எவரெல்லாம் தவறு செய்கிறோம் என்று குற்ற உணர்ச்சி கொள்கிறார்களோ அவர்களுக்கு உகந்த தியானப் பிரயோகம் இது!
சிலருக்கு உள்ளே தாம் தப்பான காரியத்தைச் செய்கிறோம் என்று தெரியும்; பொறுப்பான பதவியிலிருந்துகொண்டு தவறான ஒருவரிடமிருந்து பண உதவி கிடைக்கிறது என்பதற்காக, பணத்தாசையாலும், பயத்தினாலும் அவருடைய தவறுகளை கண்டும் காணாமல், மறைத்து செய்யும் தவறுகளை எமக்குள் விழிப்புணர்வினை உருவாக்குவதன் மூலம் நல்வழிப்படுத்தும் ஆற்றல் இந்த பைரவ தியானத்திற்கு உண்டு! இப்படித் தவறு செய்பவர்கள் எல்லோரும் விழிப்புணர்வு இல்லாதவர்கள்!
பைரவர் தர்மஸேது பாலகர் - தர்மம் என்ற அணையைப் பாதுகாப்பவர்! அவரை உபாசிப்பவர்களுக்கு அந்தப் பண்பினைத் தருபவர். காப்பது மட்டுமல்ல எமது மனதில் இருக்கும் அதர்ம சிந்தனையையும் நீக்குபவர்; நாம் செய்யும் கர்மத்தில் பற்று வைக்காமல் கர்ம பந்தத்தினை நீக்கி எம்மை கர்ம யோகி ஆக்குபவர்;
இந்த தியானத்தில் பொன்னிறமாக தியானிக்கச் சொல்வது சிறப்புமிக்கது! ஸ்வர்ண பைரவரின் தன்மை இங்கு வெளிப்படுகிறது.
தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க நாசகம்
கர்மபாச மோசகம் ஸுசர்மதாயகம் விபும்ஸ்வர்ணவர்ண கேசபாசசோபி தாங்க
நிர்மலம் காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 5
தர்மத்தின் அரணைக் காப்பவரும்,
அதர்ம மார்க்கத்தை அழிப்பவரும்,
கர்மாக்களிலிருந்து ஏற்படும் பந்தத்தை விடுவிப்பவரும்,
மிக்க ஸௌக்யத்தை அளிப்பவரும்,
தங்கம் போன்ற காந்தி கொண்ட தலை மயிரினால்
அழகாக்க காணும் சரீரத்தை உடையவரும்,
சுத்தமானவரும்,
காசித்தலத்தைக் காப்பவனுமாகிய எங்கும் நிறைந்த விபுவான கால பைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.
இன்று காலை காசி காலைபைரவரின் அலங்காரம் இங்கே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.