Belief - Attitude - Action - Order
சமஸ்க்ருதத்தில் நம்பிக்கையுள்ளவன் என்பதற்கு ஆஸ்திகன் என்று சொல்லப்படும். பலரும் நம்பிக்கையுள்ளவன் என்பதை கடவுள் நம்பிக்கை என்ற அளவிலேயே இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.
நாஸ்திகன் என்றால் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்று கூறுகிறோம், ஆனால் அதன் அர்த்தம் உண்மையில் நம்பிக்கையை இழந்தவன் என்பதாகும். நம்பிக்கை அற்றவன் என்பதற்கும் இழந்தவன் என்பதற்கும் மிக நுண்மையான வேறுபாடு இருக்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே அற்றவன் வேறு எதையாவது நம்பலாம். இந்தியத் தத்துவத்தில் கூறுவதானால் பெரும்பாலும் லோகாயதவாதியாக இருக்கலாம்; அல்லது பொருள் முதன்மைவாதியாக இருக்கலாம். நாஸ்திகன் என்றால் தான் ஏற்கனவே நம்பிக்கொண்டிருந்ததில் நம்பிக்கையை இழந்தவன்! நாஸ்திகம் என்பது நம்பிக்கை இழப்பு முதல் படி; அதன் பிறகு இதுதான் எனது நம்பிக்கை என்று தனக்கு நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வதால் லோகயாவாதியாகவோ - பொருள் முதன்மை வாதியாகவோ மாறுவது கட்டாயம்.
நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவன் ஆஸ்திகனாகிவிடுவான்; ஆக மனிதனிற்கு நம்பிக்கை முக்கியமாகிறது. ஏன் நம்பிக்கை முக்கியம் என்பதற்கு மனதின் செய்கையைப் புரிதல் அவசியம்.
ஒருவன் தனது நம்பிக்கைக்கு ஏற்றவகையிலேயே தனது மனப்பாங்கினை (attitude) வளர்க்கிறான். பின்பு தனது மனப்பாங்கிற்கு அமையவே செயலைச் செய்வான். இந்த மூன்றும் மிகவும் தொடர்புபட்ட ஒன்று.
ஒருவன் ஒரு செயலை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனுக்கு அந்தச் செயலின் மீது சரியான மனப்பாங்கு இல்லை; சரியான மனப்பாங்கு இல்லாததற்கு காரணம் தான் செய்யும் செயலில் நம்பிக்கை இன்மை என்பதாக இருக்கும்.
நம்பிக்கையீனனாக இருப்பது மனதினை ஒழுங்காக செயற்படுத்துவதற்கு தடையானது, நம்பிக்கையீன மனப்பாங்கு செயலை ஒழுங்காகச் செய்யவிடாது.
ஆகவே ஒரு செயல் சரியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் அந்தச் செயல் மீதான நம்பிக்கை சரியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும், அந்தச் செயலுக்கான சரியான நம்பிக்கை சரியான மனப்பாங்கினை உருவாக்கும், சரியான மனப்பாங்கு உறுதியான செயலினை உருவாக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.