ஒரு யோகியின் உயர்ந்த சிவயோக சாதனை என்ன என்று சிவயோக பிரதீபிகை கூறுகிறது. இந்த எளிய இரகசிய சாதனையினை விளக்கத்துடன் இங்கு அனைவரும் பயன்பெற வெளிப்படுத்துகிறோம்.
யோகம்
பழகுபவர்கள்
கட்டாயம்
உடலை
பிழிவதுடன்
நின்று
விடாமல்
இந்தச்
சாதனையையும்
செய்யப்
பழகுங்கள்.
உண்மையான
சிவயோகம்
என்பது
இந்திர
நிக்கிரகம்
(புலனடக்கம்)
தாரணை,
தியானம்,
சமாதி
என்று
நான்கு
அங்கங்களைக்
கொள்கிறது.
இதை
அந்தர
சதுரங்க
சிவயோக
விதானம்
என்று
சொல்லுவார்கள்.
இது
ஆரம்ப
நிலையில்
பாஹிய
சிவபூசை
செய்பவர்களுக்கு
கந்தம்,
புஷ்பம்,
தூபம்,
நைவேத்திய
உபசாரங்களின்
குறியீடாகத்
தரப்பட்டுள்ளது.
சிவத்தை
அடைய
சிவயோக
சாதனைக்கு
நாற்றமெடுக்கும்
புலன்கள்
சந்தனம்
போல்
நறுமணமுடையதாக
மாறவேண்டும்.
ஆகவே
கந்தம்
சமர்ப்பயாமி
என்று
சொல்லப்படும்
பாஹ்ய
பூஜை
உபசாரம்
புலன்
கள்
அடங்கி
சிவத்தியானம்
நோக்கிச்
செல்லவேண்டும்
என்பதன்
குறியீடு!
அடுத்தது
அலைந்துகொண்டிருக்கும்
மனம்
புகைபோல
சலனித்துக்கொண்டிருக்காமல்
ஒருமையாக
ஏகாக்ரமடைந்து
தைலதாரையாக
எண்ணங்கள்
சிவத்தின்
மேல்
சென்றால்
அந்த
தாரணை
நிலையின்
குறியீடு
தூபம்.
மூன்றாவது
தாரணை
நிலையடைந்த
சலனமற்ற
மனம்
மலரும்;
ஆகவே
பூக்கள்
சமர்ப்பித்தல்
தியானத்தின்
குறியீடு!
நான்
காவது
இப்படி
தியானம்
தாண்டி
ஸமாதி
அடையும்
போது
ஆன்மா
சிவத்திற்கு
நைவேத்தியம்
ஆகுவதால்
நைவேத்தியம்
ஸமாதி
நிலையின்
குறியீடு!
நீங்கள்
யோக
சாதனை
புரிபவர்களாக
இருந்தால்
தினசரி
இந்த
நான்கு
உபசாரங்களையும்
இந்த
அர்த்தத்துடன்
சிவனுக்கு
சந்தனம்,
தூபம்,
பூக்கள்,
நைவேத்தியம்
மாத்திரம்
வைத்து
இந்த
சாதானையைச்
செய்யலாம்.
சந்தனம்
சமர்ப்பிர்த்து
ஓம்
நமசிவாய
எனது
இந்திரியங்கள்
–
புலன்கள்
அடங்கி
நான்
யோகத்தில்
சித்தி
பெற
அருள்புரிய
வேண்டும்!
என்று
பிரார்த்திக்க
வேண்டும்.
தூபம்
சமர்ப்பித்து
ஓம்
சிவாயநம
எனது
மனம்
ஒருமையடைந்து
தாரணை
ஆற்றல்
பெற்று
யோகசித்தி
பெற
அருள்புரிய
வேண்டும்!
என்று
பிரார்த்திக்க
வேண்டும்
பூக்கள்
சமர்ப்பித்து
ஓம்
சிவயவசி
நான்
தியான
நிலை
கூடி
யோக
சித்தி
பெற
அருள்புரிய
வேண்டும்!
என்று
பிரார்த்திக்க
வேண்டும்
நைவேத்தியம்
சமர்ப்பித்து
ஓம்
சிவசிவ
நான்
சிவார்ப்பணத்தால்
ஸமாதி
நிலை
யோக
சித்தி
பெற
அருள்புரிய
வேண்டும்!
என்று
பிரார்த்திக்க
வேண்டும்
பின்னர்
கண்கள்
மூடி
சிவலிங்கம்,
சிவபெருமான்
தியானத்திலிருக்கும்
படம்,
சிவாலயத்திலிருந்து
உங்கள்
யோக
சாதனையைச்
செய்யலாம்!
இது
மிகவுன்
துரிதமாக
உங்களை
யோகசாதனையில்
முன்னேற்றும்!
ஒருவன்
புலனடக்கம்,
மன
ஒருமை,
தியான
சித்தி,
ஸமாதி
ஆகிய
நான்கு
அங்கங்களையும்
சதுரங்கயோகம்
பெற்றால்
சிவபெருமானுக்கு
மிகவும்
பிரியமான
சிவயோகி
என்று
சிவயோக
பிரதீபிகை
கூறுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.