நேற்று ஆசிரிய நண்பர் ஒருவர் பாடசாலை முன்னேற்றத்திற்கான ஆய்வினை புள்ளிவிபரவியலை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்வியை தனிப்பட்ட முன்வைத்திருந்தார்!
நான் வர்த்தக விவசாய ஆய்வுகளை நெறிப்படுத்தி அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராயும் குழுவிற்கு தலைமத்துவம் வழங்கி உயர் முகாமைத்துவக் குழுவின் மூலோபாயத்திற்குரிய திட்டங்களை வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்ததாலும் பெற்ற ஆய்வு அனுபவத்தை இங்கே கல்வி முன்னேற்றத்திற்கு எப்படி பாவிக்கலாம் என்ற சிந்தனையே எனது முந்தைய பதிவு! ஆகவே இதுபற்றி உரையாடுவதற்குரிய எனது தகுதி பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டாம்!
இந்த சுயபுராணம் ஏன் என்றால் அவையடக்கத்திற்காக! சில ஆசிரிய நண்பர்கள் இவர் என்ன கல்வித்துறை சார்ந்தவரா இதையெல்லாம் பேசுவதற்கு என்று கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதால் எனது தொழில் சார் அனுபவம் என்ன என்பதையும் தகுதியை பொதுச்சபையில் கூற வேண்டியது கடமையாகிறது.
முதலாவது அடிப்படை எந்தவொரு பகுப்பாய்வும் ஒரு விடயத்தினைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியே நாம் செய்கிறோம். ஆகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் பாடசாலையில் கல்வித்தரத்தை அறிந்து கொள்ள எத்தகைய கேள்விகளைக் கேட்கவேண்டும் என்பது!
ஒரு பாடசாலையின் கல்வித்தரம் என்ன என்பதனைக் குறிகாட்ட க. பொ. த. சாதாரண தரத்தின் அடைவுகளை கீழ்வரும் கேள்விகளின் மூலம் ஒப்பிடலாம்.
1) எனது பாடசாலை தேசிய சராரசி சித்தி விகிதத்தினை அடைந்திருக்கிறதா? இந்த வருடம் தேசிய சராசரி சித்தி விகிதம் 72%; இதன் அர்த்தம் என்னவென்றால் ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் கூட்டுத்தொகையை மொத்தமாக பரீட்சை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்தால் சராசரியாக நூற்றுக்கு 72 பிள்ளைகள் உயர்தரத்திற்கு தகுதியாகியுள்ளார்கள். ஆகவே எனது பாடசாலையில் நூறு பேருக்கு எத்தனை பேர் உயர்தரத்திற்கு தகுதியாகியுள்ளார்கள் என்பதை நான் அறிய வேண்டும்.
2) இப்போது எனது பாடசாலையில் சித்தி விகிதம் என்ன? 52 %, இதனை நாம் எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும்? எனது பாடசாலையில் நூறு பிள்ளைகள் பரீட்சை எடுத்தால் 52 பிள்ளைகள் மாத்திரமே உயர்தரத்திற்கு சித்தியுறுகிறார்கள்.
3) நாம் தேசிய சராசரி சித்தி வீதத்திற்கு கீழே இருந்தால் கல்வியின் இன்னும் சராசரி அளவீட்டினை அடையவில்லை என்று அர்த்தம்.
4) சாதாரண தரப்பரீட்சை என்பது வெறுமனே ஒரு அடிப்படைப் பரீட்சை மட்டுமே ஆகும். இதில் தேசிய சராசரியை எட்டிப்பிடித்தால் போதுமென்று பாடசாலை நிர்வாகம் திருப்தியுற முடியாது. ஏன்?
5) உயர்தரத்தில் சித்தியுறுவதற்கான நிகழ்தகவு குறைவானதாகும். தமது சாதாரண தர சித்திவிகிதத்தை உயர்வாக வைத்திருக்கும் பாடசாலைகளே அதிகளவு மாணவர்களை உயர்தரத்தில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வல்லவையாக இருக்கும்.
6) இதனை மாத்தளை வலயத்தில் சென். தோமஸ் ஆண்கள் கல்லூரி, விஞ் ஞானக் கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளின் சாதாரண சித்தி விகிதத்தை ஒப்பிட்டு அறிந்து கொள்ள முடியும். இவை 100% சாதாரண சித்தி விகிதத்தைக் கொண்ட உயர்தரத்தில் கணித விஞ் ஞான பாடங்களைக் கொண்டிருக்கும் பாடசாலைகள்; இந்த இரண்டு பாடசாலைகளும் நிச்சயமாக ஒவ்வொரு வருடமும் கணித விஞ் ஞானப் பிரிவில் பொறியியலாளர், மருத்துவர்களை உருவாக்கும் கல்லூரிகளாகும். சொல்லி அடிக்கும் கில்லிகள் என்று சொல்லலாம்! இதற்கு மேல் அதி திறமையுட ஒரிரு மாணவர்கள் மற்றையப் பாடசாலைகளில் இருந்து இப்படிஅதியுச்ச சித்தியினைப் பெறுவார்கள்.
7) இந்த அடிப்படையில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகளைக் கொண்டிருக்கும் ஆமீனா மகளீர் கல்லூரி 83% சித்தி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. பாக்கியம் தேசிய கல்லூரி 77% சித்தி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டும் மகளீர் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை இரண்டும் தமிழ் மொழி மூலத்திற்கு ஒரளவு நம்பிக்கையூட்டும் பாடசாலைகள்.
ஒரு பாடசாலை கணித, விஞ்ஞான, தொழில் நுட்ப பாடங்களில் அதிக மாணவர்களை உள்வாங்கி பல்கலைக்கழக அனுமதி பெற வேண்டும் என்றால் வெறுமனே பொதுச் சித்தி விகிதத்தினை மாத்திரம் ஆராய்ந்து பிரயோசனமில்லை. கணிதம், விஞ்ஞானம்,தமிழ் ஆகிய மூன்று பாடங்களின் சித்தி விகிதம் எப்படி இருக்கிறது என்று ஆராயவேண்டும்.
9) தமிழ் மொழி தெரியாமல் ஒரு மாணவனுக்கு வாசித்து கிரகிக்கும் ஆற்றல் இருக்கப்போவதில்லை. அவன் எந்தப் பரீட்சையிலும் சித்தியடையவோ, உயர் பெறுபேறு பெறவோ முடியாது.
10) கணிதம் இல்லாமல் தர்க்க சிந்தனை, ஒரு விஷயத்தை ஒழுங்குமுறையாகச் சிந்திக்கும் ஆற்றல் இருக்கப் போவதில்லை
11) விஞ்ஞானம் தெரியாமல் ஆராய்ந்து, புரிய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கப்போவதில்லை.
12) ஆகவே இரண்டாவது நிலையில் இந்த மூன்று பாடங்களில் எவ்வளவு சித்தி, உயர் சித்தி எனபது மிக முக்கியமான விடயம்.
ஆகவே நீங்கள் உங்கள் பாடசாலையின் அடைவினை சரியாக விளங்கிக் கொள்வதாக இருந்தால் நீங்கள் தேசிய சராசரி சித்தி விகிதத்திலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறீர்கள் என்பதையும், தமிழ், கணித, விஞ்ஞான பாடங்களில் எவ்வளவு சதவீத சித்தியடைந்துள்ளீர்கள் என்பதையும் கவனிப்பது அவசியம்!
இதை விளங்கிக்கொள்வதற்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்; மாத்தளை மாவட்டத்தில் உள்ள 83 பாடசாலைகளில் 27 பாடசாலைகள் மாத்திரமே தேசிய சராசரி சித்தி விகிதத்தை விட அதிகமாக அடைவினை அடைந்துள்ளது. இரண்டாவது column இல் S என்பது சிங்கள மொழி மூலம், T என்பது தமிழ் மொழிமூலம். தமிழ் மொழி மூல பாடசாலைகள் ஐந்து பாடசாலைகள் மாத்திரமே தேசிய சராசரி சித்தி விகிதத்தை விட அதிகமாகன அடைவினை அடைந்தவர்கள்.
மஞ்சள் நிறத்தில் highlight செய்யப்பட்டிருப்பது தேசிய சராசரி விகிதத்திற்கு மேல் இருக்கும் ஆனால் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களைக் கொண்டிராத பாடசாலைகள்.
பச்சை நிறப்படுத்தப்பட்டிருப்பவை தேசிய சராசரி விகிதத்திற்கு மேல் இருக்கும் கணித விஞ்ஞான பாடங்களைக் கொண்டிருக்கும் பாடசாலைகள்!
இது தொடர்பாக இங்கு உரையாடலாம்!
இந்த விஷயம் மாத்தளையில் கல்வி முன்னேற்றத்தில் செயல்பட விரும்பும் பங்காளிகள் என்ற வகையில் எனது நண்பர் வட்டத்தில் இருக்கும் கீழ்வரும் தமிழ் சமூக அமைப்புகள் இங்கு இணைக்கப்படுகிறது:
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale
Matale Hindu College Old
Boys' Association
Overseas Old Boys'
Association -OOBA
Kandenuwara Tamil Maha
Vidyalayam
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாத்தளை மாத்தளை உதவும் உள்ளங்கள்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.