குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label ஆயுர் வேதம். Show all posts
Showing posts with label ஆயுர் வேதம். Show all posts

Friday, June 20, 2025

ஆயுள் - ஆயுர்வேதம் - 03

 உடன் மனம் உயிரினை ஒத்திசைவாய் ஒருங்கிணைத்தால் அது ஆயுள் என்றும், இதைச் சாதிக்கும் ஞானம், அறிவு ஆயுர்வேதம் என்றும், ஏன் எமக்கு ஆயுள் வேண்டும் என்றால் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்புருடார்த்தங்களை அனுபவிப்பதற்காகவும் என்று பார்த்தோம். ஆயுள் வேதத்தினைக் கற்பதன் பலன் உடலை ஆக்கும் தாதுக்களின் சம நிலை உடலில் எப்படிச் செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமே உடலை, உடலுக்கு ஆதாரமான மனதை, மனதிற்கு ஆதாரமான உயிரை ஒருங்கிணைக்க முடியும்,

ஆகவே உடலின் தாதுக்களை சம நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் மனதை சம நிலைப் படுத்தலாம். மனம் சம நிலையில் இருப்பதன் மூலம் உயிருடன் தொடர்பினை ஒருங்கிணைக்கலாம். 

நோய்கள் என்பவை தாதுக்களின் சம நிலையின்மையினை ஏற்படுத்தி இந்த உடல் மன உயிர் ஒருங்கிணைப்பினைக் குழப்புபவை. ஆகவே உடல் பாதிக்கப்பட்டால் அகவலிமை குன்றும். உடலில் நோய் இருந்தால் நாம் எமது வாழ்வில் சாதிக்க வேண்டியவை சாதிக்கப்படமால் உடல் அழிவை நோக்கிச் செல்லும். 

ஆகவே மனிதனின் முதல் இலட்சியம் தனது மனதையும், உடலையும் நோயற்று சம நிலையில் வைத்திருத்தல்.  இதைச் சாதிக்கும் போதே அவன் உயிரை அறியும் பக்குவம் பெறுகிறான். 

மனம் உயிரின் ஆற்றலை அறிய வேண்டும் என்றால் அதன் விருத்திகளைக் குறைக்க வேண்டும். சித்த விருத்திகள் அற்ற மனமே தூய்மையான ஆரோக்கியமான மனம்.  மனதின் விருத்திகளைக் குறைக்க தியானம் அவசியம். 

ஆகவே ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியம் என்பது தாதுக்கள் சம நிலையான ஸ்தூல உடலும், விருத்திகள் குறைந்த/விருத்திகள் அற்ற சித்தமும் ஆகும். 




Thursday, June 19, 2025

ஆயுள் - ஆயுர்வேதம்-02

 உடல் -  மனம் - உயிர் இவற்றின் ஒன்றிணைவு ஒத்திசைவு ஆயுளைத் தரும் என்று முன்னைய உபதேசத்தில் பார்த்தோம். இதை எப்படிச் சாதிப்பது என்ற அறிவு ஆயுள்வேதம் என்று பார்த்தோம். 

இதனால் என்ன பிரயோசனம் - பலன்? 

ஆயுள்வேதத்தின் பலன்/பிரயோசனம்தான் என்ன? 

இந்த அறிவை/ஞானத்தைப் பெறுவதன் மூலம் ஒருவன் தனது உடல் ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்கள் அவற்றிலிருந்து உருவான சப்த தாதுக்களினதும் சம நிலையைப் பேணமுடியும். இதுவே ஆயுள் வேதம் எனும் ஞானத்தைக் கற்பதால் நாம் பெறும் பிரயோசனம்.  இந்த சம நிலையைப் பேணுவதே ஆரோக்கியம். 

ஏன் நாம் உடல் தாதுக்களின் சம நிலையைச் சரியாகப் பேணவேண்டும்? 

நாம் எமது வாழ்வின் இலட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் நாம் எமது வாழ்வில் அடைவதற்கு நீண்ட ஆயுள் அவசியமாகும்.  ஆகவே ஒருவன் தனது தாதுக்களின் சம நிலையைப் பேணி ஆரோக்கியத்தையும், அதன் மூலம் உடல், மனம், உயிரினை இணைத்து நீண்ட ஆயுளையும் பெற்று தனது வாழ்க்கையின் இலட்சியமான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் அனுபவித்து பரிபூரணனாக வேண்டு, 

இதுவே நீண்ட ஆயுளைப் பெறவேண்டிய ஆயுள்வேதத்தை நாம் கற்பதன் நோக்கமாகும்! 

ஆயுள் - ஆயுர் வேதம்

இன்று பலரும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பல உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் என்று ஆயுவேதத்தை நாடி வருகிறார்கள். உண்மையில் ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவம் அறியாமல் மருந்து உண்பதையும், மசாஜ் செய்வதையும், பஞ்ச கர்மசிகிச்சையையும் ஆயுர்வேதம் என்ற பெயரில் நம்புகிறார்கள். 

ஆரோக்கியமாக இருந்த பலர் அற்ப ஆயுளில் இறந்து போகக் காண்கிறோம். அப்படியென்றால் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் என்ன தொடர்பு! 

ஒருவனின் ஆயுள் என்பது 

. ஶரீராத்மமன꞉ ஸம்ʼயோக³ ஆயு꞉ .

சரீரம் - மனம் - ஆத்மா ஆகிய மூன்றினதும் ஸம்யோகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 

ஒருவன் நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமென்றால் அவனது உயிரும், மனமும், உடலும் ஒத்திசைந்து இணைந்து செயற்பட வேண்டும். இப்படிச் செயற்பட்டால் மாத்திரமே அவனுக்கு ஆயுள் வாய்க்கும். 


உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் எப்படி ஒன்றிணைத்து ஒத்திசைத்து செயற்பட வைப்பது என்ற ஞானத்திற்கு, அறிவிற்குப் பெயர்தான் ஆயுர்வேதம். 

ஆகவே அகத்திய குல மாணவர்களே ஆயுர்வேதம் என்பதன் உண்மைப் பொருள் அறிந்து குரு வழி நின்று ஆயுர்வேதம் கற்று மேன்மையடையுங்கள்! ஆயுவேதம் என்பதை மொழி, அரசியலில் பயன்படுத்து அர்த்தங்களைக் கண்டு குழம்பி அறியாமையில் வீழ்ந்து விடாதீர்கள். 

Tuesday, January 31, 2023

சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மறையியல் கோட்பாடுகள் - 01

காரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் உருவாகி வன்மை அடைந்து ஸ்தூல சரீரத்தை உருவாக்குகிறது என்பதே சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையாகும். 

இந்த காரண சரீரம் ஆன்ம ஒளியாக இறைவனிலிருந்தும் மற்றைய உப ஒளிகளாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியில் இருந்து உருவாக்குவது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. 

இந்த நவக்கிரக - நட்சத்திர சக்திகளை பூமியின் உறைந்த உயிரற்ற வடிவமே தாதுவர்க்கம் எனப்படும் minerals. 

இந்த உயிரற்ற தாதுக்களை உயிருள்ள தன்மைக்குள் கொண்டு வருவதே தாவர வர்க்கங்களின் தொழில். இதனால் மூலிகை வர்க்கம் மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. தாது வர்க்கம் பாவிக்க வேண்டுமானால் தகுந்த புடத்தினால் அணுத் தன்மை உருவாக்கப்பட வேண்டும். இந்த மருந்துகளை செந்தூரம்/பஸ்பம்-சுண்ணம், கட்டு என்று சொல்லுவோம். அப்படியிருந்தும் அவை பாவிக்கப்படும் போது அளவும், பத்தியமும், துணை மருந்துகளும் அவசியம்.

விலங்குகளும், மனிதனும் தனது உடலைப் போசிக்கும் நவக்கிரக நட்சத்திர சக்திகளைக் கிரக்கிக்க வேண்டுமானால் அவற்றை தாதுக்கள் உறைவித்து பூமியில் சேமிக்க, அப்படிச் சேமித்தவற்றை தாவர வர்க்கம் உயிர்த் தன்மையுள்ளதாக்க விலங்குகளும் மனிதர்களும் பயன்படுத்துகிறார்கள். 

மேற்குறித்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் ஜோதிடம் மருத்துவத்திற்குள் வருகிறது. ஒருவன் பிறக்கும் போது அவனது சூக்ஷ்ம சரீரத்தில் அவன் ஏற்ற கிரக நட்சத்திர ஆற்றல்களின் வலிமை என்பதே ஜாதகம். இந்த இருப்பை வைத்துக் கொண்டு அவன் குறித்த கர்மங்களில் -செயல்களில் என்ன நிலையை அடைவான் என்பதை அனுமானிப்பதே!

சூக்ஷ்ம சரீரம் என்ற அமைப்பு காரண சரீரத்திலிருந்து உயிர்த் தன்மையை ஸ்தூல உடலுக்கு கடத்தும் வேலையைச் செய்யும் அதேவேளை உடலிலுள்ள திரவப் பதார்த்தங்கள் அனைத்தினதும் ஓட்டத்தினைச் செம்மைப் படுத்துகிறது. 

இந்த ஓட்டத்தை நாடி - பிராண ஓட்டம் என்று சித்த ஆயுள் வேதம் குறிப்பிடுகிறது. ஸ்தூல உடலில் இது இரத்த ஓட்டத்தினால் அறியப்படுகிறது. எனினும் நாடி என்பது இரத்த ஓட்டத்தினூடாக சூக்ஷ்ம உடலின் பிராண ஓட்டத்தினை அறியும் முறையாகும்.


Wednesday, December 15, 2021

தலைப்பு இல்லை

Latin American Siddha Ayurveda Study Group

Today learning - Decoding the Charaka Samhitha Sutrastana.

Getting the knowledge to mind has three stages:

1) Tackling your lower mind with confusion and questions.

2) Developing your higher mind to receive the superior knowledge 

3) Connect your cultivated higher mind with over mind.

This process is given in Charaka Samhitha to achieve;

1) learning the Samhitha with appropriate questions to over come the lower mind

2) reciting the sloka and learning every day to cultivate the higher mind.

3) Connect the higher mind to Rishi, in the context of Charaka Samhitha Bharathwaja, Indra, Ashwini Kumara, Dakshaprajapathi, and Bhramha. 

This was explained in today session.

Here the summary video! 

Sharing with lot of love  

Monthly two sessions are going on, if anyone interested please register.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...