Siddha and Ayurveda; my views shared in the Latin American Ayurveda Conference.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Saturday, December 11, 2021
Friday, February 19, 2021
தலைப்பு இல்லை
யாழ்ப்பாணத்து மருத்துவ நூலான பரராசசேகரம் - பித்தரோக
நிதானம் (?) நூலிற்கு உரை எழுதியது பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவு!
Saturday, January 02, 2021
தலைப்பு இல்லை
இன்று சித்த மருத்துவ தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!
சித்த மருத்துவத்தை
ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்கு எனது கருத்தை பதிவிட
எண்ணுகிறேன்.
மூல நூற்கள்
தொடர்பானது;
1) சித்த மருத்துவத்தை
ஆய்விற்கு உட்படுத்தும் அளவிற்கு சித்த மருத்துவர்களுக்கு தமிழ்மொழிப் புலமை
இருக்கிறதா?
2) பாடல்கள் புரிய
தமிழ்மொழி அறிவிருந்தாலும் அவற்றில் மறைப்பாகக் கூறிய பரிபாஷை புரியும் ஆற்றல்
இருக்கிறதா?
3) ஒவ்வொரு பட்டதாரி
சித்த மருத்துவரும் மூல நூற்களை முயற்சியுடன் கற்றுக்கொண்டிருக்கிறார்களா? உத்தமராயன்
எழுதிய சித்த மருத்துவாங்கச் சுருக்கத்திற்கு மேலே என்ன புரிதலை கடந்த நாற்பது
ஆண்டுகளில் புதிதாக உருவாக்கியிருக்கிறோம்?
பாவனையில் இருக்கும்
மருந்துகள் பற்றி,
1) கைமுறையாக பல நூறு
ஆண்டுகள் பாவித்த முறைகளை அவற்றை பாவிக்கக் கூறிய நிபந்தனைகள் (பத்தியம்,
அனுபானம், துணை மருந்து) இவை எல்லா நிபந்தனைகளையும் கடைப்பிடித்து மருந்துகளை
ஆய்வுக்குட்படுத்துகிறோமா?
2) சித்த மருத்துவத்தை
சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்த சித்த மருத்துவத்தின் மூல
தத்துவத்தை அறிவியல் ரீதியில் புரிந்திருக்கிறோமா?
3) திரிபலாவை western
medicine பாவிப்பதைப் போல் வெறுமனே இரண்டு மாத்திரை தினசரி காலை மாலை என்று
பாவிக்கச் சொல்லிவிட்டு அது ஈரலைப் பாதிக்கிறது, வயிற்றைக் குழப்புகிறது என்று
ஆய்வு முடிவு எழுதுகிறோமா? அல்லது மருந்து உண்ணும் விதியை முழுமையாக
கடைப்பிடிக்கச் சொல்லி அதன் விளைவை அறிவியல் ரீதியாக ஆராய்கிறோமா?
இவை அடிப்படையாக சித்த
மருத்துவத்தை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணும் பட்டதாரி சித்த மருத்துவர்கள்
சிந்திக்க வேண்டிய கேள்விகள்!
கேள்விகள்
சிந்தனைக்காக, சிந்தனை ஆய்வுகளைத் தூண்டும்! ஆய்வுகள் புது அறிவைத் தரும்! புது
அறிவு புரிதலை மேம்படுத்தும்! புரிதல் மேம்பட்டால் அது மனிதனுக்குப் பயனாகும்!
Monday, November 23, 2020
தலைப்பு இல்லை
இவ்வளவு நாளாகவும் விதம் விதமாக புட்டை சாப்பாடாக பார்த்தவர்களுக்கு, சித்த மருத்துவ அகமருந்தாக புட்டுப் பற்றி மருத்துவர் ஆதவன் தொகுத்துத் தருகிறார்!
பிரம்பு அடிவாங்கிச் சாப்பிட்ட புட்டின் பெருமை அறியச்செய்ய வழக்காடு மன்றம் ஏற்படுத்தினாரோ எம்பெருமான்!
மேலதிக குறிப்பு:
சிவப்பரிசி ஊறவைத்து முள்முருக்கமிலை இடித்துச் சலித்த மாவில் செய்யும் புட்டு தேங்காய்ப் பாலூற்றி உண்ண மாதர் ரோகம் எல்லாம் தீர்க்கும், இரத்த சோகை போக்கும்; வயிற்றுப் பூச்சி நீக்கும்!
Thursday, August 13, 2020
ஆங்கிலத்தில் சித்த மருத்துவம் கற்கலாமா?
Sunday, July 05, 2020
சூக்ஷ்மத்தின் பலம்
சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை ஸ்தூலத்தை விட சூக்ஷ்மம் வலிமையானது. ஆகவே நோய்க்கான காரணம் சூக்ஷ்மத்திலிருக்கிறது. அந்த சூக்ஷ்மத்தைப் புரிந்து கொள்ள மனிதனின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை தமது தியான சாதனையால் மனதை நுண்மையாக்கி புரிந்து கொண்டதை மூலதத்துவமாக்கித் தந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மனிதனின் சூக்ஷ்மத்தன்மையினை புரிந்துக் கொள்ள முடியாதவன் பிணி தீர்க்க முடியாது! சித்த ஆயுர்வேதத்தின் ஆழம் ஸ்தூல உடலைத் தாண்டி மனிதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பதில் இருக்கிறது. இன்று நவீன அறிவியல் இதை புரிய கருவிகள் மூலம் முயன்றுக் கொண்டிருக்கிறது.
இன்று கொரோனோ வைரசைப் பற்றிய கட்டுரை படிக்க நேரிட்டது. ஒரு மனிதன் கொரோனோ positive என்று காண்பிக்க அவனது உடலில் 70 பில்லியன் வைரசுகள் இருக்க வேண்டும். இந்த 70 பில்லியன் வைரசுகளின் நிறை 0.0000005 கிராம், ஆக ஒரு வைரசின் நிறை 0.85 attogram (0.000,000,000,000,000,000,85 gram), தற்போது 03 மில்லியன் மக்களுக்கு நோய் ஏற்படுத்திய மொத்த வைரசுகளின் நிறை 1.5 கிராம் மட்டுமே!
ஆக 1.5 கிராம் எடை வைரசுகளுக்கு இவ்வளவு பலமா? ஆம் வெளியே ஸ்தூலமான உலகம் மட்டும் தான் உண்மை என்று கற்பனை செய்துக் கொண்டிருக்கும் மனிதனின் அறியாமையால் இத்தகைய நுண்மையான கிருமிகள் பலம் பெறுகிறது என்று கொள்ளலாம்.
ஆகவே இப்படி சூக்ஷ்மமான வைரசு இவ்வளவு தாக்கம் தருமென்றால் அதைவிட சூக்ஷ்மமான உயிரின் - ஆன்மாவின் அளவு பற்றி திருமூலர் இப்படிக் கூறுகிறார்;
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''
(திருமந்திரம், சீவன், பா.2011)
அதாவது ஒரு பசுவின் மயிரினை நூறாகப் பிரித்து (0.001) அதைப் பிறகு ஆயிரமாக பகுத்து (0.000,01), அந்தக் கூறை நூறாயிரம் ஆக்கினால் வரும் அளவு ஆன்மாவின் அளவு என்கிறார். பசுவின் மயிரின் அளவு 0.01 மில்லி மீற்றர் என்றால் உயிரின் அளவு. 0.000,000,000,01 மில்லி மீற்றர்
ஆன்மாவின் அளவு 0.000,000,000,01 மில்லி மீற்றர்
COVIND - 19 இன் அளவு 0.000,000,125 மில்லி மீற்றர்
ஆக COVID - 19 உயிரை விட 12500 மடங்கு பெரியது!
ஆகவே 80 கிலோ உள்ள ஸ்தூல உடலை மிகச் சூட்சுமமான வரைசுகள் கட்டுப்படுத்தினால் வைரசுகளை கட்டுப்படுத்த அதை விட 12500 மடங்கு நுண்மையான உயிரின் ஆற்றல் பயன்படலாம் அல்லவா?
ஆகவே சூக்ஷ்மமான உயிரின் ஆற்றலைப் பயன்படுத்த மூலதத்துவமும், மனிதன் என்ற பிண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தத்துவமும் புரிந்திருக்க வேண்டும்!
{இந்தப்பதிவு சித்தர் பாடல்களில் கற்றறிந்தவற்றை சிந்தித்து ஒப்பிட்டு கருதுகோள்களையே முன்வைக்கிறது; ஆகவே அறிவியல் கதைக்கிறோம் என்று விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் முன்வைக்க வேண்டாம்; ஆக்கப்பூர்வ கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.}
Sunday, April 26, 2020
COVID-19 உம் சித்த மருத்துவமும்
சித்த மருத்துவர் Vinayaga Sundar முன்வைக்கும் கேள்விகள்
COVID-19 ஆனது சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவத்தில் (முத்தோஷ - தாதுக்ஷீண) எந்த நோயாக விளங்கப்பட்டு, அதற்குரிய மருந்தாக கப சுர குடி நீர் பரிந்துரைக்கப்பட்டது?
இது அடிப்படைச் சித்த மருத்துவக் கேள்வி?
அவர் அடிப்படையில் சித்த மருத்துவராக கேள்வியை முன்வைக்கிறார்; அவர் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்துவ மூல நூல் பிரமாணம் சொல்லுகிறது;
அகத்தியர் வைத்தியம் 2000, (பாடல் - 18 & 19) ஒரு நோய்க்கு மருந்து நிர்ணயிப்பதற்குரிய முறையாக;
நாடியால் முன்னோர் சொல்லும் நற்குறிகுணங்களாலும்
நீடிய விழியினாலும் நிலைபெறு முகத்தினாலும்
கூடியவியாதிதன்னைக் கூறிடு குணபாடத்தால்
சூடிய குணங்களாலே சுகப்பட மருந்து சொல்வாம்,
குணங்குறி மிகுந்து தோன்றிக் குற்றமே குறைந்துகாணி
விணங்கு மந்திர மருந்து யிவைகளால் மீள்வதுண்மை
குணங்கோளாக் குற்றமேறிக் குறிகுணங் குறைந்து நின்றால்
பிணங்கிடா வகன்று சீவன் பிரித்தலால் பேசலாமே!
{விளக்கம்: நாடியால் முத்தோஷங்களின் அளவினை அறிந்து கொள்ள வேண்டும், பின்னர் நோய் உடலில் காட்டும் குணங்குறிகளை அவதானித்து வியாதியின் தீவிரத்தைக் கணித்துக்கொள்ள வேண்டும், பின்னர் தோஷத்தின் அளவிற் கேற்ப குணபாடத்தில் உள்ள சரக்குகளைச் சேர்த்து மருந்து செய்ய வேண்டும், குணங்குறிகள் தீவிரமாக இருந்தாலும் தோஷம் அளவாக இருந்தால் நோய் மருந்திற்கும், மந்திர சிகிச்சைக்கும் கட்டுப்படும், தோஷம் அதிகமாக இருந்தால் மருந்திற்கு அடங்காமல் மரணம் நேரலாம்}
ஆகவே வெறுமனே இந்த நோய்க்கு இந்த மருந்து என்ற பரிந்துரை சித்த மருத்துவ அடிப்படைக்கு விரோதமானது, முத்தோஷத்தின் அளவும், குணங்குறிகளின் தீவிரத்திற்கும் ஏற்றவகையில் மருந்து செய்யப்பட வேண்டும்.
ஆக அவர் சித்த மருத்துவ மூல நூலைக் கற்று கேள்வியை முன்வைக்கிறார், அதை சித்த மருத்துவ அடிப்படையில் விளங்கப்படுத்தும் பொறுப்பு அதைப் பரிந்துரைத்தவர்களுக்குரியது!
சரியான விளக்கம் தந்தால் அனைவருக்கும் நன்மை! ஆகவே கேள்வியை துறைக்கான வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும்!
இது தனி மனித தாக்குதல் அல்ல! துறை வளர்ச்சிக்கு இப்படியான கேள்விகள் அவசியம்!
Wednesday, April 01, 2020
சித்த மருத்துவத்தின் பெயரால் அலப்பறைகள்
1914ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ நூலில் கொரோனாவிற்கு மருந்து சொல்லப்பட்டிருப்பதாக காலையில் ஏப்பிரல் முட்டாள் தினச் செய்தியாக நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்.
முதலாவது இப்படி ஒரு முட்டாள் தனமாக, சித்த மருத்துவத்தை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
சித்த மருத்துவமும் பாரம்பரியமாக சேகரிக்கப்பட்ட ஒரு அறிவுத்தேக்கம். ஒவ்வொரு காலத்திற்கேற்ற வகையில் அது சீரமைக்கப்பட வேண்டியதும், அறிவை விரிவிக்க வேண்டியது அந்தத் துறை சார்ந்தவர்களின் கடமை. கொரோனா என்பது நவீன வைரோலஜியின் பெயர்ப் பாகுபாடு.
சித்தர்களை மாயாவிகளாகவும், அற்புதம் செய்பவர்களாகவும் காண்பித்ததில் சில நாவலாசிரியர்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் சித்தர் நூற்களை ஊன்றிப் படிப்பவர்கள் அது மிகப்பெரிய சமூக விமர்சனத் துறை - மூட நம்பிக்கைகளையும், சமூக, அதிகார, ஏமாற்றுக்களையும் சாடிய Critical thinkers ஆகவே அறிவார்கள்.
சித் என்றால் அறிவு, சித்த என்றால் செம்மை (Perfection) என்று அர்த்தம். சித்தர்கள் என்றால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறியைக் கூறியவர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறிக்கு மனம், உடல், பிராணன் (மூச்சு) ஆகிய மூன்றினையும் எப்படி செம்மைப்படுத்தி உயர்ந்த வாழ்க்கை வாழ்வது என்பதே சித்தர்களின் நெறி! இதில் உடலிற்கு வரும் பிணியைப் போக்கி ஆரோக்கியமாக இருக்க என்ன வழி என்பதையே மருத்துவம் என்று கூறியிருக்கிறார்கள்.
சித்தர்களைப் பற்றி பேசுபவர்கள் எல்லோரும் ஒழுங்காக ஒரு மூல நூலை, அடிப்படைத்தத்துவதை (Basic philosophy) படித்தவர்களாக இல்லை. எவராவது சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப் பிள்ளைகளே அன்றி ஆராயும் நோக்கில் கேள்வி கேட்டுத் தெளியும் அறிவுமாட்சியும் இல்லை.
இப்படியில்லாமல் மேற்கத்தேய மருத்துவத்துடன் தம்மைத் தாழ்வுச் சிக்கலுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சில தற்குறிகளின் இப்படியான வேலையால் அந்தத்துறையின் நம்பகத்தன்மை இல்லாமல் போகும்.
ஏற்கனவே சித்த மருத்துவத்தின் அடிப்படை தெரியாமல் சந்தர்ப்பத்தைப் பாவித்து தன்னை பிரபலப்படுத்த ஒருவர் தன்னை சித்த மருத்துவர் என்றும், கொரோனாவிற்கு மருந்து இருக்கிறது என்றும் வீடியோ வெளியிட்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்.
வைத்தியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று அகத்தியர் வைத்திய காவியத்தில்
சீர்பெரு வாகடத்தை செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரையு முடன் பிறப்பா மென்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையோனாக
மெய்யது சொல்வோனாக வினங்குகுரு மறவோனாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன தீர்க்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள் கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலா னவைக ளுள்ளான் செகமதி லிருக்க மட்டு
மேதினி யதனில்காலன் விதியல்லால் வியாதியுண்டோ
சினவெறி யேறு போலத் திடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமென வுயிரைக் காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளா னேத்தமுள்ளா னேற்கையால் தோற்ற முள்ளான்
மனமதில் தயவுள்ளான் வைத்தியனாகு மென்றே (௧௪)
என்று கூறுகிறார்.
மருத்துவ ஒழுக்கத்தின்படி ஒரு மருத்துவர் இப்படி விளப்பரப்படுத்துவதே தவறு! சித்த மருத்துவம் என்றால் நாம் வெறும் கருவிதான், உண்மை மருத்துவன் வைத்தியநாதன் எனும் எம்பெருமான் மட்டுமே! Doctor treat God cures என்ற மனப்பாங்கு இல்லாது நான் குணப்படுத்துகிறேன்! நான் குணப்படுத்துகிறேன் என்பது வெறுமனே ஆணவம் அன்றி வேறொன்றுமில்லை!
மேலும் வைத்தியர் என்பவர் தன்னை நாடி வருபவர்களுக்கு பிணி தீர்ப்பவரே அன்றி தன்னை நாடி வர விளம்பரம் செய்து பிணி தீர்ப்பவர் அல்ல!
Friday, February 01, 2019
தலைப்பு இல்லை
நாம் உண்ணும் தக்காளி, கத்தரிக்காய், கறிமிளகாய், மிளகாய், உருளைக் கிழங்கு, மருத்துவக் குணமுள்ள தூதுவளை, அமுக்கிரா கிழங்கு, மற்றும் அழகு பூக்களான இரவு மல்லி, பகல் மல்லி மற்றும் புகையிலை என்பன Solanacea - சொலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தவை.
இந்தத் தாவரங்களை இரவு நிழல் தாவரங்கள் என்று கூறுவார்கள். இவை பொதுவாக பூப்பது இரவில். மேலும் இந்தத் தாவரங்கள் எல்லாவற்றிலும் Solanine எனும் விஷப்பொருள் இருக்கிறது. இந்த விஷம் இயற்கையாக பீடைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவற்றில் இருக்கிறது. இதனால் தான் சிலருக்கு கத்தரியும் தக்காளியும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த விஷத்தை தாங்க முடியாதவர்களுக்கு!
ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலது நல்ல சுவையான உணவாகவும், இன்னும் சிலது மருந்தாகவும், சிலது மனதிற்கு இன்பத்தை தரும் மணமாகவும் இருக்க புகையிலையோ அடிமைப்படுத்தும் அரக்கனாக இருக்கிறது.
விஷமான ஒன்று தான் ஆரோக்கியதையும் தருகிறது அதைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் சரியாக பயன்படுத்தினால்.
சித்த மருத்துவத்தின் ஒரு அடிப்படை எல்லாவற்றிலும் உள்ள விஷபாகம் நீக்கி அம்ருதீகரணம் செய்து மருந்து செய்தல். அடிப்படையில் விஷத்தை உருமாற்றி தனக்கு நன்மை தரும் உணவாக மாற்றுவதே.
ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01
ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...