குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Showing posts with label தாந்திரீகம். Show all posts
Showing posts with label தாந்திரீகம். Show all posts

Sunday, May 29, 2022

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25 {தாந்திரீக ஞானப்பாடல்கள்}

 

ஹே ஜெகன்மாதா! பிரம்மத்தின் இயக்க சக்தியே!

அனைத்து மனங்களையும் இதயங்களையும் தூய்மைப்படுத்துபவளே!

ஆன்ம தேடலின் பலன் தரும் உயர்ந்த கனியாக

உன் பேரானந்தத்தை அளிப்பவளே!

சிவபரம்பொருளின் களிப்பூட்டும் நாயகியே

நீயே சிவபரம்பொருளை மயக்குபவள்!

இந்தப்புனித தினத்தில் உனது பாத கமலங்களின்

நறுமண நிழலைத் தருவாயாக!

Friday, April 24, 2015

தாந்திரீக சாதனை கற்க விரும்புபவர்களுக்கான சில அடிப்படை புரிதல்கள்

தாந்திரீகம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக குரு சிஷ்ய பிரம்பரையினூடாக பரிசோதனை உத்திகள் மூலம் கையாளப்பட்ட விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் பிண்டம் எப்படி ஆக்கப்பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பதனை பரிசோதனை மூலம் அறிந்து அதனை எப்படி அண்டத்தில் இணைத்து சக்தி பெற்று ஒளி நிலையை அடைவது என்பதனை உணர்வு மூலம் குருசிஷ்ய பரம்பரையில் பரிமாறப்பட்டு வருகிறது.

தாந்திரீகத்தினை கருத்துக்களை விளங்கிக்கொள்ள கீழ்வரும் சில அடிப்படை புரிதல்கள் அவசியம்.
  1. குருபரம்பரையிநூடக தாந்திரிகசாதனையில் பயணித்து சித்தி பெற்ற குருவிடம் இருந்து சக்தி பரிமாற்றம் – இதனை தீக்ஷை என்பார்கள்  
  2. அதன் பின்னர் தொடர்ச்சியான பயிற்சி – இதனை சாதனை என்பார்கள்
  3. முன் துணிவில்லாமல் (prejudice), எண்ணங்கள் அற்ற மனத்துடன்   குருபரம்பரைக்குரிய மூல நூற்களை கற்றல்,
  4. மேலும் தெய்வம் எனும்போது தாந்திரீகம் எங்கோ வானத்தில் இருக்கும் அனுபவத்திற்கு வராதா கற்பனையான எதையோ தெய்வம் என்று கற்பிப்பதில்லை. அதனால் எமக்கு உபதேசிக்கும், தெய்வ சக்தியை பரிமாறும் குருவே முதல் தெய்வம், அந்த குருவில் தெய்வ சக்தியை அறிந்து, பின்னர் தன்னில் தெய்வ சக்தியை விழிப்பித்து தெய்வமாகும் முறையே தாந்த்ரீகம் ஆகும்.
  5. எண்ணங்கள் அற்ற மனம் என்பது குருவினதும் தெய்வ அனுக்கிரகத்தினால் வருவது. இது அமைந்தால் மட்டுமே தாந்திரீகத்தில் உபதேசிக்கப்படும் விடயங்களை விளங்கி கொள்ள முடியும்.
  6. தாந்திரீகம் சக்தியை உருமாற்றி உயர்ந்த சக்தியாக்கி வாழ்க்கைக்கு தேவையான போகத்தையும், யோகத்தையும் அடைவிக்கும்.
  7. பதஞ்சல யோகம் யோகம் என்பது சித்த விருத்தி நிரோதம் என்று கூறும். சித்தத்தின் விருத்தியை கட்டுப்படுத்த இரண்டு கையிறுகள் உண்டு. ஒன்று மனம், மற்றது பிராணன். இதில்பிராணனே மனதிற்கு சக்தியை கொடுத்து சித்தத்தின் விருத்தியை தூண்டுவது. இதுவே சக்தி மூலம். தாந்திரீகம் பிராணனை கட்டுப்படுத்தும் வழிகளை கூறும்.
  8. தாந்திரீகம் என்றால் தற்போது பலரும் எதோ காம களியாட்டம் நடாத்தும் பயிற்சி என்று நினைத்துக்கொண்டுதான் அனுகிகிரார்கள். தாந்திரீகம் மனிதநிரின் எந்த உணர்ச்சிகளையும் அடக்க, அழிக்க சொல்வதில்லை, மாறாக இயல்பாக ஏற்றுக்கொள்ள சொல்கிறது. இந்த அடிப்படையில் மனிதனது (கோபம், பொறாமை, குரோதம், காமம், மோகம், என) ஒவ்வொரு உணர்ச்சியிலும் ஏற்படும் பிராணனின் செலவை மிச்சப்படுத்தி எப்படி உயர்வாக ஆக்குவது என்ற வழிகளை சொல்லும். இந்த வழிகளில் காமத்தினை தெய்வ சக்தியாக உயர்த்துவதும் ஒரு வழியே அன்றி அது மட்டுமே தாந்திரீகம் இல்லை.
  9. இப்படி பிராண சக்தியை உயர்த்துவதற்குரிய அடிப்படை மனிதனது சக்தி எப்படி செலவாகிறது என்பதனை அறிதல், அதற்குரிய வழி முக்குணங்கள். முக்குணங்களில் சத்துவம் என்பது சக்தி இயல்பான இயற்கை நிலையில் இருப்பது, ராஜசம் என்பது அளவுக்கு மீறி செல்வாகுவது, தாமசம் என்பது அளவற்ற சக்தி பாவிக்காமல் தேங்கி கிடப்பது.
  10. ஆக மாணவனின் நிலை அறிந்து குருவானவர் அவனுக்குரிய வழிகளை உபதேசிப்பார். இயல்பான சத்துவ நிலையினை அடைந்து பிராண சக்தி சமநிலை அடைவதே தாந்திரீகத்தின் இலக்கு. குறித்த ஒரு சாதகனில் காம மையம் வேலை செய்யாமல் பிராண சக்தி அளவுக்கு அதிகமாக தேங்கி இருப்பின் அத்தகையவனுக்கு காம மையத்தை தட்டி எழுப்பும் ராஜச குண சாதனைகளை வழிகாட்டி சக்தியை செலவழித்து சமநிலைக்கு கொண்டுவரும் படி செய்வார். அதுபோல் அளவுக்கு அதிகமாக செலவழிக்கும் ராஜச குணத்தவனிற்கு பிராண செலவை குறைக்கும் வழிகள் போதிக்கப்படும்.
  11. இப்படி செலவாகும் பிராணனை சேமித்தால் அந்த சேமிப்பு பொக்கிஷமாக சேமிக்கப்படும் இடம் கோசங்கள் எனப்படும். இவை ஐந்து உண்டு. இவற்றையே பஞ்ச கோசங்கள் என்று கூறுவார்கள். இவற்றை தற்காலத்தில் யோகம் கற்பிப்பவர்கள் மனிதனுக்கு ஐந்து உடல் உண்டு என்றும், அவை படர்ந்து உள்ளதாகவும் கதைகூறி  கற்பனை செய்ய சொல்கிறார்கள். உண்மையில் கோசம் என்றால் புதையல், பொக்கிஷம் அல்லது செல்வ சேமிப்பு என்றே அர்த்தம். உடல், மனம், பிராணன், புத்தி ஆன்மா ஆகியவற்றில் இயங்கும் பிராண சக்தியை தகுந்த சாதனைகள் மூலம் சேமித்து வைக்கும் நிலையே பஞ்ச கோசம் எனப்படும். இப்படி செமிப்பவர்களுக்கே பஞ்ச கோசம் விருத்தியாகும். 


Monday, September 15, 2014

இல்லறத்தில் இருப்பவர்கள் தெய்வ சக்தி பெற எளிய சாதனை


பொதுவில் ஆன்மீகம் என்பது உலகை விட்டு ஓடும் ஒரு செயலாகத்தான் கற்பிக்கப்பட்டுவந்துள்ளது. அதிலும் பெண்கள் துன்பத்தினை தருபவர்களாகவும், மாயையில் ஆழ்துபவர்களாகவும் கற்பிக்கப்பட்ட மனதுடன்தான் சமூகம் மனிதர்களை வளர்க்கிறது. இப்படிப்பட்ட மனதுடன் பரிணாம உயர்வால் இறையை உணர முயலும்போது உலகமே துன்பமயமாக தோன்ற ஆரம்பிக்கிறது. உலகம் மாயை என்று வாழ்க்கை கடமைகளை முடிக்காமல் சந்நியாசம் நோக்கி ஓட ஆரம்பிக்கின்றனர்.
உலகம் அடிப்படையில் இருமைகளால் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருமை உண்மையான் “ஒன்றில்” இருந்து உருவானவை. பரிணாம பூர்த்தி என்பது மீண்டும் அந்த ஒன்றாக மாறுவதே! ஆன்மாவில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்றாலும் ஆன்மா எடுக்கும் கவசத்திற்கு ஏற்ப ஏற்படும் பேதம் சரியாக புரிந்து செயற்படும் போது உயர்விற்கு வழிவகுக்கிறது, இதனை உதாரணம் மூலம் விளக்குவதானால் அக்கினியினை நன்மைக்கும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். இது போன்றதே ஆண், பெண் உறவு என்பதும்.
ஆண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு தெய்வ சக்திகளை ஈர்த்து வழங்கும் சக்தி அதிகமாக இருக்கும். பெண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு பெறும் சக்தியினை வளர்க்கும் தன்மை அதிகம். ஒரு ஆண் பலயுகங்கள் தனிமையாக வளர்க்க முயல்வதை தாய்மை சக்தி உடைய பெண்ணிடம் தருவதன் மூலம் ஒருபிறப்பில் பெறலாம். அதுபோல் ஒரு பெண் பல பிறப்புகள் முயற்சித்து பெற வேண்டிய தெய்வ சக்தியை நல்ல சாதனை உடைய ஆணிடமிருந்து உடனடியாக பெறலாம். ஆக இருவரும் சேர்ந்து முயற்சிக்கும் போது பலன் மிக அதிகம்.
இப்படி முயற்சித்து சித்தி பெற்றவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள் எல்லோரும். அகஸ்தியர் – லோபாமுத்திரை, வசிஷ்டர் – அருந்ததி, காகபுஜண்டர் – பகளா, சத்தியவான் – சாவித்திரி, சப்த ரிஷிகள்,  பதினெண் சித்தர்கள் எல்லோரும். தனித்த நிலையில் யாருமே சக்தி பெறமுடியாது, அப்படி பெறும் சக்தியால் இந்த பிரபஞ்சத்தில் எதையும் வளர்க்க முடியாது.

இன்றைய கணவன் – மனைவி நிலை
இன்று மனதுடன் ஒன்றி வாழும் தம்பதிகளை காண்பது அரிதாகிவிட்டது. வாழ்க்கை என்பது பொருள்தேடும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பகட்டிற்காக வாழும் நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ஆண் பெண் உறவு என்பது எலியும் பூனையும் விளையாட்டாகி விட்டது. இதனால் மன முறிவுகளும், மணமுறிவுகளும் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டன.

ரிஷிகள் உபதேசித்த உயர்ந்த நிலை
எண்ணத்தில் தன்மையே வாழ்க்கை, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாழ்வாக எண்ணுவதும் பிரச்னைக்கு முதற்காரணம். சில இறைசாதனையில் உள்ள கணவனோ மனைவியோ தமது துணை அந்த வழியில் இல்லை என்றவுடன் அவரை பாவப்பட்டவராகவும், தாம் கிடைத்தற்கரிய பேறு பெற்றவராகவும் எண்ணிக்கொண்டு செய்யும் எந்த இறை சாதனையும் அவருக்கும் சரி வேறு எவருக்கும் பயன் அளிப்பதில்லை. இந்த நிலையினை கூறுவதானால் இருமாடுகள் பூட்டிய வண்டியில் ஒரு மாடு நகரமறுத்தால் மற்ற மாடு அந்த மாட்டை சுற்றி சுற்ற முடியுமன்றி இலக்கில் முன்னேறாது.
ஆகவே இல்லறத்தில் இருக்கும் கணவனோ மனைவியோ மற்றவர் தமது வழியில் இல்லை என்றால் ஒருக்காலும் கனவிலும் தமது துணை இந்த வழியில் இல்லையே என்ற வெறுப்பு எண்ணம் எடுக்க கூடாது. அவருக்குரிய தெய்வ சாதனையினையும் தனது பொறுப்பாக எண்ணி தான் பெறும் தெய்வ சக்தி உயர்ந்த சக்திகள் யாவும் ஒரு குறைவின்றி அவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எப்போதும் குருவை பிரார்த்தித்து எண்ண வேண்டும். இந்த எண்ணம் அவர்களை நிச்சயம் உயர்த்தும்.

மனமொத்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் “நான் பெறும் நல்ல தெய்வ சக்திகள் அனைத்தும் எனது மனைவி/கணவன் பெறவேண்டும்” என்று தமது தினசரி பிரார்த்தனைகள், மனதில் எண்ண வேண்டும்.  

Saturday, April 13, 2013

காம ரகசியம் 09: சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?



சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?

இந்தக்கேள்விக்கு இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான தாந்திரீக குருவான ஒஷோவின் பதிலினையே இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம். 

சாதாரண உடலுறவும் தாந்திரீக உடலுறவும் அடிப்படையில் வேறானவை. சாதாரண உடலுறவு இரு விடுபடலுக்காக நடைபெறுவது, மூக்கில் சளிபிடித்தால் அதை வெளியேற்றினால்தான் நிம்மதியாக இருக்கும். அதுபோல் உடலில் உருவான காமசக்தியினை வெளியேற்றும் போது ஒருவித விடுபடல் நிகழ்கிறது. இதுவே ஆனந்தமாக கருதப்படுகிறது, ஆனால் இது ஒரு அழிவுச் செய்முறை, ஆக்கபூர்வமானதல்ல. இது ஒரு வித சிகிச்சை போன்றது. உடலுக்கு சிறிய நிம்மதியினை அளிக்கும், அதைவிட வேறு எதுவிதபலனும் பெரிதாக கிடைக்காது. 

தாந்திரீக உடலுறவு அடிப்படையில் இதற்கு நேர்மாறானது. அது சக்தியினை வெளிவிடுவதில்லை. விந்தினை உடனடியாக வெளியிட்டு சக்தி இழப்பினை ஏற்படுத்தும் செய்கை அல்ல, சக்தியினை மெதுமெதுவாக ஒன்றச் செய்யும் செயன்முறை. அது ஒரு தொடர்ச்சியான செயன்முறை, முடிந்துவிடும் ஒரு நிகழ்வு அல்ல. 

இது மனிதனின் தரத்தின் தன்மையினை மாற்றிவிடும் செய்கையாகும். இரண்டு விடயங்களை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள்; ஒன்று உடலுறவில் இரண்டு வகையான உச்சகட்டங்கள் காணப்படுகின்றன. முதலாவது வகை இது உங்கள் மன எழுச்சி உச்சிக்கு சென்று அதற்கு மேல் செல்ல முடியாத நிலையில் ஏற்படுவது. இந்த மன எழுச்சி உச்சத்தினை அடைந்த பின்னர் அது தன்னிச்சை அற்றதாகின்றது. சக்தி உடனடியாக நீக்கம் நிகழ்ந்து வெளியேறி விடுகிறது. இந்த வெளியேற்றம் நிகழ்ந்த உடன் உங்களுக்கு உடல் ஒருவித களைப்பினை அடைந்து ஆறுதல் அடைகிறது. உள்ளே சேமிப்பாக இருந்த பாரம் வெளியே வீசப்பட்ட உடன் ஆறுதல் அடைகிறது. இது ஒருவித நிசப்த நிலையினை உடலில் ஏற்படுத்தும், இயற்கையான உடலை ஆறுதல் படுத்தக்கூடிய செய்முறை. இந்த செய்கையின் பின்னர் ஆழ்ந்த நித்திரை உண்டாகும். மதங்களாலும், ஒழுக்ககளாலும் மனம் அசுத்தப்படாமல் இருந்தால் சாதாரண உடலுறவில் ஒருவித மன அமைதியினை அடையலாம். அல்லாமல் அதை ஒரு பாவமான விடயமாக மனதில் எண்ணிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டீர்கள் ஆனால் அதன் பின் ஒழுங்கான நித்திரை வராது, இது தொடரும் போது மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். இதன் காரணமாக நீங்கள் மனதளவில் பெரும் போராட்டத்திற்கு உள்ளாவதுடன் கனவிலும் இந்த உணர்வுகள் வந்து துன்புறுத்தும். நீங்கள் ஒரு இயல்பான மனிதராகவும் வீணான மதப்போதனைகளால் மனதில் காமம்,உடலுறவு போன்ற விடயங்கள் பாபங்கள் என வெட்கம் கொள்ளாத மனிதராக இருந்தால் சாதாரண உடலுறவு ஒரு அருமருந்து. இப்படியான நிலையினால் அடையும் உச்சகட்ட இன்பம் ஒரு வகை. 

மற்றைய வகை உச்சகட்ட இன்பத்திற்கு தாந்திரா ஒரு மையமாகும். முதலாவது வகை உச்சகட்டத்தினை "அதி உச்சகட்டம்" என நாம் குறிப்பிட்டால் இந்த வகை "அதி தாழ் நிலை" எனவே குறிப்பிடவேண்டும். தாந்திர உச்சகட்டம் என்பது "பள்ளத்தாக்கு உச்சகட்டம்" என்றே குறிப்பிடவேண்டும். ஏனெனில் சாதாரண் உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை தூண்டி சக்தியினை வெளியேற்றுவது, தாந்திரீக உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை குறைத்து அமைதியும் ஆனந்தமும் அடைவது. இது சாதாரண உடலுறவின் மூலம் நிகழ்வதற்கு நேர் எதிரான செயன்முறை. எனினும் இதனை பயிற்சிப்பதற்கு ஆரம்பத்தில் மன எழுச்சியினை ஏற்படுத்துவது அவசியம், மன எழுச்சி இல்லாமல் இந்த செய்முறையினுள் புகுவது இயலாது. ஆகவே இரண்டு வகையான உடலுறவுகளும் ஆரம்பத்தில் ஒரே வகையிலேயே தொடங்கப்பட்டு முடிவு முற்றிலும் எதிரான வகையில் முடிவுறும். 

முதலாவது வகையிற்கு மன எழுச்சி அதிகமாகவும் உச்சியினை அடையும் போது அதிகமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது வகையில் மன எழுச்சி என்பது ஆரம்பிப்பதற்கு மட்டுமே பயன்படும், குறிப்பாக ஆணின் பாலுறுப்பு விறைப்பிற்காக மட்டுமே ஆரம்ப மன எழுச்சி பயன்படும். ஆண் குறித்த நிலையினை அடைந்து உடலுறவு கொள்ளக்கூடிய நிலை அடைந்தபின்பு காதலர்கள் இருவரும் அமைதியான முறையில், உடலினை இணைத்து அசைவற்று மிகுந்த அன்புடன் ஆரத்தழுவி அசைவுகள் அற்று இருத்தல் வேண்டும். ஆணுக்கு விறைப்பு நிலை அற்றுப்போகும் நிலை வரும்போது மீண்டும் மன எழுச்சியினை உண்டாக்கி சிறிதளவு அசைவுகளை உண்டாக்கி பின்னர் ஓய்வு நிலைக்கு வந்து தியான நிலையினை அடையவேண்டும். இப்படி விந்தினை வெளியேற்றாமல் நீண்ட நேரம் அமைதியான நிலையினை அடைந்து பின்னர் இயல்பான தூக்க நிலைக்கு செல்வது "பள்ளத்தாக்கு உச்சகட்ட இன்பம்" எனப்படும். இதில் இருவரும் மிக ஆறுதலான அமைதி நிலைக்கு வருவர். சாதாரண உடலுறவில் இருவரும் மிக்க அமைதி அற்றவராக மன எழுச்சி அதிகரித்து சுமைக்குறைப்பை ஏற்படுத்தும் ஒரு செய்கையாகவே முடிவுறும். இது அவர்களுக்கே ஒரு வித பைத்திய நிலைக்கு செல்வதை போன்று காணப்படும். ஆனால் தாந்திரீக உடலுறவு ஆழ்மான, அமைதியான தியான நிலையினை அடைவிக்கும். 

மனிதனுடைய உயிர்காந்த சக்தி பற்றி தெரிந்திருக்கும் என நம்புகறேன், ஆணும் பெண்ணும் எதிர் எதிரான சக்திகள், ஆண் நேர், பெண் மறை, யிங் - யங் என அழைக்கலாம். ஒவ்வொன்றும் மற்றையதை நோக்கு பாயும் தன்மை உடையது. இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது ஆழ்ந்த அமைதி உண்டாகும். ஒன்று மற்றதற்கு வலிமையினை ஊட்டி உயிர்ப்பிக்கும். இது அவர்கள் இருவரிலும்சக்திவாய்ந்த  புதிய சக்தியினை உண்டாக்கும். இந்த நிலையில் சக்தி இழப்பு இன்று புதிய சக்தி உருவாக்கம் நடைபெறும். சக்திகள் புதிப்பிக்கப்படும். 

தாந்திரீக உடலுறது நீங்கள் நினைக்கும் அளவிற்கு செய்ய முடியும். சாதாரண உடலுறவு சிறிதளவு நேரத்திற்குள் சக்தி இழப்புடன் முடிவுறும், அப்படி நடைபெற்ற பின்னர் அந்த சக்தி மீளுருவாக்கம் நடைபெறும் வரை மீண்டும் ஈடுபட முடியாது. இது சேமிப்பதும் செலவழிப்பதும் ஆக ஒருவித மன ஆவேசமாகவே இருக்கும். இன்னொரு விடயத்தினை கவனித்தீர்கள் என்றால் மிருகங்கள் உடலுறவை, காமத்தினை எப்போது அனுபவிப்பதில்லை. எந்த விலங்கைப்பார்த்தாலும் காமத்தினால் பேரின்பம் அனுபவிப்பதில்லை. அது ஒரு இயந்திரதனமான செய்கையாகத்தான் இருக்கும், உடலின் இயற்கை உணர்வுகள் அவற்றை உத்வேகப்படுத்தி அவற்றை செய்விக்கும். அதன் பின்னர் அவை ஒன்றை ஒன்று பார்க்காது. மெய்மறந்த இன்பம் என்ற ஒன்றினை அவைகள் அனுபவிப்பதில்லை. சாதாரண செய்கையும் இப்படியானதே! 

ஆனால் ஒழுக்கவாதிகளது கருத்து சற்று முரண்பாடானது; காமத்தில் ஈடுபடாதீர்கள், காமத்தினை இன்பமாக்காதீர்கள், அவை விலங்கு உணர்ச்சி" என்று. இது பிழையானது விலங்குகள் எப்போதும் அனுபவிப்பதில்லை, மனிதன் மட்டுமே அனுபவிக்க முடியும். எவ்வளவு ஆழமாக அனுபவிக்கிறீர்களோ அவ்வளவு ஆழமான மனிதத்துவம் உண்டாகும். உடலுறவு தியானத்தன்மை உடையதாகி மெய்மறந்த நிலை உண்டாகும் போது உயர்ந்த நிலையினை அனுபவிப்பீர்கள். ஒரு விடயத்தினை ஞாபகத்தில் கொள்ளுங்கள் தாந்திரா கூறும் உச்ச கட்டம் "பள்ளத்தாக்கு" நிலையுடையது, சாதாரண உச்ச கட்டம் இல்லை. 

மேற்கில் ஆபிரகாம் மாஷ்லோவ் இந்த உச்சகட்ட அனுபவத்தியனை பிரபலப்படுத்தியவர் ஆவார். உச்சகட்டத்தினை நோக்கிய மன எழுச்சி ஏற்பட்டல் அதன் வீழ்ச்சியும் நடைபெறும். அதனால்தான் ஒவ்வொரு உடலுறவிற்கு பின்னரும் ஒருவித தளர்வினை அனுபவிக்கிறான், இது இயற்கையான ஒன்றே. உச்சியினை அடைந்தால் வீழ்வது நியாதி. ஆனால் இந்த விழ்ச்சியினை தாந்திரீக உடலுறவின் பின்னால் பெறமாட்டீர்கள். இதில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. அதற்கு மேல் வீழ்வதற்கு இல்லை ஏனெனில் ஏற்கனவே பள்ளத்தாக்கில்தான் இருக்கிறீர்கள். 

தாந்திரீக உடலுறவின் பின்னர் நீங்கள் உங்கள் சக்தியினை எழுச்சிக்குள்ளாக்குவீர்கள் ஆனால் வீழ்ச்சியினை அடைய மாட்டீர்கள். சக்தி நிரம்பிய நிலையினை அடைவீர்கள். அது உங்களை உயிர்ப்புடையவராகவும் பல மணி நேரம் மெய்மறந்து இருக்க கூடிய தியான நிலைக்கும் இட்டுச்செல்லும். ஆனால் இது நீங்கள் எவ்வளவு ஆழமாக ஈடுபடுகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே அமையும். இந்த அனுபவம் வாய்க்கும் போது விந்தினை வெளிவிடுதல் சக்தி இழப்புத்தான் என்பதனை உணர்வீர்கள். உங்களுக்கு குழந்தை தேவை என்ற நிலையில் மட்டும் வெளிவிட்டு பயன்படுத்தலாம். இந்த தாந்திரீக உடலுறவின் மூலம் மிக ஆழ்ந்த அமைதியைனை அனுபவிக்கலாம். 

இந்த அனுபவத்தின பின்னர் உங்கள் மனது இலகுவாகும், வன்முறை அற்றுப்போகும், கோபம் வராது, மன அழுத்தம் வராது. இத்தகைய மனிதன் யாருக்கும் தீங்கான செயலை செய்யமாட்டான். அவனது குணங்கள் மற்றவருக்கு உதவுவதாகவே இருக்கும். மற்றவருக்கு இன்பம் கொடுக்காவிட்டாலும் துன்பத்தினை தரமாட்டான். 

தாந்திரா மட்டுமே இத்தகைய புதிய மனிதனை உலகிற்கு தரமுடியும், இத்தகைய மனிதன் காலத்தினை கடந்தவனாகவும், அஹங்காரம் அற்றவனாகவும், இருமைகளை கடந்தவனாகவும் வளர்ந்து கொண்டிருப்பவனாகவும் இருப்பான். 

இந்தப்பதிவில் ஒஷோ கூறியிருப்பது தாந்திரீக உடலுறவின் அடிப்படைகளை மட்டுமே இதனை சாதிப்பதற்கு மூச்சின் நிலையும் பயிற்சியும் அவசியம். மற்றும் இந்த வித்தை பற்றி திருமூலர் "பரியங்க யோகம்" என்ற தலைப்பில் கூறியுள்ளார். அது பற்றி நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

வாசகர்கள் மனச் சங்கடம் இன்றி திறந்த மனதுடன் இந்த விடயம் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள பின்னூட்டம் இடுவார்கள் என எண்ணுகிறேன்.

Thursday, January 17, 2013

காம ரகசியம் - 05: காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஓஷோவிடம் எழுபது வயதான வயோதிகர் ஒருவர் வந்து கீழ்வருமாறு முறையிட்டார்,

"அன்பான குருவே, எனக்கு இப்போது எழுபது வயதாகிறது, ஆனால் மனதில் காமஉணர்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது, நான் என்ன செய்யட்டும் என்றார்?

நல்ல கேள்விதானே!

அதற்கு ஒஷோ அளித்த பதிலும் விளக்கமும் பின்வருமாறு;

"அன்பரே அப்படியாயின் அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளூங்கள், அதனை மறுக்காதீர்கள், அதனை பெரிதாக கவலைப்பட்டு அடக்க முற்படாதீர்கள், இந்த நிலமை ஏன் ஏற்படுகிறது என்றால் இளமைக்காலத்தில் அதீதமாக காமத்தினை அடக்கியதால் இப்போது வயோதிகத்தில் அவை வலிமை பெற்று உங்களை ஆட்டிப்படைக்கிறது,

இதேபோல் முன்னொரு சம்பவம் ஏற்பட்டது, நான் டெல்லியில் இருக்கும் போது என்னைக்காண‌ முப்பத்திஐந்து வயது மதிக்கத்தக்க இளவயது துறவி ஒருவர் வந்திருந்தார்.அவர் பூரணமான பிரம்மச்சரியத்தினை ஏற்றிருந்தார். அவர் என்னிடம் கேட்க விரும்பியது, " என்னுடைய ஒரே பிரச்சனை கடந்த சில வருடங்களாக நான் எனது மனதில் எழும் காம எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், இது ஏன் என உங்களால் கூற முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்தில் காம எண்ணம் அடங்கும்? இப்போது நான் 35 வயதுகளில் உள்ளேன். இப்படியான மனப்போராட்டத்தில் ஈடுபட்டு சோர்வடைவதை தவிர வேறு எதுவும் எனக்கு ஏற்படவில்லை, இன்று வரை நான் வெற்றியடையவில்லை. இன்னும் எவ்வளவு வருடம் உள்ளது?

அதற்கு ஓஷோ அமமைதியாக " இதனை என்னிடம் கேட்காமல் இருப்பது மிக நல்லது, ஏனெனில் இன்னும் உண்மையான பிரச்சனை கட்டத்திற்கு நீங்கள் வரவில்லை, உங்களுடைய உண்மையான பிரச்சனை இன்னும் ஆரம்பமாகவில்லை, அது 42 வயதளவில் ஆரம்பமாகும்" என்றார்.

அதற்கு அவர் "நீங்கள் என்ன சொல்லவருகிரீர்கள்?" என்றார்.

ஒஷோ, "இப்போது நீங்கள் இளமையாக உள்ளீர்கள், முழுமையாக சக்தி உடையவராக இருக்கிறீர்கள், உங்களால் உங்கள் காம உணர்வினை வலிந்து அடக்க முடியும், ஆனால் 42 வயதளவில் உங்கள் உடல் பலம் குறையத்தொடங்கும், மெது மெதுவாக வலிமையினை இழப்பீர்கள், பலமற்றுப் போவீர்கள். ஆனால் உங்கள் அடக்கப்பட்ட காமஉணர்வு மெது மெதுவாக சேர்ந்து வலிமை பெற ஆரம்பிக்கும், அந்த நிலையிலேயே உங்களது உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும்" என்றேன்.

அதற்கு அவர்" இப்படி யாரும் எனக்கு கூறவில்லை, அனேகர் நாற்பத்து ஐந்து வயதை அடையும் போது காமஉணர்வினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வந்து விடும் என்றல்லவா கூறுகின்றனர், அப்போது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும்" என்றார்.

அதற்கு ஓஷோ " அவர்களுக்கு சக்தி செயற்படும் விதம் தெரியவில்லை, ஒரு சக்தியினை அழுத்த அழுத்த அது அந்த அழுத்தங்களை சேர்த்து வலிமையாகிறது, இப்படி நடக்கும் போது அழுத்துபவர் சக்தியினை இழக்கின்றார், அழுத்தப்படுவது சக்தியினை பெற்று வலிமையடைகிறது, பின்னர் அழுத்தியவர் வலிமையினை இழக்கும் போது அது தன் முழு வலிமையுடன் தாக்க ஆரம்பிக்கும், இந்த விதத்திலேயே காம உணர்வு செயற்படும்"

அதன்பின்னர் அவர் சென்று விட்டார், பத்து வருடங்களின் பின்னர் நான் வேறொரு இடத்தில் இருக்கும்போது என்னைக்காண வந்தார், வந்தவர் என்னுடைய பாதங்களை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க கூறினார்;

 " நீங்கள் அன்று கூறியது மிகச்சரி! இப்போது நான் எனது உடல் வலிமை குறைந்து விட்டது, ஆனால் மனதில் அதிக காமஉணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. இப்போது முன்னரைப்போல் என்னால் சண்டை பிடிக்கமுடியவில்லை. நான் வலிமை இழந்து விட்டேன், அன்று நான் உங்களுடைய கருத்தினை கேட்கவில்லை, எல்லோரும் சொன்னார்கள் நாற்பத்து வயதிற்கு மேல் காம எண்ணம் முற்றாக குறைந்து விடும் என்று அவர்கள் எவ்வளவு அறிவிலிகள், காம உணர்வு எப்படி செயற்படுகிறது என்பதனைப்பற்றி தெரியவில்லை! என்று வருத்தப்பட்டார்.

ஆகவே அன்பரே, உங்களுடைய காம உணர்வும் பலமாக அடக்கப்பட்டுள்ளது, ஆதலால்தான் இந்த பிரச்சனை வருகிறது, இவ்வாறுதான் மதங்கள் போதிக்கின்றன. மதத்தினை பின்பற்றவேண்டுமானால் நீங்கள் உங்கள் இயற்கையான இச்சைகள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். பாருங்கள் இந்த எழுபது வயதில் எப்படியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசை உங்களில் எழுகின்றது என்று! அடக்கப்பட்ட உணர்வுகள் வயது கூட கூட அதிகமாக வர ஆர்ம்பிக்கும். இந்த நிலை அதிகரித்தால் 24 மணிநேரமும் உங்களை காம உணர்வு ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதைத்தான் தற்போதைய சமூகம் உங்களுக்கு செய்துள்ளது. சமூகம் உங்களுடைய இயல்பான உணர்ச்சிகளில் இருந்து உங்களை பிரித்து இயல்புக்குமாறாக்கி உள்ளது.

இந்த வயதிற் கூட இந்த நிலையில் இருந்து மீள்வது கடினமானதல்ல! அதற்கான முதற்படி அதனைப்பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதும், அதனைப்பற்றி வெட்கப்படுவதனை தவிர்ப்பதுமே!ஏன் காமம் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒன்று, நீங்களாக உருவாக்கிகொண்ட உணர்ச்சியல்ல! ஆகவே அது முற்றிலும் சரியானது!ஆகவே அதனைப்பற்றி ஏன் வெட்கப்படுகிரீர்கள், அது உங்களின் இயல்பான ஒரு பகுதியே!

நீங்கள் வெட்கப்படவேண்டுமானால், உங்களை காமத்தினைப்பற்றி வெட்கப்படவைத்த உங்கள் மதகுருவைப்பற்றியும்,போலியான மதக்கோட்பாடு பற்றியும், அவர்களது அறியாமை பற்றியும், அதனை வைத்து அவர்கள் உங்களை எப்படி ஆளூகின்றார்கள் என்பதனை, இதனை விட்டு வெளிவர இயாலாமையினால் அவர்கள் செய்யும் மூடத்தனம் பற்றியும் நினைத்து வெட்கப்படுங்கள், ஆனால் உங்களில் காம உணர்வு இருக்கிறது என்பதனை நினைத்து வெட்கப்படாதீர்கள், அது இயற்கைதன்மை உடையது, ஆனால் நீங்கள் ஒரு மதத்துடன் இணைத்துக்கொண்டு இப்படி சிந்திப்பது இயற்கைக்கு மாறானாது. இப்படி மதத்தின் காரணமாக எழுபது வருடங்களாக உங்களது இயல்புக்கு மாறாக நடக்கும் தன்மையினை எண்ணி வெட்கப்படுங்கள்!

உங்களில் உள்ள காமத்தினை ஆம் என ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அதனை ஆம் என ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரேயொரு சாத்தியமாகும். அதுவே அதனைக்கடக்க எடுக்கும் முதலாவது படிக்கல்லாகும். அந்தக்கல்லில் கால்வைக்காமல் கடந்து அடுத்த கரைக்கு செல்லமுடியாது. காமத்தினை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதனை கடப்பதற்கான படகில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மதத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயங்களினை குறையுங்கள், உங்களுடைய வீணாண நம்பிக்கைகளை குறையுங்கள், உண்மைத்தன்மையினை ஏற்றுக்கொள்ளூம் தன்மை உடையவராக மட்டும் இருங்கள்.

உங்கள் உடம்பிற்கு எழுபது வயதானாலும் உங்களுடைய காமம் எழுபது வயது இளமையாக இருக்கிறது. இந்த நிலையில் அது வலிமையாகவும் நீங்கள் வலிமையற்றும் இருக்கிறீர்கள், அவ்வாறு இருக்கும் போது அதனை இயல்புடன் ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரு வழிமுறையாகும். அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு நேரம் கடந்து விட்டது என்று வருத்தப்படவேண்டியதில்லை. இதன் அர்த்தம் கட்டாயம் அந்த இச்சையினை பூர்த்தி செய்ய உடல் ரீதியாக பூர்த்தி செய்யவேண்டும் என்பதல்ல! உங்கள் மனதளவில் முழுமையாக அதனை ஏற்றுக்கொண்டு அதனைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது. இப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளூம் போது இதுவரை இப்படி அடக்கப்பட்ட காமத்தினால் ஏற்பட்ட காயங்களும் குணப்படுத்தப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு இந்த இச்சையினை உடல்ரீதியாக பூர்த்தி செய்ய முயலும் போது உங்கள் சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே அன்றி குறைக்காது, மேலும் ஆபத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்தக்கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், காமத்தினை இயல்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனபதன் அர்த்தம், உங்கள் மனதில் அது எழும்போது அதனை தவறாக, பாவமாக எண்ணாமல் சாட்சிபாவமாக பார்த்து வருதலே அன்றி அதனை உடனடியாக தீர்க்கும் வழியில் இறங்குவதல்ல, அது உங்களை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும், சொல்லவருவதன் சுருக்கம், உங்களில் இயல்பாக ஏற்படும் எண்ணத்தினைப்பற்றி வெட்கம், வெறுப்பு போன்ற எதிர் எண்ணங்களை கொள்ளாமல் மதித்து ஏற்றுக்கொள்ளுதலே!

பொதுவாக இயற்கையின் நியதியில் சக்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம், அப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களுடைய சக்தியில் துரித அதிகரிப்பினை ஏற்படுத்தலாம், காமம் என்பது உங்களிடமே உள்ள இயல்பான அதீத சக்தி, அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதீதமாக பலம் பெறலாம். உங்களுடைய சக்தியினுடனேயே சண்டை பிடிப்பது உங்களை மேலும் பலவீனமாக்கும், இப்படி சண்டை பிடித்தே பல வருடங்கள், பல பிறப்புகள் சென்று விட்டபின்னர் எப்போது இறைவனை அடையப்போகிறீர்கள்!

முதலாவதாக காமத்தினை பாவம், பிழை எனப் புலம்புவதை நிறுத்துங்கள்.அதனுடன் வீணாக சண்டை பிடித்து உங்கள் சக்தியினை விரையப்படுத்துவதை நிறுத்தி அதனை மதிக்கத்தொடங்குங்கள்.

ஒரு ஆணை இயல்பாக இயற்கைக்குமாறாக அன்றி வளரவிட்டால் அவன் தனது பதின்நான்காவது வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகிறான். ஆனால் இன்று இயற்கைக்கு மாறான சமூகம் மனிதனி பிஞ்சில் பழுக்க வைக்கின்றன. இன்று மேலை நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் ஆண்பிள்ளைகளும், பெண்களும் தமது வயதுக்கு முன்னரே பாலியல் முதிர்ச்சியினை அடைகின்றனர். இந்தக் காரியத்தினை இன்றை திரைப்படங்களும், இன்டர்நெட் என்பன தாராளமாகச் செய்கின்றன.

இந்த தாராளமயமாக்கப்பட்ட பாலியல் படங்கள், ஊடகங்களினால் இன்றைய இளைய சமூகம் இயற்கைக்கு மாறான பாலியல் வளர்ச்சியினை பெறுகிறார்கள். இயற்கை உடலினை பதின்நான்கு வயதில் தயார்படுத்து முன்னர் இந்த செயற்கை ஊடகங்கள் மனதில் பாலியல் எண்ணங்களை விதைக்கின்றன, இதனால் உடலிற்கும் மனதிற்குமான போராட்டம் ஆரம்பமாகிறது. இதனால் தனது சக்தி முழுவதையும் வெகுவாக இழந்து எதற்கு பயன்படமுடியாத உடலினையும் மனதினையும் பெற்றவர்களாக ஆகின்றனர்.

சற்று பழமைவாத போக்குடைய மதவாதிகள் இதற்கு நேர்மாறான மதத்தின் பெயரால் பாலியல் முதிர்ச்சியினை அடைந்த இளைஞர்களையும் காமத்தினையும் அதன் செயற்பாட்டினையும் பாவம் என பயமுறுத்தி அவர்கள் உடல் மனப்போராட்டத்தினை ஏற்படுத்து விடுகின்றனர். அதனால் இருவித மனப்போராட்டத்தில் சக்தியினை இழந்து தம்மை அறியும் தகமையினை அடையாது போகின்றனர்.

இயல்பான சமூகம் ஒருவனுடைய பதின்நான்காவது மனதில் அவன் உடல் தயாராகும் போது மனதினையின் தயார்படுத்தும் நிலையில் அமைந்திருக்கவேண்டும். காமத்தினை பயமுறுத்தல் இன்று அதன் செயற்பாடுகள் எப்படி என்பதினை கற்பிக்க வேண்டும். இந்த பயமுறுத்தும் மதவாதிகளின் தலையீடு இன்றியும், காமத்தினை தலையில் ஏற்றி தம்மை காயப்படுத்திக்கொள்ளாமலும் இயல்பாக வாழ்த்தொடங்கும் ஒருவன், வாழ்வில் இன்பத்தினையும் அனுபவித்து, ஆழமான அனுபவத்துடன் தனது உடலின் சக்தி நாற்பத்து ஐந்து வயதுகளில் குறையத்தொடங்கும் போது தியானத்தில் ஆழமாக சென்று சமாதி எனும் பேரானந்த நிலையினை  அடையும் தகுதியினைப்பெறுகிறான். அந்த வயதில் நீங்கள் மிகவும் ஆழமாகவும், முதிர்ச்சி அடைந்தும், மையம் கொண்டவராகவும்,மனக்குழப்பம் அற்றவராகவும் இருப்பீர்கள். 

ஆகவே பயமற்று உங்கள் நிலையினை ஏற்றுக்கொள்ளூங்கள்! இப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களை பயமுறுத்தும் எதுவும் தன் சக்தியினை இழந்து உங்களுக்கு வசமாகும்!

ஜெய்மினி குருகுலம் – மதிப்பீடு 01

ஜெய்மினி குருகுலம் – பாடம் 01 மதிப்பீடு கர்ம தத்துவம் – MCQ Quiz மாணவர் விவரம் மாணவர் பெயர் * தொலைபேசி இலக்கம் * மின்னஞ்சல் *...