எமது ஆரோக்கியம் என்பது மருத்துவரது கைகளில் இல்லை என்பதும், அரசாங்கம் எம்மைப் பார்க்கும் என்ற எண்ணமும் பிழையானது என்பதை இன்றைய மேற்கத்தேய நாடுகளின் நிலவரம் எடுத்துக்கூறி வருகிறது.
மேற்கத்தேய நாடுகள் நவீன அறிவியல் ஒன்று தான் நம்பகரமானது என்ற ஒற்றை நம்பிக்கையை மருத்துவத்துறையில் புகுத்தி உலகின் அதியுயர் வணிகமாக மருத்துவத் துறையை மாற்றியுள்ளார்களே தவிர மேற்கில் நவீன மருத்துவத்துறை COVID-19 இனை எதிர்கொள்ள தயார் நிலையிலில்லை.
பொருளாதாரம் ஒன்றை மாத்திரம் வாழ்வின் இலக்காக எடுத்துக்கொண்டு மேற்குலக வாழ்க்கையை நம்பிச் சென்றவர்கள் இன்று உயிரிற்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்கத்தேய மருத்துவத்தில் உடலின் முழுமையான உடலின் சீரான இயக்கமே ஆரோக்கியம் என்று மருத்துவம் பார்க்கும் ஞானம் வரவில்லை.
அமெரிக்க அதிபர் தான் வல்லரசு என்ற கற்பனையில் கொரோனோவை எதிரி என்று பிரகடனப்படுத்துகிறார். இயற்கையின் அமைப்பில் இந்த நோய்த்தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தானாக மறைந்துவிடும். எதிரி என்று பிரகடனப்படுத்தி மக்களை அரசியலுக்காக உசுப்பேத்தலாமே தவிர கொரோனா காவு எடுக்கப்போவதை தடுக்க எந்த ஆற்றலும் இல்லை.
பொருளாதாரமும் சந்தையும் தான் நோயையும், அதற்கான தீர்வையும் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பது மனித குலத்தின் அவலம்!
இந்தியாவின் அகஞானம் எப்போதும் பாரதத்தைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம். மக்களிற்காக மேற்கின் மிகப்பெரிய சந்தை தனது பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ளாமல் மூடி வைத்திருப்பது மனிதகுலத்தின் இருப்பிற்கான நம்பிக்கை தருகிறது.
ஆயுதங்களையும், வாகனங்களையும் உற்பத்தி செய்தவர்கள் மனித குலத்திற்கு எதையும் உருப்படியாகச் செய்யவில்லை, மருந்துக்கு இந்தியாவும், முகக்கவசத்திற்கு சீனாவும் தான் கைகொடுக்கிறது. ஜேர்மனி விதிவிலக்கு; ஹிட்லருக்குப் பின்னர் வந்த ஞானமாக இருக்கலாம்!
இலங்கை பல்லாயிரம் வருடங்கள் இயற்கையுடன் வாழும் கலாச்சாரம் கொண்ட சிறிய நாடு. உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருந்தால் இந்த அவல உலகில் மனிதன் தன்னிறைவாக வாழக்கூடிய மகிழ்ச்சியான நாடு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.