குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு. Show all posts
Showing posts with label ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு. Show all posts

Sunday, May 12, 2013

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக,
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்
திருமகன்(திருமகள்) நான் பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருகுருவின் அருள்பெறவே
திருமானின் அருள்பெறவே
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
தினம் தினம் வணங்குகின்றோம்
தாய்பூமியில் தவமிருந்தே
தரணிதனில் பக்குவத்தை
தன் உணர்வின் பொக்கிஷமாய்
தழைத்தோங்கும் உயர் ஞானமுடன்
தக்கதொரு செயலுருவாய்
திக்கெட்டும் சத்தியத்தின் சக்தி நிலை
திகழ்ந்தோடும் வளர்ச்சியில் யாம்
திகழ்ந்திடவே அருள் செய்வீர்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்

-- மஹரிஷி ஈஸ்ரவரப்பட்டர் -

தாய்தந்தை ஆசீர்வாதமே உண்மை ஆன்ம முன்னேற்றத்தினை தரும்!

Tuesday, December 06, 2011

ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு,


கண்டொன்று கதைப்பர்
காணாமல் பல கதைப்பர்
விண்டொன்று உரைப்பர்
விபரீதம் பல விதைப்பர்
உண்டென்ற உண்மையை
உன்னுள்ளே ஊன்றிப்பார்
விண்ணுலகம் சென்றுதான் 
விளங்கவேண்டும் பலவென்றால்
பக்தியென்ற வழிதனை
படைத்ததின் பொருள் என்ன?
மனிதன் என்ற பிம்பத்தில்
மமதைதனை விலக்கிவிட்டால்
ஞானி கண்ட வழியினை
ஞானமுடன் காணலாம்
சித்தம் கொண்ட செயலினை
சித்ததுடனே கண்டிட்டால்
தேவர்கள் செயலா யொன்றியே
தெய்வத்தின் சக்தியாய் கலந்திடலாமே

- ஈஸ்வரப்பட்ட மகரிஷி -

Tuesday, August 02, 2011

ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு


புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதறாதே 
இகழ்ந்துரைக்க எண்ணாதே

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...