மனம் எப்படி இயங்குகிறது என்பதற்கு யோக சாஸ்த்திரத்தில் ஒரு விளக்கம் உண்டு.
ஒருவனிற்கு இருக்கும் அறிவுத் தெளிவிற்கு ஏற்றவகையில் அவனுக்கு குணம் இருக்கும். இந்த குணம் மூன்று வகைப்படும்.
அதீதமாக கேள்வி கேட்டு பதில் பெற வேண்டும் என்ற ஆற்றலுடன் ஒரு செயலை, எண்ணத்தைத் தூண்டும், அறிவைப் பெற ஏற்படும் உந்தல் ராஜஸம் எனப்படும். இந்தக் குணம் மனதிற்கு மிகுந்த ஆற்றலைத் தரும். மனதை செயலில் தூண்டும். இந்த தூண்டல் மனதிற்கு விடைக்காணும் பாதையில் அழைத்துச் செல்லும்.
உதாரணமாக சார்வரி வருடப் பிறப்பு என்று கூறுகிறார்களே? இதன் அர்த்தம் என்ன என்று தேடத் தொடங்குவது ராஜஸ குணம்.
இப்படித் தேடத் தொடங்கி அறிவு சம நிலையில் சரியான அர்த்தம் காண, சார்வரி என்பது சமஸ்க்ருதச் சொல், அதன் அர்த்தம் காண சமஸ்க்ருதத்தின் நிருக்தம் - சொல் இலக்கணம் படித்து சரியான பொருள் காண்பது சாத்வீக குணம். இதற்கு சலனப்படாத மனமும், குழப்பம் இன்றி உள்ளதை உள்ளபடி பார்க்கும் தெளிவும் மனதிற்கும் வேண்டும்.
இப்படி சாத்வீக குணத்துடன் இந்தப் பெயரை ஆராய்ந்தால் சமஸ்க்ருத நிருக்தம் (சொல் இலக்கணம்) நான்கு பொருளைத் தரும்: இரவு, மாலைப் பொழுது, மஞ்சள், பெண்.
ஏற்கனவே மனதை தேவையில்லாத ஆபாசப்படங்கள் பார்த்து தாமஸமாக குழப்பி வைத்துக்கொண்டிருந்த மனம் கதைகளுக்கு ஆபாசமாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது என்று குழம்பி நிற்கும்.
ஆகவே ஒரு விஷயத்திற்கு தகுந்த பொருள் - இதன் அர்த்தம் என்ன பலனை எமக்கு தருகிறது என்பதை அறிவால் அறிந்து பலன் தராமல் மனதைக் குழப்பும் விஷயங்களை ஒதுக்கி வைப்பது அறிவுடையோர் செயல்!
ஆகவே சித்திரைப் புத்தாண்டை ஆபாஸ தாமஸ மனதினால் விபரீத அர்த்தம் கொள்ளாமல்
சார்வரி என்றால் இருள்/ஒளி மறையும் மாலை என்று அர்த்தம். இருள் நிரந்தரமானது அல்ல, சூரியன் வர விலகும், இது தற்போதைய நிலவரத்தில் உலகு கொள்ளை நோய்ப் பயத்தால் இருள் சூழ்ந்திருக்கிறது. இது மாறும் என்ற நம்பிக்கை வைப்போம்.
சார்வரி என்றால் மஞ்சள் என்றும் பொருள்; மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிய மூலிகை; இன்றைய நோயிற்கு மஞ்சள் எமக்கு நோய் எதிர்ப்பைத் தரும் என்று நம்புவோம்; மங்களம் என்றும் அர்த்தம்.
சார்வரி என்றால் பெண் என்றும் பொருள்; இயற்கையை நாம் தாயாக வணங்குகிறோம். இந்த ஆண்டின் நடப்பு சூழலாகிய இயற்கைத் தாயை சுத்தி செய்து எமக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும் காலம் என்று.
மனதிற்கு நல்ல விதையை ஊன்றி இந்த வருடத்தைத் தொடங்குவோமாக!
மனம் போல வாழ்வு!
{சந்திரனைக் காட்ட அதோ மாமரம், அதன் கிளையைப் பார், நுனியைப் பார், அதன் பின்னால் தெரியும் சந்திரனைப் பார் என்ற வழிமுறைப்படி முக்குணத்தின் செய்கை மனதினை எப்படி இயக்குகிறது என்பதைப் புரிவதற்கான விளக்கமே இந்தப் பதிவு! சார்வரி என்பது மாமரம், மனதில் முக்குணச் செய்கை என்பது சந்திரன்! இலக்கு, சந்திரன் என்பது சரியாகப் புரிந்தால் இந்தப்பதிவின் விஷயம் சரியாகப்புரியும்! }
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.