நாம் கற்றலில் மாணவர்கள் அடையும் அடைவினை எப்படி கொண்டாடுவது? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடைவை தானும் தன்னைச் சார்ந்தவர்களும் அடையும் போது மனதில் இன்ப உணர்ச்சி எழுவது மனித இயல்பு! ஆனால் நாம் முழுமையான நிலையை அடைய இன்னும் பாக்கியிருக்கிறதா, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூர்ந்து சிந்திக்க வேண்டும்.
கற்றலின் தேர்ச்சி என்பது ஏழு நிலைகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
1. பெற்ற அறிவினை மீள் ஞாபகப்படுத்தும் ஆற்றல் knowledge (recall of information),
2. அந்தத்துறை சார்ந்து தான் பெற்ற அறிவினைப் புரிந்துகொள்ளுதல் comprehension (understanding concepts),
3. அந்த அறிவினை தகுந்த சூழலில் பிரயோகித்தல் application (applying knowledge in different contexts),
4. தகவல்களை பகுத்து ஆராயும் பகுப்பாய்வு ஆற்றல் analysis (breaking down information),
6. மீளத்தொகுத்து புதிய யோசனைகளை உருவாக்குதல் synthesis (creating new ideas or solutions),
7. தாம் செய்தவற்றைப் பற்றிப் பூரிக்காமல் மதிப்பிட்டு ஆராய்ந்து மேம்படுத்துதல் evaluation (judging and critiquing based on established criteria).
நாம் பரீட்சைகள் மூலம் முதல் இரண்டு நிலைகளையே மாணவர்களின் திறனை உறுதிப்படுத்துகிறோம். இந்த இரண்டும் சிறப்பாக இருந்தால் மாத்திரம் தான் மற்றைய நிலைகளில் சிறப்படைய முடியும் என்பதால் பரீட்சைகளின் முக்கியத்துவம் மிக அவசியமானது!
ஆனால் பெற்ற அறிவை பிரயோகித்து, சூழலிற்கு ஏற்றவகையில் பகுதாய்ந்து, தொகுத்து, பிரயோகித்து பிரச்சனைகளைத் தீர்க்க வல்ல எதிர்காலத்தை கட்டமைக்கக் கூடிய மனித வளத்தை நாம் உருவாக்கக் வேண்டும்!
ஆகவே பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டு அடுத்த நிலை ஆழமான பகுத்தாயும், பிரச்சனைக்கு தீர்வுகாணும், புத்தாக்க யோசனையை உருவாக்கும் கற்றல் பகுதியிலும் நாம் பிள்ளைகளைக் கவனம் செலுத்தப் பழக்க வேண்டும்!
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு!
கற்றலும், புரிதலும் புரிதலால் வரும் தெளிவே பெரும் ஆனந்தம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.