இன்று காலை முரளி அண்ணா (Muralee Muraledaran)
தனது இளைய மகன் அவுஸ்ரேலியாவின் 12வகுப்பு தேர்வில் நூறுக்கு 99.15% பெற்று அவுஸ்ரேலியாவின் top 1% students இற்கு வந்திருக்கும் செய்தியை தந்தையாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்!
மகன் இந்தப் பரீட்சைக்குப் படிக்கும் போது அவர் இலங்கையில் பிள்ளைகளது கல்வி முன்னேற்றத்திற்கு என்று இலங்கை பூராகவும் உள்ள பாடசாலைகளின் வளங்களை எப்படி உருவாக்குவது என சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் என்னுடன் உரையாடலில் கழிந்தது; அவரது ஆன்மீகம், தியானம், மனம் பற்றி உரையாடினோம். அன்று சற்றுப் பதட்டமாகக் காணப்பட்டார்; வீட்டில் மகனது கணணி பழுதாகிவிட்ட்டது; தனியாக இருக்கிறார், பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார், என்று தொலைபேசிக்கூடாக ஏதோ ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்! உள்ளத்தின் அடியில் மகனைத் தனியே விட்டுவிட்டு வந்துவிட்டோமோ என்ற கவலையை மறைத்துக்கொண்டு மாத்தளையில் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்ற திட்டம் என்ன செய்யலாம் என்று எம்முடன் உட்கார்ந்து vision எழுதிக்கொண்டிருந்தார்! மாத்தளையில் மலையக தமிழ் சமூகத்திலிருந்து 100 பட்டதாரிகள் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள் என்றார்! மாத்தளையில் உள்ள அனைத்து சமூக நிறுவனங்களுடனும் நான் கல்வி வளர்ச்சி பற்றி உரையாடவேண்டும் என்றார்! உரையாடி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சிந்தனை மாற்றத்திற்கான உற்சாகம் தந்தார்!
பொறுப்பான ஒரு தந்தையையும், அதேபொறுப்புடன் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு உள்ளத்தையும் நான் அறிந்துகொண்டேன்! இது தனிப்பட ஒரு தந்தையாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய பாடமாகவும் எடுத்துக்கொண்டேன்!
புலம்பெயர்ந்த எமது உறவுகள் வேற்று நாட்டில் அந்த நாட்டின் அதியுச்ச 01% புத்திஜீவிகளாக அடுத்த தலைமுறை உருவாகுவது சமூகமாக நாம் சந்தோஷப்பட வேண்டிய விடயம்!
வாழ்த்துக்கள் முரளி அண்ணா!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.