குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Monday, April 04, 2022

தலைப்பு இல்லை

 

இன்று காலையில் அனேகரது முக நூல் பக்கம் தேசபக்தியால் வழியத் தொடங்கியுள்ளது! இதற்கு 2400 வருடங்களுக்கு முன்னர் சீனத்து ஞானி லாவோ ட்சு தனது தாவோ தே ஜிங் என்ற நூலில் 18 வது கவிதையில் சுவாரசியமான ஒரு குறிப்பு கொடுக்கிறார்.

மாபெரும் தாவோ மறக்கப்பட்ட போது

நற்பண்புகளும் தெய்வ பக்தியும் தோன்றியது

பிறகு புத்தியும் அறிவும் வெளிவந்தன

குடும்பத்தின் அமைதி குலைந்தபோது

வாரிசுரிமைப் பற்று தொடங்கியது

நாடு குழப்பத்தில் ஆழ்ந்த போது

தேசபக்தி ஜனனமாயிற்று

{மொழிபெயர்ப்பு: சந்தியா நடராஜன்}

இங்கு தாவோ என்றால் விழிப்புணர்வு என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனிதன் விழிப்புணர்வுடன் பிரபஞ்ச நியதியைப் பின்பற்றும் வரை கடவுளோ, நல்லது கெட்டது என்ற ஒழுக்கத்தைப் பின்பற்றத்தேவையில்லை. எப்போது விழிப்புணர்வினை இழக்கிறானோ அப்போது அவனுக்கு நற்பண்புகள் போதிக்கவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று மனதிற்கு பயத்தின் மூலம் விழிப்புணர்வு உருவாக்கத் தொடங்கினார்கள். இதிலிருந்து இது சரி, இது பிழை என்ற அறிவு, புத்திகள் உருவாகத்தொடங்கின!

அதுபோல் ஒரு குடும்பத்தில் அனைத்துப் பிள்ளைகளும் ஒத்திசைந்து, ஒற்றுமையாய் அமைதியுடன் வாழும் போது குடும்பத்தின் வளம் எப்போதும் அழியாது! விழிப்புணர்வு அற்ற குழப்பம் உருவாகும் போது யார் குடும்பத்தின் சொத்தினை, பெருமையினை வளர்ப்பானோ அவனை வாரிசாக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியது.

இதுபோல் நாட்டில் அமைதி இருக்கும் போது எவருக்கும் தேசபக்தி பற்றி எண்ணம் வராது. குழம்பியவுடன் ஒன்று பட தேச பக்தி உதயமாகிறது.

ஆகவே மக்களே விழிப்புணர்வுடன், எது பிரபஞ்ச தர்மமோ, நியதியோ அதனுடன் செயலாற்றுங்கள்! அது நன்மையைத் தரும்! விழிப்புணர்வு இல்லாமல், உங்களை உசுப்பேத்தும் அரசியல் வாதிகளை தேர்ந்தெடுத்து குழப்பத்தை உருவாக்குவதும் நீங்கள் தான்! அந்தக்குழப்பத்தை சமப்படுத்த தேசபக்தி என்று உரக்கக் கூறுவதும் நீங்கள்தான்!

ஆகவே விழிப்புணர்வுடன் இருங்கள்! அது சமநிலையான சமூகத்தை, தேசத்தை உருவாக்கும்!

இதுவே தாவோ சொல்லும் உபதேசம்!

Tuesday, January 25, 2022

தலைப்பு இல்லை

 

"எனது விழிப்புணர்வே எண்ணத்திற்கு ஆற்றலைத் தருகிறது. எனது விழிப்புணர்வு பூதக்கண்ணாடி போன்றது, அது எதில் ஏகாக்கிரம் கொள்கிறதோ அதைப் பெருக்குகிறது. அதை வெளிப்படுத்துகிறது. ஆகவே நான் எனது விழிப்புணர்வை தீய எண்ணங்களுக்குத் தரமாட்டேன்; அவை ஆடம்பரமாக ஒரு போதும் வாய்ப்பளிக்க மாட்டேன். ஏனென்றால் அவை விழிப்புணர்வினால் போசிக்கப்படுகின்றது, விழிப்புணர்வின் மேல் வளர்கின்றன, அவை எப்படி தன்னை குறிப்பிட்ட ஒன்றாக அடையாளப்படுத்தி வளர்கின்றனவோ அவற்றையே ஆகர்ஷிக்கின்றது".

அம்ருதோப நிஷத்

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

***************************************

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு;

விழிப்புணர்வு என்பது எம்மை ஒன்றுடன் அடையாளப்படுத்தி மனதை அதனுடன் தொடர்புடையவற்றுடன் ஈடுபடுத்தும் நிலை! நான் என்னை யோக சாதகன் என்று விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் மனம் யோக சாதனைக்குரிய எண்ணங்களில் கவனம் செலுத்தி அவற்றை விருத்தியாக்கி என்னை யோக சாதனையில் ஈடுபடுத்தும்.

நான் என்னை ஒரு தேவி உபாசகன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுத்தினால் என்னை தேவி உபாசனையில் ஈடுபடுத்தி தேவியின் ஆற்றலை ஆகர்ஷித்துத் தரும்.

நான் துன்பப்பட்டவன் என விழிப்புணர்வுடன் அடையாளப்படுதினால் மனம் துன்ப அலைகளை எழுப்பி அவற்றை ஆகர்ஷித்து துன்பமான வாழ்க்கையைத் தரும்.

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...