இந்த தியானம் பைரவருக்குச் செய்யப்படும் நறுமண உபசாரங்கள் பற்றியும் ஆபத்துத் தாரண பைரவரின் பாதங்களை பற்றினால் என்னவிதமான நன்மை கிடைக்கும் என்பதும், அவரை வழி
பட அவரது அன்பே காரணம் என்றும் சொல்லப்படுகிறது
தெள்ளும் புனுகும் பனி நீருங்
குங்குமச் சேறுஞ்செந்தேன்
விள்ளும் மலரு நின் பாதத்திற்
சாத்தி விடாமலின்பங்
கொள்ளும் படியன்பு தந்தெனை
யாண்டருள் கூற்றுவனைத்
தள்ளும் பாதாம்புயனே காழி
யாபத்துத் தாரணனே
{ஸ்ரீலஸ்ரீ சிவ ஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 02}
வாசனையுடைய புனுகும்
பன்னீரும்
குங்குமச் சேறும்
செந்தேனும்
மலரும்
உன் பாதத்தில் இடைவிடாமல் சாத்தி
மனம் இன்பம் கொள்ளும் படி அன்பு தந்து
என்னை ஆட்கொண்டு அருள் கூர்ந்து
யமனை அண்விடாமல் தள்ளும் வல்லமையுடைய
பாதங்களுடைய சீர்காழிப் பதியில் வீற்றிருக்கும்
ஆபத்து தாரண பைரவ மூர்த்தியே தங்களை தியானிக்கிறேன்!
இன்று காசிகாலபைரவரிற்கு ருத்திராக்ஷத்தால் மங்கள அலங்காரம்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.