குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label தேவார விளக்கங்கள். Show all posts
Showing posts with label தேவார விளக்கங்கள். Show all posts

Wednesday, October 20, 2021

தலைப்பு இல்லை

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

தில்லைச்சிற்றம்பலம் நடராஜர் தாண்டவம் ஆடும் தலம். இந்த ஆட்டம் சித் என்ற அறிவினை பிரபஞ்சத்தில் இயக்க அம்பலத்தில் ஆடும் ஆட்டம். இதுவே சிற்றம்பலம். பூவுகில் இந்த ஆட்டத்தின் பொருளை விளங்க தில்லையில் நடராஜராக தரிசிக்கலாம். 

சிவயோகத்தில் பிண்டத்திற்குள் தாண்டவம் காண தலையுச்சிக்கும் மேல் அம்பலம் என்ற ஆயிரம் இதழ்கமலத்தில் சித் என்ற அறிவாக இறைவன் ஆடிக்கொண்டிருக்க அந்த ஆட்டம் ஏற்படுத்தும் பிராண சலனம் இந்த அன்னமய உடலை உருவாக்குகிறது. ஆக தலையுச்சியில் உள்ள தில்லைச்சிற்றம்பலம் அன்னமய உடலை போசித்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அப்பர் பெருமான். அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்.

தலையுச்சியில் ஆயிரம் இதழ் கமலத்தில் ஆடும் இந்த தாண்டவத்தை அறிந்த சிவயோகிக்கு காரண உடல் பொன்னுடலாக வாய்க்கும். இதுவே பொன்னம் பாலிக்கு... இதனாலேயே தில்லைச் சிற்றம்பலம் பொற்சபை எனப்படுகிறது. 

மேலும் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து இந்த பொன்னுடல் பெற்று இன்புற இந்த உடலைத் தந்து என்னைக் காத்து வரும் புலியூர் எம்பிரானே என்று வணங்குகிறார்! 

இந்தத் தேவாரம் நாம் எமது அன்ன உடலிற்கு உணவு அளிக்கும்போது இந்த அன்ன உடல் ஆயிரம் இதழ் கமலத்தில் சிவ பரம்பொருளின் தாண்டவத்தால் எமக்குக் கிடைத்த உடல் என்பதும், அதைப் போசிப்பது சிற்றம்பலம் என்ற பொற்சபையில் பொன்னுடல் பெறவே என்பதையும் ஞாபகத்தில் இருத்தி உணவை உண்ண வேண்டும் என்று இந்தத் தேவாரத்தை உணவருந்தும் போது படிக்கிறோம்.


Sunday, January 17, 2021

தேவாரங்களின் மந்திரத் தன்மை -01

First posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158156264331589

******************************************
மந்திரம் என்றால் மனனிப்பவர்கள் மனதைக் காப்பது என்று பொருள்! எமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் மனம் புலன்களாலும், ஆழ்மனம் என்ற சித்தத்தில் இருந்து எழும் விருத்திகளாலும் தூண்டப்பட்டு அந்தத் தூண்டலின் வழி நடப்பதால் துன்பத்திற்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இப்படியான வலிமையற்ற மனதை வலிமையுடையதாக்க சலனமுறும் மனதை சலனமற்ற, தூய்மையான ஒன்றுடன் சேர்க்க வேண்டும். இந்த சலனமற்ற, தூய்மையானதை பதி என்று சைவமும், இறைவன், கடவுள் என்றும் தத்துவங்கள் கூறும்!
இந்த பதியை/இறைவனை எப்படி மனதுடன் தொடர்புபடுத்துவது. அதற்கு தமிழில் ஒரு எளிய வழி இருக்கிறது.
பதிகங்கள் படிப்பது! பதிகம் என்பது பத்துப்பாடல் கொண்ட தொகுப்பு என்று பண்டிதர்கள் கூறுவார்கள்! ஆனால் எம்மளவில் பதிகம் என்றால் அகத்தில் பதியைப் பதிவிக்கும் பாடல்கள் என்று பொருள்!
ஆக பதிகங்களை அகத்தில் தினசரி பதித்துவர மனம் பதியை நாடும் தன்மை உருவாகும்!
திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக விதியை வெல்லுவது எப்படி என்று அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பாட வேண்டிய பதிகங்கள் என்று ஒரு தொகுப்பு நூல் வந்திருக்கிறது. இதில் ஒவ்வொரு காரியங்களுக்குரிய பதிகங்கள் இருக்கின்றன.
இங்கு பதிகம் எப்படிப் பலன் தருகிறது என்ற குழப்பத்துடன் தர்க்க புத்தி வேலை செய்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட விளக்குவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
ஒவ்வொரு தேவாரமும்
1) யாப்பு எனும் சொற்கோர்வைக்கான இலக்கணம் கொண்ட பாடலாகவும்
2) பண் என்ற ஒலிக்கும் விதியும்
தரப்பட்டிருக்கும்.
யாப்புபடி கோர்க்கப்பட்ட சொற்களுக்கு சந்தம் வாய்க்கும். சந்தம் வாய்த்த சொற்களை மனதில் நாக்கு, தொண்டை, மூச்சின் துணைகொண்டு ஒலியாக எழுப்பினால் மனதிற்கும் சந்தம் வாய்க்கும்!
இதற்கு பண்ணும் சேர்ந்தால் அது மனதை வேறு விடயங்களிலிருந்து கழற்றி பதியை நோக்கி செலுத்தும்!
இந்த முறை அக்காலத்தில் மக்கள் உள்ளம் இறைவனை அடைதலே வாழ்கை இலட்சியம் என்ற சமூகத்தில் பயன் தந்தது! ஆனால் காலம் செல்ல மனிதன் மனம் குழப்பமும், தெளிவும் இல்லாமல் போய்விட்ட இக்காலச் சமூகத்தில் வெறுமனே பண்ணுடன் பாடல் பாடுவது என்பது வெறும் சடங்காகப் போய்விட்டது!
பதிகம் பாடும் சாதகனை பதியுடன் இணைக்கும் செயலைச் செய்ய முடியாத அளவிற்கு அவனது மனம் குழம்பிய நிலையிலேயே இப்போது இருக்கிறோம். ஆகவே பதிகம் பாடுவதால் கிட்டும் இறை அனுபவத்தைப் பெறமுடியாத படி முன் மனமும், சித்தமும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் வாயால் பதிகம் பாடுவது மாத்திரம் பலனைத் தராது!
இப்போது உள்ள காலம் தர்க்க மனதின் ஆட்சிக்காலம்! ஆகவே பதிகங்களை சரியான வழியில் அதன் பலன் மனதிற்கு தர்க்க ரீதியாகப் புரியவைத்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைவரது மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஒருவன் பதிகத்தைக் கொண்டு பலன் பெற வேண்டினால் வாயால், பண்ணுடன் பாடுதல் என்ற இரண்டையும் விட அதன் பலனை, அர்த்தத்தைப் புரிந்து பாடினால் விரைவான பலனைப் பெறுவான்!
அந்த வகையில் ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்க்கு ஓதவேண்டிய பதிகம் என்று கூறப்படும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை மட்டும் அடுத்த பதிவில் விளக்கி இந்தப் பதிவை முடிப்போம்!
பகுதி - 02 இல் தொடரும்!

Saturday, January 16, 2021

தேவாரங்களின் மந்திரத்தன்மை - 02

 

பொதுவாக மந்திரங்கள் என்று சொன்னால் அது குறித்த ஒலிக்கோர்வைகளில் எழுத்துக்கள் ஒரு மாலை போல் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதை சமஸ்க்ருதத்தில் சந்தஸ் என்று சொல்லுவார்கள். தமிழில் சந்தம் என்று சொல்லுவோம்!

பிறகு அந்த மந்திரம் மனதை எதை நோக்கி செலுத்துகிறது என்ற இலக்கு அந்த மந்திரத்திற்குரிய தேவதையாக அந்த மந்திரத்திற்கு இருக்கும்.

அதை உணர்ந்து எமக்கு சந்தஸில் அடைத்து சொற்கோர்வையாக தந்த ரிஷி இருப்பார்!

பிறகு அந்த மந்திரத்தின் பயன் என்ன என்பது இருக்கும்!

இவற்றை ஒரு மந்திரத்தின் ரிஷி, சந்தஸ், தேவதை, பலன் என்று கூறுவார்கள்; உதாரணமாக காய்த்ரி மந்திரம்,

விஸ்வாமித்ர ரிஷி

காயத்ரி சந்தஸ் - மூன்று பதம், 24 எழுத்துக்கள்

சவிதா தேவதை - புத்தியைத் தூண்டும் அந்தப்பேரோளி

பலன் - பாவ நிவர்த்தி, புத்திப் பிரகாசம்

இந்த நான்கையும் எமது மனதில் இருத்தி மந்திர ஜெபத்தைச் செய்தால் அது அந்த மூலசக்தியுடன் மனதை பரிவிற்கு (resonance) உருவாக்கி எம்மில் அந்த மந்திரத்தின் சக்தி உருவாக்கும்! மந்திரத்தின் பொருள் மனதிற்கு புரிந்தால் அந்த மந்திரத்தின் பண்புகள் சாதகனில் உருவாகும்.

இந்த அடிப்படையில் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை பலன் பெறுவதற்கு ஓதுவதற்குரிய முறையாக,

1) பஞ்சாட்சர மந்திர ஜெபம் (பெற்ற உபதேசத்தின் படி அல்லது தூல பஞ்சாட்சரம் (ஓம் நமசிவாயா அல்லது சக்தி பஞ்சாட்சரம் ஓம் ஹ்ரீம் நமசிவாய) 108/1008 ஜெபம் பதியாகிய சிவத்தை இருதயத்தில் இருத்தி செய்துவிட்டு,

2) அந்த மந்திர ஜெபத்தின் அனுபவத்துடன் மனதில் அந்தப்பதிகத்தின் நாயனாரை எண்ணி, எனக்கும் அவர் பெற்ற அனுபவம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனையை அவரிற்கு செலுத்தி பதிகத்தை பண்ணுடன் படிக்க வேண்டும். இப்படிப் படிக்கும்போது மனதின் ஆழத்தில் ஒவ்வொரு பாடலினது பொருளும் உள்ளே ஆழ்மனமாகிய சித்தத்தில் விரிந்து எமக்கு அந்தப் பலன்கள் கிடைப்பதை உருவகிக்க வேண்டும்.

உதாரணம் - பஞ்சாக்கரத் திருப்பதிகத்தின் முதல் பாடல்;

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

இந்தப்பாடலில் திருஞானசம்பந்தர் தான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை நிரப்பி சாதனை செய்து வருகின்றேன், இந்தத் திருவைந்தெழுத்தின் மகிமை என்னவென்றால் அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவிடாமல் கூற்றுவனை உதைத்த பரமாகிய சிவத்தின் ஆற்றலை எனக்குள் தருவது! ஆகவே இந்த திருவைந்தெழுத்தை செபிக்கும் எனக்கும் அந்த அருட்சக்தி கிடைக்கிறது என்கிறார்!

இதை நாம் பாடும்போது எமக்கு அந்த பலன் கிடைக்கவேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கி திருஞானசம்பந்தர் அளவிற்கு விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை நிரப்பி பயிற்சி செய்யாவிட்டாலும் குறைந்தது 108 தடவையாவது தினசரி செபித்து வருகிறேன் என்ற நம்பிக்கை எமது சித்தத்தில் இருக்க வேண்டும்.

ஆகவே பதிகங்களின் மூலம் பலன் பெற வேண்டியவர்கள் தினசரி சிவபூஜை செய்து பஞ்சாட்சர ஜெபம் செய்வது சிறப்பு! அல்லது தூல பஞ்சாட்சர ஜெபமாவது செய்து வந்தால் அவர்களுடைய ஆழ்மனம் அவற்றின் பொருளை அறியும் போது அதீத நம்பிக்கைக்கொண்டு சக்தியை விழிப்பிக்கும்!

மேலே விளக்கியவற்றைத்தான் இன்று மேலை நாட்டவர்கள் power of subconscious mind, law of attraction என்றெல்லாம் கூவிக் கூவி branding செய்கிறார்கள்!

எம்மிடம் ஆழ்மனதை விழிப்பிக்கும் பதிகங்களும், சிவமாகிய பரம்பொருளின் ஆற்றலை ஈர்க்கும் (attraction) வழிகளும் ஆயிரமாண்டுகளாக இருக்கிறது. இவற்றைப் புரிந்து மதிப்புடன் செயற்படுத்துபவர்கள் அருகிவிட்டார்கள்!

தேவாரங்களின் மந்திரத் தன்மை -01

 

மந்திரம் என்றால் மனனிப்பவர்கள் மனதைக் காப்பது என்று பொருள்! எமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் மனம் புலன்களாலும், ஆழ்மனம் என்ற சித்தத்தில் இருந்து எழும் விருத்திகளாலும் தூண்டப்பட்டு அந்தத் தூண்டலின் வழி நடப்பதால் துன்பத்திற்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இப்படியான வலிமையற்ற மனதை வலிமையுடையதாக்க, சலனமுறும் மனதை சலனமற்ற, தூய்மையான ஒன்றுடன் சேர்க்க வேண்டும். இந்த சலனமற்ற, தூய்மையானதை பதி என்று சைவமும், இறைவன், கடவுள் என்றும் தத்துவங்கள் கூறும்!

இந்த பதியை/இறைவனை எப்படி மனதுடன் தொடர்புபடுத்துவது? அதற்கு தமிழில் ஒரு எளிய வழி இருக்கிறது.

பதிகங்கள் படிப்பது! பதிகம் என்பது பத்துப்பாடல் கொண்ட தொகுப்பு என்று பண்டிதர்கள் கூறுவார்கள்! ஆனால் எம்மளவில் பதிகம் என்றால் அகத்தில் பதியைப் பதிவிக்கும் பாடல்கள் என்று பொருள்!

ஆக பதிகங்களை அகத்தில் தினசரி பதித்துவர மனம் பதியை நாடும் தன்மை உருவாகும்!

திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக விதியை வெல்லுவது எப்படி என்று அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு பாட வேண்டிய பதிகங்கள் என்று ஒரு தொகுப்பு நூல் வந்திருக்கிறது. இதில் ஒவ்வொரு காரியங்களுக்குமுரிய பதிகங்கள் இருக்கின்றன.

இங்கு பதிகம் எப்படிப் பலன் தருகிறது என்ற குழப்பத்துடன் தர்க்க புத்தி வேலை செய்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட விளக்குவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

ஒவ்வொரு தேவாரமும்,

1) யாப்பு எனும் சொற்கோர்வைக்கான இலக்கணம் கொண்ட பாடலாகவும்

2) பண் என்ற ஒலிக்கும் விதியும் தரப்பட்டிருக்கும்.

யாப்புபடி கோர்க்கப்பட்ட சொற்களுக்கு சந்தம் வாய்க்கும். சந்தம் வாய்த்த சொற்களை மனதில் நாக்கு, தொண்டை, மூச்சின் துணைகொண்டு ஒலியாக எழுப்பினால் மனதிற்கும் சந்தம் வாய்க்கும்!

இதற்கு பண்ணும் சேர்ந்தால் அது மனதை வேறு விடயங்களிலிருந்து கழற்றி பதியை நோக்கி செலுத்தும்!

இந்த முறை அக்காலத்தில் மக்கள் உள்ளம் இறைவனை அடைதலே வாழ்க்கை இலட்சியம் என்ற சமூகத்தில் பயன் தந்தது! ஆனால் காலம் செல்ல மனிதன் மனம் குழப்பமும், தெளிவும் இல்லாமல் போய்விட்ட இக்காலச் சமூகத்தில் வெறுமனே பண்ணுடன் பாடல் பாடுவது என்பது வெறும் சடங்காகப் போய்விட்டது!

பதிகம் பாடும் சாதகனை பதியுடன் இணைக்கும் செயலைச் செய்ய முடியாத அளவிற்கு அவனது மனம் குழம்பிய நிலையிலேயே இப்போது இருக்கிறோம். ஆகவே பதிகம் பாடுவதால் கிட்டும் இறை அனுபவத்தைப் பெறமுடியாதபடி முன் மனமும், சித்தமும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் வாயால் பதிகம் பாடுவது மாத்திரம் பலனைத் தராது!

இப்போது உள்ள காலம் தர்க்க மனதின் ஆட்சிக்காலம்! ஆகவே பதிகங்களை சரியான வழியில் அதன் பலன் மனதிற்கு தர்க்க ரீதியாகப் புரியவைத்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைவரது மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே ஒருவன் பதிகத்தைக் கொண்டு பலன்பெற வேண்டினால் வாயால், பண்ணுடன் பாடுதல் என்ற இரண்டையும் விட அதன் பலனை, அர்த்தத்தைப் புரிந்து பாடினால் விரைவான பலனைப் பெறுவான்!

அந்த வகையில் ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்க்கு ஓதவேண்டிய பதிகம் என்று கூறப்படும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை மட்டும் அடுத்த பதிவில் விளக்கி இந்தப் பதிவை முடிப்போம்!

பகுதி - 02 இல் தொடரும்!

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...