குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label தியான பலன். Show all posts
Showing posts with label தியான பலன். Show all posts

Friday, June 16, 2023

சதாசிவ மூர்த்த தியான பலன்

நாம் உருவங்களை கண்களால் பார்த்து மனக்கண்களில் காணும் போது எமது ஆழ்மனமாகிய சித்தத்தில் குறித்த எண்ணங்கள் சிந்தனைகள் தூண்டப்படுகிறது. 
துன்பத்தையும் தீமையையும் பார்த்தால் சித்தத்தில் துன்பமும் தீமையும் தூண்டப்படும். இப்படித் தூண்டப்படும் எண்ணங்களினால் எமது மனமும் புத்தியும் செல்வாக்குச் செலுத்தப்படும் போது நாம் அந்த வழியிலேயே நடந்து துன்பத்தை அடைய ஆரம்பிக்கிறோம். 
நாம் சதா காலமும் மங்களத்தையே அடைய வேண்டும் என்றால் நாம் தியானிக்க வேண்டிய ரூபம் சதாசிவம் - எக்காலத்திலும் மங்களமான நிலை. 
இறைவனின் உண்மையான நிலை மனம், வாக்குக்கு அகப்படாத பரசிவ நிலை; இந்த நிலையை ஆரம்ப நிலை சாதகர்கள் பெற முடியாது என்பதால் இறைவனின் ஆற்றலை மானிடர்கள் பெறக்கூடிய நிலை சதாசிவ நிலை. 
இந்த சதாசிவ நிலை பஞ்ச பிரம்ம நிலைகளின் ஒன்றிணைவு. சிவலிங்கம் என்பது இந்த பஞ்ச பிரம்ம நிலைகளும் ஒன்றிணைந்த ஒளி ரூபமான நிலை. 
இவை சாதகனுக்கு பயன்படும் நிலையில் வெளிப்படும் போது 
சத்யோஜாதம்
வாமதேவம்
அகோரம்
தத்புருஷம்
ஈசானம்
என்று ஐந்து நிலைகளாக வெளிப்படுவதே சதாசிவத்தின் ஐந்து முகங்கள்.
சதாசிவருடைய உடல் வித்யா தேகம் எனப்படுகிறது; சகல வித்தைகளையும் உள்ளடக்கியது. 
எமக்கு குறித்த ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாத போது நாம் அந்தப் பொருளினால் எல்லைப் படுத்தப்படுகிறோம். குறித்த பொருளைப் பற்றிய பரிபூரண அறிவு வாய்த்தால் நாம் அந்த எல்லைகளைத் தாண்டிச் செல்கிறோம். எமது அறிவு பெருக பெருக நாம் எமது எல்லைகளைக் கடக்கிறோம். சதா சிவ தத்துவம் என்பது நாம் எப்போதும் மங்களமாக இருக்க எல்லாவற்றையும் பற்றிய அறிவு - வித்தையினைப் பெற வேண்டும் என்பதாகும். 
சதாசிவ தியானம் சகல வித்தைகளையும் அருளக்கூடியது.

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...