குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 23, 2020

உலக புத்தக தினம் இன்று!

ஆகவே எனது புத்தகங்கள் மீதான காதல் கடிதத்தை எழுதவேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலுக்கு தகுந்த நாள்! 

புத்தகங்கள் மனதின் நண்பன்! புத்தகங்கள் வாசிக்கும் போது அந்த நூலாசிரியனுடன் பயணிக்கும் அனுபவம் கிடைக்கும். 

புத்தகத்தின் மீதான காதல் மூன்று வயதாக இருக்கும் போது ஆரம்பித்ததாக அம்மாவின் நினைவுகள்! பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்ற அம்மாவுடன் குழந்தையாகச் சென்ற வாசிக்கத் தெரியாத நான் புத்தகம் ஒன்றை தூக்கிக் கொண்டு கீழே வைக்க மாட்டேன் என்று அடம்பிடித்து நூறு ரூபாய் (அந்தகாலத்தில் அரிசி விலை 5/=) செலவு வைத்தேன் என்பது அம்மாவின் சரித்திரக்குறிப்பு! 

நூல்வாசிக்கும் inspiration அம்மாவின் தம்பியான குட்டி மாமா என்று நாம் அன்புடன் அழைக்கும் தாய்மாமனாரிடமிருந்து சிறுவயதில் பெற்றது! ரஷ்யாவிலிருந்து கொண்டு வந்திருந்த பல நூறு நூற்கள் ரஷ்ய ஆங்கில நூற்கள் எமது சிறுவயதில் வீட்டை நிரப்பியிருந்தது. 

எதை வாசிக்கவேண்டும் என்ற உந்தல் தகப்பனாரிடம் பெற்றது. சிறுவயதில் அப்பா வரும் போது ஒரு கட்டு புத்தகங்கள் கையோடு வருவார்! அதில் அறிவியல், ஆன்மீகம், புராணம் என்று இருக்கும்! 

சிறுவயது நூற்கள் வாண்டுமாமா! அம்புலி மாமா

கதைகள் என்று வாசித்ததில் சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் முழுமையாக அடங்கும்; மற்றது பொன்னியின் செல்வன். இதற்கு மேல் இலங்கை நாவல்களில் செங்கை ஆழியான், ஞானசேகரனின் குருதி மலை! 

சங்க இலக்கியம் புலியூர்கேசிகன், புலியூர் கேசிகனின் அனைத்து நூற்கள்! 

சாண்டில்யன் தூண்டிய சரித்திர ஆர்வம் பின்னர் சரித்திர ஆய்வுகளை படிக்கத் தூண்டியது! நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவபண்டாரத்தார், பாலசுப்பிரமணியம் என்று சரித்திர ஆர்வம் பலதையும் வாசிக்கத்தூண்டியது! 

பின்னர் மூல நூற்கள் வாசிக்கத்தூண்டியதும் உவே சாமிநாதையர் பதிப்புகள் சேகரிக்கத் தூண்டியது! 

இப்படி கண்டதையும் வாசித்து கேட்ட கேள்விகள் எல்லாம் குருநாதரைக் கண்டவுடன் மனதைச் செம்மையாக்கும் யோக சாதனைக்குச் சென்ற பின்னர் கற்றலாக மாறியது, ஆர்வத்திற்கு வாசிப்பது மாறி கல்லுதலுக்கான வாசிப்பாக மாறியது! 

தத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்ட வாசிப்புக்கள் மூல நூல் வாசிப்புகளாக மாறியது! 

இதுவரை பிரபல எழுத்தாளர்கள் என்று கூறப்படுபவர்கள் எவரது எழுத்துக்களும் வாசித்ததில்லை! 

யோக சாதனையில் ஏற்பட்ட மனப்பயிற்சி எழுத்தாளரிற்கு வசமாகி நம்பிக்கைகளை ஏற்படுத்தாமல் கருத்தை மட்டும் அறிதல் என்ற விழிப்புணர்வினைத் தந்தது! சில நூறு பக்கங்கள் சிறு நேரத்தில் வாசிக்கும் ஆற்றலைத் தந்தது! 

வாசிப்பு கற்றலாக மாறியது! தேவையற்ற எதையும் வாசிப்பதில்லை என்பதும், கற்றலுக்கான வாசிப்பு என்ற நிலையும் வாய்த்தது! 

சிறுவயதில் புத்தகத்திற்கான பணம் அம்மா தரும் pocket money இன் சேகரிப்பு! எனது புத்தக ஆர்வத்திற்கு சற்றும் குறையாத தம்பி வாய்த்ததால் அவன் சேகரித்து வாங்கும் நூற்களை கையகப்படுத்த சதுரங்கம் விளையாடி பந்தயம் கட்டுவதும் ஒரு வழி! 

பாடசாலை நூலகத்தை அதிகம் பயன்படுத்தியவன், இருபது வயதிற்குள் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் பாடசாலைக்கு கொடுத்துவிட்டோம்! 

சம்பாதிக்கத் தொடங்கியது திருமணம் வரை முழு உழைப்பும் குடிகாரன் சம்பளத் திகதியில் குடித்துத் தொலைப்பது போல் பத்தாயிரத்திற்கு குறையாமல் நூல் வாங்குதல் ஒரு போதை! 

சென்னை செல்வது என்பதன் பூரிப்பு நூற்கள் வாங்குவது என்பதில் இருக்கும்! இந்தியா முழுக்க எனக்குத் தேவையான நூற்கள் எங்கு இருக்கிறது என்ற map உம் அதை எப்படி வாங்குவது என்ற தந்திரோபாயமும் வரைந்து வைத்திருக்கிறேன்!     

புத்தகக் கடைக்குள் போகும் போது எவரையும் கூட்டிச் செல்வதில்லை, அல்லது வாசலில் வைத்து உள்ளே சென்று வெளியே வரும் வரை நீங்கள் யாரோ நான் யாரோ மன நிலை என்று அறிவித்துவிடுவேன், இதை அனுபவித்த சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள். 

ஒரு முறை சென்னை சென்று ரூபா பப்ளிகேஷனில் நான் வாங்கிய வேகத்தைப் பார்த்து விட்டு நான் எதோ பெரிய புத்தக கடை வைத்திருக்கிறேனா? நூலகராக இருக்கிறீர்களா என்று ராஜமரியாதை தந்தார்கள்! 

வேலையில்லாமல் Lock down ஆக பல வருடங்கள் இருந்தாலும் வீட்டில் படித்து முடிக்க அனேக நூற்கள் இருக்கிறது! 

பணம் கொடுத்து வாங்கும் நூற்கள் அனைத்தும் இந்தியவியல், தத்துவம் சார்ந்த நூற்கள்! வாங்கும் அனைத்து நூற்களும் ஒரு தடவை பொருளடக்கம், முன்னுரை வாசித்து விட்டு பின்னர் நேரம் ஒதுக்கி ஒரு தடவை வாசித்து விடுவதும், பின்னர் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற பகுப்பிற்குள் கொண்டுவந்து வைத்திருப்பது வழமை. 

வாங்கிக் குவித்த நூற்களைப் போல் 100 மடங்கு மின்னூற்கள் இருக்கிறது! அறிவியல், தொழில்சார் வாசிப்புகள் அனைத்தும் எப்போதும் மின்னூற்கள் தான்! 

இன்னும் எழுதலாம் ஆனால் பதிவு நீண்டு விட்டது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...