மனிதனை அழிக்கும் கிருமிகள் இயற்கையை அழித்ததாக வரலாறு இல்லை இயற்கை உலகத்தில் மனிதன் ஒரு கிருமி என்பதாலோ!!!
இது நண்பர் ஒருவரின் கருத்து;
நான் சூழலியல் நுண்ணுயிரியல் படிக்கும் போது எனக்கு தோன்றிய உருவகத்தை (Metaphor) கீழ்வருமாறு பதிகிறேன்.
கிருமிகள் இயற்கைச் சம நிலையை பேணும் கடவுளின் நுண்படை- Subtle force; எப்போதெல்லாம் ஒரு இனம் அதிகமாகப் பெருகி இயற்கையில் தம்மை மாத்திரம் நிலை நிறுத்த முனைகிறதோ அப்போதெல்லாம் இந்த நுண்கிருமிகள் வலிமையுற்று அந்த இனத்தைத் தாக்கும்.
இதுவே நவீன விவசாயத்தில் mono culture எனப்படும் ஒரு பயிர் விவசாயத் தொகுதியில் நோய்கள் அதிகமாக இருப்பதற்குக் காரணம்.
இயற்கை பல்வகைமையை (diversity) அனுமதிப்பது. ஒன்றுகொன்று உதவியாக ஒன்றிணைந்து வாழ அனைத்து உயிர்களையும் உந்துவது; ஆகவே அந்தப்பல்வகைமையை அழித்து எது ஒன்று அதீத பலம் பெற முனைகிறதோ அதைக் கட்டுப்படுத்த இயற்கையால் நுண்கிருமிகள் உறங்கு நிலையில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. நவீன தொழில் நுட்பம் இருப்பதால் இந்தக் கொரோனோவின் இணைச் சூழலியல் விளைவுகளை (Collateral environmental impacts) நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இயற்கையின் பல்வகைமையைக் குறைப்பது மனிதனின் பொருளாதார அதியாசை; இன்றைய பொருளாதார முறை இயற்கையை அழித்து மனிதன் தான் மட்டும் தான் இந்தப் புவியின் அதிமேலான இனம் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த கொரோனாவின் பரவல் முறை பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாக இருப்பது எனது இந்தச் சிந்தனைக்கும் வலுச்சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.