சித்த மருத்துவர் Vinayaga Sundar முன்வைக்கும் கேள்விகள்
COVID-19 ஆனது சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவத்தில் (முத்தோஷ - தாதுக்ஷீண) எந்த நோயாக விளங்கப்பட்டு, அதற்குரிய மருந்தாக கப சுர குடி நீர் பரிந்துரைக்கப்பட்டது?
இது அடிப்படைச் சித்த மருத்துவக் கேள்வி?
அவர் அடிப்படையில் சித்த மருத்துவராக கேள்வியை முன்வைக்கிறார்; அவர் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்துவ மூல நூல் பிரமாணம் சொல்லுகிறது;
அகத்தியர் வைத்தியம் 2000, (பாடல் - 18 & 19) ஒரு நோய்க்கு மருந்து நிர்ணயிப்பதற்குரிய முறையாக;
நாடியால் முன்னோர் சொல்லும் நற்குறிகுணங்களாலும்
நீடிய விழியினாலும் நிலைபெறு முகத்தினாலும்
கூடியவியாதிதன்னைக் கூறிடு குணபாடத்தால்
சூடிய குணங்களாலே சுகப்பட மருந்து சொல்வாம்,
குணங்குறி மிகுந்து தோன்றிக் குற்றமே குறைந்துகாணி
விணங்கு மந்திர மருந்து யிவைகளால் மீள்வதுண்மை
குணங்கோளாக் குற்றமேறிக் குறிகுணங் குறைந்து நின்றால்
பிணங்கிடா வகன்று சீவன் பிரித்தலால் பேசலாமே!
{விளக்கம்: நாடியால் முத்தோஷங்களின் அளவினை அறிந்து கொள்ள வேண்டும், பின்னர் நோய் உடலில் காட்டும் குணங்குறிகளை அவதானித்து வியாதியின் தீவிரத்தைக் கணித்துக்கொள்ள வேண்டும், பின்னர் தோஷத்தின் அளவிற் கேற்ப குணபாடத்தில் உள்ள சரக்குகளைச் சேர்த்து மருந்து செய்ய வேண்டும், குணங்குறிகள் தீவிரமாக இருந்தாலும் தோஷம் அளவாக இருந்தால் நோய் மருந்திற்கும், மந்திர சிகிச்சைக்கும் கட்டுப்படும், தோஷம் அதிகமாக இருந்தால் மருந்திற்கு அடங்காமல் மரணம் நேரலாம்}
ஆகவே வெறுமனே இந்த நோய்க்கு இந்த மருந்து என்ற பரிந்துரை சித்த மருத்துவ அடிப்படைக்கு விரோதமானது, முத்தோஷத்தின் அளவும், குணங்குறிகளின் தீவிரத்திற்கும் ஏற்றவகையில் மருந்து செய்யப்பட வேண்டும்.
ஆக அவர் சித்த மருத்துவ மூல நூலைக் கற்று கேள்வியை முன்வைக்கிறார், அதை சித்த மருத்துவ அடிப்படையில் விளங்கப்படுத்தும் பொறுப்பு அதைப் பரிந்துரைத்தவர்களுக்குரியது!
சரியான விளக்கம் தந்தால் அனைவருக்கும் நன்மை! ஆகவே கேள்வியை துறைக்கான வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும்!
இது தனி மனித தாக்குதல் அல்ல! துறை வளர்ச்சிக்கு இப்படியான கேள்விகள் அவசியம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.