இந்தப் பாடல் பைரவரின் ஆயுத தியானம்; ஆபத்துதாரண மூர்த்தியின் பிரதான ஆயுதம் தண்டாயுதம்; தண்டாயுதம் என்பது வலிமையான கருங்காலியின் வைரத்திற்கு உச்சியில் உருளையான உலோகப் பூண் பூட்டிய ஒரு ஆயுதம். காவலுக்கு இருக்கும் வீரர்களிடம் இருப்பது; திருடனோ, எதிரியோ வந்தால் ஒரே வீச்சில் அவனது தலையோ, எலும்போ நொருங்குமாறு இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். இந்த தண்டம் வைத்திருப்பவர் அந்த இடத்தின் காவலர் என்றும், அவரது உத்தரவிற்கு பணிய வேண்டும் என்பது அக்காலத்து மரபு! தற்போது ஒரு வட்டத்தின் காவல் ஆய்வாளர் லத்தியுடன், துப்பாக்கியுடன் செல்வது போன்றது.
பைரவர் அனைத்து
சிவ ஸக்தி
க்ஷேத்திரங்களினதும் பாலகர்;
பாதுகாவலர்! சிவசக்தியை வணங்குவதற்கு ஆணவமற்ற
மனம் வேண்டும்;
எம்மிடமிருக்கும் ஆணவ
மலத்தை தனது
தண்டத்தால் சுக்கு
நூறாக்கி பொடிப்பொடியாக்குவது பைரவரின் தண்டம்!
இங்கு பைரவரின்
பெருமை மிகு
தண்டாயுதம் தியானிக்கப்படுகிறது.
படிக்குந் தண்டாயுதமென்பார்க்கு
நோய்வினை பற்றறுப்பப்
படிக்குந் தண்டாயுத
வெண்ணருங் கோடி
ப்ரமாண்டமெல்லாம்
முடிக்குந் தண்டாயுதமு தண்டந்
தாண்டுமுகுந்தன் சென்னி
தடிக்குந் தண்டாயுத
நேகாழி
யாபத்துத் தாரணணே
ஆணவ மலம்
நீக்கி சிவத்தை
சக்தியை நோக்கிச்
செல்லும் வழியை
உண்டாக்கும் தண்டாயுதம் பைரவரின் தண்டாயுதம்!
நோய்கள் வினைகளை
அகற்றும் தண்டாயுதம்
எண்ண முடியாத
கோடிக்கணக்கான பிரம்மாவினால் படைக்கப்பட்ட அண்டங்களையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல்
பெற்ற தண்டாயுதம்
சிவனின் முடியைத்
தேடிச் சென்ற
திருமாலின் அறியாமையை நீக்கிய தண்டாயுதம்,
இந்த தண்டாயுதமுடைய சீர்காழிப் பதியில்
உறையும் ஆபத்துத்
தாரண பைரவ
மூர்த்தியை தியானிக்கிறேன்.
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 12}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.