குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 03, 2022

தலைப்பு இல்லை

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய

நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு

அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்

பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. (திருமந்திரம் - 392) 

இந்த பாடல் இரண்டாம் தந்திரத்தில் சர்வ சிருஷ்டி எனும் தலைப்பின் கீழ் வருகிறது.

இதனை தமிழறிவு, சைவ சித்தாந்த அடிப்படை கொண்டு பொருள் நோக்கின் முதலில் சந்தி பிரிக்க 

பயன் எளிதாம் பருமாமணி (செய்ய)

நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு

வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்

வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே. 

பதப்பொருள்: 

பருமாமணி=சிவபெருமான்

நயன்=இன்பம்

"ஆகிய" என்பது "செய்யிய" என்னும் வினையெச்சம்

நம்புதல்=விரும்புதல்

வயன்=வெற்றி 

வயணம்=காரணம்

பொருள்:

படைக்கும் ஆற்றல் (பிரம்மா) வெற்றியுடன் செயலாற்றும் காரணத்தை நான உணர்ந்து தெளிந்தேன் (வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே) அது என்னவென்றால் படைப்பினை நடத்துவதற்கான மூல காரண ஒளி படைப்பிக்கும் இடத்தில் அந்த சக்தியாக திரிந்து நிற்கிறது.  (வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்) அதாவது சிவம் என்ற போராற்றலே பிரம்மா எனும் படைக்கும் சக்திக்கு மூலமாக இருக்கிறது என்கிறார் திருமூலர் பெருமான். அதற்கு மேல் உள்ள வரியில் அது என்னவென்று கூறுகிறார்; இன்பமான ஒன்று எல்லோராலும் விரும்பப்படுவது ஒன்று உண்டு (நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு), அது யாரெனில் பருமாமணியான சிவனே!அவனைப் பற்ற எல்லாம் எளிதாகும். 

இந்தப்பாடலை பொருள் கொள்ள தனியே இந்த பாடலை மட்டும் கொண்டு விளங்கவியலாது என்பதறிதல் வேண்டும். 

சர்வ சிருஷ்டி அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து திருமூலர் சிவம் எப்படி ஒன்றாயிருந்து பலவாகி பராபரையாகி, பிரம்மாவாகி, விஷ்ணுவாகி ஆறாதாரங்களில் உறைந்து, பஞ்ச பூதங்களில் கலந்து செயல்கொள்கிறது என்பதனை விளங்குதல் வேண்டும்.

பழைய பதிவு

எழுதியது August 05, 2012

**************

#திருமந்திரம் #திருமூலர்


Tuesday, November 01, 2022

சித்த சம்ஸ்காரம்

பதஞ்சலி யோகத்தில் சித்தம் என்ற சொல் மிக முக்கியமானது. சித்தம் என்ற மனதின் பகுதியில் எழும் விருத்திகளை நிரோதம் செய்வதுதான் யோகம் என்று பதஞ்சலி வரையறுக்கிறார். 

சித்தம் என்பது எமது புலன்களால் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொள்ளும், கணனியில் hard disk போன்ற ஒரு பகுதியாகும். இந்த சித்தத்தில் ஏற்படுத்தும் பதிவுகள் அனைத்தும் சம்ஸ்காரங்கள் எனப்படும். சம்ஸ்காரங்கள் என்றால் நாம் பெற்ற அனுபவங்கள் விதை வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை. 

இந்த சம்ஸ்காரம் ஒருவனில் ஐந்து விதமாக சேருகிறது;

1) ஆன்மாவின் சுய இயல்பான ஸத், சித், ஆனந்தம்

2) முற்பிறவியில் ஐம்புலன்கள் மூலம் பெற்ற அனுபவங்கள்

3) தாய், தந்தை குடும்பத்தினரால் புகுத்தப்பட்ட சம்ஸ்காரங்கள்

4) வாழும் சூழல் புகுத்தும் சம்ஸ்காரங்கள்

5) தனது இச்சசக்தியால் சிந்தித்து தானே உருவாக்கிக்கொள்ளும் சம்ஸ்காரங்கள். 

இந்த ஐந்து சித்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே ஒருவனின் மன எண்ண ஓட்டம் ஆரம்பமாகி, பின்னர் அது அவனது பழக்கமாக மாறி அவனது வாழ்க்கையை முன்னேற்றவோ தாழ்த்தவோ வைக்கிறது. 

ஒரு மனிதன் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றால் அவன் மேற்குறித்த ஐந்து வழிகளிலும் நல்ல சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் தேவையற்ற சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்வதால் தவறான பழக்கவழக்கத்திற்கு உள்ளாகி வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்கத் தொடங்குவான். 

இப்படி தம்முள் ஏற்றுக்கொண்டு பதிப்பிக்கப்பட்ட சம்ஸ்காரங்களால் எழும் எண்ண விருத்திகளை நிரோதம் செய்து தமது சித்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவதே பதஞ்சலி கூறும் அந்தரங்க யோகம் - தாரணை, தியானம், சமாதி! 


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...