கேள்வி; இனிய அன்னையே, ஒருவன் நோய்த் தாக்கம் வருகிறது என்று உணர்ந்தவுடன் அதை எப்படித் தடுக்கலாம்!
முதலில் நீயும் உனது உடலும் நோய் வரும் என்பதை ஏற்கக்கூடாது. உனக்கு நோய் வராது என்ற வலிமையான இச்சாசக்தியை (Will) உருவாக்க வேண்டும். இதுவே முதல் நியதி.
இரண்டாவது நியதி ஒளியை அழைக்க வேண்டும்; உன்னை சமநிலையில் வைத்திருக்க கூடிய, அமைதியாக வைத்திருக்கக்கூடிய அந்த ஒளியை உனது உணர்வினால் உனது கலங்கள் அனைத்திற்கும் செலுத்த வேண்டும். நோய் வரக்கூடாது என்ற உணர்வு பயத்தினால் இருக்கக் கூடாது. அது நோயினை வரவேற்கும் காரணி.
நோய்வரக் கூடாது என்ற வலிமையான இச்சாசக்தி மட்டுமே இருக்க வேண்டும்; நோய் வந்துவிடக் கூடாது என்ற பயம் இருக்கக் கூடாது, நீ நிச்சயமாக அந்தப்பேரொளியால் பாதுகாக்கப்படுகிறாய் என்ற உறுதியும், அந்தப் பேரொளி கவசமாக உன்னைப் பாதுகாக்கிறது என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்தக் காலப்பகுதியில் நோயைப் பற்றி சிந்திக்காமல் வேறு பயனுள்ள விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டும்.
நோயை மனதில் புறக்கணித்தலும், ஒளியை பாதுகாப்பிற்கு வரவேற்றலுமாகிய இந்த இரண்டையும் உறுதியாகச் செய்த பின்னர் உனது இச்சா சக்தியைக் கொண்டு ஒவ்வொரு உடல் கலத்தையும் அந்த ஒளியால் நிரப்ப வேண்டும். உன்னை நோயைப் பற்றிய சிந்தனையிலிருந்து விலக்கி வேறு பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இதை எப்படி செய்வது என்பதை அறிந்துகொண்டால் நீ நோயுள்ளவர்களுக்கு அருகில் செல்லும் போது நோய் வாய்ப்பட மாட்டாய். ஆனால் இதை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பலர் நாம் நோய்க்குப் பயமில்லை, எனக்கு மனதில் சிறிதும் பயமில்லை, நாம் மிகவும் வலிமையானவன் என்று வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருப்பார்கள், ஆனால் உடலுக்குள் ஒரு நடுக்கமும் நோய் வந்துவிடுமோ என்ற பயமும் ஆட்பட்டிருக்கும். இந்த பயமும் நடுக்கமுமே நோயை ஆகர்ஷிக்கும் காரணிகள். இந்த இடத்தில்தான் நீ உனது இச்சாச க்தியைப் பிரயோகித்து உடலிற்கு அமைதியையும், நீ தெய்வீக அருளால் பாதுகாக்கப்படுகிறாய் என்ற உணர்வையும் உனக்குள் கொண்டுவர வேண்டும்.
சில நேரங்களில் எல்லா பரிந்துரைகளும் பயனற்றுப் போகும், உலகம் முழுவதும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தொடுபவர்கள் எல்லோருக்கும் கட்டாயம் நோய் பரவும் என்று கூறப்படும் போதும், நோயுற்றவர்களைத் தொடும் போது கட்டாயம் நோய் தொற்றும் என்று கூறப்படும் போது உனது அகப் பொறிமுறைகள் இந்தச் சவால்களை பௌதீகமாகச் சரியாக கையாளக் கூடிய வலிமை இல்லாமல் இருக்கும் போதும், முட்டாள்தனங்களால் நிறைந்திருக்கும் போதும் நீ மேற்கூறியதிலிருந்து விலகி ஓட முனைவாய்! இவையெல்லாம் தான் உடல் ஒருவர் இன்னொருவருக்கு நோயைப் பற்றிக்கூறுபவை! குறிப்பாக இரண்டு மூன்று மருத்துவர்கள் உன்னைச் சுற்றி இருந்தால் இவையெல்லாம் கட்டாயம் நிகழும்!
Collected Works of The Mother, Vol. 07, Questions and Answers 1955, P142-143
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.