தமிழில் அணி இலக்கணம், சிலேடை அணி தெரியாத சீரியஸானவர்கள் சற்று நிதானமாகப் படிக்கவும்.
பட்டம் இருந்தால் வானில் பறக்க விட வேண்டும், பட்டம் வைத்தி்ருப்பவர்கள் பறக்க விடாமல் இருப்பதால், தமது வேலையை ஒழுங்காகச் செய்யாமல் இருப்பதால் ஆர்வமுள்ள மற்றத்துறையிலுள்ளவர்கள் பட்டம் கட்டிப்பறக்க விட வேண்டியுள்ளது! பட்டம் என்பது ஒரு முறைசார் கல்வி முறை; எல்லையற்ற அறிவினைப் பெற ஏற்படுத்தப்பட்ட முறையான முதல் பயிற்சி; முடிவு இல்லை, வாங்கிய பட்டம் ஆய்வாக, சிந்தனையாக மிளிர்ந்து சமூகத்திற்கு பயன் தரவேண்டிய முறையில் மேலும் மேலும் உயரப்பறக்க வேண்டும்!
செய்தி; பட்டதாரிகளாகப் பட்டம் வாங்கிக் கொண்டு வேலைக்குப் போவது மட்டும் வேலை என்ற எண்ணத்தில் சிந்திக்காமல், சிந்திப்பதில், அறிவைப் பெறுவதில் இன்பம் காண முடியாமல் சமூகத்தின் அறிவுத் தேக்கத்தின் பங்களிக்காமல் இருக்கும் மூளைச் சோம்பறிகளுக்கு!
பட்டம் வாங்கிவிட்டதால் நாம் முழுமையடைந்து விட்டோம் என்ற மிதப்பில் இருந்து கொண்டு தமது துறைக்கு எந்தவித பங்களிப்பினையும் செய்யாமல் குறை சொல்லுவதும், கருத்துத் தெரிவிப்பதும் தான் அறிவாளித்தனம் என்ற எண்ணமுள்ளவர்களுக்கும் பட்டம் எப்படி விடலாம் என்ற ஒரு கருத்து!
தனது இயன் மருத்துவத் துறையில் பட்டம் விடாமல் வெளியே வந்து தொல்லியல் துறையில் பட்டம் விட்டு மாட்டிக் கொண்ட தம்பி துவாரகனுக்கு சமர்ப்பணம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.