தற்போது கால பைரவஷ்டமி ஆரம்பம்
பைரவ என்றால் பயங்கரமான என்று பொருள்! படைப்புக் கடவுளான பிரம்மா சதாசிவருக்கு சமமாக ஐந்து தலைகளைக் கொண்டிருந்து ஆணவம் கொண்டதால் ஒரு தலையைக் கொய்து ஆணவத்தை அடக்க சிவத்திலிருந்து வெளிப்பட்ட ஆற்றல் பைரவம்.
பைரவ தியானத்தால் ஆணவம் அழிந்து சிவயோகம் சித்திக்கும்.
இந்த பைரவ மூர்த்தியை தியானிக்க எட்டுப் பாடல்கள் காலபைரவ அஷ்டகத்திலிருந்து பதியலாம் என்பது எண்ணம்;
படத்தில் இன்றைய நாளுக்குரிய காசி காலபைரவரின் அலங்காரம்!
இந்திரனால் வணங்கப்படுகிற மிகத் தூயமான தாமரை போன்ற பாதங்களை உடையவரும்,
சர்ப்பத்தைப் பூணூலாக தரித்திருப்பவரும்,
சந்திரனைத் தலையில் தரித்திருப்பவரும்,
தயைச் சுரங்கமும்,
நாரதர் முதலான யோகிக் கூட்டங்களினால் வணங்கப்படுகின்றவரும்,
திக்குகளையே ஆடையாக தரித்திருப் பவருமான காசித்தலத்தைக் காக்கும் ஸ்ரீ காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரி
பங்கஜம் வ்யால யக்ஞஸூத்ர – மிந்து சேகரம் க்ருபாகரம்நாரதாதியோகி ப்ருந்த வந்திதம்
திகம்பரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.