குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 30, 2026

மகரிஷிகளின் மர்ம வாசமும் வைகாசிப் பௌர்ணமியும் - குருபரம்பரை இரகசியம்* ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர அருளிய படி

 அன்பின் நிரந்தர மாணவர்களே, வைகாசிப் பௌர்ணமி எமது குருகுலத்தின் மிக முக்கியமான நாள், இது பற்றிய விபரத்தை கண்ணைய யோகியார் எழுதிய மகரிஷிகளின் மர்ம வாசம் பாடத்தில் படித்தறியலாம், எமது காயத்ரி தீக்ஷை நாளும் கூட! 

"மகரிஷிகள் இருக்கிறார்களா? என்பதே இன்று பலருக்கு நம்பமுடியாத செய்தியாக இருக்கும். ஆனால் நாளுக்கு நாள் இவர்களின் இருப்பிடத்தையறிந்து, நேரில் சென்று, பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, சாதனை கள் பயின்று வரும், ஆண்கள், பெண்கள் மேதைகள், ஆன்ம ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கள், ரிஷிகளின் ஆசிரமங்களுக்கு வந்து, உண்மையறிந்து போய்க்கொண்டிருக்கிறார் கள். இத்தகையவர்களின் யாத்திரை அனுபவங் கள் அவ்வப்போது பல ஆன்மிகப் பத்திரிகைக ளில் வெளிவருகின்றன. ஆன்மிகப் பத்திரிகை களைப் படிக்கும் பழக்கம் மிகப் பெரும்பாலா னவர்களுக்கு இல்லையாகையால் அவர்கள் இதைப்புரிந்து கொள்ள முடிவதேயில்லை.

மகரிஷிகளின் கேந்திரம்

இமய கிரியின் கிழக்குப் பகுதியின் பின்புறத் தில் தீபேத்தியப் பீடபூமியின் தெற்குப் பக்கத் தில், அடர்ந்த மலைகளும், காடுகளும், பள் ளங்களும், மேடுகளும், நிறைந்த இடத்தின் நடுவில் சம்பளம் என்ற கிராமிய சூழ்நிலை கொண்ட சூட்சும ஆசிரமத்தில் ரிஷிகளின் மத்திய கேந்திரம் இருக்கிறது. இதை ஆன்மிக நெறியில் முன்னேறிய பல ஆண்கள், பெண் கள் சென்று பார்த்து வந்திருக்கிறார்கள். தனிப் பட்ட எந்த மனிதனும் இவ்விடத்தைக கண்டு கொண்டு செல்ல முடியாது. இப்படி ஓர் இடம் இருப்பதாக விமானத்தில் பறந்து செல்பவர்க ளுக்கும் பார்க்க முடியாது. ஏனென்றால் இதன் அமைப்பு மனிதனின் சாதாரண பார்வைக்குத் தெரியாத வண்ணம் உள்ளது. ஆசிரமத்தைச் சேர்ந்த யாராவது வழிகாட்டி அழைத்துச் சென் றாலொழிய உலகத்திலுள்ள யாரும் இதைக் காண முடியாது.


அகத்தியர் ஆசிரமம்                                                                                                                                                                                     

உலகத்தின் மத்திய கேந்திரமாக சம்பளம் இருக்க, உலகின் வேறு பல பாகங்களில் அதன் கிளைகளாகச் சிறிய ஆசிரமங்கள், அதேபோன்ற சூக்ஷ்ம அமைப்பில் செயல்பட்டு வருகின்றன. இங்கும் அவ்வப்போது பல ஆன்மிகர்கள் வந்து, சாதனை பயின்று செல் கின்றார்கள். *தென்னிந்தியாவிலும் இப்படி யொரு கிளையிருக்கிறது.* இதன் தலைவராக தமிழகத்தின் தமிழ்ப் பண்பாடுகளின் தந்தை யென்று சொல்லும் *அகத்தியனார்* இருந்து வருகிறார். அகத்திய ஆசிரமம் என்ற பெயரில் மருத்துவமனைகளையும் யோகம் எனப் பெரிய ஆசிரமங்களையும் வைத்து நடத்தும் பலருக்கு அகத்தியனார் இன்னும் இருக்கிறார் என்பதே நம்ப முடியாத செய்தியாயிருக்கும். அவர் தமிழ் நாட்டுக்கு வந்து முதலில் தங்கியிருந்த பொதிகை மலையில் இப்போது இல்லை. *நெடுங்காலமாக மேற்கத்திய மலைத்தொட ரின் ஒரு பகுதியில் நீலகிரி மலையின் சாரலை யடுத்து,மலைகளின் நடுவில் சம்பளம் போன்ற சூக்கும் ஆசிரமத்தில் அவர் சிரஞ்சீவி யாயிருந்து, தென்னிந்தியாவின் உயிர்களுடை யனவும் இல்லாதனவுமான பொருள்களின் பரிணாமத்தை நடத்தி வருகிறார்.


மேலை விஞ்ஞானி வருகை

சில காலத்துக்கு முன் ஒரு மேல் நாட்டு விஞ்ஞானி இங்கு வந்து பலகாலம் தங்கிச் சென்றபின் எழுதிய நூலில் "நான் நீலகிரிச் சாரலிலுள்ள மாபெரும் முனிவரைச் சந்தித் தேன்." என்று எழுதியிருக்கிறார். இவர்தான் முதன் முதலில் ரிஷிகளின் வரை படத்தை மகரிஷிகளின் உத்தரவின் பேரில் ரிஷிகளின் தொடர்புள்ளவர்களுக்கு காட்டியவர்.


மகரிஷிகளின் அருள் காந்த சக்தி பரவல்                                                                                                                                                                          

மனிதரின் கண்களுக்குப் புலனாகாமல் கரந் துறையும் மகரிஷிகள் எப்போதுமே மனித ரிடை வராமல் இருப்பதில்லை. அவ்வப்போது மாறு வேடங்களில் மனிதரிடை வரவே செய்கி றார்கள். இங்கிலாந்தில் அரசி விக்டோரியா மகாராணியின் பட்டாபிஷேகத்தின் போது, மகரிஷிகள் வெண்புரவிகளிலேறி, ஊர்வலத் தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் எப்போ தும் மனித உலகத்தில் வாழாத மகரிஷிகள்தாம் என்பதை அறிந்து மகாராணியார் இத்தகவ லைத் தன் வரலாற்றில் எழுதி வைத்திருக்கி றார். அவ்வப்போது உலகின் சமூகங்கள் சமு தாயங்களில் நடைபெறும் பெரிய காரியங்க ளில் அவர்கள் மாறுவேடத்தில் வந்து பங்கு கொள்கிறார்கள். ரிஷி பாரம்பரிய வழியில் சாதனை புரிபவர்களுக்கு அவ்வப்போது மாறு வேடங்களில் வந்து சில உபதேசங்களைச் செய்து செல்கிறார்கள். இப்படியெல்லாம் இவர் கள் மக்களிடை தோன்றிச்செல்லக் காரணம் தம் வழியில் நிற்கும் அவர்களின் சுப காரியங் கள் செவ்வனே நடைபெற, அவர்களுக்குக் காந்த சக்தியை உதவுவதற்குத்தான். அவர்கள் இருக்கும் இடங்களில் தெய்வீகக் காந்த சக்தி அலைக்கழியும்; அதன் பிரபந்தத்தால் அங் குள்ள அனைத்தும் நலமடையும். *நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மகரிஷிகள் தொடர்புடையது. அங்கு அடிக்கடி மகரிஷிகள் சூக்ஷ்ம சரீரத்தில் வந்து போகிறார்கள்.

மண்ணுலகப் பரிணாமம்

மண்ணுலகப் பரிணாமத்தைத் திட்டமிட்டு அடுத்த ஆண்டுக்கொருமுறை எல்லாக் கேந்தி ரங்களிலுமுள்ள ரிஷிகளும் சம்பளக் கிராமத்தில் கூடுகிறார்கள். அப்போது அவர்கள் உலகில் எங்கெங்கு என்னென்ன விதமான பரி

ணாமத்தைச் செய்ய வேண்டும். எங்கெங்கு அழிக்க வேண்டும். எங்கெங்கு ஆக்கவேண்டு மென்றுதிட்டம் தீட்டுகிறார்கள். *"வைகாசி மாதம் பெளர்ணமி"* யன்று தான் இந்தக் கூட் டம் நடைபெறுகிறது. இதற்கு அக்காலம்வரை ஆன்மசாதனையைத் தகுந்த முறையில் பயின் றவர்கள் நேர்முகமாய் அழைக்கப்பட்டுச் செல் கிறார்கள். அந்த அளவுக்குப் பண்படாதவர்கள் தம் அகக்கண் நோக்கால் சூக்ஷ்ம சரீர யாத்தி ரையால் அதைக்கண்டு பயனடைகிறார்கள்.


மகரிஷிகள் அனைவரும் கூடும் அச்சமயம் அவர்களின் கூட்டுக் காந்தம் மண்ணுலக வானப் பரப்பு முழுவதும் பரவுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே அன்று ஆன்மீகக் கூடங்களிலுள்ளவர்கள் எல்லாம் அங்கங்கு கூடித்தியான நிலையில் ஆழ்கின்றனர். அந்தக் காந்த சக்தி பரவும் மாதமாகிய வைகாசியில் உலகின் பல ஆன்மீக மேதைகள் பிறந்திருக்கி றார்கள். புத்தர், வியாசர், திருவள்ளுவர், ஸ்ரீ கண்ணையயோகியார் ஆகியோர் இந்த மாதத்தில் பிறந்தவர்கள்தான்.


அகத்தியர், மைத்ரேயர், புலஸ்தியர், வசிஷ் டர் போன்ற சப்தரிஷிகள் நிரந்தரமாய் மத்திய கிளைக் கேந்திரங்களில் சிரஞ்சீவிகளாயிருந்து பரிணாமத்தை நடத்தி வருகிறார்களானாலும் *இடையிடையே அவர்கள் வழியில் நின்று கடுமையான சாதனைகள் புரிந்து அதனால் தம் உடலின் பரிணாமத்தை கட்டுப்படுத்தக்கூ டிய அளவு வெற்றியடைந்து பலரும் அவ்வப் போது மகரிஷிகளின் ஆணையின் பேரில் செயல்படுபவர்களாக உலகின் பல கேந்திரங்க ளிலிருந்து பணியாற்றி வருகிறார்கள்* . சித்திய டைந்த சித்தர்கள் பலரும் இப்படியிருந்து வருகிறார்கள். உலகின் பரிணாமத்தை நேர்மு கமாய் நடத்தவேண்டிய இடங்களில் இத்தகை யவர்கள் பங்கு கொண்டு நடத்தி வைக்கிறார் கள். சமயா சமயங்களில் இவர்களில் சிலர் சில குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து சில அற்புதங்களை செய்து, மக்களைத் திசை திருப்பிவிட்டுப் பின் மரணம் போன்ற நிலை யில் உடலை விட்டுச் சென்று தம் பழைய உடம்பையேற்றுக் கொள்கிறார்கள். *சமயாசாரி களாய், குருமார்களாய் தோன்றி மறைந்தவர்கள் பலரும் இத்த கையவர்களேயாவர்.*


*ஆன்ம வித்தையின் பயன்*

அற்ப நாட்களில் முடியும் வாழ்க்கையை, அற்ப நேரத்தில் மறையும் பெளதிக இன்பத்தை,உண்மையென நம்பி வாழ்பவர்களுக்கு கண்ணுக்குத் தெரியும் மனிதனுக்குள் கண்ணுக்குத் தெரியாத மனிதனொருவனுண்டென்று கருத முடியாதவர்களுக்கு பௌதிக இயக்கங்களெல்லாம் தானாக நடைபெறுப வையெனத் தவறாகக் கருதிக் கொண்டிருப்ப வர்களுக்கு, உண்பதும், உறங்குவதும், மக்க ளைப் பெறுவதையும் தவிர மனிதன் செய்ய வேண்டியது வேறொன்றுமில்லையென்று நம்பி வாழ்பவர்களுக்கு, கண்ணுக்குத் தெரியாத ஓர் உலகம் இருக்கிறதென்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, இதுவரை நான் சொல் லிவந்த உண்மைகள், கட்டுக்கதைகளாக, நம்ப முடியாதவைகளாயிருக்கும். ஆனால் இதை நம்பும், பயன்கொள்ளும் ஆயிரக்கணக் கானவர்கள் இதே உலகில் இருக்கிறார்கள். நம்பாதவர்களைப் புத்தகங்களைக் கொண்டும் சொற்பொழிவுகளைக் கொண்டும் நம்பவைத் துவிட முடியாது. இந்த உண்மைகள் அந்த மரபுக்கு மாறானவை. அதனால்தான் இதை அறியாதவர்களுக்கு மெய்ப்பிக்க யாரும் துணி யவில்லை. *நாமும் இதை அறியக்கூடிய அளவு ஆன்ம வித்தையில் பண்பட்டவர்களுக்காக வென்றே எழுதி வெளியிடுகிறோம். அத்தகை யவர்கள் எம்முடைய இந்த விளக்கத்தால் உள்ளத்தில் உறுதி பெற்று, தம் சாதனையில் வேகமாய் முன்னேறி விரைவில் மாமுனிவர் களை நேருக்கு நேராகத் தரிசிக்கும் பேற்றைப் பெறுவார்களென நம்புகிறோம்.*

வாழ்க ஆன்மீகம்! வளர்க தெய்வீகம்! ஓங்குக முனிவர் புகழ்

எமது குருகுலம் நேரடியாக அகத்திய மகரிஷியின் அருளானையில் சித்த வித்யா குருமண்டலத்தின் ஆசியுடன் நடப்பது! சித்த வித்யா குருமண்டல நாமாவளியில் உள்ள குருமார்கள் அனைவரும் சம்பளம் எனும் சித்தாஸ்ரமத்துடன் தொடர்புடையவர்கள்.

சாதனை: 

வைகாசி பௌர்ணமி தினம், (சனி நண்பகல் 1200 மணி தொடக்கம் ஞாயிறு நண்பகல் 1200 மணிவரை IST) சிறிது நேரம் ஒதுக்கி அகத்தியர் மூல குரு மந்திரம், சித்த வித்யா குருமண்டல நாமாவளி, காயத்ரி மந்திரம் இயன்றளவு ஜெபித்து, மகரிஷிகளை பிரார்த்தித்து அவர்கள் சூக்ஷ்ம வழிகாட்டல் வேண்டி காந்த சக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த குருபரம்பரையின் உன்னத மாணவனாக நான் நிலை பெற ஆசி வேண்டுங்கள்.   


இது உங்கள் வாழ்வில், சாதனையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மகரிஷிகளின் மர்ம வாசமும் வைகாசிப் பௌர்ணமியும் - குருபரம்பரை இரகசியம்* ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர அருளிய படி

 அன்பின் நிரந்தர மாணவர்களே, வைகாசிப் பௌர்ணமி எமது குருகுலத்தின் மிக முக்கியமான நாள், இது பற்றிய விபரத்தை கண்ணைய யோகியார் எழுதிய மகரிஷிகளின் ...