இந்தப் பாடல் காலபைரவ வழிபாடு தமிழர்களின் வழிபாடு என்றும் ஆபத்துத்தாரண பைரவரின் அழகிய வடிவமும் வர்ணிக்கப்படுகிறது.
தமிழகள் போற்றி வணங்கிய
தெய்வம் தண்டாயுதம் கொண்ட காலபைரவர்!
செந்தமிழோர் தொழுந் தண்டாயுதமுந் திருவழகுங்
கந்தர மும்பச்சைக் கஞ்சுகத்
தானுங் கருதரிய
இத்தணி வட்டச் சடையுங்கண் மூன்று மிருபதமுஞ்
சந்ததமும் மறவேன் காழி
யாபத்துத் தாரணனே
செந்தமிழர்கள் தொழும் தெய்வமே
தண்டாயுதமும்,அழகிய கழுத்தும்
பச்சை நிற ஆடையும்,
வட்டமான சடையும்,
மூன்று கண்ணும், இரண்டு
பாதங்களும் உடைய
இந்த அழகிய
உருவை நான்
எப்போதும் மறக்காமல் தியானிக்கிறேன்!
என்னை ஆபத்துக்களில் காத்தருள்வீர் சீர்காழிப் பதியில்
உறையும்
ஆபத்து தாரண பைரவமூத்தியே!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 11}
இன்றைய காசிகாபுராதி நாத
காலபைரவரின் மங்கள
அலங்காரம் அனைவரது
தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.