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா

மூலாதாரத்தின் அதிபதியாக கவித்துவம் தரக்கூடியவர். கணபதி தர்ப்பணத்தின் மூலம் திருப்திப்படுத்தக் கூடியவர்; தனியே சதுராவர்த்தி தர்ப்பணம் மூலம் எல்லாவித சித்திகளையும் தரக்கூடியவர். 

எல்லாவித பௌதீக இன்பங்களையும் அடையத் தடையாக இருக்கும் அனைத்து விக்கினங்களையும் நீக்கி ஸர்வ தத்துவங்களையும் வசப்படுத்தி யோக சித்தி தரக்கூடியவர். 

கணபதியின் அருளால் ஸர்வ தத்துவங்களை வசப்படுத்தாமல் பராஸக்தியின் அருளைப் பெறமுடியாது. ஸக்தி பெறுவதற்கு முதல்படி கணபதியின் அருளைப் பெறுவதே! 

தினசரி அதிகாலையில் ஸ்ரீ மகா கணபதி உபாசனை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். 

இம்மாத இதழில் சில குறிப்புகள் 

https://www.tamizhipadhippagam.com/-2022.../p3419596/


Wednesday, May 18, 2022

கணபதி உபாசனையும் யோக விளக்கமும்

 

ஔவையாரின் விநாயகர் அகவலின் முழுமையான விளக்கம் படவடிவில் கீழே தரப்பட்டிருக்கிறது.

மூலாதாரத்தில் இருக்கும் எலியைப் போல் தடுமாறிக்கொண்டிருக்கும் சித்தத்தை கணபதி மந்திரத்தின் துணைகொண்டு மூளையுடன் ஏகாக்கிரத்தினால் தொடர்புகொள்ள வைத்தால் உடலில் இருக்கும் குண்டலினி எனும் மகாசக்தி விழிப்படையச் செய்யும்.

இதையே ஔவையார்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தியினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

இதுவே மூலாதாரத்தில் கணபதி உறைகிறார் என்ற விளக்கம்.

இதைச் செய்வதற்கே அதிகாலை - பிரம்ம முகூர்த்தத்தில் - மூலாதாரத்தில் சூக்ஷ்ம சுவாசம் ஓடும்போது செய்வது பலனளிக்கும். இதனாலேயே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனை வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இதைத் தவிர பிள்ளையாருக்கு யானைத்தலை பொருத்தினார் சிவபெருமான் என்று சிறுபிள்ளைத்தனமாக இரசிப்பவர்களுக்கு அவர் அவர் மனப்பக்குவத்திற்கு தக்க ஆயிரம் கதைகள் இருக்கிறது எமது புராணங்களில்!

அவரவர் மனப்பக்குவத்திற்கு தக்க ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

#கணபதி

#ஸ்ரீவித்யா

#குண்டலினி

#ganapathy

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...