குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 31, 2019

தலைப்பு இல்லை

ஆடி அமாவாசையில் வந்து சேர்ந்த அன்னையர் இருவர்! 

மகாராணியும் சேனாதிபதியும்

Queen and Commander!    


தலைப்பு இல்லை

அமைச்சர் Mano Ganesan இன் இந்தக் கருத்து ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது!

அரசியல் என்பது மக்களின் நலனிற்காக அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற அறிவு! மக்களின் நலன் எது என்பது காலத்திற்கு காலம் மாறும்!

ஒரு காலத்தில் சாதிய அடக்கு முறையை எதிர்ப்பது!

இன்னொரு காலத்தில் பொருளாதாரத்தை சீர் செய்வது!

வாழ்வதற்கு தேவையான உட் கட்டுமானங்களை பெருக்குவது என்று காலத்திற்கு காலம் தேவைகள் மாறும்!

ஒன்றிணைந்து வாழாமல் உயர்வு இல்லை! 

ஆனால் பலர் தாம் நம்பும் தத்துவங்களான மார்க்ஸிஸம், கம்யூனிசம், தீராவிடம் அங்கு இருக்கிறதா என்று ஆராய்ந்து அவை இல்லை என்றவுடன் ஏதாவது ஒரு போலிக் காரணங்களைக் கற்பித்து புலம்புகிறார்கள்!

சிலவேளை அவர்கள் நம்பும் காரணங்களுக்கான அரசியல் தேவை தற்போது இல்லாமல் இருக்கலாம்! 

யதார்த்தத்தைப் புரியாமல் தாம் கற்ற தத்துவங்களை வைத்துக் கொண்டு அரசியல் பேசுபவர்கள் அரசியலினூடாக தமக்கு பெயர், புகழ், பணம் என்ற அடையாளம் தேடுபவர்கள்! இவர்கள் மக்களுக்கோ, சமுகத்திற்கோ எந்த நன்மையும் செய்யப் போவதில்லை! 

தெற்காசியாவின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசில் மிக வலுவான அரசு அமைவது என்பது பிரதேச நலனிற்கு மிக அவசியமானது! 

எங்கோ இருக்கும் அமெரிக்கவும் ஐரோப்பாவிற்கு தலையையும் வாலையும் காட்டி ஏமாறுவதை விட இலங்கை கலாச்சாரத்தின் ஆணிவேருடன் ஒன்றி நம்பிக்கையையும் உறவையும் வளர்ப்பது அவசியமானது! 

இந்தியா என்ற தேசத்தின் நலன் சாராமல் இலங்கை இயங்க முடியாது, இயங்கவும் கூடாது!


தலைப்பு இல்லை

நாளை காலை 07:30 இற்கு வசந்தம் தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை தொடர்பான நேர்காணல் உரையாடல்! 

வாய்ப்புள்ளவர்கள் பார்த்து விட்டு கருத்து தெரிவியுங்களேன்!


தலைப்பு இல்லை

தம்பி நிசாந்தனுடன் அவுக்கன பௌத்த ஸ்தூபி தரிசனமும் தாமரை சமர்ப்பணமும்!

Today visited most ancient Avukana standing statue of the Buddha near Kekirawa in North Central Sri Lanka and worshiped with white lotus. 

Kalavavi is One of the most beautiful place in Sri Lanka!


தலைப்பு இல்லை

அசூயை என்பது மிகப் பொல்லாத ஒரு துர்குணம். மனிதனின் ஆற்றலை வீணடிக்கும் ஒரு உணர்ச்சி!

பொறாமை என்று இதனைப் பொருள் கொண்டாலும் அதைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் உணர்ச்சி! 

ஒருவர் மேல் அசூயை ஏற்பட்டால் நாம் நினைத்துக் கொண்ட எண்ணத்திற்கு மேல் அவர் எவ்வளவு நல்ல குணம் இருந்தாலும், பரந்த மனம் இருந்தாலும் எம்மால் அவற்றை புரிந்துக் கொள்ளவோ, அறிந்துக் கொள்ளவோ முடியாதபடி மனநிலை வந்துவிடும்!

அசூயை ஏற்பட்ட மனம் செக்குமாட்டிற்கு உதாரணம் கூறமுடியும். செக்கு மாடு ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும். அது போல் அசூயை ஏற்பட்டவர் தாம் குறை கூற விரும்புபவரை எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார், ஆனால் இவர் குறை கூறும் நபரோ வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல் தனது இலக்குகளை துளைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருப்பார்! 

அசூயை ஏற்பட்டால் மனம் விரியாது! மனம் தீக்கோழி ஆகிவிடும்! அல்லது கண்மூடி உலகம் இருண்டு விட்டது ஆபத்து இல்லை என நினைக்கும் பூனை போன்று ஆகிவிடும்! யதார்த்தம் விலகி கற்பனை உலகில் சஞ்சரித்து வீணான பிரச்சனைகளை நாமாக உருவாக்கிக் கொண்டு மற்றவர்களை குறை கூறிக் கொண்டு இருப்போம். 

ஆகவே ஊரோடு சேர்ந்து ஓடுகிறோம் என்பது அவசியமான பண்பாக இருந்தாலும் எதற்காக ஓடுகிறோம் என்று விழிப்புணர்வு இல்லாமல் ஓடினால் முன்னே படுகுழி இருந்தால் கூட்டமாக விழுந்து சாகவேண்டியது தான்! 

இவ்வளவும் எதற்கு என்று கேட்கிறீர்களா, நண்பர் ஒருவர் நேசமணி ட்ரெண்டிங் ஒரு எதிர்ப்பு அரசியலில் குறியீடு என்று கூறினார்! அதற்குத் தான்! 

எதிர்ப்பு அரசியலா அசூயை அரசியலா என்பது ஆராயப்பட வேண்டும்!


ரிஷி சிந்தனை - 08



காயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு:

பாரதத்தில் பழங்காலம் முதல் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்கள் ஆண்களை விட புனிதமானவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். பெண்களை தேவி என்றே அழைத்திருக்கிறார்கள். வேதங்களில் உள்ளா எல்லாப்பாடல்களும் ரிஷிகளால் மட்டும் எழுதப்படவில்லை. சில பாடல்களை ரிஷி பத்தினிகளும் எழுதியுள்ளார்கள். கடவுள் அன்புள்ளம் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களும் அவருக்கு குழந்தைகளே. அப்படியிருக்க அவரால் எப்படி ஆண்களை மட்டும் உயர்த்தி பெண்களை தாழ்ந்த முடியும்?

ரிக்வேதத்தில் (10/85) உள்ள சில மந்திரங்கள் சூரிய சாவித்ரி என்ற பெண் ரிஷியால் உருவாக்கப்பட்டவை. ரிக்வேதத்தில் வரும் லோபமுத்ரா, கோதா, இந்திராணி, ஊர்வசி போன்ற பெண்கள் பிரம்ம வாதினிகளாக இருந்துள்ளார்கள். பிரம்மவாதினி என்ற சொல்லின் பொருள் வேதங்களுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர்கள் என்பதாகும்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் கற்றறிந்த பெரியோர்கள் வராணாசியில் (காசி) கூடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “பெண்கள் வேத மந்திரங்கள் சொல்லலாமா கூடாதா?” என்று வாதம் செய்தனர். இதற்கு ஆரம்பமாக குமாரி கல்யாணி என்ற பெண் பல்கலைக்கழகத்தில் வேத பாட வகுப்பில் சேரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தாள். பல்கலைக்கழக அதிகாரிகள் சாஸ்திரப்பிரகாரம் பெண்கள் வேதம் சொல்லக்கூடாது என்று வேத வகுப்பில் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். இது பற்றி ஆராய மதன் மோகன் மாளவியா அவர்கள் தலைமையில் கற்றறிந்த வேத பண்டிதர் குழு ஒன்று அமைத்து அந்தக்குழு சாஸ்திரங்களை ஆராய்ந்து “ஆண்களுக்கு உள்ளதைப்போல் பெண்களுக்கு வேதம் பயில உரிமை உண்டு: என்று முடிவு கூறியது.
சனாதன தர்மத்தின் உயிர்மூச்சான இந்த முடிவை 1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் மாளவியா அவர்கள் வெளியிட்டார்கள். குமாரி கல்யணி வேத வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.  மதம் மோகன் மாளவியாஜி அவர்கள் மிகப்பெரிய கற்றறிந்த பண்டிதர். தினமும் காயத்ரி உபாசனை செய்பவர். அவருடைய இந்த முடிவின் மூலம் பெண்களுக்கு காயத்ரி சாதனை செய்யும் உரிமை உண்டு என்பது வெளிப்படையாகியுள்ளது.
அந்தக் காலத்தில் சில ஆதிக்க சக்திகள் பெண்களை தமது குறுகிய மனோபாவத்தால் ஒடுக்கி வைத்தனர். இந்த ஒடுக்குமுறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்தது. அவற்றில் ”பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக்கூடாது” என்ற ஒடுக்குமுறையும் ஒன்று.

எமது கலாச்சாரத்தின் மத்திய காலமானது அன்னியர் ஆட்சியில் ஒரு இருண்ட காலமாக இருந்தது. அக்காலத்தில் உயர்ந்தோர் பலர் தோன்றி சீர்திருத்தங்களைச் செய்தார்கள். அந்த வகையில் மதன் மோகன் மாளவியாஜி செய்த இந்த சீர்திருத்தம் மிக முக்கியமானது. உயிரைப்படைப்பது, சமூகத்தை உருவாக்குவது பெண்களே. அத்தகைய பெண்கள் தெய்வ சக்தி பெற்றாலே நல்ல தெய்வீக குணமுள்ள சமூதாயம் உருவாகும். ஆகவே எல்லாப் பெண்களும் பயமின்றி காயத்ரி சாதனை செய்யலாம்.
(தொடரும்…..)

Thursday, May 30, 2019

ஸ்ரீ அரவிந்தரும் பாரதப்பிரதமரின் பதவியேற்பும்

1909ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அதி தீவிர போராளியாக இருந்து அலிப்பூர் சிறையிலிருந்து வெள்ளைக் காரர்களால் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட அரவிந்த கோஸ் (பிற்காலத்தில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் என்ற மகா யோகி) தனது இந்தியா என்ற தேசத்திற்கான தேசியத்தை வரையறுத்து அரசியல் பிரகடனத்தை உத்தர் பரா என்ற இடத்தில் ஒரு உரையாக நிகழ்த்துகிறார். 
அந்த உரையின் சாரம் 
The Sanatan Dharma, that is nationalism
இந்தியா என்ற தேசத்தை உருவகித்த யோகி அரவிந்தரின் பிறந்த நாள் அன்றே இந்தியா சுதந்திரம் பெற்றது! 
சரியாக 110 ஆண்டுகளின் பின்னர் ஸ்ரீ அரவிந்தர் உத்தரபாரா உரையாற்றி அந்த தினத்தில் (May 30, 1909) இந்தியாவின் தேசியம் சனாதன தர்மம் என்று கூறிய அந்த நாளில் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் இரண்டாவது பதவியேற்பு (May 30, 2019) நிகழ்கிறது.
அப்படியானால் ஸ்ரீ அரவிந்தரின் இந்தியா என்று வரையறுத்த உன்னத ஆன்மீக தேசத்தின் கனவை நிறைவேற்றப் போகிறவரா ஸ்ரீ நரேந்திர மோடி?
படத்தில் ஸ்ரீ அரவிந்தர் தனது 12 வருட யோக தபஸ் செய்த அறையில் பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி!
#Pray_for_Nesamani   

ரிஷி சிந்தனை - 07




காயத்ரி மந்திரம் மனிதனை ஆன்மீகப் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. காயத்ரி சாதனை தொடங்கியவுடனேயே ஒருவன் தன்னுள் ஒரு புதிய மாறுதல் ஏற்படுவதை உணர்கிறான். ஒழுக்க நெறியில் அவன் வளர வளர தீய எண்ணங்களும், செயல்களும், பழக்கங்களும் படிப்படியாக குறையும். அவனிடம் புலனடக்கம், பணிவு, பக்தி, உற்சாகம், சுறுசுறுப்பு, நேர்மை, உண்மை, இன்சொல் பேசுதல் போன்ற உயர்ந்த பழக்கவழக்கங்கள் வளர்கின்றன. அதன் விளைவாக சாதகனுக்கு வாழ்க்கையில் அமைதியும், மன நிறைவும் எற்படுகின்றது. மக்கள் அவனை மதிக்கிறார்கள். போற்றுகிறார்கள்.  தேவையானபோது அவனுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள். அவனிடம் துன்பம் தலைகாட்டுவதே இல்லை.

காயத்ரி சாதகனின் மனதில் ஒரு அசாதாரண மாறுதலும் ஏற்படுகிறது. அவன் உண்மையான அறிவு விளக்கம் பெறுவதால் அறியாமையால் விளையும் துன்பங்கள் அவனை விட்டு விலகுகின்றன. பூர்வ ஜென்ம வினையின் விளைவாக ஒவ்வொருவருக்கும் துன்பங்கள் வரத்தான் செய்யும். சாதாரண மனிதன் அவற்றை நஷ்டம், மரணம், நோய், எதிர்ப்பு, தாக்குதல் அதிர்ச்சி இப்படியான ஒரு தாக்கமாகவே உணராவான். ஆன்மீக வலிமை பெற்ற காயத்ரி சாதகன் உண்மை அறிவு பெற்றிருப்பதால், இவற்றிற்கான காரணங்கள் என்ன என்று தெளிவாக விளங்குவதால், அவற்றை சாதாரண நிகழ்ச்சிகளாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெறுவான். அவன் தைரியம், நம்பிக்கை, பொறுமை, மன அமைதி ஆகியவற்றுடன் தெய்வப்பற்றும் கொண்டவனாய் உலக வாழ்க்கையில் பற்றற்று வாழ்வான்.

காயத்ரி சாதகன் இந்த உலக வாழ்வில் வாழ்வதற்கான எல்லா நலன்களையும் தனது சாதனையால் பெறுகிறான். இவற்றிற்கெல்லாம் மேலாக அவன் அடையும் உன்னதமான பேறு ஆன்மீக வலிமை! இந்த ஆன்ம வலிமையை அடைவதால் நோய், தளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், வாணிபத்தில் நட்டம், குடும்ப சண்டை, வெறுப்புணர்ச்சி, பகைவரின் தாக்குதல், வழக்குகள், உறவால் துன்பம், பிள்ளைகளில் திருமணப் பிரச்சனை, மனத்தளர்ச்சி, எதிர்காலம் பற்றிய பயம், தீய பழக்க வழக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை போன்ற அனைத்து துன்பங்களும் காயத்ரி சாதனையால் நீங்கி விடுகிறது.

ஆகவே அனைவருக்கும் தம்மை சக்தியுடையவராக்க வாழ்வில் காயத்ரி சாதனையை முயல வேண்டும். காயத்ரி சாதனை செய்யும் எளிய முறையை சித்த வித்யா விஞ்ஞான சங்கத்தின் பிரசுரங்களிலும், நேரிலும் கற்றறியலாம்.
(தொடரும்….)

Wednesday, May 29, 2019

தலைப்பு இல்லை

எனக்கு பக்கத்தில் இருப்பவர் ஒரு பிரபலம், இவருடைய முகச் சாயல் எனக்கு இருப்பதால் பல இடங்களில் அவர் பெயரைச் சொல்லி சிரிக்க நான் முழிக்க என்று சுவாரசியமான சம்பவங்கள் ஏராளம்! 

இன்று காலை வெள்ளவத்தையில் ரோட்டில் நடந்து கொண்டிருந்த என்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திருப்பி கொண்டு "ஹாய் சஜி" என்று அருகே வந்தவர், அருகே வந்தவுடன் சுதாரித்துக் கொண்டு குழம்பிய அவருக்கு சிரித்துக் கொண்டு "நான் அவனில்லை" என்றேன்.


ரிஷி சிந்தனை - 06


தெய்வ உபாசனையின் அடையாளமாக புறப் பூஜையில் பல சடங்குமுறைகள் வழக்கத்தில் உள்ளன. தீர்த்த யாத்திரை, கோயில் தரிசனம், தோத்திர பாராயணம், சோடச உபசாரம், விரதம், பிரதட்சணம், அபிஷேகம், திருவிழா , இரவு கண்விழித்தல், விரதம் என இந்துமதத்தை சார்ந்த ஒவ்வொரு சமூகமும் தமது வழக்கத்திற்கு ஏற்ற வகையில் கடைப்பிடித்து வருகின்றனர். இவை அடிப்படையில் மனிதர்களுக்கு பண்பையும், நல்ல குணத்தை கூட்டு சமூகமாக வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இதைத்தாண்டி உணர்வு, மனம் என்பவற்றை பயன்படுத்தி சாதனை செய்யும் உயர்மட்ட சாதனைகளும் இருக்கச் செய்கின்றன.

உயர் மட்ட சாதனையில் இரண்டு முக்கிய சாதனைகள் 1) ஜபம் 2) தியானம். இந்திய பாரம்பரியத்தில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த ஒரு ஆன்மீக பயிற்சிகளிலும் இந்த இரண்டு அமிசங்கள் இல்லாமல் இருக்க முடியாது. மற்ற எந்தப் பயிற்சிகளும் இந்த இரண்டினது ஏதோ ஒரு அங்கமாகத்தான் இருக்க முடியும்.

ஜபத்தின் மூலமாகத்தான் இறை சக்தியை எம்முள் ஈர்க்க முடியும். ரத்தினம் இல்லாத நாகம் தனது சக்தியை இழந்து விரக்தி அடைவதுபோல் நாம் தெய்வ சக்தியுடனான தொடர்பினை இழந்து அறியாமையிலும் பயத்திலும் காலத்தை வீணாக்குகிறோம். இறை ஞானம் ஜெபத்தின் மூலம் ஒருவனில் செயற்படும். தனது பெயரைச் சொல்வதால் மகிழ்ந்து இறைவன் நன்மை செய்கிறான் என்று நாம் அறியாமையில் எண்ணக்கூடாது. அந்தளவிற்கு கீழ்த்தரமானவன் அல்ல இறைவன். அதே வேளை எம்மைப் படைத்துவிட்டதால் எல்லாப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் வேலைக்காரனும் அல்ல. எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் அந்தப்பரம்பொருளின் ஒளி எல்லாவற்றிலும் உறைந்திருந்தாலும் மனதின் சலனத்தால் தன்னை அறியமுடியாமல் இருக்கின்றது. இந்த சலனத்தை அடக்கி இறையின் ஒளியை அனுபவத்தில் அடையும் செயல்தான் ஜபசாதனை.

இறைவன் மனிதனிடமிருந்து ஒழுங்கு, மற்றும் தனக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைத்தான் எதிர்பார்க்கிறான். ஓருவர் ஜெப சாதனையை செய்து கொண்டு தனது கடமையை, வாழ்க்கை ஒழுங்கை கடைப்பிடிக்காமல் எந்தப்பலனும் பெறமுடியாது.

மின்சக்தியை சரியான ஒழுங்குடன் பயன்படுத்தினால் ஒளி, வெப்பம், காற்று என பலன்களைப்பெறலாம். நமக்கு ஒளிதரும் மின்சாரம்தானே என்று கைகளை வைத்து விளையாடப்பார்த்தால் மரணத்தையே தரும். இதைப்போல் இறையும் ஓர் உயர்ந்த சக்தி, இதை ஒழுங்குடன் சாதனை செய்பவன் வாழ்க்கையில் எல்லாவித பேறுகளும் பெற்று இன்பமயமான வாழ்க்கை பெறுவான்.
இப்படி ஒளிமயமான புத்தியை பெறுவதற்கு வழிகாட்டுவதே காயத்ரி மகா மந்திரமாகும். இதை குரு மந்திரம் என்று சொல்லுவது சாலப்பொருந்து. அக ஞானத்தை சீராக்குவதில் காயத்ரி ஜெபம் பெரும் உதவி செய்யும்.
(தொடரும்…..)


வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான் குழப்பம் - நேர்கோட்டுத் தன்மை - புரிதல் Chaos - Non-linearity - Understanding

விஷயங்களை அணுகுவதில், புரிவதில் வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற linear thinking ஆன நேர்கோட்டுச் சிந்தனை யதார்த்தத்தினை அதி இலகுவாக்கும் ஒரு சோம்பேறித்தனம். 
எல்லாம் சம நிலையில் இருக்கின்றது என நினைப்பது ஒரு மாயை அல்லது கணப் பொழுது உண்மை. 
அதே போல் அனைத்தும் ஒரு குழம்பிய குட்டையாக அறிய முடியாமல் Chaos ஆக இருப்பது என்று எண்ணுவதும் யதார்த்தப் புரிதலிலிருந்து தப்பிக்க நினைக்கும் சோம்பேறித்தனம். 
எல்லாத் தொகுதிகளின் இயக்கத்திற்கும், குழப்பங்களிற்கும் பின்னால் ஒருவித அநேர்கோட்டு (Nonlinear) நிலையுடன் அறியப்படக் கூடிய (Predictable) ஒரு சுய ஒழுங்கமைப்பிற்கான (self organizing) யதார்த்த விதியுடன் (Logic) அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதை அறிபவனே உண்மையான அறிவாளி!

Tuesday, May 28, 2019

ரிஷி சிந்தனை - 05



காயத்ரி சாதனை மிக உயர்ந்த ஆன்ம பலத்தை வளர்க்கக் கூடிய ஆன்மீக பயிற்சி.

சிலர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் பயிற்சி பெறுகிறார்கள். போட்டியிலும் கலந்து கொள்கிறார்கள். சந்தர்ப்ப வசத்தால் வெற்றி பெற முடியவில்லி. தோல்வியுறலாம், இப்படி தோல்வியுற்றதால் அவர்கள் பெற்ற பயிற்சி வீணாவதில்லை. அவர் பெற்ற உடல் வலிமை இழக்கப்படுவதில்லை. அந்த வலிமை அவரிற்கு வாழ் நாள் முழுவதும் துணை புரியும்.

காயத்ரி சாதனை ஆன்மாவை அறிந்து பிரம்ம ஞானம் பெறுவதற்குரிய சாதனையாக இருந்தாலும் அதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டாலும் தான் செய்யும் காயத்ரி சாதனையின் பலனாக உடல் பலம், நீண்ட ஆயுள், அழகு, செயல்திறன், இல்லறசுகம், பகைவருக்கு அஞ்சாமை போன்ற பல பேறுகள் காயத்ரி சாதனையின் உப பலன்களாக கிடைக்கின்றன.

இதைப்போல் குறித்த தேவைக்காக காயத்ரி அனுஷ்டானம் செய்யும் போது அந்தப்பலன் கிடைக்காமல் போகலாம். அந்தக்குறிப்பிட்ட நன்மை கிடைக்காததால் சாதனை பலனற்றது என்று மயங்கிவிடாமல் சாதனையை தொடரவேண்டும். இதனால் உடலும் உள்ளமும், வாழ்வும் சீர்படுவது நிச்சயம். அதனால் வாழ் நாள் முழுவதும் இன்பமயமாகி விடுகிறது.

ஆன்மா அழிவற்றது. பிரம்ம சொரூபம்; சித்திகளின் பிறப்பிடம், எரியும் கரி சாம்பலால் மூடப்பட்ட ஒளி மங்கிக்காணப்படும். அதுபோல் அக அழுக்குகளால் மூடப்பட்ட ஆன்மா மங்கி தனது சக்தியை வாழ்வில் செயற்படுத்தாது. காய்த்ரி சாதனையால் ஒருவனில் நிறைந்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் விலகி விடுகின்றது.

சாம்பல் நீக்கப்பட்ட தண்டல் ஜொலிப்பது போல் காயத்ரி சாதனையால் அழுக்கு நீக்கப்பட்ட ஆன்மா பிரம்ம தேஜஸால் ஒளிரும். அப்போது அந்த காயத்ரி சாதகன் எல்லா சித்திகளும் கைவரப்பெறுகின்றான். யோகிகள் நீண்ட கால தவத்தால் பெறும் சித்திகளை காயத்ரி சாதகன் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு எளிய முயற்சியால் குறுகிய காலத்திலேயே அடைகிறான். இந்த காயத்ரி சாதனையின் விளைவினை தற்காலத்தில் விரைவில் நேரிலேயே காணலாம்.

கடந்த அறுபது வருங்களில் இலட்சக்கணக்கானவர்கள் காயத்ரி சாதனையை தமது வாழ்வின் ஒரு அங்கமாக கடைப்பிடிப்பதன் மூலம் தமது வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். தமது அனுபவத்தின் மூல இவர்கள் சிறந்த காயத்ரி சாதகர்களாகி உள்ளார்கள்.

அனைவரும் தமது கடமைகளை, வாழ்வு இன்பங்களை துறக்காமல் இறை அருளை தம்மில் செயற்படுத்தும் எளிய வழி காயத்ரி சாதனை.
(தொடரும்……)

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...