நூல் மதிப்புரை 03 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களும் சித்தர்களும் மகரிஷிகளும் இடையறாது வழங்கிக்கொண்டிருக்கின்ற அருளுபதேசங்களும் அவற்றை அடைந்து நன்மை பெறுவதற்கான வழிகாட்டல்களும் எமக்கு என்றென்றும் துணைநிற்கின்றன. இத்தகைய உயரிய உபதெசங்களைத் தேடியறிவதற்கு முயற்சிப்போர் எத்தனை பேர் எம்மத்தியில் உள்னர்? ஆயினும் அவற்றை அறிந்தோர் தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்குமாக எடுத்துரைக்க முற்படுவது இன்றியமையாத ஒரு பொறுப்பாகும்.

இன்று எமது கைகளிலே கிடைத்துள்ள அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்னும் விளகக நூலை ஸக்தி சுமனன் அவர்கள் எழுதியுள்ளார். இத்தகையதொரு அரும்பெரும் பொக்கிசத்தை வழங்கியமைக்கு முதற்கண் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அகத்தியரின் ஞானப்பாடல்களுக்கு விளக்கவுரை தருவது ஒரு சாமான்யனால் இயலக்கூடிய விடயமல்ல. இதற்கு ஆன்ம ஞானத் தொடர்பு இருத்தல் வேண்டும். சுமனன் அவர்கள் உயர் ஞானியரோடும் மகரிஷிகளோடும் சித்தர்களோடும் பிறப்பால் தொடர்புபட்டுள்ளார். அன்றேல் அகத்தியர் பாடலுக்கு விளக்கம் மற்றும் வியாக்கியானங் கூறுவது அவ்வளவு எளிமையான விடயமல்ல. இதற்கு நல்லதோர் உதாரணத்தைக் கூறவிரும்புகிறேன். ஒரு நாள் காயத்ரி பீடத்திலுள்ள பல கடவுளரையும் வணஙகிய வேளையில் அகத்தியார் திருவுருவின் முன்னிலையிலிருந்து பணிந்து “எனக்கும் உயர்ஞானம் கிடைக்க அருள்வீர்களாக” என வேண்டிக்கொண்டு அதன் பின்னர் முருகேசு சுவாமிகளை வணங்கச் செண்றேன்.ஏன்னே அற்புதம்! நீங்கள் அகத்திய மகரிஷியிடம் கேட்டவற்றை அவர் நேரடியாக வழங்கமாட்டார். குருவின் மூலம் வேண்டுங்கள். அவை கிடைக்கும் என்றார். சுமனன் பிள்ளைப் பருவத்திலிருந்தே மகரிஷி முருகேசு சுவாமிகளுடன்கூட இருந்து அருள்ஞானம் பெற்றவர். அவர் வழியாக அகத்தியாரின் அருளாசி கிடைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்னும் இந்த நூல் 30 பாடல்களுக்கான விளக்கவுரையைத் தந்துள்ளது. யோக ஞானத்தைத் தேடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி தொடக்கம் ஞானம் அடையும் வரையிலுள்ள விடயங்களைச் சிந்தித்துச் செயற்பட்டு, பயற்சிசெய்து விருத்தியடைய வேண்டிய அணுகுமுறைகள், வழிமுறைகள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த 30 பாடல்களும் ஆத்மீக ரீதியாக முன்னேறிச் செல்லும் ஒருவர் தமது ஒவ்வொரு நிலையிலும் செயற்படவேண்டிய படிமுறைகள் வழிமுறைகள் தொடத்பான விளக்கங்கள் திறவுகோல்களாகத் தரப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றினையும் கற்றுத் தேர்ச்சியும் தெளிவும் பெறும்போது அதன் உட்பொருள் மேலும் தெளிவுபெறும் என்பதைச் சுமனன் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

மகரிஷி கண்ணையா யோகி அவர்கள் எமது குரு முருகேசு சுவாமிகளுக்கு வழங்கிய அருளுபதேசப் பாடங்களைப் பார்த்தும் ஒருசிலவற்றைப் படித்தும் உள்ளேன். இப்பாடங்களிலே கண்ணையா யோகிகள் தமது மாணவர்களை விழித்துப் பாடங்களை ஆரம்பிக்கும் முறை அருட்தாகங்களைக் கவரும் பாங்குடையது. சுமனன் அவர்களிலும் அத்தகைய பாங்கினை ஒவ்வொரு பாலுக்குமான விளக்கததை ஆரம்பிக்கும்போது இடம்பெற்றிருப்பது இந்நூலைக் கற்பவர்களிடத்தில் அண்மிய நிலையை எற்படுத்திக் கவனத்தை ஈர்க்கும் எனலாம்.பாடல் ஒவ்வொன்றும் முடிவடைந்த பின்னர் அந்தப் பாடலின் வாயிலாக ஒருவர் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் எவையென்பதை வினாக்களாக முன்வைத்துச் சிந்திக்கத் தூண்டுவது சிறந்ததொரு அணுகுமுறையாகும்.

இந்நூலிலே சுமனன் கையாண்டள்ள மொழிநடையும் பரவசமூட்டுகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கிலிருந்த தமிழ்மொழி இன்றில்லை. அது மிகவும் ஆழமான அர்த்தத்தைத் கொண்ட சொற்களாலானது. பல்கால் பயிலும்போதே அதன் உட்பொருளை ஒருவரால் விளங்கிக்கொள்ள முடியும். மிகக் கடுமையான பிரயத்தனங்களில் மத்தியில் சொற்களுக்கான உரிய விளக்கங்களைப் பெற்று நாம் எல்லோரும் அறியும்படி தந்திருப்பதும் ஒருவகையில் அருள்வழித் தொடர்பே. இந்நூலின் இலகுவான மற்றும் தெளிவான மொழிநடை வாசிப்பதற்குத் தூண்டுதலளிப்பதாக உள்ளது. 

சுமனன் எங்கள் ஒவ்வொருவர் கைகளிலும் ஓரு ஞானத் திறவுகோலைத் தந்துள்ளார். இதன் துணைகொண்டு மேலான யோக ஞானத்தை அறிந்து உணர்ந்து வாழ்க்கையில் திகட்டாத பேரின்பத்தை அடைவோமாக. சுமனனுடைய இத்தகைய முயற்சி மேலும் தொடர்ச்சிபெற்று இன்னும் பல ஞான நூல்களைஈ அறிவுரைகளை மக்கள் கைகளில் இடம்பெறச் செய்தல் வேண்டும் எனவும் மகரிஷிகளின் அருள்மழை சுமனன் ஊடாக பொழிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி
வணக்கம்

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு